Showing posts with label hotel. Show all posts
Showing posts with label hotel. Show all posts

Tuesday, January 22, 2013

கலவையா ஒரு பதிவு

”நீ தானே என் பொன் வசந்தம்” தெலுங்கில் எடோ வெல்லி போயிந்தி மனசுன்னு வந்திருக்கு. அயித்தானின் நண்பர் எங்க கம்பெனிதான் டிஸ்ட்ரிப்யூட் செய்யறோம். உங்களுக்கு எப்ப வேணுமோ சொல்லுங்க டிக்கட் இலவசம்னு சொன்னார். சரி போய் பாப்போமேன்னு போனோம்.






 இளையராஜா இசை... கொளதம் வாசுமேனன் கூட்டணி. பாடலுக்காக வெளிநாட்டில் போய் படம்பிடிப்பாங்க. ஆனா இங்க இசையமைக்கவே வெளிநாட்டுக்கு போனாங்கன்னு ரொம்ப எதிர்பார்ப்போட போனோம். ம்ம்ம்ம் பெருசா எதுவும் இல்ல. இசை மனசுல ஒட்டலை. கதையும் பெரிய ஓஹோ கதை இல்லை. இண்டர்வலுக்கு முன்னாடி வரைக்கும் போராதான் இருந்துச்சு.
நானி, சமந்தாவின் காதல்” சீன்கள்”  தேவையே இல்லை.

வாழ்க்கையில முன்னுக்கு வரணும்னா காதலை தள்ளி வெச்சாத்தான் முடியும்னு சொல்லாம சொல்றாரா? தன் படத்தையே கிண்டல் செஞ்சுக்கும் அளவுக்கு முதிர்ச்சி இருக்குன்னு பாராட்டுறதா புரியலை.  ஆனா ஒரே ஒரு மெசெஜ் இன்றைய இளம் தலைமுறையினருக்கு. “ஈகோ பாத்து உறவை முறிச்சுக்காம, ஈகோவுக்கு கோ சொன்னா தான் உறவு பலப்படும்னு.

ரொம்ப ஸ்ட்ராங்க் இல்லாத கதைக்கு இசையமைக்க நம்ம ராஜா சார் எப்படி ஒத்துக்கிட்டாரு???!!!
************************************************************************

2012 மேல செம கடுப்பா இருந்த எனக்கு, அதை ஒரு வழியா டா டா சொல்லி அனுப்பனும்னு செம காண்டு. கடைசி நாளாவது  சந்தோஷமா கழிக்கலாம்னு ப்ளான் போட்டு பாத்தேன். ம்ம்ஹூம். அன்னைக்கும் கூட எதுவும் சுபமா நடக்கலை. கடைசியில  சமைக்கும் மூடே வராம இரவு டின்னர் சமைக்கலைன்னு டிக்ளேர் செஞ்சிட்டேன். :)
 

பசங்களுக்கும் வெளிய போற மூடு இருக்க அயித்தான் டேபிள் புக் செஞ்சாரு.
 OHRIS  பேகம்பெட்டில் புதுசா ஒரு ப்ரான்ச் ஆரம்பிச்சிருக்காங்க. de thaliனு பேரு. லைஃப்ஸ்டைலுக்கு பக்கத்து கட்டடம் இந்த ஹோட்டல். இங்கே வேற சில ஷாப்பிங் செண்டர்கள் இருந்தாலும் கீழே இருக்கு. புஃபே, தாலி ரெண்டு வகை இருக்கு.




 புஃபே போனோம். அப்புறம்தான் தெரியும், இதுவும் ராஜஸ்தானி சாப்பாடுன்னு. ஆனா இதுக்கு முன்ன காந்தானி ராஸ்தானில சாப்பிட்டதை விடவும் உணவு தரமா இருந்தது. தால்பாட்டி அப்படி ஒரு டேஸ்ட். சுர்மா, பனீர் எல்லாம் நல்லா இருந்தது. சாஸ்க்கு  பதில் அரிசி கஞ்சி அந்த மண் குவளைல கொடுத்தாங்க அதுதான் அவ்வளவா ருசிக்கலை. அதைத்தவிர மத்தது எல்லாம் நல்ல ருசியா இருந்தது. காசுக்கேத்த பணியாரம்.

ஒரு  ப்ளேட் 350ரூவா. ஆனா ஓரிஸ் தரத்துக்கு கட்டாயம் தரலாம்.

****************************************************************************

 அடுத்து ஒரு சினிமா பத்தினது தான். அம்ருதா பர்த்டே செலிபரேஷன் முதல் நாளே  துவங்கினோம். 18 சாயந்திரம் செகண்ட் ஷோ இந்தப்படம்.




படத்துக்கு விளம்பரமா அதைப்பத்தி பேசவேண்டியதுதான். இல்லைன்னு சொல்லலை. ஆனா  மேலே சொன்ன படத்தைப்போல ரொம்ப ஓவரா இந்தப்படத்தையும் பத்தி எல்லோரும் பேசினாங்க. சரி போய் பாக்கலாமேன்னு போனோம்.  கதைன்னு எதை சொல்ல. இரண்டு குடும்பங்கள்.  ஆனா ப்ரகாஷ் ராஜ் & அவருடைய தங்கைய கட்டிக்கொடுத்த வீடு.  தங்கைய கட்டி கொடுத்த வீடு நல்லா வசதியாத்தான் இருக்கு. ப்ரகாஷ் ராஜ் மிடில் கிளாஸ். அவருடைய பசங்க வெங்கடேஷ், மகேஷ் பாபு. இறந்த அவருடைய தங்கைமகள் சீதா (அஞ்சலி) இவங்க வீட்டுலதான் வளர்றாப்ல.

இதைத்தவிர கதைன்னு ஏதும் பெருசா இல்லை. ரெண்டு குடும்பத்துக்கும் ஆகாது காரணம்பெருசா ஏதும் இல்லை. ப்ரகாஷ் ராஜ் தன்மையான மனிதரா எல்லோராலையும் மதிக்கப்பட்டாலும் காசு பணம் பெருசா தேராது. ரெண்டு பசங்களும் கூட வேலையில் ஸ்திரமா இல்லை. ஆனா அவங்க வீட்டிலேயே வளர்ற சீதாவை வெங்கடேஷும், எதிர் பார்ட்டியின் மகள் சமந்தாவை மகேஷ்பாபு கடைசியில கல்யாணம் செய்யறாங்க. அது எப்படி என்பது தான் கதைன்னு சொல்லிக்கலாம்.

மறுக்க முடியாத ஒரு விஷயம். இந்தப்படத்துல ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை, (இந்த இடத்துல சமீபத்துல டேடி எனக்கு ஒரு டவுட் நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருது.  தம் சீன், குடி சீன்லாம் வந்தா கீழே ஒரு லைனில் மது ஆபத்து, புகை பிடிக்காதீங்கன்னு வருதே அது போல கத்தி எடுத்து குத்தும் சீன், சண்டை காட்சிகள் போது ஏன் போடறதில்லை!! அது தாப்பா தப்பு இல்லையா? சின்ன பசங்க மனசு கெடாதான்னு!! கேப்பாப்ல. நல்ல டவுட்ல) சின்ன உடையில பாட்டுக்கள் ஏதுமில்லை. மெலடி பாட்டுக்கள் தான். இன்னும் சில தடவைகள் கேட்டா மனசுல நிக்கலாம்!!

