ரெய்கி கற்ற பிறகு தெளிவாக இருந்தேன். தினமும் அதிகாலையில் தியானம்,
கேட்பவர்களுக்கு ரெய்கி செய்து அவர்கள் பிரச்சனை தீர்ந்ததில் சந்தோஷம்
என போய்க்கொண்டிருந்தது. ரெய்கி பிறருக்காக நாம் செய்தாலும் நம்
பிரச்சனையும் தீர்ந்து போகும். ரெய்கி சக்தியை நாம் பெற்று பிறருக்கு
அனுப்பும்பொழுது நம் பிரச்சனையும் தீர்ந்துவிடும். அதனால் புத்துணர்ச்சியுடனேயே
இருந்தேன்.
தியானம் அதுவும் சக்கரா தியானம் செய்வது அதிக சக்தியைக்
கொடுக்கும். தியானம் செய்ய செய்ய சக்தி அதிகமாகி அதுவே
அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல் என்னைப் படுக்கப் போட்டது.
இதனால் பயந்து போய் தியானம் செய்வதையே நிறுத்திவிட்டேன்.
என் ரெய்கி குரு உடலை வலிமையாக்க யோகா
கற்றுக்கொள்ள வற்புறுத்தினார்.
அதோடு தியானம் செய்யச் சொன்னார்.
என் நல்ல நேரம் கொழும்பு art of living செண்டரில் ஸ்ரீஸ்ரீயோகா
கற்றுக்கொடுப்பதாக அறிவிப்பு வர அதில் சேர்ந்து பயிற்சி பெற்று
யோகா கற்றுக்கொண்டு தினமும் செய்ய ஆரம்பித்தேன்.
அதிமான உடல் எடை கட்டுக்குள் வந்தது. ஆனாலும் அதன் பிறகு
தியானம் செய்ய மனம் வரவில்லை. எங்கே திரும்ப படுத்துவிடுவோமோ
என்ற பயம் தான்.
அதன் பிறகு இலங்கையிலிருந்து புறப்பட்டு ஹைதைக்கு வந்தாச்சு.
இடைப்பட்ட காலங்களில் P.M.S அவஸ்தை கொன்று கொண்டிருந்தது.
உடல் எடை கூட ஆரம்பித்தது. புது இடம் செட்டிலாக நேரம் பிடித்தது.
பிள்ளைகள் படிப்பு, அயித்தானின் புது அலுவலகம் என பல வித
டென்ஷன்கள். இத்தனை நாள் படித்த சிலபஸ் வேறு, ஹிந்தி தெரியாது
என பிள்ளைகளை அதிகம் கவனிக்க வேண்டிய பொறுப்பு.
புது இடத்தில் செட்டிலாக நேரம் பிடிக்கும் தானே! எல்லா டென்ஷன்களும்
சேர நானே வரவழைத்துக்கொண்ட பிரச்சனை ஒன்று வீட்டிலேயே
இருந்து என்னைக் குடைந்தது என ஏகப்பட்ட மன அழுத்தம். அடுத்தவர்கள்
பிரச்சனைக்கு அவர்கள் கேட்டால் ரெய்கி செய்வேன். எனக்கு நானே
செய்து கொள்ளலாம் என்றாலும், ஏனோ மனதை ஒருநிலைப்படுத்த
முடியாத நிலை.அடிமேல் அடியாக நான் மிகவும் மதித்த நேசித்த
என் தகப்பனுக்கு இணையான மாமா(அயித்தானின் அண்ணன்) மரணம்
நிலைகுலைந்து போக வைத்துவிட்டது. மீள வழித்தெரியாமல்
பதிவுகளாலேயே மீண்டு வந்தேன். எப்போதும்
சிரித்துக்கொண்டே வாழவேண்டும் என
நினைக்கும் என்னால் சிரிக்க முடியாமலேயே போனது.
P.M.S க்கு சரியான மருத்துவர் கிடைத்து கொஞ்சம் முன்னேற
ஆரம்பித்தேன். அடுத்ததாக வந்தது கைவலி. கைகள் மட்டுமல்ல
உடல் முழுதுமே வலிதான். இனி வலியோடுதான் வாழ்க்கை என
நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாய் மருத்துவர்
ஒருவர் கிடைத்து விட்டமின் டி குறைவு என 4 மாதமாய் மருந்து
சாப்பிடுகிறேன். கொஞ்சம் முன்னேற்றம்.
பக்கத்து வீட்டில் ஒரு தோழியிருக்கிறார். Art of livingல் volunteer.
