Showing posts with label General. Show all posts

Saturday, March 08, 2014
லீவு சொல்லிக்கறேன்......
பதிவே ரொம்ப கம்மியா வருது.... இதுல லீவு சொல்லிக்கறேன்னு ஒரு பதிவான்னு கேக்கலாம்.
எனக்கும் பதிவு தொடர்ச்சியா எழுதணும்னு ஆசை தான். ஆனா பல வேலைகள் வந்திருது.
இப்ப ரொம்பவே முக்கியமான வேலை..... பரிட்சை.
ஆஷிஷ் +2, அம்ருதா 9ஆம் வகுப்பு. 11 ஆம் தேதியிலிருந்து அம்ருதாவிற்கும், 13லிருந்து ஆஷிஷிற்கும்
பரிட்சை ஆரம்பம்.
பெரிய பிள்ளைகள் ஆகிட்டாங்க இனி நமக்கு வேலை இருக்காதுன்னு நினைச்சா விடறாங்க இல்லை.
பக்கத்துலேயே இருங்க... அப்பதான் கான்சண்ட்ரேஷன் வருதுன்னு சொல்றாங்க. :)
உங்க கிட்ட ஒப்பிச்சா ஓகேவாகும்னு சொல்லும்போது வேற வேலை எங்க செய்ய... :)))))
பிள்ளைகளுக்கு பரிட்சைன்னா வெறும் படிப்பு மட்டுமில்லையே, நம்ம பங்கும் இருக்கே!!
நேரத்துக்கு சத்தான உணவு.... ஒழுங்கான ஓய்வு, டென்ஷனாகிடாம ரிலாக்ஸ் செய்ய வெச்சு
அப்புறம் படிக்க வைப்பதுன்னு நம்முடைய பங்களிப்பும் ரொம்ப அவசியமாச்சே!!!
அதானால வழக்கம்போல பிள்ளைகளுக்கு மாரல் சப்போர்ட்டா இருந்து உதவும் வேலையை
செய்யப்போறேன். அதனால சீதா கல்யாணத்திலிருந்து எல்லா பதிவுகளுக்கும் வெயிட்டீஸ் விட்டுட்டேன்.
பெரியவங்க எல்லோரும் பிள்ளைகள் நல்ல படியா பரிட்சை எழுத பிரார்த்தனை செஞ்சுக்க
வேண்டிக்கறேன்.
உங்க வீட்டுல குட்டீஸ் இருந்தா அவங்க பரிட்சை நல்லா எழுத என் பிரார்த்தனைகளுடன்
ஆல் த பெஸ்ட் சொன்னேன்னு சொல்லிடுங்க.
இப்போதைக்கு டாடா.....
Friday, June 01, 2012
ALL IS WELL!!!!!!!!!!
அமிர்கான் கலக்கறார்ல!!!! எதிர் பார்ததை விட நிகழ்ச்சி
ரொம்ப அருமையா இருக்கு. சத்யமேவ ஜயதே பத்திதான்
சொல்றேன்.
பிரச்சனையை சொல்லும் விதம் ஆகட்டும், பாதிக்கப்பட்டவர்களிடம்
பேசும் பொழுதாகட்டும் அமீர் கலக்கலாக நிகழ்ச்சியை கொண்டு
செல்லும் விதம் சிம்ப்ளி சூப்பர். நிகழ்ச்சியை ஒரே நெகட்டிவா
காட்டாம, அதற்கு தீர்வும் இருப்பதை காட்டுவதை எல்லோரும்
பின்பற்றலாமேன்னு நினைக்கத் தோணுது.
வரதட்சனை கொடுமை பத்தின நிகழ்ச்சியில ஒரு ஆண்மகனை
விரட்டி மிரட்டி அடித்து கல்யாணம் நடத்தினதை சொன்னாங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாவம்பா அவரு. அவரோட
ஃபோட்டோ பாத்தப்ப பரிதாபமா இருந்துச்சு. பலி ஆடு
மாதிரி இருந்தாரு.
மருத்துவர்கள் பத்தின போன வாரம் நடந்த நிகழ்ச்சி
நம்ம ரமணா படத்துலேயே பாத்திருக்கோம். (இந்த நிகழ்ச்சிக்காக
ஏதோ மருத்துவர்கள் குழு அமீர் மன்னிப்பு கேக்கணும்னு
சொல்லியிருக்காங்க!!) இப்ப பல மருந்துக்கடைகள் 10%
டிஸ்கவுண்ட் கொடுக்குது. அதுக்கப்புறமும் அவங்களுக்கு
லாபம் எம்புட்டு இருக்கும்!!!!
ம்ம்ம் ..... வரதட்சணை கொடுமை, பெண் சிசுக்கொலை
எல்லாம் பத்தி பேசினார் அமீர். இப்போ கல்யாணத்துக்கு
பெண்கள் போடும் கண்டீஷன் பத்தியும் அமீருக்கு எடுத்துச்
சொல்லி அப்பாவி “கிட்டுமணிகள்”ளுக்காகவும் பேச
சொல்லலாம்னு நினைக்கிறேன்!!!!
இந்த நிகழ்ச்சி எல்லா மொழிகளிலும் ஒளியிடப்படுது.
(கன்னட சேனல்கள் மட்டும் மாட்டேன்னு சொன்னாங்கன்னு
பேப்பரில் படிச்சேன்). இதே மாதிரி இன்னொரு நிகழ்ச்சியும்
எல்லா மொழிகளிலும் வரணும்.
கலர்ஸ் சேனலில் 12 - 1 மணிக்கு ஆல் இஸ் வெல் டாக்டர்
அஹுலிவாலியான்னு ஒரு நிகழ்ச்சி வருது. மருத்துவம்
சம்பந்தமா பல தகவல்கள் தெரிஞ்சிக்கலாம். அதுவும் குழந்தைகளுக்கு
ஜங்க் ஃபுட் பத்தி நிறைய்ய......
விக்கல் ஏன் ஏற்படுது? நம் உடலில் இருந்து வெளியாகும்
யூரின் (இதைப்பத்தி பலர் பேச மாட்டாங்க) அது சொல்லும்
நம் உடலின் உபாதைகள்னு நிறைய்ய மேட்டர்ஸுங்க
தெரிஞ்சிக்கலாம். நிகழ்ச்சியின் முடிவில் எக்ஸசைர்சும்
சொல்றாங்க.
கண்டிப்பா பாருங்க.