ராத்திரி 12 மணிக்கு முழிச்சிருந்ததால தியேட்டர்லேயே அம்ருதாவுக்கு  ஹேப்பி பர்த்டே சொல்ல ஒரு சான்ஸ். :) அம்ருதம்மா 19ஆம் தேதி தன்னுடைய 13ஆவது பிறந்த நாளை கொண்டாடினாங்க. தானும் இப்ப ஒரு teen அப்படின்னு மேடத்துக்கு செம குஷி.

************************************************************************************

 கூடிய சீக்கிரம் வாரம் ஒரு முறை சைக்காலஜி பதிவுகள் வர இருக்கு. இப்ப இருக்கற சூழ்நிலையில் நாம புள்ளைகளை புரிஞ்சு கிட்டாத்தான்  அவங்களை நம்ம வழிக்கு எப்படி கொண்டு வர்றதுன்னு நமக்கு புரியும். நான் படிச்சது, தெரிஞ்சுகிட்டது எல்லாம் விவரமா பதிவாக்க போறேன். வந்து எல்லொ



Friday, January 11, 2013

Holistic Destination


Holistic Destination இப்படித்தான் லியோனியா தன்னை அறிமுகப்படுத்திக்குது. 500 ஏக்கர் பரப்பளவில் பார்த்து பார்த்து கட்டியிருக்காங்க. 3 நட்சத்திர ஹோட்டல்கள், வில்லாக்கள் தவிர லகூன் ஸ்டைல் வில்லாக்களும் உண்டு.


திருமணம், கம்பெனி கெட் டுகதர், மீட்டிங்குகள் எல்லா வற்றிற்கும் இங்கே இடம் உண்டு. பூல் ரெஸ்டாரண்டுன்னு ஒரு இடம் இருக்கு. அங்கே தம்பதியர் விரும்பினால் ஸ்விம்மிங் பூலுக்கு நடுவே மேஜை போட்டு உணவு பரிமாறப்படுது!!!


 நாங்க அங்க தங்கியிருந்த போது 3 திருமணம் 5 அல்லது 6 கம்பெனி கெட்டுகதர் எல்லாம் இருந்தது. அதைத் தவிர தங்கியிருக்கும் கெஸ்ட்கள். இத்தனை பேருக்கும் சமைத்து கொடுப்பது என்றால் எத்தனை நேர்த்தியான செஃப்கள் இருக்க வேண்டும். தரமான சுவையான உணவு!!!


 அடுத்த நாள் காலை எழுந்ததுமே பிள்ளைகள் ஸ்விம்மிங் பூல் போகணும்னு சொல்லிட்டாங்க. முதல்ல சாப்பிட போகலாம்னு காலை உணவுக்கு போனோம். காலை உணவும் அருமையா, இருந்தது. ரொம்ப நாளைக்கப்புறம் croissant சுவையானதா சாப்பிடக் கிடைச்சது. தென்னிந்திய உணவு அதிலும் ஆந்திரா பெசரட்டு சின்னசின்னதா சுடச்சுட ஊத்திக்கொடுத்தது சூப்பர். லஸ்ஸி பெரிய கண்ணாடி ஜார்ல இருந்தது. :)


 ரொம்ப நாளைக்கப்புறம் எங்க எல்லோருக்குமே மனதுக்கு நிறைவான ஒரு இடமா இருந்தது. இந்தியா வந்ததக்கப்புறம் இப்படி ரிலாக்ஸ்டா, இனிமையான சாப்பாடா ஒரு இடம் எங்களுக்கு கிடைச்சதில்லை. அந்தக்குறையை லியோனியா போக்கிடிச்சு.


அங்கேயிருந்து அயித்தானும் பிள்ளைகளூம் ரூமுக்கு போய்ட்டு ஸ்விம்மிங் பூல் போக ரெடியானாங்க. எனக்கு ஸ்விம் செய்யும் மூட் இல்லை. நான் காலாற நடக்க ஆரம்பிச்சேன். மொபைலில் பாட்டு கேட்டுக்கொண்டு ஆனந்தமாக ஒரு நடை. திரும்ப ரூமுக்கு வந்து ரிலாக்ஸாகி ரெடியாகி கிளம்ப வேண்டும் என்பதால் பேக்கிங் செய்து வைத்தேன். அயித்தானும் பிள்ளைகளூம் வந்ததும் சூடாக ப்ளாக் டீ குடித்தோம். கொஞ்ச நேரம்  ரெஸ்ட் எடுத்திட்டு செக் அவுட் செஞ்சோம்.

முதல்நாளே பிஸ்த்ரோவில் தாமதமானதுப்பத்தி சொல்லியிருந்தேன். அவங்க கிட்ட எழுத்து மூலமாவும் எழுதிக்கொடுத்திட்டு வந்தேன். என்ன ஆச்சரியம் கி்றிஸ்துமஸுக்கு அடுத்தநாள் அவங்க கிட்டேயிருந்து ஒரு மெயில். தங்களுக்கு நேர்ந்த உபத்திர்வத்துக்கு மன்னிக்கவும். மேலிடத்தில் இதைப்பற்றி சொல்லிவிட்டோம். தக்க நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்னு!! எடுத்திருக்காங்களோ இல்லையோ, ஆனா மெயில் அனுப்பி சாரி சொன்னது நல்லா இருக்கு.  இதுவரைக்கும் வேற எங்கேயிருந்தும் நமக்கு ரிப்ளை வந்ததே இல்லை.


  செக் அவுட் செஞ்சு வெளியே வரும்பொழுதுதான் லகூன் ஸ்டைல் வில்லா இருப்பது தெரியும்.  அடுத்தவாட்டி கண்டிப்பா அங்கதான் ஸ்டே செய்யணும்னு பசங்க முடிவு செஞ்சிட்டாங்க.  :))


மொத்தத்தில் ஒரு இனிமையான அனுபவம், புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தோம்.  அடுத்த நாளும் எனக்கு ரெஸ்ட் கொடுத்து உட்கார வைத்துவிட்டார்கள். ( லோனாவாலா போயிருந்தா வீடு எப்படி இருக்குமோ... அப்படியே இருப்பதா நினைச்சுக்கணும், துணி துவைக்கறேன், மடிக்கறேன், க்ளீன் செய்யறேன்னு போக கூடாது. சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுக்கப்படும். காஃபி/டீக்கு நாங்க இருக்கோம். அப்படின்னு சொன்னதக்கப்புறம் ரிலாக்ஸா உட்காராம என்ன செய்ய???!!)

:)))




Thursday, January 10, 2013

LEONIA!!!!!

ஓரு மணிநேரம் கழிச்சு போன் வந்தது. ரூம் இருக்கு. ஆனா இரண்டு நாளைக்கு கிடைக்காது. ஞாயிறு மதியம் முதல் திங்கள் மதியம் வரைதான் கிடைக்கும்னு சொன்னாப்ல. ஒண்ணும் இல்லாததற்கு இதாவது பரவாயில்லையேன்னு ரூம் புக் செய்ய செஞ்சோம். 3 வேளை சாப்பாடு + எங்க 4 பேருக்கும் தங்க எல்லாம் சேர்த்து பேக்கேஜா சொன்னாப்ல. சரிதான்னு சொன்னோம். கொஞ்சம் நேரம் கழிச்சு அவங்க மேனேஜர் கிட்ட பேசி டிஸ்கவுண்ட் வாங்கி கொடுத்திருப்பதா சொன்னாப்ல. 3 பேருக்கு மட்டும் கணக்கு. அம்ருதாவை 12 வயதுக்கு மாத்திப்புட்டாங்க. :) அம்ருதம்மாவுக்கு ரூம் கிடைச்சதுல குஷின்னாலும் தன்னை குட்டீஸ் லிஸ்டில் போட்டாங்களேன்னு வருத்தம். இப்போதைக்கு 12+தானேன்னு சமாதானப்படுத்தினோம்.