அடிக்கடி போன் செய்து கோர்ஸ் ஆரம்பமாகிறது வந்து சேர்ந்துகொள்
என்பார். அயித்தான் ஊரில் இருக்க மாட்டார், பிள்ளைகள் வருவதற்குள்
நான் வீட்டிற்கு வர முடியாத தொலைவில் பயிற்சி என கடந்த 1 வருடமாக
நோ சொல்லிக்கொண்டே வந்தேன். அவர் வீட்டில் நடந்த யோகா
வகுப்புக்கு மட்டும் சென்று கற்றுக்கொண்டிருந்தேன்.
அவர் என்னை விடுவதாக இல்லை.அலுக்காமல்
சலுக்காமல் போன் செய்து அழைத்தார். ஆள் பிடிக்க நினைக்கிறார்
என்று கூட சில சமயம் நினைத்திருக்கிறேன். இந்த மாதத் துவக்கத்திலும்
அவரிடமிருந்து போன். நாளை முதல் என் வீட்டிலேயே நடக்கிறது
வருகிறாயா என கேட்டபோது எப்போதும் மறுக்கும் நான்
“கட்டாயம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டேன். BASIC COURSE
பயிற்சி வகுப்பு 5 நாள் நடந்தது. முதல் நாள் மூச்சுப்பயிற்சியின்
போதே வைப்ரேஷன் அதிகமாகி ஜுரம் வருவது போல் ஆகிவிட்டது.
” சிலருக்கு ஜுரம் வரும் வந்தாலும் கண்டிப்பாய்
வகுப்புக்கு வரவேண்டும்!” என்று பயிற்சியாளர் சொன்னார்.
உடலில் நல்ல பாஸிட்டிவ் வைப்ரேஷன்ஸ்.
5 நாளும் ஒவ்வொரு அனுபவம். அதை வார்த்தைகளில் அனுபவிக்க
முடியாத ஒரு சுகானுபவம்......
அடுத்த அடுத்த நாட்களில் என் வலிகள் இல்லாமல்
என் உடல் லேசாகி காற்றில் மிதப்பது போல் உணர்ந்தேன்.
வீட்டிலும் புத்துணர்ச்சியாக என் வேலைகளை செய்து கொண்டேன்.
தினமும் யோகாவுடன் இங்கே கற்றதையும் செய்கிறேன். எனக்குள்
என்னென்னவோ மாற்றம் 15 வருடங்களுக்கு முன்பு அடிக்கும் காற்றுக்கு
நன்றி சொல்லி அதை அனுபவித்து மகிழ்ந்த பழைய கலாவாகிப்போனேன்.
என் வயது மறந்து எப்போதும் குதூகலாமாக இருப்பேன். அந்த
நிலை இப்போது மீண்டும். :)))) இதோ இப்போது கூட
நான்பாடும் பாடல் படத்தின் பாடலை அனுபவித்துக்குகொண்டு
அதோடு ஹம் செய்து கொண்டு பதிவு போட்டுக்கொண்டிருக்கிறேன்.
இந்த பயிற்சி முடிந்த பிறகு என் கைகளில் வலி தெரியாமலேயே
இருக்கிறது. வலியா எனக்கா? எங்கே? எப்போ என கேட்கிறேன்.
சப்பாத்தி அதுவும் மடித்து போட்டு பரோட்டா செய்கிறேன். :))
ஒரு நாள் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என நானே சப்பாத்தி
செய்து கொண்டிருந்தேன்.( இப்பொழுதெல்லாம் பழைய படி
பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் தான் சமையல் மற்றும்
எல்லா வேலையும்.:))
கிச்சனில் சத்தம் கேட்டு வந்து பார்த்தார் அயித்தான்.
இத்தனை நாளாய் காணாமல் போயிருந்த நீ திரும்ப
வந்திருக்கிறாய் என்றார். நிஜம்தான். எங்கேயோ போயிருந்த
நான் திரும்ப வந்திருக்கிறேன். புதிதாய். புத்தம் புதிதாய்.
விடாக்கொண்டனாக போன் செய்து என்னை பயிற்சிக்குள்
நுழைத்த அந்தத் தோழிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் ரெய்கி குருநாதர் திரு.ஷ்யாமல் ராவ் அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.
சந்தோஷமா பாட்டு ஒண்ணுக் கேளுங்க.
31 comments:
:-) புதிதாய் பிறந்தமைக்கு வாழ்த்துக்கள்!
