ராணி ஸ்கூல்ல படிக்கும்போது P.E.T கிளாஸ் வாரத்துக்கு
இரண்டு வரும். அதுல ஒரு கிளாஸ் பிராக்டிகல்ஸ்(பெருசா என்ன
செஞ்சிட போறோம், கையை மேலே தூக்கி கீழே போட்டு ட்ரில் தான்)
அடுத்த கிளாஸ் தியரி. தியரி எல்லாம் எதுக்குன்னு ஆரம்பத்துல
புரியல. காப்பரிட்சை டைம் டேபிளில் P.E.T வந்ததும் தான்
தெரிஞ்சது தியரிய பரிட்சையில் எழுதணும்னு. :((
இப்ப இங்க ஆந்திரா அரசு P.E.T கட்டாயப்பாடமாக்கி தியரி+ பிராக்டிகல்னு
டெஸ்ட் வெச்சு மதிப்பெண் வழங்கபோறாங்கன்னு தெரிஞ்சதும்
கொசுவத்தி சுத்திடுச்சு. உடற்பயிற்சியின் அவசியத்தை புரிஞ்சுகிட்டு
கட்டயமாக்கி இருக்காங்க. பாராட்டுக்கள்.
****************************************************
இந்திராகாந்தி ஸ்கூல்ல வேலை பாத்தப்ப எனக்கு ரொம்ப
கஷ்டமாவும் இஷ்டமில்லாமவும் இருந்த ஒரு வேலை ஆண்டுவிழா.
அந்த சின்னப்பிள்ளைங்களை வேஷம் கட்டி ஆட வைக்கிறது மகா
கொடுமை. ஆடும் திறமை இருக்கும் பிள்ளைகள் சரி. தானாடாவிட்டாலும்
தன் பிள்ளையாவது ஆடணும்னு அடம் பிடிச்சு மேடை ஏத்தச் சொல்லும்
பெற்றவர்கள்... வேணாம்டா சாமின்னு இருந்துச்சு.
கொழும்புவிலும் பல பள்ளிகளில் இந்தப் பழக்கம் இருக்கு. என் பிள்ளைகள்
படித்த பள்ளியில் ஒரு வருடம் ஆண்டுவிழா அடுத்த வருடம் எக்ஸிபிஷன்.
ஒவ்வொரு பிள்ளையும் வருடமெல்லாம் உருவாக்கயவற்றை பார்வைக்கு
வைத்துக் கொடுப்பார்கள்.
ஆஷிஷ் வரைந்த நம் தேசியக்கொடி இலங்கையில் பறந்தது.
குட்டி விரல்களால் fabric painting செய்திருக்கும் அம்ருதாவின் படம்
இடப்பக்கத்தில் இருக்கிறது.
இதே கான்சப்டை நான் வேலை பார்த்த பள்ளியிலும் வைத்து
பெற்றோர்களை மகிழ்வித்தேன்.
இதெல்லாம் ஏன் சொல்கிறேன்னா? அந்தக் குட்டி வயதுக்குழந்தைக்களுக்கு
டான்ஸ்,மாறுவேடப்போட்டின்னு ஸ்ட்ரெஸ் அதிகமாகுதாம். எல்லாக் குழந்தையும்
ஒரே மாதிரி இல்லையே. இந்தக் கூத்துக்களை personal development னுசொல்ற
பள்ளிகள் இருக்குன்னு படிச்சப்ப பத்திகிட்டு வந்துச்சு.
மழலைக்கல்வியில் அரிய சாதனை படைச்சிருக்கறவங்க
மாண்டிசோரி அம்மையார்.
கைகளால் எடையை அளந்து பார்க்கும் ஒரு
பயிற்சி இருக்கு. இது செய்யும் பொழுது
கண்ணை கட்டி(blind fold) செஞ்சா திறன்
அதிகமாகும்னு சொல்லியிருக்கறவங்களே
சொல்லியிருக்கும் முக்கியமான விடயம்,
”சில பிள்ளைகளுக்கு இது பயம் தரும்,
வேண்டாம் என்று மறுப்பார்கள், அவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்”
என்பதுதான்.