ஞாயிறு காலை லேட்டா எழுந்தோம். வேலை எதுவும் இல்லை. காலை டிபன் ரெடியா இருந்தது. குளிச்சு சாப்பிட்டு 1 நாளைக்கு தேவையான துணிகளை எடுத்து வெச்சுக்கிட்டு 11.30 மணிக்கு கிளம்பினோம். செகந்திராபாத் ஷ்டேஷனிலிருந்து ஷமீர்பேட் செல்லும் வழியில் இருக்கு இந்த ரெசார்ட். கேள்வி பட்டிருக்கோம். ஆனா போனதில்லை. இதான் முதல் விசிட்.

இப்ப அந்தப்பக்கம் OUTER RING ROAD போட்டு சூப்பரா இருக்கு. ரிசார்ட் பக்கம் நுழைஞ்சோம். பெரிய கதவுகிட்ட செக்யூரிட்டி நின்னு பேர் எல்லாம் விசாரிச்சார். அவருகிட்ட இருந்த லிஸ்டில் நம்ம பேரு இல்ல. எங்க ரூம் புக் செஞ்சீங்கன்னு சொல்ல உறவுக்கார தம்பி பேரு சொல்லி அவரு புக் செஞ்சாரு. நேத்து ராத்திரிதான் செஞ்சோம்னு சொல்ல ஒரு நிமிஷம் விசாரிச்சு சொல்றேன்னு ரொம்பவே தன்மையா பதில் வந்தது. 5 நிமிஷத்துல வந்து celestia suit போங்கன்னு சொல்லி அனுப்பி வெச்சாரு. அயித்தான் வண்டியை பார்க் செஞ்சிட்டு வர நாங்க லாபில போய் உக்காந்தோம்.
சிங்கம் ஒண்ணு நம்மளை வரவேற்குது.
ஃபார்மாலிட்டீஸ் நடந்துக்கிட்டு இருக்கும்போதே சூப்பரா ஒரு வெல்கம் ட்ரிங். ஐஸ் டீ. நல்லா இருந்தது. எங்களுக்குன்னு ஒதுக்கப்பட்டிருந்த ரூமுக்கு போனோம். நிஜமாவே சூப்பரா இருந்தது. எப்பவும் எக்ஸ்ட்ரா பெட் தான் போடுவாங்க. ஆனா இந்த இடத்துல இரண்டு கிங் சைஸ் மெத்தைகள். சோபா, லாக்கர் வசதி கொண்ட கப்போர்ட், எல்டீ டீவியோட உயர்தரமான ஹோம் தியேட்டர் சிஸ்டமும் இருந்தது.

பசி வயிற்றைக்கிள்ள சாப்பிட போகலாம்னு கிளம்பினோம். புஃபே லன்ச் இருந்தது அங்கே செம கூட்டமாக இருக்க லியோ பிஸ்த்ரோன்னு ஒரு ரெஸ்டாரண்ட் அங்கேயே இருக்கு அங்க போனோம். உணவு ஆர்டர் செஞ்சுட்டு உக்காந்திருக்கோம்.... உக்காந்திருக்கோம்.. உக்காந்தே இருக்கோம். சாப்பாடு வர்ற வழியைக்காணோம். என்னய்யான்னு கேட்டா, இதோ..ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. நேரத்தோட சாப்பிட்டு குட்டித்தூக்க போட முடிவு செஞ்சிருந்தோம். ம்ம்ஹூம். சாப்பாட்டுக்கடை முடியவே மணி 3.30 ஆகிடிச்சு. ஆனா உணவு ரொம்ப ருசியா இருந்ததை கட்டாயம் சொல்லணும். ரிச் ஃபுட்னு சொல்வாங்களே அதுமாதிரி செம டேஸ்ட்.

 ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் இருந்தோம். பசங்க டீவி பாத்தாங்க. சாயந்திரம் டீ குடிக்கவும் காஃபி ஷாப்புக்குதான் வரணும். ரூம்கள் ஒரு இடத்துலயும் சாப்பிட போகும் இட வேற வேற இடத்துலயும் இருக்கு. :(( ஹைடீ தியேட்டர் பக்கமாம். அதுவும் 6 மணிக்கு முடிஞ்சிடும்னு சொல்ல மணிய பாத்தா 5.30. நமக்கு வேண்டியது சூடா டீ அல்லது காபி. ரெண்டு பிஸ்கட்னு சொன்னதும் காபி ஷாப்பிலேயே தருவதா சொன்னாங்க. சூடா குடிச்சிட்டு பசங்களோட பக்கத்துலேயே விளையாட இருக்கும் இடத்துக்கு போனோம். அயித்தானும் ஆஷிஷும் கொஞ்ச நேரம் டென்னிஸ் விளையாட நானும் அம்ருதாவும் சேர்ந்து ரவுண்ட் அடிக்கறது, போட்டோஸ் எடுக்கறதுன்னு ஓட்டினோம். 


அப்புறம் தியேட்டர் போகலாம்னு முடிவு செஞ்சோம். எலக்ட்ரிக் கார் ஒண்ணு வந்து சிலரை இறக்கிவிட தியேட்டர் போகணும்னு சொன்னதும் ஏத்திக்கிட்டு போனாங்க. தியேட்டர்னா ஏதோ சின்னதா இருக்கும்னு நினைச்சிருந்தேன். ஒரே நேரத்துல இரண்டு படம் ஓடும் அளவுக்கும், குறைஞ்சது 100 பேராவது உட்காரும் அளவுக்கு இடவசதியோடயும் இருந்தது. ஸ்கைஃபால்னு ஆங்கிலப்படமும், கேமிராமேன் கங்காத்தோ ராம்பாபுன்னு தெலுங்கு படமும் ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஸ்கைஃபால் பாக்கலாம்னு உக்காந்தோம். டமால் டூமில்னு ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள்.... நானும் அம்ருதாவும் தெலுங்குப்படம் பாக்கலாம்னு வெளிய வந்து, பக்கத்து தியேட்டர்ல உட்கார்ந்தோம். கொஞ்ச நேரம்தான் உட்கார்ந்திருப்பொம். போதுமடா சாமின்னு ஆகிடிச்சு.

 நம்ம பவன்கல்யாண், தமன்னா நடிச்ச படம். அவ்வளவா பிடிக்கலை. காசா பணமா எந்திரிச்சு வந்திட்டு திரும்ப ஸ்கைஃபால் கிளைமாக்ஸ் பாக்க உக்காந்திட்டோம்.


மணி 8. சரி போகலாம்னு எல்லோரும் வெளிய வந்து எலக்ட்ரிக் காரை வரச்சொல்லி ஃபோன் செய்யச் சொன்னோம். இந்தக்குளிருல நடக்கறதாவது!! வண்டி வர்ற வரைக்கும் பாத்தோம். வர்றமாதிரி தெரியலை பேசிக்கிட்டே 10 நிமிஷத்துல ரெஸ்டாரண்ட் கிட்ட வந்தோம்.அடுத்த ஷோ எட்டுமணிக்கு. அமலா ரீசண்ட்டா நடிச்ச சேகர் கம்முலவின் “லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்”னாங்க. அன்னைக்கு அதே படம் டீவியிலயும் போட்டுக்கிட்டு இருந்தாங்க. செம டயர்ட். சாப்பிட போகலாம்னு கிளம்பிட்டோம்.



