Showing posts with label தங்கமணி-ரங்கமணி பதிவு. Show all posts
Showing posts with label தங்கமணி-ரங்கமணி பதிவு. Show all posts

Thursday, March 14, 2013

தங்கமணி- ரங்கமணி பதிவு

தங்கமணி- ரங்கமணி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.... அதான். காரசாரமான சண்டைக்கு அப்புறம் தங்கமணியும் ரங்கமணியும் கார்ல போய்க்கினு இருந்தாக. ஒருவார்த்தை கூட ரெண்டு பேரும் பேசிக்கலை. கோவம் ரெண்டு பேருக்கும் அடங்கவே இல்லை. அத்தோட தவிர்க்க முடியாத பயணம் என்பதால ரெண்டு பேரும் சேர்ந்தே போக வேண்டிய நிலமை.

வழியில ஒரு பண்ணையில  ஆடு, மாடு, பன்றி  இருந்ததை பார்த்திட்டு ரங்கமணி “ உன் சொந்தக்காரங்க போல இருக்கே??!!”” அப்படின்னு கேட்டிருக்காரு.

தங்கமணி உடனடியா சொன்ன பதில்,”ஆமா!! என் புகுந்த வீட்டு முக்கியமான சொந்தங்கள்!!!”””

*****************************************************************************

ரங்கமணி ஒரு நாள் நாளிதழ் ஒன்றில் பெண்கள் எவ்வளவு வார்த்தைகளை உபயோகிக்கறாங்கன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு வந்து தங்கமணி கிட்ட,
“பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் உபயோகிப்பதா போட்டிருக்காங்க பாரு. ஆனா நாங்க ஆண்கள் அப்படியா இருக்கோம்!!! 15000 வார்த்தைகள் தான் உபயோகிக்கிறோம்” அப்படின்னு சொல்லிட்டு தங்கமணியை மட்டம் தட்டிட்டோம்னு மமதையா ஒரு பார்வை பார்த்தாரு.

தங்கமணி அலட்டிக்காம சொன்ன பதில்,” ஒரு தரம் சொன்னதையே திரும்ப திரும்ப உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கு. அதனாலத்தான் நிறைய்ய பேசறோம்னு சொல்ல, இப்ப ரங்க்ஸ் தங்க்ஸை பார்த்து கேட்கிறாரு, “என்ன சொன்ன??!!!””

************************************************************************************

ஒரு ரங்கமணி தன் மனைவியை கிட்ட இப்படி சொல்லிக்கிட்டு இருந்தாரு,”
நீ எப்படி ஒரே சமயத்துல முட்டாளாவும், அழகாவும் இருக்கேன்னு!!””

நம்ம தங்க்ஸ் கொடுத்த பதிலில் ரங்க்ஸுக்கு ”பல்பு” கிடைச்சது.

”””கடவுளின் படைப்பு இது. நான் அழகா இருப்பதால நீங்க என்னை விரும்புனீங்க, நான் முட்டாளா இருப்பதால உங்களை விரும்பினேன்!!!!!””

****************************************************************************************

தங்கமணி ரங்கமணிக்குள்ள சண்டை அடிக்கடி வந்ததால, ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கறது இல்லன்னு முடிவுக்கு வந்தாங்க. சைலண்ட் ட்ரீட்மெண்டுன்னு இந்த ஆப்பரேஷனுக்கு பேரும் வெச்சுக்கிட்டாங்க.

இந்த ஆப்பரேஷன் ஆரம்பிச்ச அடுத்தநாளே ரங்கமணிக்கு ஒரு பிரச்சனை வந்தது. அலாரம் அடிச்சாலும், அதை அடிச்சிட்டு தூங்கற ரங்க்ஸ், தான் அடுத்த நாள் காலையில் 5 மணிக்கு எந்திரிச்சாதான் ஃப்ளைட் பிடிக்க  முடியும்.  இப்ப தங்க்ஸ் ராசியா இருந்தாங்கன்னா எழுப்பி விடுன்னு சொன்னா எழுப்பி விட்டிருப்பாங்க. உதவி தேவைன்னாலும் பேச வேணாம்னு முடிவு எடுத்ததால, “ காலை 5 மணிக்கு என்னை எழுப்பவும்னு!!” பேப்பரில் எழுதி தங்க்ஸ் கண்ணில் கரெக்டா படும்படியான இடத்தில வெச்சிட்டு ஆழ்ந்த நித்திரைக்கு போயிட்டாரு மனுஷன்.


அடுத்த நாள் மனுஷன் எந்திரிச்சது 9 மணிக்கு. ஃப்ளைட் மிஸ்ஸாகிடிச்சு. கோவமான கோவத்தோட தங்க்ஸ் ஏன் எழுப்பலைன்னு கேட்கலாம்னு எந்திரிச்சவர் கண்ணில் “ மணி 5 எழுந்திருக்கவும்னு” எழுதின பேப்பர் கண்ணில் பட்டது. :((

********************************************************************************

பதிவை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வர்றாதீங்க. அங்கொண்ணும் இங்கொண்ணுமா தங்க்ஸ்களை தாக்கி பதிவு வந்துக்கிட்டு தான் இருக்கு. அதுபோலத்தான் இதுவும்னு சும்மா லைட்டா எடுத்துக்கோங்க.

வாட்ஸப்பில்  உலாவிக்கொண்டிருக்கும் மெசஜை இங்கே பகிர்ந்தேன் அம்புட்டுதான். :)))