Showing posts with label communication. Show all posts
Showing posts with label communication. Show all posts

Wednesday, December 09, 2009

ஊருக்கு போனதும் கடுதாசி போடுவீகளா????

ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்த..

சேந்துச்சோ சேரலியோ செவத்த மச்சான் கைகளிலே...


என்ன அருமையான பாட்டுல்ல..

ஒரு காலத்துல கடுதாசி எழுதிப்போடறதுன்னா பெரிய விஷயம்.
கடுதாசியில மஞ்சள் தடவி வந்தச்சுன்னா சுபத்தை சொல்லுது.
ஓரத்துல கருப்பு மை தடவி வந்துச்சுன்னா சோகத்தை சொல்லுது
அப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.



ரொம்ப பெரிய விஷயம் சொல்லணும்னா இன்லெண்ட் லெட்டர்
அல்லாடி 15 பைசா கார்ட் போதும். ”15 கார்ட் பெற மாட்டேனா
நானு, ஒரு கடிதம் எழுதினாத்தான் என்னன்னு? சண்டை
போட்ட அக்கா, தங்கச்சிக எம்புட்டு பேரு”!!!


”வீட்டுல கலந்து பேசி, தாக்கல் சொல்றோம்னு” மாப்பிள்ளை
வீட்டுக்காரக சொல்லிட்டு போனதுலேர்ந்து தபால்காரருக்காக
காவல் கிடந்தவக எம்புட்டு பேரு!!



அடுத்து போன். இது எல்லார் வீட்டிலயும் இருக்காது.
பூத் தான்.

ட்ராங்கால் புக் செஞ்சு பேசி மாளாது. புதுகையிலிருந்து
திருச்சியே எஸ்.டீ.டீ. காசு ஜாஸ்தி. அவசரமான
தாக்கல்னா தான் யாருக்கும் போன் போடுவோம்.



”போன் பேசுற அளவுக்கு பெரிய ஆளா... லெட்டர்
போடு போதும். காசை வீணாக்காதேன்னு!” பெரியவங்க
அட்வைஸ் செய்வாங்க.

ராத்திர் 9 மணிலேர்ந்து காலேல 6 மணி வரை 1/4 ரேட்

6.30 லேர்ந்து 9 மணி 1/2 ரேட்
9 லிருந்து 9 வரை ஃபுல் ரேட்

இந்த பல்ஸ் ரேட்டில் சின்ன சின்னதா மாத்தம் வந்து
இப்ப இந்தியா முழுக்க எப்ப பேசினாலும்
காசு குறைவா ஆகுற மாதிரி மாறியிருக்கு.
கை வலிக்க டயல் செஞ்சது போக இப்ப
நாம வீடு முழுக்க தூக்கிகிட்டு போற மாதிரியெல்லாம்
போன் வந்திடுச்சு.


இந்த மொபைல் வருவதற்கு முன்னால பேஜர்னு ஒண்ணு
இருந்துச்சு. நாம் சொல்வதை அவங்களுக்கு மெசெஜ்ஜா
அனுப்பிடுவாங்க. எங்க இருந்தாலும் நாம சொல்ல வேண்டிய
தாக்கல் அவங்களுக்கு போயிடும். ரொம்ப வசதியா இருந்துச்சு.

அயித்தானுக்கும் பேஜர் இருந்துச்சு. எப்பவும் “கால் மீ பேக்”
மெசெஜ் கொடுத்து வெச்சிடுவேன். சும்மாவா லோக்கல் காலுக்கு
காசு அதிகமாச்சே. அதுவும் பூத்லேர்ந்து தான் செய்வேன்.

”உப்பு, புளி எல்லாம் மறக்காம வாங்கி வரச்சொல்லி
மெசெஜ் வருதுப்பா! இந்த பேஜரை கண்டுபிடிச்சவன்
எவனோன்னு!!” அயித்தானோட ஃப்ரெண்ட் ஒருத்தர்
அழுவாரு பாவம்.


பார்த்திபன் கனவு படத்துல சேல்ஸ் மெனா வர்ற
ஸ்ரீகாந்த் ஒரு டயலாக் சொல்வார்.”உங்க எம்ப்ளாயிஸுக்கு
பேஜர் கொடுக்கறதை விட மொபைல் கொடுக்கலாம்.
பேஜர் இருந்தா பேசாம இருக்க வாய்ப்பு இருக்கு.
மொபைலை எடுத்து பேசியே ஆகணும்.” ரொம்ப
சரியான விஷயம்.

இப்ப எல்லோர் கையிலயும் மொபைல் போன் தான்.
அது இல்லாதவங்க குறைவுதான்.


இப்ப மொபைலைத் தாண்டி இமெயில்,ஆர்குட்,ட்விட்டர்
ஃபேஸ்புக்னு போய்க்கினு இருக்கோம்.

ஆனா எனக்கு மனசு மட்டும் கொஞ்சம் கணமாத்தான் இருக்கு.
நம்ம நட்புக்களோட பேசுறோம், மெயில் அனுப்பிக்கிறோம்.
உறவுக்காரவுகளை சுத்தமா மறந்திடறோம்.
தூரத்து உறவு, ஒண்ணுவிட்ட உறவெல்லாம் வேண்டாம்.

சொந்த சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை இவுக கிட்டயாவுது
பேசுறோமா? மெயில் வசதி இல்லாதவகளுக்கு லெட்டராவது
எழுதி போடுவோமா?? ஒரு போனு???

முன்னாடியெல்லாம் அத்தை, சித்தி வீட்டுக்கு போயிட்டு
வந்த பிறகு, வந்து சேந்துட்டேன்! நான் அங்கன இருந்த போது
நல்லா கவனிச்சதுக்கு நன்னின்னு சொல்லி 4 வார்த்தை
கார்டாவது எழுதுவோம். இப்ப யாரும் யாரு வீட்டுக்கும்
போறதுமில்லை, வாரதுமில்லை. அப்புறம் எங்க கடிதம்??


உறவை பலப்படுத்த இந்த கடித போக்குவரத்தாவது முக்கியம்.
அதனால் நம்ம நட்பு, உறவுகிட்ட என்னோட விண்ணப்பம்
இன்னான்னா? இந்த புதுவருஷத்துலேர்ந்தாவது நம்ம
சொந்த பந்தங்கிட்டயும் உறவை புதுப்பிச்சு தொடர்புல இருப்போம்
என்பதுதான்.

எங்க சித்திக்கு நானும் தம்பியும் சேர்ந்து 3 வருஷம் முன்னாடி
மொபைல் வாங்கிக் கொடுத்தோம். எஸ்.எம்.எஸ் அடிக்கத்
தெரியாது. போன் செஞ்சா பேசுவாங்க. இப்ப எங்க சித்தி
சும்மா சூப்பரா மெசெஜ் அனுப்பறாங்க.

அப்படி சில எஸ்.எம்.எஸோட அடுத்த பதிவுல
சந்திக்கறேன்.


டிஸ்கி:நாலுவரி கடுதாசி போட நேரமில்லைன்னா ...
ஒரு மணியார்டர் அனுப்பிருங்க. நீங்க நல்லபடிப்
போய்ச் சேர்ந்த இருக்கும் விவரம் புரிஞ்சுக்குவேன்.

ஐடியா தந்த துளசி டீச்சருக்கு நன்றி):))