*****************************************************
3 நாள் முன்னாடி சென்னையில் ஒரு மரணம்.
தெலுங்கு திரைத்துறையில் அந்தக்கால காமெடியன் பத்மனாபம்
இறந்துவிட்டார்னு செய்தி. சோகத்துல சோகம் நம்ம தெலுங்கு
அண்ணாச்சிக்கள் யாருமே போய் பாக்கலை. தனது வாழ்க்கை
கதவைத் திறந்துவிட்ட நன்றி உணர்ச்சிக்காக எஸ்.பி.பி வந்திருந்தார்.
இங்க டீவியில இத காட்டினவங்க அடிச்ச கமெண்ட் தான் ஹைலைட்டா
இருந்துச்சு.
பத்மநாபம் 60 சினிமால நடிச்சு, 5 படங்களை
தயாரிச்சு ,2 படங்களை டைரக்ட் செஞ்சிருந்தாலும்
கைல காசு ஏதும் இல்லை. உடன் பிறந்த 8 பேர்களையும்
தனக்கு பிறந்த 7 பிள்ளைகளையும் கறை சேர்த்துட்டு சென்னையில்
ஒரு சின்ன இடத்துக்குள் வாழ்ந்து வந்தார்.
இவரே ஹைதராபாத்தின் ஜூப்ளிஹில்ஸில் ஒரு
வீடும் பஞ்சாரா ஹில்ஸில் ஒரு ஸ்டுடியோவும்
வைத்திருந்தால் எல்லோரும் பறந்து வந்திருப்பார்கள் என்றார்கள்!!
அல்லு அர்ஜூன்(சிரஞ் சீவியின் மச்சான்) பத்மநாபம்
அவர்களுக்கு விருது வழங்கி கொளரவிச்சிருக்காங்க.
கடைசிகாலத்தில் வறுமையில்
வாடினாராம் பத்மநாபம்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு காமெடியா சொல்ல முடியல.
நம்ம தங்கத் தமிழ் நாடு மட்டும் விதிவிலக்கா. ஆச்சி மனோரமா
மூட்டு ஆப்பரேஷன் நடந்ததக்கப்புறம் யாரும் போகலைன்னு பத்திரிகையில்
வந்ததக்கப்புறம் சிலர் வந்திருக்காங்க. அதுலயும் இந்தத் தலைமுறை
ஆளுங்க யாருமே இல்லைன்னு படிச்சேன்.
*************************************************************
பசங்களுக்கு மார்ச்8லேர்ந்து முழுஆண்டுத் தேர்வு. சிபிஎஸ்சி பாடத்திட்டம்.
பரிட்சை முடிஞ்சு இரண்டுவாரம் விடுமுறை கொடுத்து அடுத்த வருடம்
ஆரம்பமாகிடும். ஏப்ரல்23 தேதியிலேர்ந்து ஜூன் 9 வரை லீவுதான்.
மார்ச் 8 லேர்ந்து ஏப்ரல் 23 வரை ஹாஃப்டேதான். 1 மணிக்கு
வீட்டுக்கு வந்திடுவாங்க. செம ஜாலி. (நடுவுல இரண்டுவாரம் லீவு வேற)
சீக்கிரம் எந்திரிச்சு சமைக்க வேண்டாம். பொறுமையா எந்திரிச்சு
டிபன் செஞ்சு கொடுத்தா போதும். எப்பவும் இப்படியே இருந்துட்டா,
எம்புட்டு நல்லா இருக்கும். :))) (கொழும்புல இப்படிதான் எப்பவும்)
இப்படிக்கு
விடிகாலையில் எழுந்திரிச்சு சோறுகட்டுவோர் சங்கம்
ஹைதை கிளை
******************************************************
காலேல எந்திரிச்சா ஒரே சத்தம். பக்கத்துல தான் ஏர்போர்ட் என்பதால்
ஹெலிகாப்டர்,ஃபைளைட் போகுதுன்னு நினைச்சேன்.
