Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Wednesday, March 13, 2013

லாங்க் ட்ரைவ் போகலாமா!!!!!????????

வூட்டுக்கும் சீக்கிரம் வந்திடுவாங்க. சனி.ஞாயிறு கட்டாய விடுமுறைங்கற மாதிரியான ஊர்ல இருந்தாக்க, அதுவும் உறவுகள்னு யாரும் இல்லாம தனியா உக்காந்திருக்கும்போது வேற என்ன செய்ய? அப்படியான ஒரு நாளில் அயித்தான்”லாங்க் ட்ரைவ் போகலாமான்னு? ”கேட்டாரு.  பசங்களுக்கு செம குஷி. எனக்கு சொல்லவே வேண்டாம். :)

எங்க போறது லாங்க் ட்ரைவ்னு கேட்க சிசில் வரச்சொல்லியிருக்காப்ல அவங்க ஊருக்கு போய் வருவோம்னாரு. சரின்னு கிளம்பியாச்சு. கிட்டத்துல தான். ஏர்போர்ட் தாண்டி இன்னும் ஒரு மணிநேரம் போனா சிலாபம். (chilaw)
(கொழும்பிலிருந்து ஏர்போர்ட் ஒரு மணிநேரம் :)) )

கட்டுநாயகே விமான நிலையத்தை கடந்து போய்க்கிட்டு இருக்கும்பொழுது
ஒரு விமானம் தரை இறங்கிகிட்டு இருந்துச்சு. பசங்க ஆர்வமா பாத்துக்கிட்டே இருந்தாங்க.  வழியில அயித்தானோட இந்திய நண்பர் ஒருவர் இருந்தார் அவரைப்பாத்திட்டு அங்கேயிருந்து சிலாவ் திரும்பும் பாதையில் பயண பட்டோம் .  பச்ச பசேல்னு ஒரு கிராமம் அது. பாரதியோட கானி நிலம் வேணும் பாட்டை ஒவ்வொரு வீட்டுக்காரங்களும் படிச்சிருப்பாங்களோன்னு நினைக்கத்தோணும்.

வழி தப்பிடக்கூடாதேன்னு சிசில்க்கு போன் போட்டார். சிசில்,  அயித்தானோட அசிஸ்டெண்ட். ரொம்ப நல்ல மனுஷர். கொழும்பில் இருக்கும்போதெல்லாம் பெரும்பாலும் வீட்டுக்கு சாப்பிட வருவார். நான் கொடுப்பதை நல்லா சாப்பிட்டுவிட்டு போகும் வழியில் ஃபிஷ் கொத்து வாங்கி சாப்பிட்டுவிட்டு போகும் நல்ல மனிதர். போயாடே (பொளர்ணமி)அன்னைக்கு உங்களால பல மீன்கள் தப்பிச்சிருச்சு சிசில்னு சொன்னா சிரிப்பாரு. அன்னைக்கு மட்டும் கஷ்டப்பட்டு நான் வெஜ் சாப்பிடாம இருப்பாரு. சிசில் மட்டும் கொழும்புவில் தங்கியிருக்க அவரது மனைவி குழந்தைகள் சிலாவில். அவரது மனைவி அரசு மருத்துவமனை நர்ஸ்.

மதிய சாப்பாடு எங்க வீட்டுலதான் சாப்பிடணும்னு கறாரா சொல்லியிருந்தார் சிசில். ஸ்ரீலங்கன் தால் , பொறிச்ச கத்திரிக்காய் கறின்னு நல்ல சமையல். சிசிலுக்காக கொஞ்சமா நான் வெஜ். சிசில் அவங்க வீட்டுல நிறைய்ய செடி, கொடிகள் மரம்னு இருக்கும். நாங்க போயிருந்த சமயம் பலாமரம் பெரிய பெரிய காய்களோட இருந்துச்சு. அவங்க வீட்டுல ஃபேனே கிடையாது. கதவைத் திறந்த ஜில் ஜில்னு காத்து நல்லா வருது. பசங்க விளையாடிக்கிட்டு இருந்தாங்க. நாங்க பேசிக்கிட்டு இருந்து 3 மணிவாக்குல கொழும்பு திரும்பலாம்னு சொல்லிக்கிட்டு இருக்க சிசில் இருங்க பக்கத்துலதான் மூனீஸ்வரன் கோவில் போகலாம்னாரு.

