Showing posts with label 2022. Show all posts
Showing posts with label 2022. Show all posts

Tuesday, March 08, 2022

My Celebrity!! My Grand Mom




எங்க டான்ஸ் ஸ்கூலில் சாதனான்னு ஒரு ப்ரொகிராம். குழுவா பிரிச்சு தினம் உடற்பயிற்சி, தியானம் இப்படி செய்யணும். அதற்கு பாயிண்ட்ஸ். அதே மாதிரி அமிர்தான்னு ஒரு டாஸ்க்.  நீங்கள் விரும்பும்/ரசிக்கும் ஒரு செலிபிரட்டி மாதிரி
உடை அணிந்து போட்டோ போடணும்.
 பல நட்புக்கள் ரேகா, இந்திரா லூயி, கல்பனா சாவ்லா, வேலுநாச்சியார்னு கலக்கியிருந்தாங்க. எங்க குழு மொத்தமா நாங்க தேர்ந்தெடுத்திருந்த டாபில் “அம்மா”. என் அம்மா என் செலிபிரட்டி.

நான் என் அம்மாவை செலிபிரட்டியா எடுத்துக்கொள்ளவே மாட்டேன். எனக்கு அவங்க ரோல் மாடலும் கிடையாது. ஒரு அம்மா எப்படி இருந்துவிடக்கூடாது என்பதற்காகவேணாம் ரோல் மாடல்னு சொல்லலாம். அதானால் நான் மாட்டேன். வேணும்னா நான் மிகவும் மதிக்கும் எங்க அம்மம்மா மாதிரி செய்யறேன்னு சொன்னேன். சரின்னாங்க.




அம்மம்மாவின் இந்த படம் எனக்கு ரொம்ப ஷ்பெஷல். எங்க ஹைதைவீட்டு கிரஹப்ரவேசத்தின் போது எடுத்தது.அதே கலர் புடவை, நகை, இரட்டை மூக்கூத்தின்னு ஒவ்வொண்ணும் தேடித்தேடி ரெடி செஞ்சோம். அம்ருதம்மாவின் உதவி இதுல ரொம்ப.  தலைக்கு வீபூதி பூசி வெள்ளை முடி வரவழைச்சோம்.

உடல்நிலை கொஞ்சம் சரியில்லாம இருக்கும் இந்த நேரத்துல அம்மம்மாவின் நினைவு ரொம்ப இருந்தது. நீ இருந்தா நான் இப்படி இருப்பேனான்னு மனசுல நினைச்சுகிட்டே இருந்த சமயத்துல இந்த டாஸ்க் செய்ய நேர்ந்தது.

அம்மம்மாவுக்கு பிடித்தது கிழிசல் இல்லாம கட்டணும். மேட்சிங்கா ப்ள்வுஸ் இருக்கணும். வீட்டில் இருக்கறப்ப நல்லா பார்க்க பிரசண்டபிளா டிரஸ் இருக்கணும்னு சொல்வாங்க. பொதுவா எப்பவும் வெளில போறப்பதானம்மா நல்லா டிரெஸ் செஞ்சுக்கணும்னு கேட்டா வெளிய கொஞ்ச நேரம்தான் போய்வருவா??!!! அதுக்கு அவ்வளவு மெனக்கெடறவங்க வீட்டுல இருக்கறவங்க நம்மளை ரொம்ப நேரம் பாப்பாங்களே! அப்ப எப்படி இருக்கணும்னு? கேப்பாங்க. :))) அதான் அம்மம்மா!!!!

மேக்கப்பெல்லாம் பெருசா ஏதும் கிடையாது. பளிச்சுன்னு முகம் கழுவி,அழகா ஆஷா வெச்சு அதன்மேல குங்குமம், வீபுதி. முகத்துக்கு பவுடர் கூட போட மாட்டாங்க. நேர்த்தியா தலைபின்னியோ/ கொண்டையோ போட்டிருப்பாங்க.

அம்மம்மா போல நெற்றிக்கு குங்குமம் வைக்கும்பொழுது ரொம்ப உணர்ச்சி பூர்வமாக இருந்தது. அம்மாமாவின் ரசிகையான நான் அம்மம்மாவின் வழிநடத்தலின்படியே வாழ்கிறேன். இதில் எனக்கு ரொம்ப பெருமை. 




இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதில் ராஜலட்சுமியின் பங்கு மிக அதிகம். என்னை நானே செதுக்கி கொள்ள வைத்தவள். என் வேர் அவள். என் மூலம் அவள். அவள் வழி வந்த குடும்பத்தில் பிறந்திருப்பதில் மகிழ்ச்சி. வாழ்வதும் அவள் பிறந்த வம்சத்தில். இதைவிட கொடுப்பினை என்ன வேண்டும்.

அம்மா இன்று போல் என்றும் எனக்கு வழிகாட்டி, என்னை மேம்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். என் கையை எப்போதும் விட்டுவிட வேண்டாம். நீ இல்லையேல்!!!! நானில்லையே