 காஃபி ஷாப்பில் புஃபே டின்னர். காஃபி ஷாப் பேரு SUN & MOON. அங்க வரைஞ்சு வெச்சிருந்த

 ஓவியங்கள் சூப்பர்.  சூரியோதயம், சூரியன் உச்சிக்கு வர்றது, சந்த்ரோதயம், சூரிய அஸ்தமனம்னு அருமையா இருந்தது புகைப்படங்கள்.அந்த காப்பி ஷாப்பின் அமைப்பே அந்த மாதிரி தான் இருக்கோன்னு தோணும்.


 இரவு உணவு ரொம்ப அருமையா இருந்தது. பசங்க சுடச்சுட பாஸ்தா சாப்பிட்டாங்க. கத்திரிக்காயில் பேக்ட் ஐட்டம் ஒண்ணு செஞ்சிருந்தாங்க செம ருசி அது. நல்ல ருசியான உணவு. அருமையான சர்வீஸ். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.  இந்த காப்பி ஷாப்பில் ஸீத்ரூ கிச்சன். :) சீனி கம் ஹிந்தி படத்துல வருமே அதுமாதிரி. 

நான் சமைக்கலை!!! எனக்கு யாரோ பரிமாறுராங்க. தண்ணி வேணும்னா கொண்டாந்து கொடுக்கறாங்க. இதைவிட ஆனந்தம் ஏதும் உண்டா??  நாம சமைக்காததை சாப்பிடும் போது அதோட ருசியே வேற. அன்னைக்கு நல்லா ரிலாக்ஸா சாப்பிட்டு நிதானமா ரூமுக்கு வந்து ஆனந்தமா தூங்கிப்போனேன்.

அடுத்த நாளைப்பத்தி அடுத்த பதிவுல



 

Tuesday, September 11, 2012

அசத்திபுட்டோம்ல ஆஷிஷை!!! :))

என் தோழியை ரொம்ப மிஸ் செஞ்சுகிட்டு இருந்தேன். நேற்று என்னோட
உறவு கொண்டாட என் தோழி வந்திட்டா. அழைச்சுகிட்டு வந்தது
என் பிள்ளைகள். :)) இதோ என் தோழி உங்கள் முன்னாலே!!


(மொபைலில் இருக்குன்னாலும் இந்த மாதிரி பேட்டரி ஆப்பரேட்டட்
ரேடியோ தான் பெஸ்ட். இனி நானும் என் தோழியும் இணைபிரியாமல்
இருக்கலாம். எந்த பவர் கட்டும் எங்களை பிரிக்க முடியாது பாருங்க. :))

பசங்களுக்கு ட்ரீட் கொடுக்க சர்ப்பரைஸா டின்னருக்கு அழைச்சுகிட்டு
போனேன். இந்த ரெஸ்டாரண்டுக்கு எங்க முதல் விசிட் இதுதான்.
போன இடம் எங்கன்னு அப்புறமா சொல்றேன். முதலில் போட்டோ
:))

வெல்கம் ட்ரிங் சாப்பிடறது ஆஷிஷ். சால்ஜீரா ரொம்ப சுவையா
அதிகம் காரமில்லாம இருந்தது.

நாம டேபிளில் உக்காந்த உடனேயே வெல்கம் ட்ரிங்க் கொடுத்த
நிமிஷத்துல பரபரன்னு சர்வ் செய்ய ஆரம்பிக்கறாங்க.
தட்டுல பரிமாறுவது என்னன்னு சொல்லிக்கிட்டே பரிமாறுவது சூப்பர்.
சாபுதானா வடா, பாக்கர் வாடி, பனீர் பசந்தா, தால்பாட்டி, சூர்மா,
நெய், கட்டேகி சப்ஜி, ஸ்வீட் தால், கார தால், கடி இப்படி ராஜஸ்தானி +
குஜராத்தி உணவுகளில் சங்கமம். மிசல்னு மராட்டி ஐட்டம் ஒண்ணு
இருக்கும். அது கூட காரமில்லாம அருமையா இருந்தது இங்கே.
72 வகை மெனுக்கள் மொத்தமா இருக்கு. அதில் தினத்துக்கு
சில வகைன்னு ரொட்டேடிங்கா சர்வ் செய்யறாங்க.

அன்லிமிட்டட் மசாலா சாஸ். யம்மி!!!

ரொட்டிலயும் நாலு வெரைட்டி, புல்கா, பாலக் ரோட்டி, பூரி அப்புறம்
இன்னொரு ராஜஸ்தான் அயிட்டம், பேருதான் ஞாபகத்துக்கு வரலை.

தாலி மீல்ஸ் என்பதால அன்லிமிட்டட். நான் போட்டோ எடுத்துக்கிட்டே
இருக்க சூடு ஆறிடபோகுது மேடம்! சாப்பிடுங்கன்னு அன்புத் தொல்லை. :)
உணவு ரொம்ப ருசியா இருந்துச்சு. தால்பாட்டி இதுக்கு முன்ன சாப்பிட்டிருக்கேன்.
ஆனா இம்புட்டு சுவையா இல்லை. உணவுகளை ருசித்த பிள்ளைகளுக்கு
ரொம்ப பிடிச்சிருந்தது. எங்கம்மா பிடிச்ச இந்த ஹோட்டலைன்னு ஆஷிஷுக்கு
ஆச்சரியம். எப்பவும் வெரைட்டியா ஹோட்டலை ஆஷிஷ் மட்டும்தான்
கண்டுபிடிக்க முடியுமா என்ன?? :)) அயித்தானுக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.

வகைவகையா வெச்சிருக்கும் சப்ஜிகளை அதிகம் சாப்பிடவிடாம பெரிய
சைஸ் ரொட்டிகளை போடாம சின்னதா போட்ட ஐடியா சூப்பர்.

அப்புறம் இந்த ஹோட்டலில் கிச்சனை நீங்க போய் பார்க்கலாம்?
பசங்க நான் போய் பாத்தோம். செம கீளீனா இருந்துச்சு.

அதோட போட்டோ பாருங்க.


போட்டோக்கள் பார்த்தாச்சா!!! எங்க போனோம்னு சொல்றேன்

ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் KHANDANI RAJDHANI
ரெஸ்டாரண்ட் தான் அது. ஒரு ப்ளேட் 300த்தி சொச்சம்.
இங்கே போனீங்கன்னா அதன் தளத்தை பார்க்கலாம்.

ஹைதையில் இருக்கு சாப்பிட போனீங்கன்னு வருத்தப்பட வேண்டாம்.
சென்னை, பெங்களூர்ல மட்டும் 5 இடத்துல இருக்கு , அலாக்ஹாபாத், டெல்லி,
மும்பை, நாசிக், ஷீர்ட், பரோடோ போன்ற இடங்களிலும் இருக்கு.
அட்ரஸ் எல்லாம் அந்த தளத்துல போய் பார்க்கலாம்.

உணவின் தரம் ரொம்ப அருமையா இருந்தது. முகம் சுளிக்காம
பரிமாறுவது சுகம்.


Wednesday, August 29, 2012

வீக் எண்ட் ரவுண்ட் அப் ரிப்போர்ட் 900ஆவது பதிவாக!!