சரின்னு போனா அது ஒரு சிவன் கோவில். பக்கத்திலேயே காளி கோவிலும் இருக்கு. அம்மன் ரொம்ப உக்கிரமா இருக்காப்ல தோணிச்சு. அந்த சிவன் கோவிலைத்தான் மூனிஸ்வரன் கோவில்னு சொல்றாரோன்னு பாத்தா அங்கே ஒரு அய்யனார் கோவிலும் இருந்தது. இந்த சிவன் கோவிலைப்பத்தி கேட்டப்போ கிடைச்ச தகவல் புராணகாலத்துல ராமபிரான் ராவணனை வதம் செஞ்சிட்டு திரும்பும் பொழுது இந்த இடத்தின் மேலே செல்லும் போது அவருடைய ப்ரம்மஹத்தி தோஷம் தீர்ந்ததம். உடனே வாகனத்தை கீழே இறக்கி, சிவனுக்கு பூஜை செய்ததாக புராணம் சொல்லுது. முன்னைநாதர் இறைவன் திருப்பெயர், தாயார் வடிவுடையாம்பிகை. கோயில் முன்னாடி தெப்பக்குளம் அழகா இருக்கும். நம்ம தென்னிந்திய அமைப்பில் இந்தக்கோவில் இருக்கும்.

5 சிவன் கோவில்கள் ரொம்ப பிரசித்தம்.முன்னேஸ்வரம் (புத்தளம்) கோனேஸ்வரம் (திருகோணமலை),நாகுலேஸ்வரம் (கீரிமலை), திருக்கேதீஸ்வரம் (மன்னார்), ராமேஸ்வரம் (தமிழகம்) இவைகளைத்தான் இங்கே பிரதானமா சொல்வாங்க.

புத்தளம் மாவட்டத்தில் முன்னீஸ்வரம் எனும் இடத்தில் இந்த கோவில் இருக்கு. சிலாபத்திலிருந்து பக்கம். சிவன், காளி, அய்யனாரோடு(சிங்களர்கள் அய்யனாகேன்னு சொல்றாங்க) இங்கே நம்ம கதிர்காமருக்கு சந்நிதி உண்டு.  அங்கே எல்லா கோவில்களிலும் நான் பார்த்த விஷயம் ஒண்ணு என்னன்ன? ரொம்ப பேர் கையில தேங்காயும் கற்பூரமும் வெச்சு சுத்தி வந்து சதுர் தேங்கா உடைப்பாங்க. பிள்ளையாருக்கு மட்டும்தானே சதுர்தேங்கான்னு யோசிச்சு, விசாரிச்சப்ப ஷாக்கிங் தகவல் கிடைச்சது. எதிராளியை போட்டுத்தாக்க இந்த மாதிரி தேங்காய் உடைப்பாங்களாம்!!!

லாங்க் ட்ரைவ் வந்த இடத்துல சிவ ஸ்தலம் ஒன்றை தரிசிக்க வெச்சத்துக்கு சிசிலுக்கு நன்றி சொன்ன்னோம். அங்கேயிருந்து சிலாப் பீச்சுக்கு கூட்டிகிட்டு போனார். நம்ம மெட்ராஸ் பீஸ் மாதிரி இருக்கும்னு நினைச்சேன். இது வேற மாதிரி இருந்தது. அட மாங்கா பத்தக்கு சொன்னேங்க!!! அங்கே இறால் வடை வாசமா இருந்தது ஏரியாவே.




ஆத்தோரம் வீடுகட்டின்னு அண்ணன் தங்கை இரண்டு பேரும் விளையாடிய போட்டோ இப்பவும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பொக்கிஷம். இது அந்த சிலாவ் பீச்சில் எடுத்த படம்.

