Thursday, April 15, 2010

ஒரு ப.மிளகாய் வேணும்னாலும் கடன் கேட்க பக்கத்துல யாருமில்லை

அம்மா என்னை வீட்டுக்குள்ளேயே வெச்சிருப்பாங்க.
யார்கூடயும் விளையாட அனுப்பியதே இல்லை.
8 வருடம் கழித்து தம்பி பிறந்த பிறகு என்
துணை அவந்தான். லீவு எடுத்திருந்தால்
நோட்ஸ் வாங்கப்போவதைத் தவிர
பள்ளித் தோழிகள் வீட்டுக்கு
போகும் பழக்கமும் இல்லை.

பள்ளியில் கல்லூரியில் எனக்கென தோழிகள்
உண்டு. ஆனால் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு
போகும் அளவுக்கு இல்லை. திருவப்பூர்
மாரியம்மன் கோவிலுக்கு போய்விட்டு
என் தோழி மங்கையை பார்க்காமல் வந்தால்
அவள் சாமியாடுவாள் என்பதற்காக அவள்
வீட்டுக்கு மட்டும் போயிருக்கிறேன்.

இந்த வளர்ப்பு முறை என்னை யார் வீட்டுக்கும்
அதிகம் போக வைத்ததில்லை. வம்பு பேசும்
பழக்கமோ சுத்தமாக இல்லை. பேச்சுத் துணைக்கு
ஆள் யாரும் இல்லாவிட்டாலும் என் வேலைகளை
நான் பார்த்துக்கொண்டு, புதிதாக ஏதாவது கற்க,
படிக்க என இருப்பது பழக்கம். கொழும்புவில்
ஒவ்வொரு வீட்டிற்கும் பெரிய பெரிய மதில்சுவர்கள்.
வாசலில் இருக்கும் இரும்பு கதவே பெரிதாக
இருக்கும். மனிதர்கள் முகம் பார்க்க கூட முடியாத
சூழலிலும் தனிமை தெரிந்ததே இல்லை.


இங்கே வந்த பிறகும் எனக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள்
என யாரும் கிடையாது!!! எப்போதும் பூட்டுதான்
தொங்கும். யாருமில்லாமல் மூடி வைத்திருக்கிறார்கள்.
அப்பார்ட்மெண்டில் பல தோழிகள் இருக்கிறார்கள்.
இங்கும் அரட்டை அடிக்க யார் வீட்டுக்கும் போனதில்லை.
ஒரு முறை இந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும்
தெரிந்தவர் ஒருவர் .”எப்படித்தான் இப்படி உன்னால்
இருக்க முடியுதோ!! ஒரு ப.மிளகாய் வேணும்னாலும்
கடன் கேட்க பக்கத்துல யாருமில்லைல...!!” அப்படின்னு
கேட்டார்.

எனக்கு இந்த கடன் வாங்கும் பழக்கம் மகா அலர்ஜி.
இருந்தால் சரி. இல்லாவிட்டால் மாற்றுவழி அல்லது
தேவைக்கு உடன் கடைக்கு ஓடுவேனே தவிர
யாரிடமும் ப.மிளகாய் கொடு கறிவேப்பிலை கொடு
என ஓட மாட்டேன்.

அவ்வாவின் ஃப்ரெண்டுகள், அக்கம் பக்கத்து
வீட்டுக்காரர்கள் ஒரு டம்ப்ளர் காபிப்பொடி,
சர்க்கரை, தயிர் இப்படி கடன் வாங்கிக்கொண்டு
போவதுண்டு. அவர்கள் திருப்பி தராவிட்டால்
தர்மசங்கடமாக இருக்கும். அப்பொழுதிருந்தே
யாருக்கும் இம்மாதிரி சாமான்கள் கடன்
கொடுப்பதுமில்லை, வாங்குவதுமில்லைன்னு
கொள்கையா வெச்சிருக்கேன்.


ப.மிளகாய் இல்லாவிட்டால் வரமிளகாய் போட்டு
சட்னி செய்தாலும் ருசிக்கும். ஒரு நாள் கறிவேப்பிலை
இல்லாவிட்டால் ருசி குறைந்து விடாது.