Wednesday, February 01, 2012
IKEA...
நான் சிங்கை போவதாக (5 வருடம் முன்னாடி) சொன்னப்ப
அப்போதான் சிங்கை போயிட்டு வந்த தோழி நிறைய்ய
டிப்ஸ் சொன்னது எனக்கு உதவியா இருந்தது. அதில் முக்கியமாக
மறக்காம அவங்க போயிட்டு வான்னு சொன்னது IKEA.
அங்கே என்ன இருக்கும்? அப்படின்னு கேட்க அவங்க காமிச்ச
சாம்பிள்ஸை பாத்ததும் கண்டிப்பா போயாகணும்னு முடிவே
செஞ்சிட்டேன்.
ஆப்பிள் ஸ்லைசர்னு இப்ப மார்க்கெட்டில் ஒண்ணு விக்குதுல்ல
அது அநேகமா சைனீஸ் ப்ராடக்டாத்தான் இருக்கும். அது
ரொம்ப நாள் உழைக்காது. ஆனா என் ஃப்ரெண்ட் காட்டியது
ஐக்கியாவில் வாங்கியது. இப்ப வரைக்கும் என் வீட்டில்
உபயோகத்தில் இருக்கு.
அதுக்கப்புறம் இது ரொம்ப முக்கியமா வாங்கிக்கோ கலான்னு
சொன்னாங்க. ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கு இந்த கிளிப்.
ப்ரெட், ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய சில கவர்கள்,
சிப்ஸ், ஊருக்கு போகும் பொழுது பிஸ்கட் எல்லாம் இப்படி
ஜிப் லாக் கவரில் போடுவதையும் விட ஏர் டைட்டா வைக்க
உதவுதுன்னு காட்டினாங்க. நானும் போய் இரண்டு கவர்
வாங்கியாந்தேன். சின்னதும் பெருசுமா ரொம்ப ஹேண்டியா
இருக்கு. 3 வருஷம் முன்னாடி ப்ரூ இன்ஸ்டண்ட் காபி
பொடியோட ஃப்ரெஷ்ஷா வைக்க லாக்குடன்னு மஞ்சக்கலர்ல
கூட கொடுத்தாங்க. ஆனா IKEA கிளிப்ஸ் மாதிரி வராதுங்க.
வீட்டில் பசங்க இருக்கறவங்களுக்கு ஒரு பிரச்சனை பிள்ளைகளூக்கு
ஏத்தாமாதிரி சாப்பாடு கொடுக்கும் பொருள் இருக்கணும். பார்க்க
நல்லாவும் இருக்கணும், அத்தோட உடையாம பத்திரமாவும்
இருக்கணும். இதுக்கு IKEAவோட இந்த செட் ரொம்ப
உபயோகமா இருக்கும். கலர்ஃபுல்லா எம்புட்டு அழகா
இருக்கு பாருங்க.
சரி இதைத்தவிர இன்னும் என்ன நல்லா இருக்கும்னு நீயே
போய் பாத்து தெரிஞ்சிக்கன்னு சொல்லிட்டாங்க. ஆவலோட
IKEA ஸ்டோருக்கு போன என்னை ஏமாத்திடலை. அங்கே
கிடைக்கும் வெரைட்டிதான் என்ன? ஃபர்னீச்சர்ஸ், கிச்சன்
கேபினெட்ஸ் எல்லாமே கிடைக்கும் அங்கே. டிஸ்மாண்டில்