சிசில் இன்றைக்கும் எங்களுடன் தொடர்பில் இருக்கும் ஒரு நல்ல நண்பர். அய்யே (அண்ணா) என அழைப்பேன். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் போன் செய்து வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம். இப்ப சிசில் கொழும்புவிலேயே வீடு கட்டிட்டாரு. வரச்சொல்லி அழைப்பும் வந்துக்கிட்டே இருக்கு. இன்னொருத்தர் கிட்டேயிருந்து அழைப்பு வரலையே!!!! வெயிட்டிங்.


Saturday, March 29, 2008

பிரிவோம்! சந்திப்போம்

வலைப்பூ நண்பர்களுக்காக ஒரு விருந்து. இலங்கையின் பாரம்பரிய உணவு.சில நான் சமைத்தது, சில நெட்டில் சுட்டது. :))))




இது பீர் இல்லீங்கோ. இஞ்சி சாறு. சொரசம்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்க.





நான் மிகவும் விரும்பும் சிவப்பரிசி சோறு.




உருளைக்கிழங்கு, முந்திரி கறி.



அன்னாசி தேங்காய்ப்பால் கறி


என்ன விருந்து பிடிச்சிருக்கா?


பிரிவு எப்போதும் துயரமானது. ஆனால் தவிர்க்க முடியாதது.எனது நிலமையும் தற்போது அதுதான்.
தாயகம் திரும்புவதில் மட்டற்ற மகிழ்ச்சிதான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு துயரம் இழையாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.


நாளைக்காலை விமானம் ஏறுகிறோம். கூவும் குயிலின் ஓசை, பறவைகளின் சிப் சிப் சத்தம், தோட்டத்து அணில், அவ்வப்போது ஹாய் சொல்லும், நத்தை, கீரி, பக்கத்து வீட்டி பூனை இவைகளை விட்டுப் பிரியப்போகிறோம்.
சிங்கப்பூர், மலேசியா பார்த்திருக்கிறேன். நம் தாய்நாட்டிற்கு அடுத்து நான் பெரிதும் விரும்புவது இலங்கை. அதனால் தான் இலங்கைப் பற்ரிய பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்.

இங்கு என் வாழ்வில் 6 வருடங்கள் கழியும் என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. சொர்க்கத்தில் வாழ்ந்ததாகவே நினைக்கிறேன்.
விடைகொடு இலங்கை நாடே!கடல் வாசல் தெளிக்கு காடே!பனமரக்காடே! பறவையின் கூடே மறுமுறை ஒருமுறை காண்போமா.......


:(((((((((((((((((((((((((
(கந்தலாமா பதிவுக்கு போட்ட தொடரும் அடுத்த பதிவிலிருந்து தொடரும்.)








Wednesday, January 30, 2008

நிறுத்தப் போகிறேன்

ஒரு நாட்டின் வனப்பு மிக அழகாக இருக்கிறது,

அதை அனைவரும் அரியத் தரவேண்டும் என்ற

ஆவலில் எழுதத் தொடங்கியது தான்

என்னைக் கவர்ந்த தேசம்,

இலங்கை- ஒரு டைரிக் குறிப்பு

ஆகிய பதிவுகள்.


இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எனக்கு

இல்லை. ஆனால் இதை எழுதியது தவறோ?

என்று தற்போது நினைக்கிறேன்.

தேவையில்லாக பின்னூட்டங்களும்,

மின்னஞ்சல்களும் வருவதனால் இதை

இனி எழுதாமல் நிறுத்தப் போகிறேன்.

நான் ரசித்த நாடு, கிட்டத்தட்ட நம் ஊர் (கேரளா மாதிரி)

இருப்பதை அனைவருக்கும் சொல்லவிழைந்தேன்.

சொன்னவரை போதும் என்று நிறுத்தப் போகிறேன்.

Monday, January 28, 2008

இலங்கை ஒரு டைரி குறிப்பு

AYUBOWN - WELCOME.
இதுதான் ஸ்ரீலங்கன் விமானச் சேவை.