இதைப் பற்றி நினைக்கும் பொழுது சென்னையில்
என் எதிர் வீட்டுக்காரம்மாதான் ஞாபகத்துக்கு
வருவார். கோடம்பாக்கத்தில் முக்கியமான பகுதியில்
1500 சதுர அடி, 3 பெட்ரூம் வீடு அவர்களுடையது.
ட்ராவல்ஸ், மினரல் வாட்டர் சப்ளை என வருமானத்துக்கும்,
ஆள்களுக்கும் குரைவில்லை.

”என் சின்ன மிக்ஸி வேலை செய்யலை,
உன் மிக்சியில் அரைச்சுக்கிறேன்!” என்று ஒருநாள்
வந்தார். அதுவே பழக்கமாகி மிக்ஸி கழுவி, துடைத்து
(என் வேலைகள் முடிந்த பிறகு) என எனக்கு
வேலை அதிகமானது. “இன்னுமா உங்க மிக்ஸி
ரிப்பேர் செஞ்சுக்கலை!!” என கேட்டதில் அந்தம்மாவுக்கு
கொஞ்சம் வருத்தம். அதன் பிறகு அந்தம்மா
கறிவேப்பிலை, கொத்துமல்லி, பூண்டு என
எதுக்கேட்டாலும் இல்லை என்றே சொல்லிவிடுவேன்.

மகா கேவலமாக ஒரு நாள் அந்தம்மா
”சாப்பிட உக்காந்துட்டேன், நெய் இல்ல. நெய் இல்லாம
சோறு இறங்காது! உன் பொண்ணுக்கு நெய் போடுவ
இல்ல.அதனால நெய் எப்பவும் இருக்கும்ணு
தெரியும்!! கொஞ்சம் நெய் கொடு!!” என்று
கேட்டது மகா கொடுமை. அப்படி என்ன வாய்??
இருந்தால் சாப்பிடுவதுதான் நல்லது. என்னிடம்
கடன் கேட்டதிற்கு பதில் அந்தம்மாவே 2 தப்படி
நடந்திருந்தால் திரும்பியதும் கடை. இல்லை
தன் வீட்டில் வேலை செய்பவரையாவது
அனுப்பியிருக்கலாம்”!!


எனக்கு இந்தக் குணம் பிடிக்கவே இல்லை.
தெலுங்கில் “அப்பு சேஸி பப்பு கூடு” கூடாது
என்பார்கள்.அதாவது கடன் வாங்கியாவது
பருப்பு சோறு சாப்பிடவேண்டும் என்பது இல்லை.
அது பெரிய தவறு.

ஃப்ரிட்ஜ் இல்லாத காலங்களில அதிகம் வாங்கி
வைத்திருந்தால் கெட்டுப்போகும் என்பதால்
குறைவாக காய்கறிகள் வாங்கினார்கள். வீட்டுக்கு
வீடு பெரிய சைஸ் ஃப்ரிட்ஜ் இருக்கும் இந்தக்காலத்திலும்
பக்கத்துவீட்டில் பச்சை மிளகாய் கடன் வாங்கித்தான்
சமைக்க வேண்டும் என்றால் அந்தப் பெண்ணின்
வீட்டு நிர்வாகம் நல்லா இல்லைன்னு புரியுது.

ஆத்திர அவசரத்துக்கு உதவத்தான் அக்கம் பக்கம்
என்றால். சரி. இல்லைன்னு சொல்லவில்லை.
உண்மையிலேயே உதவி வேண்டும் நேரத்தில்
உதவுவது மனித இயல்பு. ஆனால் இப்படி
அல்ல.

எனக்கும் நிறைய்ய உதவிகள் என் அக்கம் பக்கத்தினர்
செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லையேல்
ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன் எனும் நிலையில்
அவர்கள் செய்திருக்கும் உதவிகள் மகத்தானது.
”முன் கை நீண்டால்தான் முரண் கை நீளும்”
நானும் செய்திருக்கிறேன்.