செஞ்சு வேற எடுத்துக்கு தூக்கிகிட்டு போறமாதிரி இருக்கும்.
எனக்கு அங்க ரொம்ப பிடிச்சது கத்தியை ஷார்ப்பாக்கறதுக்கு
உபயோகமா இருக்கும் இந்த ஷார்ப்பனர்.
சின்ன க்ரைண்டிங் மில். இதுல ஜீரகம், மிளகு, வெந்தயம்
எல்லாம் போட்டு கையாலேயே திருப்பி திருப்பி பொடிச்சிடலாம்.
எலுமிச்சை சாதம் செய்யும் பொழுது கொஞ்சமா வெந்தயத்தை
வறுத்து அதை இதில் போட்டு சாதத்தின் மேலே அப்படியே
பொடிச்சு போடலாம்.
இப்படி இந்தக்கடையில நிறைய்ய உபயோகமான பொருட்கள்
கிடைச்சது. ஒரு வாட்டி சிங்கையிலிருந்து வரும்பொழுது
பசங்ககிட்ட என்னடா வேணும் உங்களுக்குன்னு தம்பி கேட்க
இது வாங்கிகிட்டு வாங்க மாமான்னு போட்டோ அனுப்பினாங்க.
வலையால செய்யப்பட்ட இந்த ஹேங்கிங் செல்ஃப்ல நாம
என்ன வெச்சிருக்கோம்னு அழகா தெரியும். பசங்க டாய்ஸ்,
பெல்ட் எல்லாம் ஒரே இடத்துல் வெச்சிடவும் உதவியா இருக்கும்.
அதை வாங்கப்போனப்போ இந்த லாண்டரி பேக்கும் கண்ணுல பட்டு
தம்பி வாங்கியாந்தாப்ல. துவைக்க வேண்டிய துணிகளை அழகா
இதுல போட்டு வெச்சிடுவோம். கண்ட இடத்துல துணி கிடக்கமா
காத்தோட்டமா துவைக்கறவைக்கும் சொகுசா துணிகள் இந்த
கூடைக்குள் அடைக்கலம் ஆகிடும். நம்ம ஊர்லயும் கிடைக்குது.
ஆனா அது அவ்வளவு ஸ்டராங்கா இருப்பதில்லை.
இது சிங்கையில் மட்டுமில்ல பல நாடுகளில் இருக்கு.
அதைத் தெரிஞ்சிக்க இங்க போய் பாருங்க.
IKEAவில் என்னென்ன பொருட்கள் கிடைக்குதுன்னு பார்க்க
இங்க சொடுக்கினால் பார்க்கலாம்.
இந்த ikea சீக்கிரம் இந்தியாவில் கடை திறக்கும் வாய்ப்புக்கள்
இப்ப வந்திருக்கு. நம்ம இந்தியாவின் கொள்கையால இங்கே
வரமுடியாம இருந்திருக்கு. ஆனா இப்ப Foreign direct investment
கொண்டு வரப்போறதால ikea வந்திடும்னு சொல்றாங்க.
அதைப்பத்தி இங்கப்போனா தெரிஞ்சிக்கலாம்.
இந்தியாவுக்கு வரும் வரைக்கும் யாரும் ஃபாரீன் டூர் போனீங்கன்னா
அங்கே ஐக்கியா ஸ்டோர் இருக்கான்னு பாத்து கண்டிப்பா ஒரு
எட்டு போயிட்டு வாங்க. இல்ல சொந்தக்காரங்க யாரும் வர்றதா
இருந்தா ஐக்கியா போயிட்டு வாங்கிகிட்டு வரச் சொல்லுங்க.