வலைப்பூவரசியா வந்ததற்கு வாழ்த்து சொன்னதோட ட்ரீட்டுக்கு
எங்க சாப்பிடப்போனேன்னு பதிவா போடச்சொன்ன ஹுசைனம்மாவுக்காக
இந்தப் பதிவு. (ட்ரீட் கேட்டா அயித்தான் சொன்ன டயலாக்-
ஏதோ ஒருவாட்டின்னா ட்ரீட் தரலாம். சும்மா சும்மால்லாம்
கஷ்டம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ. விகடன் வரவேற்பரையில்
என் வலைப்பூ வரட்டும், அப்ப பெரிய வேட்டா வெச்சுக்கறேன். :)))

செகந்திராபாத்தில் ரொம்ப பிரபலமான ஹோட்டல் இது.
லோக்கல் ட்ரிப்களுக்கு பிக் அப் பாயிண்ட் இந்த ஹோட்டல்தான்.
(ராமோஜி ஃபிலிம் சிட்டி, கோல்கொண்டா, சிட்டி ரவுண்ட் அப்)
யாத்ரி நிவாஸ். யாத்ரி நிவாஸ் AMOG GROUP OF HOTELSஆல்
நிர்வாகிக்கப்படுது.

SP ROAD அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் 5 ரெஸ்டாரண்ட்
இருக்கு. வெளியிலே காத்தோட்டமா உக்காந்து சாட் சாப்பிடலாம்.
Angan, Tamarind tree, The Hunter's roast, On the rock (pub),
Amogh takeaway.

இதுல நாங்க போனது ஆங்கன். மல்ட்டிஹுசைன் ரெஸ்டாரண்ட்.
இங்கே சாப்பாடு ரொம்ப சுவையா இருக்கும்.


என்ன ஆர்டர் செய்யலாம்னு ரொம்ப மண்டைய குழப்பிக்காம,
1 பை 2 க்ரீம் மஷ்ரூமும், ஸ்வீட் கார்ன் சூப்பும் ஆர்டர் செஞ்சோம்.
ஸ்டார்ட்டர் பனீர் 65. கொஞ்சம் காரமா இருந்தது. (நமக்குத்தான்
வயிறு வெந்து கெடக்கே!!)

அடுத்து மெயின் டிஷ்:
இங்கே வித்தியாசமா தால் மஹாராணின்னு பாத்தோம். எப்பவும்
தால் மக்கனிதானே சாப்பிடறோம்னு தால் மஹாராணி, வெஜிடபிள்
லஜீஜ் சொன்னோம். இந்தியன் ப்ரட்டில் ஸ்டஃப்டு குல்சா, பட்டர்
குல்சா ஆர்டர் செஞ்சோம்.

சுடச்சுட மெத்து மெத்துன்னு குல்சா வந்துச்சு. தால் மஹாராணியை
ஒரு சின்ன எவர்சில்வர் பக்கெட்டில் கொண்டு வந்து வெச்சாங்க.
காரம் அதிகமில்லாத உணவு. தால் மஹாராணி சுவை நல்லா
இருந்தது (அதே முழு கருப்பு உளுந்துலதான் செஞ்சிருந்தாங்க)
வெஜிடபிள் லஜீஜும் காரமில்லாம நல்லா இருந்தது.

ஸ்வீட் லஸ்ஸி வரவழைச்சு குடிச்சேன். டெசர்ட்டுக்கு போக
மனமில்லை. இங்கே ஹைதை டபுள் கா மீட்டான்னு ஒண்ணு கிடைக்கும்.
செம சூப்பரா இருக்கும். ப்ரெடில் செய்வது. ஆனா அன்னைக்கு
டெசர்ட் எதுவும் சாப்பிடலை.

பில் அதிகம் இல்ல. அந்த தரமான உணவுக்கு நியாயமான காசு.
எங்க 4 பேருக்கும் சர்வீஸ் டாக்ஸ், லொட்டு லொசுக்கு டாக்ஸ்
எல்லாம் சேர்த்ததால 1300/-. ஆனந்தமா எஞ்சாய் செஞ்சாச்சு.


ஹைதையில் பான் ரொம்ப ப்ரபலம். மத்த ஹோட்டல்களில்
பான் கிடைக்காது. அதனால பான் ஷாப் தேடி ஓடணும்.
ஆனா யாத்ரிநிவாசில் அந்த பிரச்சனையே இல்லை. பானுக்குன்னே
தனியா ஒரு கடை உள்ளே இருக்கு. ரெடியா செஞ்சு வெச்சிருக்கும்
பானை வாங்க மாட்டேன். அதுல தேங்காய்த் துருவல் எல்லாம்
போட்டிருக்கும். நமக்கு மீட்டா பான் தான். அதுலயும் பாக்கு
கெட்டியா இருப்பதை போடச் சொல்லாமல், மெலிசா இருக்கும்
அதை போடச்சொல்லி தயார் செஞ்சு வாங்கி எஞ்சாய் செஞ்சாச்சு.

கார்பார்க்கிங் ப்ராப்ளம் இல்ல. நல்ல விஸ்தாரமா இடம் இருக்கு.
வேலே பார்க்கிங்கும் உண்டு. ஹைதை வர்றவங்க கண்டிப்பா
இங்கே ட்ரை செஞ்சு பார்க்கலாம். இங்கே தங்கும் வசதியும்
இருக்கு. இங்கே சாட் அயிட்டம் கொஞ்சம் காஸ்ட்லி. ஆனா
ருசி அபாரமா இருக்கும்.

ரவுண்ட் அப் ரிப்போர்ட் போட்டு காதுல புகை கிளப்பியாச்சு.
1000மாவது பதிவுக்கு இன்னும் 100 பதிவுகள்தான் இருக்கு.
என்னுடைய 900ஆவது பதிவுக்கு வந்திருக்கும் உங்களுக்கு...




Friday, August 24, 2012

DI(N)E MORE!!!!!

வார இறுதியில் எங்கே சாப்பிடப்போவது??!!! இது ரொம்ப பெரிய
விஷயமா இருக்கும். நமக்கு சைவ சாப்பாடு. அதுக்கு தகுந்த
மாதிரியான ஹோட்டல்கள்தான் போக முடியும். இந்திய
உணவகங்கள் ரொம்ப குறைவு. அதுக்காக எப்பவும் இந்திய
உணவுகள் தான் வேணும்னு அடமெல்லாம் பிடிக்க மாட்டோம்.
ஆப்பம், புட்டு, கொத்து, போல் ரொட்டி எல்லாமும் சாப்பிடுவோம்.
(கொழும்பில் இருந்தப்ப நடந்த கதையை சொல்லிக்கிட்டு
இருக்கேன்.)

எங்கயாவது வித்தியாசமா சாப்பிட போகலாம்னு அயித்தானைக்
கேட்டோம். சரி வாங்க அழைச்சிக்கிட்டு போறேன்னு
அயித்தான் சொன்னாக. அப்ப என் தம்பி கார்த்தியும் எங்க
கூட கொழும்பில் இருந்தாப்ல. தம்பி ஐயா என்ஐஐடில ஃபேக்வல்ட்டியா
இருந்தாப்ல. சனிக்கிழமை சாயந்திரம்தான் நம்ம அவுட்டிங்.
சனிக்கிழமை கொஞ்சம் சுத்திட்டு லேட்டா வீட்டுக்கு வந்து
சினிமா பாத்திட்டு தூங்குவோம். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை
லேட்டா.....ஆ எந்திரிப்போம். மொதோ நாள் கொஞ்சம்
ஹெவியா இருக்கும் சாப்பாடு. அதனால் ஞாயிற்றுக்கிழமை
காலையில் “நோ ப்ரெக்ஃபாஸ்ட்” டீ, பிஸ்கட் சாப்பிட்டு
12 மணிக்கு சாப்பாடு.