அப்படி என் வாழ்நாளில் மறக்க முடியாத
இரு குடும்பங்களை பற்றி அடுத்த பதிவுகள்.

இப்போதைக்கு தொடரும் போட்டுக்கறேன்.





24 comments:

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப பழகியவர்கள் என்றால் இப்படி கடன் கேட்பது தப்பில்லை என்று நினைக்கிறேன்,.

ஹுஸைனம்மா said...

நான் சொல்லச் சொல்ல, நீங்க கேட்டு எழுதின மாதிரி இருக்கு. அப்படியே என் எண்ணங்கள், டிட்டோ!! இந்தப் பதினஞ்சு வருஷமா எனக்கு எந்த நெய்பர்ஸும் கிடையாது!! (பக்கத்து வீட்டில ஒண்ணு கம்பெனி இருக்கும்; அல்லது பூட்டிருக்கும்; இப்ப பேச்சலர்ஸ்!) இருந்திருந்தாலும் இந்த கடன் பழக்கம் சுத்தமா ஆகாது எனக்கு!!

pudugaithendral said...

வாங்க அமுதா,

அவர்கள் கூட என்றாவது தவறாக நினைத்துவிட்டால். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் என்பார்களே அதுமாதிரி ஆகிவிடுமோ என என் எண்ணம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆஹா வாங்க ஹுசைனம்மா,

சேம் ப்ளட்டா இருக்கீங்களேப்பா.

நன்றி

மாதேவி said...

இங்கு பொதுவாக இந்த வழக்கம் இல்லை.
கடன் கேட்பது எனக்கும் பிடிக்காத விடயம்.

Ananya Mahadevan said...

ஐ தின்க் இந்த கடன் வாங்குறதெல்லம் இங்கே பழக்கத்தில இல்லைன்னு. யாரும் யாரையும் கேட்டதாக தெரியவில்லை. நானும் போய் கேட்டதில்லை. கொடுத்ததும் இல்லை. சென்னையிலும் கேட்டதில்லை. உறை மோர் கேட்டு வருவார்கள். தருவோம். அவ்வளவே. இருந்தாலும், நெய் கடன் கேட்ட அந்த பெண்ணை நினைத்தால்.. ச்சே..

pudugaithendral said...

வருகைக்கு நன்றி மாதவி

pudugaithendral said...

வாங்க அனந்யா,

இது நடந்து 10 வருஷம் ஆச்சு. ஆனாலும் அந்தம்மாவை மறக்க முடியல.

வருகைக்கு நன்றி

Vidhoosh said...

இந்த சங்கடத்தை சங்கடமே இல்லாமல் நீங்க அவங்க வீட்ல ஒருநாள் போய் "கொஞ்சம் பால் தீந்து போச்சு, எனக்கு பால்கோவா சாப்பிடலன்னா தூக்கம் வராது"ன்னு சொல்லி பார்த்திருக்கணும் response-சை. :))

எனக்கு எப்போதும் "என்னவோ போடா மாதவா"தான்.:))

தாரணி பிரியா said...

எங்க சொந்தகாரங்க ஒருத்தர் எப்ப நான் அவங்க வீட்டுக்கு போனாலும் பக்கத்து வீட்டுல இருந்த பால் வாங்கிதான் காபி போடுவாங்க. அந்த காபியை குடிக்கவே சங்கடமா இருக்கும். கொஞ்ச நாளுக்கு பிறகு அவங்க வீட்டுக்கு போகும் போது 1/2லி பால் வாங்கிட்டு போக ஆரம்பிச்சுட்டேன்.

Anonymous said...