Thursday, April 07, 2011
கற்றல் இனிமை ஆகிறது!!!
”பாட்டோட ட்யூன் ஆரம்பிச்சதும் எப்படித்தான் அந்தப் பாட்டை
சரியா பாடுறீங்களோ!! அதே மாதிரி யாராவது பாடத்தையும்
ட்யூன் போட்டுக்கொடுத்தா வசதியா இருக்கும் உங்களுக்குன்னு”
எங்க கண்ணகி டீச்சர் அடிக்கடி சொல்வாங்க. மனப்பாடம்
செய்யணும்னா கஷ்டமா இருக்கும். அதுக்கு பதில் அதையே
காதால கேட்டா எவ்வளவு ஈசியா மனசுல பதியும்.
ஆஷிஷுக்கு இங்கே வந்த புதிதில் ஹிந்தி பாடங்களை
(கேள்வி, பதில்களை)டேப்ரெக்கார்டரில் ரெக்கார்ட்
செய்து கேட்க வைத்து மனதில் பதிய வைத்திருக்கிறேன்.
IIT/IIM Alumniகளான Ram Gollamudi,Prasanna Boni,
Sravan Narasipuram,Ramesh Karra இந்த நான்கு நண்பர்களும்
சேர்ந்து கல்வி கற்பதை இனிதாக ஆக்கியிருக்கிறார்கள்.
இந்த நால்வர்க்குழு சேர்ந்து ஒரு கருவியை கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இதுதான் அந்தக் கருவி. பெயர் EDUTOR. தற்போது CBSC பாடத்திட்டதில்
உள்ள பாடங்களை கற்கும் வகையில் தயார் செய்திருக்கும் இவர்கள்
ஸ்டேட் போர்ட் மற்றி ஐசிசி பாடத்திட்டங்களையும் தயாரிக்கும் முயற்சியில்
இருக்கிறார்கள். பள்ளிகளில் கலந்து பேசி பாடத்திட்டங்களை எளிதாக
புரியும் வண்ணம் தயாரித்திருக்கிறார்கள்.
ஆப்பிள் என்று சொல்லிக்கொண்டிருப்பதை விட ஆப்பிளையோ,
ஆப்பிளின் படத்தையோ காட்டி சொல்லிக்கொடுக்கும் பொழுது மனதில்
இலகுவாக பதியும். இந்த முறைதான் இவர்கள் பின்பற்றுவது.
இந்த வீடியோவை பாருங்கள். ஐ போன் போலிருக்கும் இந்தச்
சாதனம் எப்படி எல்லாம் உதவுகிறது என்பது புரியும்.
பாடங்களை எளிதாக புரியும் வகையில் அனிமேஷன் செய்து
வழங்குவதால் பிள்ளைகள் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு கேட்ஜட் வாங்கி அதை 2 பிள்ளைகளின் பாடத்திட்டத்தை
படிக்கும் படி செய்ய முடியும்.
தற்போது ஹைதையில் மட்டும் கிடைக்கும் இந்த EDUTOR
விரைவில் சென்னை போன்ற பிற நகரங்களில் கிடைக்குமாம்.
சரி இந்த சாதனத்தில் ஒரு டெமோ பார்க்கலாமா!!
இங்கே சென்று பாருங்களேன்.......
இவர்களை தொடர்பு கொள்ள:
இந்த EDUTORன் விலை 6400. அறிமுக விலையாக 5000ற்கு
கொடுக்கிறார்கள். பாடத்திட்டம் கொண்ட மெமரி சிப் 1400.
ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்திற்கு ஏற்ப புதிது
வாங்கிக்கொள்ளலாம்.
பள்ளிகளும் நிர்வாகிகளும் இந்த நல்ல சாதனத்தை
பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தினால் கற்பது என்பது
இனி கடினமாக இருக்காது.