உள்ளே வழங்கப்படும் உணவு ஒரு பார்வை. இவர்கள் தரும் BLACK TEA
ஆஹா! ஆஹா!


கடுநாயகே- பண்டாரநாயகே சர்வதேச விமான நிலைய ரன்வே.

விமான நிலையத்தின் உள்ளே




ஏர்போர்டிலிருந்து கொழும்பு செல்லும் சாலை.
சுமார 38 கி.மீ தொலைவில் இருக்கிறது கொழும்பு



கொழும்புக்குள்ளே வந்தாச்சுல்ல
மத்தது? அடுத்து அதானே!











Monday, January 21, 2008

என்னனக் கவர்ந்த தேசம் - பாகம்: 2

அதிசயங்களும், ஆச்சரியங்களும்.








இங்கு வந்தப் பிறகு எனக்கு பலவித ஆச்சரியங்கள், ஷாக் காத்திருந்தன.



1. முதல் ஷாக் - என்னவர் வேலை முடிந்து விட்டிற்கு மாலை 5.30 மணிகே வந்துவிடுவார். (சென்னையில் இருந்த போது 9.30 மணிக்கு (just leaving the office-அப்படின்னு சொல்லி போன் செய்வார்.)



2. சனிக்கிழமை 1/2 நாள் தான் லீவு. ஒவ்வொரு பொளர்னமியும் விடுமுறை. (இந்தப் பதிவு எழுதும் இன்றும் ஒரு "போயா டே"- விடுமுறை.



3. விடுமுறைக்கு பஞ்சமே இல்லாத ஊரு. (என் கணவர் சொல்லும் ஜோக் - இங்கே list of holidays க்கு பதில் list of workingdays தான் கேட்க வேண்டும்.)





4. காலை 6 மணிக்கே காலைஉணவு சாப்பிட்டு தத்தம் வேலைக்கு கிளம்பிவிடுகிறார்கள். கடைகளும் 8 மணிக்கே திறக்கப்பட்டு, மாலை 7 மணிக்குள் மூடப்பட்டு விடும். (ஷாப்பிங் மால்கள்) Govt. office timings 8.00 to 4.30)


5. ஹோட்டல்கள் மிஞ்சிப்போனால் இரவு 10மணியோடு சரி.


6. சுத்தமான, விசாலமான ரோடுகள்.


7. மாலை 7 மணிக்கு மேல் வெரிச்சோடிகிடக்கும் சாலைகள். (இப்ப அப்படி இல்ல. செக் பாயின்ட் போலிஸுகளாவது இருப்பார்கள்)



8. பொதுவாக Fresh milk -இல்லை. பவுடர் பாலில்தான் காபி. (நல்ல தயிர் கிடைக்கும்.) (எங்களுக்கு ஒரு தமிழர் கறந்தபால் கொண்டுவந்து கொடுப்பார்.)



9. கோயில்களில் அவ்வளவு சுத்தம். சத்தம் சுத்தமாக இல்லை. மன அமைதி தரும் கோயில்கள்.

10. விமானம் தரையிறங்கும் போது காணப்படும் பசுமை மிகு தென்னைமரங்கள் ஆஹா.. காணக் கண்கோடி வேண்டும்.

11. யுத்தம் நடக்கும் நாடும் என்று சொல்ல முடியாத செல்வச்செழிப்புடன் திகழும் கொழும்பு. (எல்லாம் பெரிய பெரிய கார்கள்தான். pajero, brado, audi,camry,BMW,Merc. சின்னக் காரில் போனால் கொஞ்சம் மதிப்புக் குறைச்சல் மாதிரி.)


விலைவாசி ஆஹா, அதிகம் இல்லை ஜென்டில்மேன் - காலிஃளவர் - கி.700 (LKR), திராட்சை - 700 lkr, தக்காளி - 140rs. இது சும்மா சாம்பிள் தான். ஏறும், ஏறும், ஏறிக்கொண்டே இருக்கும். நான் வந்த போது பிரட் - 29 lkr, இப்போ - 85lkr.