விதூஷோட கொம்ன்ற் பாத்து சிரிச்சுட்டேன். ஆத்திர அவசரத்துக்கு வேற ஏதாவது கேட்டா பரவாயில்லனு சொல்லலாம். நெய் கேக்கிறது எல்லாம் டூமச். ஒன்னு முடிய போகுதுனா, வாங்கி வைக்கிற பழக்கம் இவங்க கிட்ட இல்லயா. கடைசி சொட்டை (துளியை) வழித்து துடைக்கும் வரை என்ன செய்யிறாங்க வீட்ல. ? கிரண்டர் ரிப்பேராகிறது நடக்கும் வரைக்கும் தெரியாது. காபி, பச்ச மிளகாய் போன்றவை முடிஞ்சுட்டே போறது கண்ணால பாக்க தெரியுமே. வாங்கி வைப்பதற்கு என்ன. Sigh.

pudugaithendral said...

எனக்கு எப்போதும் "என்னவோ போடா மாதவா"தான்.:))

நீங்களே ஸ்மைலியும் போட்டுட்டீங்க வித்யா. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

கொஞ்ச நாளுக்கு பிறகு அவங்க வீட்டுக்கு போகும் போது 1/2லி பால் வாங்கிட்டு போக ஆரம்பிச்சுட்டேன்.//

நல்லது ப்ரியா.

எதிர்பாரா விருந்தாளி வந்தா கொஞ்சம் கஷ்டம்தான். அப்ப கூட கடைக்கு ஓடத்தான் தோணுமே தவிர பக்கத்து வீட்டுக்கல்ல.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அனாமிகா,

அதென்னவோ சிலருக்கு பக்கத்து வீட்டில் வாங்கிப்பது பழக்கம். வாரத்துக்கு ஒரு தடவை வாங்கிப்போட்டா போதுமே. அந்த பக்குவம் ஏனோ புரிவதில்லை.

வருகைக்கு நன்றி

Anonymous said...

என் அம்மாவுக்கு இந்த கடன் வாங்கற பழக்கம் சுத்தமா பிடிக்காது. எனக்கும் அப்படியே. ஆனா எப்பவாவது அக்கம்பக்கத்தில இருந்து வந்து கேட்டா இருந்தா குடுக்கறதுதான்.
வெளிநாட்டுக்கு வந்ததுக்கப்பறம் அதெல்லாமே சுத்தமா இல்லை.

pudugaithendral said...

வாங்க சின்ன அம்மிணி,


வருகைக்கு நன்றி

Ananya Mahadevan said...

@விதூஷ்!
//ஒருநாள் போய் "கொஞ்சம் பால் தீந்து போச்சு, எனக்கு பால்கோவா சாப்பிடலன்னா தூக்கம் வராது"ன்னு சொல்லி பார்த்திருக்கணும் response-சை. :))//
ஜூப்பர் பா! அடிபொளி கேட்டோ?

Vidhya Chandrasekaran said...

மேற்படி இல்லன்னா சாப்படாம கூட இருந்துடலாம். கடன் வாங்கறது நமக்கு ஆகவே ஆகாது.

சாந்தி மாரியப்பன் said...

எங்கள் பில்டிங்கில் இப்படி ஒருபெண் இருக்கிறார்.ஒன்றுக்கு இரண்டு விலையுயர்ந்த கார்கள் வைத்திருக்கும் அளவுக்கு வசதி. இருந்தாலும், கெட்டுப்போன மிக்ஸியை ரிப்பேர் செய்யவோ, அல்லது வேறு மாற்றவோ இல்லாமல், அதே தளத்தில் இருக்கும் என் தோழியிடம் தினசரி மிக்ஸியை கடன் வாங்கி சென்றுவிடுவார். பொறுத்துப்பார்த்த என் தோழி, நாசூக்காக சொல்லிவிட, கோபம் கொண்டு கொஞ்ச நாட்களுக்கு அவருடன் பேசுவதையே நிறுத்திக்கொண்டு விட்டார்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அநன்யா

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வித்யா

pudugaithendral said...

அதென்னவோ சிலர் அப்படித்தான் இருக்காங்க அமைதிச்சாரல்.

நன்றி

மணிகண்டன் said...

என்ன கடனா உங்ககிட்ட கேக்கலாம்ன்னு யோசிச்சிக்கிட்டே இருக்கேங்க :)-

pudugaithendral said...

vanga manikandan,

smileyyum neengale potuteenga :)