அண்ணன் முந்தைய பதிவுக்கு.
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு என்பார்கள்.
என் நம்பிக்கை வீணாகவில்லை. என் அண்ணன் வந்தார்.
தாய்வீடு சுஹாசினி போல் நான் அடைந்த ஆனந்தத்திற்கு
அளவேயில்லை. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பார்கள்.
ஆனால் நானோ முதலில் பார்த்தபோதே இவர்தான்
நான் தேடும் அண்ணன் என்பதை புரிந்துக்கொண்டேன்.
ஆனால் வாய் நிறைய அண்ணா என்றழைக்க முடியவில்லை.
அவர் வந்தது அயித்தானின் அதிகாரியாக. நான் அண்ணா
என்று அழைத்தால் பிரச்சனையாகி விடும்.
நாங்கள் இலங்கையில் இருந்தபோது அயித்தானின் உயர் அதிகாரி
அவர். பெரிய பதவியில் இருந்தாலும் ரொம்ப சிம்பிளாக
இருப்பார். வேலையில் எவ்வளவு கண்டிப்போ
சாய்ந்திரம் 6 மணிக்கு மேல் வேலைக்கு ”நோ”.
குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டுமென்று
அடிக்கடி சொல்வார்.
இலங்கை வந்த உடன் அன்று இரவு விருந்துக்கு
என் அண்ணா அழைத்துச்செல்வார். அவர் ஊர்
திரும்பும் அன்று காலையிலேயே ரூமை காலிச்செய்துவிட்டு
பெட்டியுடன் வந்துவிடுவார். இரவு என் கையால் விருந்து
உண்டபின் விமானம் ஏறுவார். இது எழுதப்படாத சட்டமாக
இருந்தது. (நான் செய்யும் பிசிபேளாபாத், ரசம், சாம்பார்
அண்ணாவின் ஹாட் பேவரிட்)
எனக்கு ஒரு அண்ணன் இருந்து அவர் என் வீட்டிற்கு
வந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே இருக்கும்
அவரது நடவடிக்கைகள். பிள்ளைகளுடன் அளவளாவுவார்.
விளையாடுவார். என் குழந்தைகளுக்கு பிடித்தாமன அங்கிள் அவர்.
அன்பை சொல்லிக்கொள்ளத் தேவையில்லை. அது
உணரப்படவேண்டும். அயித்தான் கூட உன் அண்ணன்
போன் செய்தார், உன் அண்ணன் வரப்போகிறார் என்று
சொல்வார். அவர் அயித்தானின் அதிகாரி என்பதே மற்ந்து
விட்டது.
இம்புட்டு சொல்லி அவர் பெயர் சொல்லவில்லைஎன்றால்
எப்படி?
என் அண்ணனின் பெயர் அனில் சர்மா.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று
வள்ளுவர் கூறியிருக்கிறார். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்
என்றால் என்ன? என் அண்ணன் அவர்தான்.
மும்பயிலிருந்து சிங்கப்பூர் சென்று தற்போது
அமெரிக்காவில் இருக்கிறார்.
அண்ணன் தனது குடும்பத்தினருடன் இலங்கை வந்திருந்த
போது முதலில் வீட்டிற்கு வந்து எங்களை சந்தித்துவிட்டு
பிறகுதான் ஹோட்டலுக்குச் சென்றார்.
அவரின் மனைவி,”உன்னைப் பற்றி அதிகம் சொல்லியிருக்கிறார்.
உன்னை நேராக சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன்”
என்று சொன்னபோது அண்ணனின் பாசம் அதிகமாக
உணர்ந்தேன். அனில் அண்ணா மட்டுமல்ல அவரது
குடும்பத்தினரும் அதே அளவு பாசத்துடன் இருந்தார்கள்.
நாங்கள் அனைவரும் சேர்ந்து ஜூ, பீச் சென்றது
மறக்க முடியாத நினைவுகள்.