Friday, March 12, 2010
கிரிக்கெட்டும் நானும்!!
அப்பொழுதெல்லாம் ரேடியோவில் வரும் கமெண்ட்ரிகள்தான்.
நாம் கேட்கும் நாடகமோ,சினிமா பாடலோ கேட்க முடியாமல்
போகும். 10 வயதில் கிரிக்கெட் மீது அவ்வளவு மோகம்
இருந்ததில்லை. எனது பள்ளி நண்பன் ஸ்ரீதர் வீட்டில்(ஸ்ரீதரின்
தாத்தா தான் எனக்கு ட்யூஷன் வாத்தியார்) ராஜா அண்ணா,
சிவா அண்ணா, ஸ்ரீதர், அவன் தம்பி சங்கர், தாத்தா எல்லோரும்
கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே வீட்டின் முன் விளையாடும்
காட்சி பாத்திருக்கிறேன். இப்படித்தான் கிரிக்கெட் அறிமுகம்.
அப்பாவுடன் சேர்ந்து அவரின் நண்பர் வீட்டில் கிரிக்கெட் மேட்ச்
பார்க்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது கொஞ்சம் விரும்ப
ஆரம்பித்தேன். அப்பாவே வீட்டில் டீவி வாங்கிய பிறகு
ஆரம்பமானது ஆட்டம்.
சாப்பிட எப்போ வருவீங்க? எனும் அம்மாவின் கேள்விக்கு
”இன்னிங்க்ஸ் முடிஞ்சு லன்ச் ப்ரேக்ல” என கோரஸ் போடுவோம்
நான், அப்பா, தம்பி மூவரும். அந்தப் பக்கம் இந்தப்பக்கம்
நகர மாட்டோம். இதில் அப்பாவுக்கு ரன் ரேட் உடனுக்குடன்
நாங்கள்தான் சொல்ல வேண்டும். (கணக்கு பாடம்
அப்போதும் நடக்கும்ல) எப்படி ரன் ரேட் கண்டுபிடிப்பதுன்னு
சொல்லிக்கொடுத்தது அப்பா தான். ஓவரை எடுத்திருக்கும்
ரன்னில் வகுத்தால் ரன் ரேட் வரும்.
சிமெண்ட் தரைதான் எங்க வீட்டில். அந்தத் தரையில்
சாக்பீஸ் வைத்து ரன் ரேட், ஸ்கோர் எல்லாம் எழுதி
வைத்து அடுத்து விளையாடுபவர்கள் ஜெயிக்க முடியுமா
என சர்ச்சை செய்து.... என அந்த நேரம் களேபரமாக
இருக்கும் வீடு. அம்மா வேறு வழியில்லாமல் தூங்கப்போய்விடுவார்.
ஹாலில்தான் டீவி. அவ்வாவின் கட்டிலும் அங்கேதான்.
வேற வழியில்லாமல் திட்டிக்கொண்டே கிரிக்கெட் பார்ப்பார்.
”பிடிடா, பிடிடா.. சும்மா தண்டத்துக்கு நிக்கறான். ஓடினா
என்ன? ” உன்னால தான் கேட்ச் போச்சு, நீ வீட்டுக்கு போய்
சாப்பிட்டு தூங்கு” இதெல்லாம் அவ்வாவின் கமெண்ட்ஸ்.
சாம்பிளுக்கு கொஞ்சம் தான் கொடுத்திருக்கேன்.
கிரிக்கெட் பைத்தியம் முத்திப்போய் ஒவ்வொரு வீரரைப்
பற்றிய குறிப்புக்கள் வயது, விளையாட ஆரம்பித்தது,
எவ்வளவு ரன் கள் எல்லாம் விவரமாக எழுதி படத்துடன்
ஒரு நோட்புக் தயார் செய்திருந்தேன். அப்பா பார்த்து
ரொம்ப சந்தோஷப்பட்டார். அடுத்த முறை மேட்ச்
ஆரம்பிக்கும் பொழுது இதே போன்ற விவரங்கள் டீவியில்
தெரியும் பொழுது ஏதும் விட்டுப்போயிருந்தால் குறித்து
வைத்துவிடுவேன்.
எனக்கு கிரிக்கெட் விளையாடுவதை விட பார்க்க
ரொம்ப பிடிக்கும். அப்பா சொல்லிக்கொடுத்துதான்
வ்யூகம் எப்படி அமைக்கிறார்கள் என்பதெல்லாம்
தெரியும். அப்பாவும் தம்பியும் வீட்டிலேயே
கிரிக்கெட் விளையாடி அம்மாவுக்கும், பாட்டிக்கும்
டென்ஷன் ஏற்றுவார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால்
அது சந்தேகமே இல்லாமல் கபில் தேவ்தான்.
ஆல் ரவுண்டர். பல மேட்சுகளில் முதல் ஓவர்
கபில்தன். கண்டிப்பாக மெய்டன் ஓவர் + ஒருவிக்கெட்
ஆவது எடுத்துவிடுவார். அப்படியானால் அந்த
மேட்சில் நாம் ஜெயித்துவிடுவோம் என்பது
என் செண்டிமெண்ட். அதற்காக கபிலுக்கு
பிரார்த்தனை நடக்கும்.
தன்னருகில் வரும் பந்தை கீழே குனிந்து
எடுக்காமல் கால்மேலே ஓடிவர
வைத்து கபில் எடுக்கும் பாணியே அழகு.