(இதெல்லாம் நின்னு கவனிக்கவா நேரம் இருக்கு. 5.15க்கு எந்திரிச்சாலும்
6.45 வரை காப்பி கலந்து குடிக்க நேரமில்லாம வேலையிருக்கு அவ்வ்வ்)
இடி இடிக்குதா என்னன்னு? பிள்ளைங்களை கேட்டா ஆமாம்மான்னு சொன்னாங்க.
என்ன கொடுமை இது சரவணன். கொஞ்சம் நேரத்துல மழைச்சாரல்..
நியாயப்படி சிவராத்திரிக்கு அப்புறம் மெர்குரி லெவல் ஏற ஆரம்பிச்சு மே மாசம்
44 அல்லது 45 டிகிரியைத் தொடணும். இப்ப 35 டிகிரிகிட்ட வந்திருக்குன்னு
இருக்கறப்போ மழை என்ன வேண்டிகிடக்கு!!! மழை காலத்துல மழையக்
காணோம். :(
காலையோ, மாலையோ ஏதோ ஒருநேரம் அப்படிக்கா வந்து ஒரு பக்கெட்
தண்ணியை ஷவரா கொட்டறமாதிரி மழை பெய்வது ஒண்ணும் சரியில்லை
மிஸ்டர் வருண பகவான். 3 மாசம் கழிச்சு நீங்க வரவேண்டிய மிருகசீர்ஷ
நட்சத்திர அன்னியிலேர்ந்து கரெக்டா வந்து உங்க டூட்டியை செய்ங்க.
ஆமா சொல்லிட்டேன். இப்போதைக்கு மாம்பழம், நுங்கு,
இளநி, தர்பூஷ், பானைத்தண்ணின்னு நாங்க பாக்க வேண்டிய வேலை நிறைய்ய
இருக்கு. :)))
20 comments:
பத்மநாபம் - நல்ல நகைச்சுவை நடிகர். அவர் இறந்த செய்தி தெரியாது. பாவம். இந்த தலைமுறையே இப்படித்தான். ஃப்ரீயா விடுங்க!
உங்க நிலைமை தான் எல்லா அம்மாக்களுக்கும். எஸ்பெஷலி,காபி குடிக்கக்கூட நேரமின்மை! கஷ்டம் தான்.
அனாவஸ்யமா நுங்கு,தர்பூஸ், இளனி எல்லாம் சொல்லி என் வயத்தெரிச்சலை கொட்டிண்டதுக்கு சந்தோஷமா? த்ருப்தி தானே? ரொம்ப சுவாரஸ்யமான பதிவு.
பிரியாணி... சுவை அருமை...
//கொழும்புல இப்படிதான் எப்பவும்//
ஓ..கொழும்புல எப்பவுமே முழுப் பரிட்சையா...:)
எங்கூட்ல ரெண்டு வாரம் லீவு அதனால நானும் காலைல டிபன் ஆற அமர செய்றேன். குட்டித் துரைக்கு மட்டும் மார்னிங் ஸ்னாக்ஸ் எக்ஸ்ட்ரா. லைஃப் ஜாலியா இருக்கில்ல:))
அனாவஸ்யமா நுங்கு,தர்பூஸ், இளனி எல்லாம் சொல்லி என் வயத்தெரிச்சலை கொட்டிண்டதுக்கு சந்தோஷமா? த்ருப்தி தானே? //
ரொம்ப சந்தோஷமா இருக்கு :))
ஓ..கொழும்புல எப்பவுமே முழுப் பரிட்சையா...:)//
இல்ல சாமி ஒரு மணியோட ஸ்கூல் முடிஞ்சிடும். லஞ்சுக்கு என் ப்ரெண்ட்ஸ்(நான் பெத்த பசங்க ரெண்டும் தான்) வீட்டுக்கு வந்திடுவாங்க. சேந்து சாப்பிடுவோம். இப்ப மாதிரி தனியா உக்காந்து கொட்டிக்க வேண்டிய கொடுமை இல்லை.