நாங்கள் சிங்கப்பூர் சென்றபோது அவர் அங்கேதான்
இருந்தார். நாங்கள் பேயிங் கெஸ்ட் ஹவுஸில் தங்கியதற்கு
சண்டை போட்டவர் நாங்கள் அங்கே இருந்த 4 நாளூம்
தனக்கு டூர் ஏதும் வராமல் பார்த்துக்கொண்டார்.
தனது காரிலேயே எங்களை அழைத்துச்சென்றார்.
தினமும் ஊர் சுற்றிவிட்டு இரவு உணவு அவரது
வீட்டில்தான். நாங்கள் மலேசியா புறப்பட்ட அன்று
ரயில்நிலையம் வரை குடும்பத்துடன் வந்து
வழியனுப்பினார். அனில் அண்ணாவின் மகள்
ரியா நாங்கள் புறப்படுவதால் அழுதது மனதை
என்னவோ செய்தது.
அக்டோபர் 6 அனில் அண்ணாவின் பிறந்தநாள்.
அவரது மனைவிக்கு அடுத்து எனது வாழ்த்துதான்
அவருக்கு முதல் வாழ்த்து. அனைவருக்கும் முன்
நான் வாழ்த்து சொல்வேன். உனது போனுக்குத்தான்
காத்திருந்தேன்”, என்பார். இதோ இந்த முறை
அமெரிக்காவில் இருக்கிறார் என்பதால் ஞாபகமாக
சாயந்திரம் 6 மணிக்கு மேல் போன் செய்தால்
வாய்ஸ் மெசெஜ் போனது. வாழ்த்துக்கள்
சொல்லிவிட்டு வைத்துவிட்டேன்.
”அதெப்படி எப்போதும் நீதான் முதலில் வாழ்த்து
சொல்கிறாய்,! என்று கேட்டு போன் செய்து
30 நிமிடம் பேசினார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது
அவரது கைப்பேசியில் அவரது அண்ணன் பேச
அவரிடம் நான் ஸ்ரீராம், கலாவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.
நான் அப்புறம் பேசுறேன்!! என்றார். (அண்ணனுக்கு
எம்புட்டு பாசம்)
ரக்ஷாபந்தனுக்கு வாழ்த்து அனுப்புவேன்,இதுவரை
அவரை நான் அண்ணா என்று அழைத்ததில்லை.
அனில்ஜி என்றுதான் அழைப்பேன். ஆனால் இந்த
ஜென்மத்தில் நான் தேடிய அண்ணன் அவர்தான்.
எனக்கு என் அண்ணன் கிடைத்ததில் சந்தோசம்.
இன்றும் எங்கள் குடும்பத்தின் நலன்விரும்பியாக
இருப்பது அனில் அண்ணாதான்.
ஆரம்பத்தில் ஒரு முறை ஆஷிஷ் அனில்
அண்ணா எதிரில்,”அம்மா! உன் அண்ணா...
என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, யாரைச் சொல்கிறாய்
என்று கேட்டிருக்கிறார். ”உங்களை அம்மா அண்ணா
என்றுதான் சொல்வார்” என்று சொல்ல அவர் முகத்தில்
ஏற்பட்ட சந்தோசத்தை மறக்க முடியவில்லை.
ஆண்டவனுக்கு நன்றி. என் அண்ணனின் இந்த
உறவு இந்த ஜென்மத்து பந்தமல்ல என்று உண்ர்ந்தேன்.
அண்ணன் வந்தான்! இது ஆனந்த வீடு.
Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts
Tuesday, October 28, 2008
அண்ணண்
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ!
நான்தான் வீட்டில் முதல். எனக்கு அடுத்து ஒரே ஒரு தம்பி.
மனதின் ஒரு மூலையில் மட்டும் எப்போதும் ஒரு ஏக்கம் இருக்கும்.
தம்பி எனும் உறவு மகனைப்போல. தம்பி கார்த்திதான் எனது
மூத்த மகன் (இதில் அயித்தானுக்கு மாற்று கருத்தே இல்லை)
தம்பி பிறந்த உடன் அம்மாவிற்கு வேலை கிடைத்ததால்
10 வயதிலேயே அவனுக்கு தாயாகிப்போனேன்.
நான் ஊட்டினால் தான் சரியாக சாப்பிடுவான்.