அன்னைக்கு அயித்தான் ஃப்ளவர் ரோடில் இருக்கும் அந்தக்கடைக்கு
அழைச்சுகிட்டு போனாரு. அங்க நாம சாப்பிட என்ன கிடைக்கும்னு
ரோசனை. அந்தக்கடைக்கு பேரு Dinemore. சப்மரைன்னு
சொல்லக்கூடிய சாண்ட்விச்கள் கிடைக்கும் அப்படின்னு
சொன்னாங்க அயித்தான்.


அயித்தானுக்கு தெரியும்லன்னு,”நீங்களே ஆர்டர் செஞ்சிருங்கன்னு!!”
சொல்லிட்டு நானும் பசங்களும் டேபிள் தேடி உக்காந்திட்டோம்.
அயித்தானும் தம்பியும் ஆர்டர் செய்ய போனாங்க.

நீள்ளள....மா ப்ரெட். அதில் செலரி, கொஞ்சம் வெஜிடபிள்
எல்லாம் போட்டு வந்துச்சு. அதிகா மயனைஸ் சாஸ்தான்
இருந்தது. ஒரு கடி வாயில் வெச்சா.... சப் சப்புன்னு இருந்துச்சு.
எந்த சுவையும் தெரியலை. தக்காளி சாஸ் கேட்டு வாங்கி
சேத்து ஒரு வழியா சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.

இரண்டு நாளைக்கு பசியே எடுக்கலை!!!! அப்படி ஒரு மாதிரி
ஆகிடிச்சு வயிறு. அதிகமா சீஸ் + மயனைஸ் சாஸ் எல்லாம்
சேர்ந்து ஒரு மாதிரி ஆகிடிச்சு. :(( அந்த ஏரியா பக்கம்
போகும்போதெல்லாம் இந்தக்கடைக்கு DINE MORE அப்படிங்கறதுக்கு
DI(N)E MORE பேர் வெச்சிருக்கலாம்னு சொல்வோம்.
செம கொலஸ்ட்ரால் ஏறுதே அதனாலத்தான் இந்தப் பேரு. :))

ஹைதை வந்ததற்கப்புறம் சப்வே ரெஸ்டாரண்ட் அழைச்சு
கிட்டு போனார் அயித்தான். உடனே டைன்மோர்தான் ஞாபகம்
வந்தது. ஆனா இங்க நம்ம சாய்ஸுக்கு ஏற்ப தயாரிச்சு
தர்றாங்க. அதனால மயனைஸ் இல்லாம நாம விரும்பும்
சாஸ் போட்டு, ஜால்பனோஸ் எல்லாம் சேர்த்து ருசியா
தயார் செய்ய சொல்லலாம். நம்ம கண்ணுமுன்னாடியே
அழகா செஞ்சு கொடுக்கறாங்க.


அதிலயும் இந்த கடுகு சாஸ் உடம்புக்கு ரொம்ப நல்லது.
கொழுப்பு குறைக்கும். கொஞ்சமா புளிப்பு சுவையோட
ரொம்ப நல்லா இருக்கும்.

அப்புறம் இந்த பிட்சா, பர்கரை விட என்னைப்பொறுத்தவரை
சப்வே சாண்ட்விச்கள் ஆரோக்கியமானவை. தேவையான
அளவு காய்கறிகளும் சேர்த்துக்கலாம். வேண்டாம்னா
சீஸை தவிர்த்திடலாம். பனீர் சப்வே சாப்பிட்டிருக்கீங்களா??
சூப்பர் டேஸ்ட்.

ஆனா ஒண்ணுங்க. இங்க இந்தியா வந்த புதுசுல கூட
விடாம வார இறுதியில வெளிய சாப்பிட போய்க்கிட்டு
இருந்தோம். இப்ப ரொம்ப பெம்மா இருக்கு. வரிதான்!!!
எங்க ஊர்ல 14.50 சர்வீஸ் டாக்ஸ், தவிர சேல்ஸ்டாக்ஸ்
எல்லாம் போட்டு பில்லை பாக்கும்போதே சாப்பிட்டது
செமிச்சிடும்!!!! :(( (ஒரு ஆள் சாப்பாடு வரியாவே
கட்டும் கொடுமை)

புலம்பி ஆவப்போறது ஒண்ணுமில்ல. சம்சாரம் அது
மின்சாரம் வசனம்தான். “ம்ம்ம் நீயும் பழகிக்க” :)

ஹேப்பி வீக் எண்ட்


Thursday, May 10, 2012

ஊட்டிமல ரோட்டுமேல ஓடிய எங்க வண்டி....

மேட்டுப்பாளையத்தில் காலை உணவு சாப்பிட்டு கிளம்பியாச்சு ஊட்டிக்கு.
மொத்தம் 14 கொண்டை ஊசி வளைவுகள். அருமையான பயணம்.
இரண்டு கார்ல போய்க்கிட்டு இருந்தோம். ஒரு வண்டில ஆஷிஷ்,
அவங்க அண்ணா, அண்ணி, குட்டி பாப்ஸ், இன்னொரு வண்டில
நான், அம்ருதா ,அயித்தான்.

குன்னூரில் சிம்ஸ் பார்க் நல்லா இருக்கும் பாருங்கன்னு டிரைவர்
சொல்லி கூட்டிப்போனாரு. நிஜம்மாவே சூப்பரா இருந்துச்சு.
மலர்களும், மரங்களும் நிறைஞ்சு கண்ணுக்கு குளிரிச்சியா,
சீதோஷ்ணம் உடலுக்கு குளிர்ச்சியாவும் இதமா இருந்துச்சு.
ஆஷிஷையும் கேமிராவையும் பிரிக்க முடியலை. :))
போட்டாவா எடுத்து தள்ளிட்டாரு.

Flickr
போய் பார்த்த சில படங்கள் ஏத்தியிருக்காரு. அதை பார்க்கலாம்.

குன்னூரிலேர்ந்து அடுத்து போன இடம் கேத்தி ஷ்டேஷன்.
நம்ம மூன்றாம்பிறை கிளைமாக்ஸில் ஆடுடாராமான்னு கமல்
குட்டி கரணம் போடுவாரே அந்த ஸ்டேஷன். பல தெலுங்கு
படத்திலும் நடிச்சிருக்கு!!

இந்த ஷ்டேஷனில் வேலை கிடைச்சா போதும்னு அயித்தான்
கமெண்ட் அடிச்சாக. நாங்க போவதற்கு கொஞ்சம் முந்திதான்
அந்த மலைப்பாதை ரயில் போனிச்சு. (மேட்டுப்பாளையத்திலேர்ந்து
அதுலதான் மலையேற ப்ளான். டிக்கெட் கிடைக்கலை!!!)

இம்புட்டுதான் ஷ்டேஷன். நாங்க போனபோது யாருமே இல்லாம
காலியா இருந்துச்சு. ட்ராக்மேல நின்னு போட்டோல்லாம் எடுத்து
கிட்டோம். :)) அங்கேயிருந்து போனது லவ்டேலில் இருக்கும்
லாரன்ஸ் ஸ்கூல்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்
“சுந்தரி சிறிய ரைட்டைவால் சுந்தரி” பாட்டு ஆரம்பத்துல
வருமே அது இந்த ஸ்கூல் தான். ஆனா உள்ளே விடலை.
அயித்தானுக்கு தெரிஞ்ச நண்பர் ஊரில் இல்லை. சரின்னு
ஊட்டிக்கு கிளம்பிட்டோம். எல்லோருக்கும் செம பசி.
அயித்தானுக்கு எங்கே என்ன கிடைக்கும்னு நல்லா
தெரியும். ஊர் உரா சுத்தும் வேலையில இருப்பவங்களுக்கு
இது நல்லாவே தெரியும். ராஜஸ்தான் போஜனாலயா
கூட்டிப்போனாரு.