எந்த வருடம் என ஞாபகம் இல்லை. பொங்கல்
அன்று கிரிக்கெட் மேட்ச். அம்மாவிடம் திட்டு
வாங்கிக் கட்டிக்கொண்டு பழியாக டீவி முன் இருந்தோம்.
மேட்ச் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கபிலின்
பேண்ட் கிழிந்துவிட ஒரு பெரிய துணியை பின்னாடி
செருகிக்கொண்டு அந்த மேட்சில் ”பொங்கல் ஷாட்”
அடித்து வெற்றி வாகை சூடினார்.
கபில்கிரிக்கெட்டுக்கு டாடா காட்டிய அன்றோடு
நானும் கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.
கபில் வீட்டிற்கு வந்து பாயசம் குடித்த மாதிரி
எல்லாம் தம்பி கனவு கண்டிருக்கிறான். :)
அடுத்து எனக்கு பிடித்தது ஸ்ரீகாந்த். மூக்கை மூக்கை
உறிஞ்சிக்கொண்டு, அடிக்கடி ஆகாசத்தை பார்த்துக்
கொண்டு என அவரது மேனரிசங்கள், வந்தமோ
அடிச்சமோ, போனமா எனும் பாணி எல்லாம்
ரொம்ப பிடிக்கும். ஆதித்ய ஹுருதயம் எனும்
சூரிய வழிப்பாட்டு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டுதான்
அவர் விளையாடுவதாக தெரிந்து எங்கும் எப்போதும்
பிரார்த்திக்கலாம் எனும் எண்ணம் எனக்கு வந்தது.
சீகா என செல்லப் பெயர் இவருக்கு வைத்திருந்தேன்.