அம்மாவிடம் அடம்பிடிப்பவன் நான் எண்ணெய் தேய்த்து
குளிப்பாட்டினால் ஒன்றும் பேசவே மாட்டான்.
சைக்கிளை ஓட்டிச் சென்று காலில் பயங்கர ரத்தக் காயத்தோடு
வந்தவனுக்கு மருந்து போட்டால் ஊரையே கூட்டுவான்.
அவனைத்திட்டி காயத்தில் பஞ்சினால் டிஞ்சரை 10 நாள்
நாந்தான் வைத்தேன். காயம் பட்டாக ஆறிப்போகிவிட்டது.
அண்ணனின் உறவு அப்பாவைப் போன்றது. அந்தக்
கதகதப்பு தரும் சுகமே சுகம். எனக்கு உறவில் கூட
யாரும் அண்ணன் முறைக் கிடையாது.
சின்ன மாமாவுக்கும் எனக்கும் 5 வயதுதான் வித்தியாசம்.
அம்மா என்னை அடிக்கும்’போதெல்லாம் வந்து
சண்டை போடுவது, வீதியில் பசங்க கிண்டல் செய்தால்
தன் கூட்டத்தோடு போய் ”விசாரிப்பது” என்று மாமா
எனக்கு ஒரு அண்ணணாக தான் தெரிந்தார்.
ஆனால் மனதில் எப்போதும் ஒரு தேடல். எனக்கென
ஒரு அண்ணன் இல்லையே என்பதுதான் அது.
”எனக்கு மட்டும் ஏன் அம்மா அண்ணன் இல்லை?”
இந்தக் கேள்வியை பலமுறை அம்மாவிடம்
கேட்டு திட்டு வாங்கிக்கொள்வேன். :(
கூடப் படிக்கும் பிள்ளைகளுக்கு அண்ணன் இருந்தால்
பெருமூச்சு விட்டுக்கொள்வேன். “நீங்க கொடுத்துவைத்தவங்க!
அதனால் தான் அண்ணன் கிடைச்சிருக்காங்க!” என்று
நான் சொன்னால் உடன் அவர்கள்,”அடப்போப்பா!
எங்களுக்கெல்லாம் ஏண்டா அண்ணன் இருக்காங்கன்னு
இருக்கு,” என்பார்கள். அடக்கொடுமையே என்று
நினைத்துக்கொள்வேன்.
எதுவும் இருக்கும்போது அதன் அருமை நமக்குத்தெரியாது.
இல்லாதவளுக்குத்தான் ஏக்கம்.
மும்பையில் வேலை பார்த்தபோது கல்யாண் அண்ணன்
கிடைத்தபோது மிக்க சந்தோஷமாக இருந்தது.
அவனின் தொடர்பும் இழந்து போனது இன்றுவரை
என் மனதில் ஒரு சோகம் தான்.
வலையுலகில் கூட எனக்கு பாசமிகு தம்பிகள்தான் அதிகம்.
மங்களூர் சிவா, அப்துல்லா, நிஜமாநல்லவன்
இப்படி பெரிய லிஸ்ட். (ஆயில்யன் இப்ப தம்பியண்ணா ஆகிட்டாரு)
ஒரே ஒரு அண்ணன் கிடைச்சாரு.
என்னவோ எங்க ரெண்டு பேருக்கும் ஒத்தே வர்றது
இல்லை. அதனால பேசறதையே நிறுத்திவிட்டேன்.
சிறுவயதில் எனக்குள் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும்.
எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். ஹாஸ்டலில்
தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறான். கண்டிப்பாய்
வருவான் என்பதுதான் அது.
என் கனவு வீண்போகவில்லை. ஆமாம்
என் அண்ணன் வந்துவிட்டான். (கல்யாண் அண்ணன்
இல்லை) 6 வருடங்களுக்கு முன் என்
அண்ணன் கிடைத்துவிட்டது எனக்கு மிக்க
மகிழ்ச்சி.
யார் அந்த அண்ணன்?
அதுதான் அடுத்த பதிவு

Subscribe to:
Posts (Atom)