Sri Ambika Bhojanalaya
(jain, gujarathi, Rajasthani, Bombay meals, Panjabi dises)
opp. Alankar theatre, Ettines road, ooty.
(near Rose garden)
இங்க தான் சாப்பிடப்போனோம். இங்கே ஹைதையில்
ஷ்யாம் நிவாஸ்னு ஒரு ஹோட்டல் பத்தி சொல்லியிருக்கேன்ல.
அதே மாதிரி தான் இங்கேயும். அன்லிமிட்டட். சுடச்சுட
சப்பாத்தி, அதிக காரமில்லாத காயகறிகள்னு அருமையான
உணவு. ப்ளேட் 90ரூவா. இவங்களுக்கு மைசூரிலும் ஒரு
கிளை இருக்காம். அதோட அட்ரஸையும் போட்டு
எழுதச் சொன்னாரு :))

Sri Balaji Bhojanalaya restaruant,
2885, Near Jain temple,
Behind Sangam Talkies & KSRTC Bus stand,
Halladkeri, Mysore.

100% வெஜிட்டேரியன் உணவு கிடைக்கும். ஆம்பியன்ஸ்
அவ்வளவா ஓகோன்னு இருக்காது. சுமாராத்தான் இருக்கும்.
எங்க மருமகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. வயிறு கெடுக்காத
சாப்பாடு கிடைக்கும் இடத்துக்கு கூட்டியாந்திருக்கிக்கன்னு
சின்ன மாமானாருக்கு ஒரே பாராட்டு மழைதான்!!!!

மணி 3 தாண்டிடிச்சு. இனி நேரா ஹோட்டலுக்குத்தான்னு முடிவு
செஞ்சிட்டோம். அயித்தானின் அண்ணன் மகன் தனது
நண்பர் மூலமா ஸ்டர்லிங் ரிசார்ட்டில் ஏற்கனவே ரூம்
புக் செஞ்சு வெச்சிருந்தாப்ல. செக் இன் செஞ்சுகிட்டோம்.
இங்கே வித்தியாசமா கீழே இருந்துச்சு ரூம்!!! பைப்பைத்
தொறந்தா சில் சில்ன்னு தண்ணி வருது. குட்டி பாப்பா
இருந்த ரூம்ல ஹீட்டர் வேலை செய்யலை!!! அதுக்கு
ஆளைக்கூப்பிட்டு வேலை நடந்துச்சு. ஆனாலும் நோ ஹாட்
வாட்டர். எங்க ரூம்ல டீவி வேலை செய்யலை!!

தொலையுதுன்னு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தோம். இண்டர்காம்
அடிச்சிச்சு. எடுத்து யாருன்னு கேட்டா ஹாலிடே டிப்பார்ட்மெண்டிலிருந்து
பேசறாங்களாம். 7 மணிக்கு அந்த ரூமுக்கு எல்லா விருந்தினர்களையும்
வரச்சொல்லி கூப்பிட்டாக. விளையாட ரூம் நல்லா இருக்கு. குட்டீஸுக்கு
பெரியவங்களுக்கு டீடீ எல்லாம் இருந்துச்சு. கம்ப்யூட்டர் கேம்ஸ்
கூட இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு 100 ரூவா.

இடி மின்னலுடன் மழை பெஞ்சுகிட்டு இருந்துச்சு. தம்போலா
விளையாடினாங்க எல்லோரும். ஒரு 7 குடும்பங்கள் இருந்துச்சு.
அது முடிஞ்சு சாப்பிடப்போனோம். சாப்பாட்டுக்கு ஒரு பேக்கேஜ்
வெச்சிருக்காங்க. இரவு உணவு + காலை உணவு ரெண்டுக்கு
சேர்த்து பேக்கேஜ். புஃபே சிஸ்டம் தான். வேணுங்கறது சாப்பிடலாம்.
அந்த பேக்கேஜுல 20 % டிஸ்கவுண்டும் கிடைச்சது. உணவும்
சுவையா நல்லாவே இருந்துச்சு.

ரூமில் ஹீட்டர் போட்டு படுத்ததுதான் தெரியும்.

தொடரும்...

Wednesday, October 12, 2011

ஆஷிஷ் பர்த்டேக்கு எங்க போனோம்??!!!

ஆஷிஷுக்கு பிடித்த சாக்லேட் ட்ரஃபிள் கேக் ஆர்டர் செய்திருந்தோம்.
மாலை 6 மணிக்கு கேக் வெட்டி, ஊட்டிய பிறகு கோவிலுக்கு அழைத்துச்
சென்று சுவாமி தரிசனம் செய்தோம். டின்னர் யாருக்கு பிறந்தநாளோ
அவர்கள் சாய்ஸ் தான்.


பெருமைக்காக சொல்லவில்லை ஆஷிஷ் எப்பொழுதும் டிஃபரண்ட் ஸ்டைல்
ரெஸ்டாரண்டை தேடி கண்டுபிடித்து வைத்திருப்பான். இந்த முறை அவன்
போக விரும்பியது ஓரிஸ் பஞ்சாரா. பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும்
ohris ஹோட்டலுக்கு. பஷிர்பாக், நெக்லஸ்ரோட் என இந்த ரெஸ்டாரண்ட்
இருக்கும் இடம் அமைப்பு வித்தியாசமாகவே இருக்கும். பாலிவுட் ஸ்டைல்,
ஹோட்டல் பற்றி கூட ஒரு முறை சொல்லியிருந்தேன்.


ஓரிஸ் பஞ்சாராவில் ஒரு தளத்தில் ஒரு வகை உணவு. க்ரவுண்ட் ஃப்ளோரில்
சாட். முதல் தளத்தில் வட இந்திய உணவு. இரண்டாம் தளத்தில் சைனீஸ்.
ஆஷிஷ் போக விரும்பியது 3 & 4 ஆம் தளத்தில் இருக்கும் உணவகத்துக்கு.
சரி போவோம் என டேபிள் புக் செய்தேன். அன்று வெள்ளிக்கிழமைதான். ஆனாலும் இருக்கட்டும் என டேபிள் புக் செய்தேன். செம கூட்டம்.
சர்வர்கள் காட்டிலாகா போலீஸ் மாதிரி உடையணிந்திருந்தனர்.


கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் செரங்கட்டி காடுகள் போல ஒரு செட்டப்.
அங்கே கிடைக்கும் உணவோ பெஷாவரி, லக்னோவி & வட இந்திய வகை. எப்படி
கலக்கலா இருக்குல்ல?? அதுதான் ஆஷிஷின் கண்டுபிடிப்பு. குண்டன்
எங்கேயிருந்துதான் இன்பர்மேஷன் கலெக்ட் செய்வானோ. கார்களுக்கு அடுத்து
ஐயா ஆராய்ச்சி செய்வது ஹோட்டல்கள் பற்றிதான்.



அன்னைக்கு எப்பவும் ஆர்டர் செய்யும் சப்ஜீக்கள் இல்லாமல் வித்தியாசமா
ஆர்டர் செய்யணும்னு முடிவு செஞ்சிருந்தோம்.