லைஃப் ஜாலியா இருக்கில்ல//
இப்ப இல்ல மார்ச் 8க்கு அப்புறம் எனக்கு செம ஜாலி தான்
//இவரே ஹைதராபாத்தின் ஜூப்ளிஹில்ஸில் ஒரு
வீடும் பஞ்சாரா ஹில்ஸில் ஒரு ஸ்டுடியோவும்
வைத்திருந்தால் எல்லோரும் பறந்து வந்திருப்பார்கள் என்றார்கள் //
101% உண்மை.
//அதுலயும் இந்தத் தலைமுறை
ஆளுங்க யாருமே இல்லைன்னு படிச்சேன்.
//
அதைப் படிச்சுட்டு மனசு உறுத்தி நான் போய்ப்பார்த்தேன். better late than never னு மனசைத் தேத்திக்கிட்டேன்.
அதைப் படிச்சுட்டு மனசு உறுத்தி நான் போய்ப்பார்த்தேன். better late than never னு மனசைத் தேத்திக்கிட்டேன்.//
நல்ல வேலை செஞ்சீங்க. பாராட்டுக்கள். நடிகை என்பதால் அல்ல வயதில் பெரியவங்க, தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க யாருக்கும் உடம்பு சரியில்லைன்னா போய் பாக்கறதுதானே மனிதாபிமானம்.
நம்ம பரிசலுக்கு ஆக்சிடெண்டுன்னதும் எல்லோரும் பதிவு எழுதறோம், போன் பேசறோம், நலம் பெற பிராத்திக்கிறோம்ல. மனிதம் மறந்து போகாம இருக்க ஒரு வழி
வருகைக்கு நன்றி
//அடம் பிடிச்சு மேடை ஏத்தச்சொல்லும் பெற்றவர்கள்..//
என்னத்தச் சொல்ல... ஸ்ட்ரெஸ் ஏற்படுத்துற அளவுக்கு...
//ஆச்சி மனோரமா மூட்டு ஆப்பரேஷன்//
அப்படியா, தெரியாதுங்களே, இப்ப நல்லாருக்காங்களாமா?
//விடிகாலையில் எழுந்திரிச்சு சோறுகட்டும் சங்கம்//
நானும் மெம்பர்ங்கோ இதில; ஆனா முக்காவாசி சமையல் ராத்திரியே முடிஞ்சுடும். இங்கயும் ஒரு மாசம் லீவு வருது. காலையில மெதுவா எந்திரிச்சா போதும்ன்னாலும், பிள்ளைங்களை எங்க கொண்டு விடுறதுன்னு ஒரே யோசனையா இருக்கு!!
//நட்சத்திர அன்னியிலேர்ந்து கரெக்டா வந்து//
ஏங்க, வெயிலைக் குறைக்க மழை பேஞ்சாலும் தப்பா?
அப்படியா, தெரியாதுங்களே, இப்ப நல்லாருக்காங்களாமா?//
அப்படித்தான் பத்திரிகையில படிச்சேன் ஹுசைனம்மா
//விடிகாலையில் எழுந்திரிச்சு சோறுகட்டும் சங்கம்//
நானும் மெம்பர்ங்கோ இதில; ஆனா முக்காவாசி சமையல் ராத்திரியே முடிஞ்சுடும்.//
எனக்கு காலையில் எழுந்து ஃப்ரெஷ்ஷா செஞ்சாதான் சரிப்படும்.
இங்கயும் ஒரு மாசம் லீவு வருது. காலையில மெதுவா எந்திரிச்சா போதும்ன்னாலும், பிள்ளைங்களை எங்க கொண்டு விடுறதுன்னு ஒரே யோசனையா இருக்கு!!//
ஓஓ
//நட்சத்திர அன்னியிலேர்ந்து கரெக்டா வந்து//
ஏங்க, வெயிலைக் குறைக்க மழை பேஞ்சாலும் தப்பா?//
வெயில் அடிச்சு அப்புறம் மழை பெஞ்சாத்தான் நல்லது. அப்படியே பழகிடுச்சி. மிஸ்டர் வருண பகவான் திடும்னு மாத்தினா தாங்க முடியுமா??