(வந்த புதிதில் மனோரமா ஒரு படத்தில் செய்வாரே அது மாதிரி சாதம், ரசம் செய்து காய்கறிகடைக்கு எடுத்து போய் காய்கறிகளைக் கண்ணால் பார்த்தும், வாசனையும் பிடித்து கொள்ளலாமா?என்று நினைத்ததுண்டு. ஹி.. ஹி..ஹி..)



(நம் இந்திய பணம் 1 ரூபாய் இங்கே 2.85 ஆகும்)


(இந்தப் படம் ஜொலிக்கும் சந்திரன்- எங்கள் தோட்டத்திலிருந்து எடுத்தது)








என்னைக் கவர்ந்த தேசம்


ஏறத்தாழ 26 ஆண்டுகளுக்கு முன் அப்பா தன் நண்பர்களுடன் வந்த இலங்கை பயணத்தை விவரித்ததாலா?

அன்றாடம் கேட்டு ம்கிழ்ந்த இலங்கை ஒலிபரப்பினாலா?

அப்பாவிற்கு திருமணப் பரிசாக வந்த நல்லூர் கந்தன் - வாழ்த்து மடலாலா?

கதிர்காமக் கந்தனனக் காண வேண்டும் என்ற ஆவலா?

ஏனென்று தெரியாத ஒரு காதல் இந்த தேசத்தின் மீது. வாழ்நாளில் ஒருமுறையேனும், இலங்கைக்கு வரமாட்டோமா? கந்தனனக் காண மாட்டோமா? என்று ஏங்கிக் கொண்டிருந்த எனக்குத் தேனாக வந்தது
கணவரின் பணிமாற்றம்.

இலங்கைக்கு பணிமாற்றம் என்றதும் நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவேஇல்லை. ஆனால் முதலில் 1 1/2 வருடக் காலம் கணவர் மாத்திரம் செல்ல அனுமதிக் கிடைத்தது. பிறகு 2002- டிச்ம்பரில் குடும்பத்தோடு வந்தோம்.

இதோ ஆயிற்றி 5 ஆண்டுகள் முடிந்து 6 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்த
வேளையில் இப்போது இந்தியாவிற்கு மாற்றம் எனும் செய்தி. தாய் நாட்டிற்கு திரும்புகிறோம் என்று ஆனந்தப் பட்டாலும், மனதின் ஒரு மூலையில் இலங்கையைப் பிரிகிற வலி இருக்கிறது.

இலங்கை இனி என் ஞாபக ஏடுகளில் மாத்திரம்தான். நான் இலங்கையில் பார்த்து ரசித்த இடங்கள், அவைப்பற்றிய தகவல்கள், புகைப்படங்கள்தான் இனி என் அடுத்த பதிவுகள்.

Monday, December 24, 2007

டாடா! பைபை! பாகம் - 2

ஆச்சு, அவ்வளவுதான். மூட்டை முடிச்ச கட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு.

புது வருடம் பிறக்கும் நேரத்தில் வந்திருக்கும் இனிப்பான செய்தி!!! :)))


அயித்தானுக்கு இந்தியாவுக்கு மாற்றல் ஆகிடுச்சு. பதவி உயர்வு + மாற்றல். இன்று காலையில் வந்த நீயூஸ். ஹைதராபாதிற்கு வரப்போறோம்.


ஏப்ரலில் மாற்றம். நல்ல வேளை நான் இங்கே வந்திருக்கும் நேரம் பார்த்து சொன்னதால், குழந்தைகள் பள்ளி அட்மிஷன் ஆகியவை பார்க்க வசதி.
அதனால் என் விடுமுறை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப் படுகிறது. ஜனவரி 14 வாக்கில் தான் கொழும்பு போகிறேன்.


இனி இலங்கை என் ஞாபக அடுக்குகளில் மாத்திரம் தான். என்றும் நான் மறக்க விரும்பாத இனிமையான ஞாபகங்கள்.



இன்னும் 4 அல்லது 6 மாதங்களில் இலங்கைக்கு டாடா பைபை கணத்த இதயத்துடன் சொல்ல வேண்டிய நேரம். :((