திரங்கா பனீர் டிக்கான்னு ஒண்ணு ஆர்டர் செஞ்சோம். செம ருசி.


கோவா, புதினா சட்னி & குங்குமப்பூ சேர்த்து 3 கலர்ல பனீர் டிக்கா.

மெயின் கோர்ஸுக்கு பாலக் கோஃப்தா & லெஹான் கா மேலா எனும்
மிக்ஸ்ட் வெஜிடபிள் சப்ஜி.

இண்டியன் ப்ரட் வகைகளில் ஆஷிஷ் ஆர்டர் செய்திருந்தது chopped paratha.
பராத்தாவை பிச்சி நெய்யில் பொறிச்சு சும்மா மொறு மொறுன்னு இருந்துச்சு.
அம்ருதம்மா லச்சேதார் பராத்தா. நான் ஸ்டஃப்டு குல்சாவும் அயித்தான்
புதினா பராத்தாவும் ஆர்டர் செய்தோம். உணவு டேஸ்டோ டேஸ்ட்.
ஓரிஸில் சாப்பிட்டால் உணவின் தரம் எப்படி இருக்கும்னு சொல்லவே
வேண்டாம்.


டெசர்ட் எதுவும் வேணாம்னு முடிவு செஞ்சிட்டாரு ஆஷிஷ். நானும்
அம்ருதாவும் லஸ்ஸி குடிச்சோம். அவ்வளவுதான். பில் கொடுக்கும்
முன் பான் ட்ரிங்குன்னு ஒண்ணு குட்டி கிளாஸ்ல கொடுத்தாங்க. பாங்கா
இருக்குமோன்னு பயந்தேன். பானை கரைச்சு குடிச்சா எப்படி இருக்குமோ
அப்படி இருந்துச்சு. டேஸ்டும் நல்லாவே இருந்துச்சு.

எங்க 4 பேருக்கும் சேர்த்து வரியோட 1200 தான் பில். ஓரிஸில்
சாப்பிட்டால் வயிற்றுக்கும் பெஸ்ட், பர்ஸுக்கு பெஸ்ட்.

டைம்ஸ் ஃபுட் காண்டெஸ்டில் இந்த ஹோட்டலுக்கு விருது
கிடைச்சிருக்கு. இந்த ஹோட்டலின் வலைத்தள முகவரி




Thursday, January 20, 2011

அரே ஓ சாம்பா!!!

மறக்கமுடியாத படம் ஷோலே!! ஷோலேவை ரீமேக் செய்ய நினைச்சு
அம்ஜத்கானின் குரல் இப்ப கம்பீரமா இல்லைன்னு அவரை அந்த
ரோலுக்கு நிராகரிச்சாங்கன்னு படிச்சு சிரிச்சுகிட்டே இருந்தேன்.
அமிதாப்புக்கு 67 வயசு, ஹேமமாலிஹி 60, தர்மேந்த்ரா 70, சஞ்சீவ்
குமார் பரலோகத்துக்கே போயிட்டாரு!! ஆனா ரீமேக் செஞ்சாலும்
அந்த மாதிரி படம் வருமா??? சந்தேகம் தான். பட படன்னு ஹேமா
மாதிரி பேச கூட யாராலும் முடியாது!

சரி ஷோலே புராணம் இப்ப எதுக்கு? என் மகனுக்கு எங்கேயிருந்துதான்
காரைப்பத்தியும், ஹோட்டல்ஸ் பத்தியும் இன்பர்மேஷன் கிடைக்குதோ??!!!
எங்க வெட்டிங் டேக்கே இந்த ஹோட்டலுக்கு போகணும்னு சொன்னான்.
ஏனோ அன்னைக்கு அங்க போகல. சரி தங்கச்சி பர்த்டேவுக்காகவாது
அங்கே போகணும்னு சொல்லிட்டார். பேகம்பேட்டில் இருக்கும்
”ஷோலே” அப்படிங்கற ஹோட்டல். அந்த தண்ணி டேங்கிலேர்ந்து
எல்லாமே சூப்பர். வீரு,ஜெய் வீடுன்னு எழுதி அங்க அவங்க போட்டோ
வெச்சிருந்தாங்க. அதுல அமிதாப் படம்தான் கொடுமை!!!


ஹேமமாலினி ஷோலேவுல அழகா இருப்பாங்க. அவங்களை ஏதோ
அரக்கி மாதிரி வரைஞ்சிருந்ததுதான் கொடுமை. ஆனா டாகூர், அம்ஜத்கான்,
அந்த ஜெயலர் அஸ்ரானி போட்டோக்கள் அருமையா இருந்தது.


சாப்பாட்டு மேட்டருக்கு வருவோம். அலாகரட்டி மெனுதான். பைசா வசூல்னு
சொல்வாங்களே அது இங்கே நிஜம். விலையும் அநியாயம் இல்லை.
தக்காளி சூப் இன்ஸ்டண்ட்டால செய்யாம ஒரிஜனலா செஞ்சிருந்தாங்க.
சுவை அபாரம். “Desi ghee ki paratha" அப்படின்னு ஒண்ணு இருக்கு.
நம்ம ஆலு,கோபி, பனீர் பராத்தக்கள்தான். ஆனா நெய் சொட்டச்சொட்ட. தொட்டுக்க
தயிர் ம்ம்ம்ம்... ஒரு ப்ளேட் 2 (நாலு ஹாஃப்) கொடுக்கறாங்க.
விலை 110/-. லொகிக்கி கோஃப்தான்னு நம்ம சுரைக்காய் கோஃப்தா
சாப்பிட்டோம். சூப்பர். இந்த ஹோட்டலின் ஷ்பெஷாலிட்டின்னு எனக்கு
பட்டது உணவு ஃப்ரெஷ்ஷா இருப்பதால சுவை நல்லா இருக்கு.
(சில ஹோட்டலிகளில் மிஞ்சியதை சூடு செஞ்சு கொண்டு வந்து
கொடுப்பாங்க)

burrp.com இந்த ஹோட்டலை தன்னோட
லிஸ்டில் சேத்திருக்கு.

celebrity hotels குருப்பை சேர்ந்தது இந்த ஹோட்டல். ஹைதை
ஷமீர்பேட்டீல் செலிபிரட்டிரிசார்ட் இருக்கு. பிரஜய் வாட்டர் ஃப்ரண்ட்
எல்லாம் இவங்களோடதுதான்.

மெனு கார்ட்ல ஷோலே டயலாக்குகள், ஷோலே பத்தின அபூர்வ படம்,
இருக்கு. மெனு கார்ட்ல கடைசியா கப்பரோட படம் போட்டு அவரோட
ஃபேமஸ் டயலாக் ஒண்ணு.

தூர் தூர் காவோன் மே ஜப் பச்சா ரோத்தா ஹை!!
தோ மா கெஹ தீ ஹை!

சோ ஜா பேட்டா! சோ ஜா பேட்டா!

வர்ணா கப்பர் ஆ ஜாயேகா!!

DHOOR DHOOR GAAOON MEIN

JAB BACHA ROTHA HEIN

THO MA KAHATHE HAI

SO JAA BETA... SO JAA

VARNA

GABBAR AA JAYEGA!!!!

டெஸ்ட்டாக சூப்பர் ரஸமலாயுடன் டின்னர் இனிதே நிறைவேறியது.

celebrity hotels இந்த லிங்குல ஹோட்டலோட சில போட்டோக்கள்.