நன்றி அநன்யா
மீட்சிக்கும், தொடரவும் வாழ்த்துக்கள்!
மீண்டு(ம்) வந்தமைக்கு வாழ்த்துக்கள்..!!
நடக்கட்டும் இனி உங்கள் ராஜ்ஜியம்!!
நன்றி தமிழ்ப்ப்ரியன்
நடக்கட்டும் இனி உங்கள் ராஜ்ஜியம்!//
கண்டிப்பாய். நன்றி ரங்கா
//இப்பொழுதெல்லாம் பழைய படி
பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் தான் சமையல் மற்றும்
எல்லா வேலையும்.:))//
வாழ்த்துக்கள்:)!
நன்றி ராமலக்ஷ்மி
தியானம் குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் உண்மை. புயல் ஓய்ந்து தென்றல் வீசுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. :-))
//புதிதாய்ப் பிறந்தேன்!!!!!///
இப்பிடி சொன்னாலும் நான் அக்கான்னுத்தான் கூப்பிடுவேன்!
//நான்பாடும் பாடல் படத்தின் பாடலை அனுபவித்துக்குகொண்டு
அதோடு ஹம் செய்து கொண்டு பதிவு போட்டுக்கொண்டிருக்கிறேன்.//
டைனிங்க் ரூம்லேர்ந்து ஆஷிஷ் கூப்பிடறது கேக்குதா பாஸ் போய் பொரோட்டாவை கொடுத்துட்டு வாங்க !
:)))
டைனிங்க் ரூம்லேர்ந்து ஆஷிஷ் கூப்பிடறது கேக்குதா பாஸ் போய் பொரோட்டாவை கொடுத்துட்டு வாங்க !
டைனிங் டேபிள் பகக்த்துலதான் கம்ப்யூட்டர் வெச்சிருக்கேன். நாங்க ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கற ஆளு :))
சந்தோஷம்
தங்கள் கை வலி மறைந்து இன்னும் நிறைய பதிவுகள் எழுதுங்க.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தென்றல் :-)))).
//பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் தான் சமையல் மற்றும்
எல்லா வேலையும்.:))//
ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காதுன்னு சும்மாவா பாடி வெச்சாங்க.!!அப்படியே உடம்பையும் கவனிச்சுக்கோங்க.
//தியானம் செய்ய செய்ய சக்தி அதிகமாகி அதுவே அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல் என்னைப் படுக்கப் போட்டது//
புது தகவல்.
//சரியான மருத்துவர் கிடைத்து கொஞ்சம் முன்னேற
ஆரம்பித்தேன்//
ஆமாங்க, சரியான மருத்துவர் கிடைப்பதும் முக்கியம் தீர்வு பெற. நானும் தேடிக் கொண்டிருக்கிறேன், ஒரு தொடரும் உபாதைக்காக. :-))
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தென்றல்!!
அப்படியே உடம்பையும் கவனிச்சுக்கோங்க.//
நன்றி அமைதிச்சாரல்
கண்டிப்பா ஜமால்,
வருகைக்கு நன்றி
ஒரு தொடரும் உபாதைக்காக//
அதததுக்கு நேரம் வரணும். ஆண்டவன் அருள் புரிவானாக
நன்றி அருணா
புதிதாய் புத்தம்புதிதாய் வாழ்த்துக்கள்!
ஹேப்பி பர்த்டே :))
நன்றி அப்துல்லா
நன்றி மாதேவி
வெல்கம் பேக்:)
thanks vidya
நானும் ஃப்ரெஷ் ஆகிட்டேன் எனக்கும் ரெய்கி செய்தீங்களா ...சக்தியோட ..நன்றி கலா
அட பிறந்க நாளா பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலா
எப்ப யார் கேட்டாலும் ரெய்கி கண்டிப்பா அனுப்பிடுவேன்.
பசங்களுக்கு உடனடி டானிக் ரெய்கிதான். :)) வருகைக்கு நன்றி தேனம்மை
nice!.
thanks siva
இந்த மகிழ்ச்சியும் துள்ளலும் எப்போதும் உங்க கூடவே இருக்க வாழ்த்துகின்றேன்.
எப்படியோ இந்த இடுகையைத் தவறவிட்டுருந்தேன்.
சுட்டிக்கு நன்றி.
நல்லா இருங்க.
வாங்க துளசி டீச்சர்,
உங்க ஆசிர்வாதத்துக்கு ரொம்ப நன்றி.மகிழ்ச்சியாவும் இருக்கு.
Post a Comment