சென்னையில் நடந்த டெஸ்ட் மேட்ச் ஒன்றில் ஒரே
நாளில் 14 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்த
நரேந்த்ர ஹிர்வானியை மறக்க முடியுமா??

ஆஸ்த்ரேலிய கேப்டன் ஆலன் பார்டர் மிக இஷ்டம்.

DAVID BOON இவரை மறக்கவே முடியாது. அந்த பெரிய
உருவத்தை எடுத்துக்கொண்டு செம ஆட்டம்.

இலங்கையின் துலிப் மெண்டிஸ் பிடிக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் தான் ஃபைனல்ஸுக்கு வரவேண்டும்
என பலரும் விரும்புவார்கள்.
இம்ரான் மிக மிக பிடித்த ஆட்டக்காரர்.

முதாஸர் நஸர். இவருக்கு நெற்றியில் நீளமாக
திருமண் போட்டுவிட்டால் ஸ்ரீரங்கம் பக்கம் அனுப்பி
வைக்கலாம். நீண்ட மூக்கு இந்திய முகம்.

மறக்க முடியாத இன்னொரு வீரர் sir-richard-hadlee.
விக்கெட்டை வீழ்த்தும் மந்திரத்தை பந்துக்கு சொல்லிக்
கொடுக்கும் மந்திரக்காரர் என பத்திரிகைகள் புகழாரம்
சூட்டும்.

இந்த சிரிப்பில்தான் ஹிந்தி நடிகை நீனாகுப்தா மயங்கி
போயிருக்க வேண்டும். அட்டாகசமாக நடந்து வந்து
அனாயசமாக ஆடும் viv-richards.

எத்தனையோ நினைவுகள் கிரிக்கெட்டை பற்றி. ஒவ்வொரு
ஆட்டக்காரரும் என்னவோ என் சொந்தம் போல வேறு
நாடாக இருந்தாலும் அவர்களது ஆட்டத்தை ரசித்திருக்கிறேன்.
அதன் பிறகு கிரிக்கெட் பார்க்க மனதே இல்லை. கபில் இல்லாத
மேட்சை என்ன பார்ப்பது? எனும் எண்ணம் தான்.” பூஸ்ட் இஸ்
த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி” என கபிலுடன் விளம்பரத்தில்
வந்த சச்சின் இப்போதும் ஆடி இந்தியாவுக்கு பெருமை
சேர்க்கிறார். பாராட்டுக்கள்.
இன்று IPL மேட்சுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
இன்றோடு பரிட்சை முடிந்த சந்தோஷத்தில் பிள்ளைகள்
இருவரும் திருவிழாவுக்கு தயாராகிவிட்டார்கள்.
DECCAN CHARGERS, MUMBAI INDIANS, CHENNAI SUPER KINGS
இந்த மூன்று அணிக்கும் தான் வீட்டில் சப்போர்ட்
நடக்கிறது.
அடுத்த தலைமுறை கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து
விட்டது.
என்னையும் இழுத்து டீவி முன் உட்கார வைத்துவிட்டான்
மகன். முதல் பந்து கபில் போல் விக்கெட் எடுத்தார்
சமிந்தா வாஸ். என் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

Sunday, February 07, 2010
SAVE OUR TIGERS
சமீபகாலமாக எங்கெங்கும் இந்தக் குரல் ஒலிக்கிறது.
கேட்கும்பொழுது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
வேட்டையாடுவதில் சிறந்த புலி இனத்துக்கே இப்படி ஒரு
நிலையா??

சென்ற நூற்றாண்டின் இறுதியில் 40,000 புலிகள் இருந்த நம்
தாய்த்திருநாட்டில் இப்போது இந்த எண்ணிக்கை எவ்வளவுத்
தெரியுமா?? வெறும் 1411 தான் :((
புலி கம்பீரத்திற்கும் சக்திக்கும் சிறந்த அடையாளம்.
நம் தேசிய விலங்கிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவல நிலையை
போக்க நாம் ஏதானும் செய்ய வேண்டும்.
என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. டீவியில் ஏர்செல்லின்
இந்த விளம்பரத்தை பார்த்த நொடியிலிருந்து அம்ருதாவின் நச்சரிப்பு
தாங்கமுடியவில்லை. அம்மா ப்ளாக்கில் இதைப் பற்றி எழுது என்று
சொல்லிக்கொண்டே இருந்தாள்.
என்னுடைய குரலாக புலிகளைக் காக்க என் வலைப்பூவில் இதைப்
பற்றி எழுதியிருக்கிறேன். நீங்களும் எழுதி ஒரு எழுர்ச்சியை உண்டாக்குங்கள்.
NDTV CHANNEL இந்த தளத்தை பாருங்கள். உங்கள் வாக்கையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நம்மால் ஆனதைச் செய்வோம். நம் தேசிய விலங்கைக் காப்பாற்றுவோம்.

