Showing posts with label வருடத்தின் நிறம். Show all posts
Showing posts with label வருடத்தின் நிறம். Show all posts

Wednesday, December 16, 2009

2010ஆம் வருடத்தின் நிறம்!!

ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு நிறத்தை வழங்குவது
Pantone எனும் நிறுவனம்.

வரும் 2010ஆம் வருடத்திற்கான நிறம் Turquoise.
நீலமும் பச்சையும் கலந்த நிறம்.

ஒரு மாதிரியான இதமான நிறம் இது. பீச்களில்
இருக்கும் கடல்நீரின் நிறம் இந்த நிறம். பீச்களில்
ஓய்வெடுக்கும்போது அந்த நிறத்தை பார்த்தே
மனதுக்கு சாந்தமாக இருக்கும். புத்துணர்ச்சி
கிடைக்கும்.






சில நிறங்கள் குறித்து மக்களுக்கு நெகட்டிவான
எண்ணங்கள் உண்டு. Turquoise குறித்து எல்லோருக்கும்
பாசிட்டாவான எண்ணம்தான் வரும்.

பிறக்க இருக்கும் புத்தாண்டு மனதுக்கு இதத்தையும்,
புத்துணர்ச்சியையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும்.