பிள்ளைகளுக்கு இப்படி ஒரு சினேகிதி அம்மாவா வந்திருக்கிறது அதிர்ஷ்டம்.
ஆச்சி மநோரமா பற்றிக் குமுதத்தில் படித்தேன். பாவம். எத்தனை பேரை மகிழ்வித்திருப்பார். சொந்த வாழ்க்கையில் சோகம்தான்.எல்லாக் காமெடி நடிகர்கள் கதையிலும் சோகம் ஒரு பர்செண்டாவது இருக்கிறது. நீங்கள் எழுதின நடிகரைப் பற்றித் தெரியாது. இத்தனை பிள்ளைகள் இருந்தும் வருந்தும் வகையில் வாழ்ந்திருக்கிறார்.
ஹைதை ஆவக்காய் வெகு சுவை.
வாங்க வல்லிம்மா,
ஹைதராபாத் பிரியாணியில் காரம் அதிகம் இருக்காது. மொகல் பிரியாணிபோல ஒரு மாதிரி நல்லா இருக்கும்.அதனால்தான் காரசாரமான ஆவக்காயை துணைக்கு சேத்துகிட்டேன். :))
வருகைக்கு நன்றி
ஹை..ஹைதையில் நானா!!!
இங்கேயும் போன வாரம் சாரல் இருந்ததாக்கும்..அது எதுக்குன்னா..குளிர் முடிஞ்சு வெயில் ஆரம்பிக்கப்போகுதுன்னு சொல்லும் அறிவிப்பு.வருஷா வருஷம் அதுதான் எங்களுக்கு அறிவிப்புமணி.மறுநாளே குளிர் நான்போயிட்டு வாரேன்னு போயிடும்.
ஹைதையிலும் இப்ப வெக்கை ஆரம்பிச்சிருக்கணுமே :-))
வாங்க அமைதிச்சாரல்,
மழை எல்லாம் பேயாமலேதான் சூரியன் உக்கிரமாக ஆரம்பிச்சுகிட்டு இருந்தார். திடும்னு இந்த வருஷம் தூரல்.
வெக்கை இருக்கே. அதுவும் 5ஆவது மாடியில உக்காந்துகிட்டு(மேலே வேறெந்த கட்டடமும் இல்லை :()
ஆனந்தமா அவிஞ்சிகிட்டு இருக்கோம்ல.. நவம்பர்லேர்ந்து குளிரை அனுபவிச்சாப்ல வெயிலையும் ஆனந்தமா எஞ்சாய வேண்டியதுதான்.
ஆவக்காய் நல்ல சுவை தான்.
நுங்கா - ஹூம் அனுபவிங்க ...
/அனாவஸ்யமா நுங்கு,தர்பூஸ், இளனி எல்லாம் சொல்லி என் வயத்தெரிச்சலை கொட்டிண்டதுக்கு சந்தோஷமா? த்ருப்தி தானே? /
அதே! அதே!
விடிகாலையில் எழுந்திரிச்சு சோறுகட்டுவோர் சங்கம்// :-))
எத்தனை தடவை படித்தாலும் சங்கம் ஜோக்குகள் சலிக்கவேமாட்டேங்குது.
நுங்கா - ஹூம் அனுபவிங்க ...//
நுங்குக்கு வெயிட்டிங். தர்பூஷும், திராட்சையுதான் ரவுண்ட் கட்டிகிட்டு இருக்கோம்.
வருகைக்கு நன்றி ஜமால்
வருகைக்கு நன்றி அருணா. :)
எத்தனை தடவை படித்தாலும் சங்கம் ஜோக்குகள் சலிக்கவேமாட்டேங்குது.//
புலம்பினது உங்களுக்கு ஜோக்கா போயிடிச்சு... ம்ம்ம்
Post a Comment