Saturday, November 14, 2009
இப்படியும் ஒரு தொடர் பதிவு போடலாம் வாங்களேன்!!!
ஒரு ஊருக்கு போவதென்றால் நாம் யோசிக்கும்
முதல் விடயம் எங்கே தங்குவது????
உறவினர் இருக்கும் ஊருக்குப்போனாலும்
இப்போது இருக்கும் காலகட்டத்தில் கூட்டமாக
(2 பேருன்னாலும் கூட்டம்தான்) சென்று
தங்குவது உசிதமல்ல. இதில் ஆண்களுக்கு
பர்ஸ் இளைக்கும் என்பதைத் தவிர வேறு
ஏதும் உபத்திரவம் இல்லை.
ஆனால் மற்ற வேலைகள் வீட்டின் பெண்ணிற்கு
அதிக சுமையாகிவிடும். ஹோட்டலில் தங்குவது
என்றால் பட்ஜட்டில் பெரிய கம்பிளி விழும்.
தவிர என்னுடைய எண்ணம் என்னவென்றால்,
ஊர் சுத்திப்பார்க்க போகப்போகிறோம், இரவு
ஓய்வெடுக்கவும், நம் பெட்டிகளை வைக்கவும்
தான் இடம் வேண்டும். இதற்கு என் சாய்ஸ்
PAYING GUEST ACCOMODATIONS.
SERVICED APARTMENTS, PAYING GUEST ACCOMODATIONS
இவை நம் பட்ஜட் போலவும் இருக்கும். ஹோட்டலை
விட வீடு போலவும் இருக்கும். பல இடங்களில்
காலை உணவும் சேர்ந்தே இருக்கும்.
பதிவர் வினிதா இப்படி பின்னூட்டமிட்டிருந்தார்.
//ஏற்கனவே கேட்டது தான், பள்ளி விடுமுறை ( கிறிஸ்துமஸ், நியூ இயர் ) சமயம் அங்கு குடும்பத்தோடு எங்கு வந்து தங்கலாம்?
ரிசசென் சமயம், பெங்களூரிலிருந்து பட்ஜெட் வைத்து தான் வருவோம்!
ஒரு ரிப்பீட்டு பதிவு போடுங்க ப்ளீஸ்!//
ரொம்ப நாளாகவே எனக்கு இதைப் பற்றிய
பதிவு போட வேண்டும் என்பது என் விருப்பம்.
தோழி கேட்டபின் உடனடியாக போடுவது என்று
முடிவெடுத்துவிட்டேன்.
ஹைதை, சென்னை,பெங்களூர், சிங்கப்பூர் ஆகிய இடங்களில்
எனக்குத் தெரிந்த PAYING GUEST ACCOMODATIONS
பற்றி ஒரு பதிவு விவரங்களுடன் போடப்போகிறேன்.
இது போல சுற்றுலா தலங்களில், தலைநகரங்களில்,
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பட்ஜட் ஹோட்டல்கள்,
PAYING GUEST ACCOMODATIONS ஆகியவற்றின்
விவரங்களுடன் பதிவிட வேண்டுகிறேன். இது
பலருக்கு உதவியாக இருக்கும்.
உதவ விரும்புபவர்கள், பதிவிடுங்களேன்.
பதிவு போட நேரமில்லை என்றால் விவரங்களை
எனக்கு மடலிடுங்கள். நான் பதிவு போட்டுவிடுகிறேன்.
அனைவருக்கும் நன்றி

Subscribe to:
Posts (Atom)