Monday, April 12, 2010

ராஜா ஆரு ராணி ஆரு!!!!

சகோதரி ஸாதிகா இந்த விருதை எனக்குக் கொடுத்திருக்காங்க.
சந்தோஷமா இருக்கு. நான் விரும்பும் சிலருக்கு
ராஜா ராணி விருது கொடுக்க விரும்புகிறேன்.

எப்பவும் லேடீஸ் ஃபர்ஸ்டுதானா. ஒரு மாறுதலுக்கு
இந்த தடவை ஜென்ஸ் ஃபர்ஸ்டு.
சர்வே எடுப்பதே என் தொழில்னு இருக்கும் சர்வேசனுக்கு
இந்த விருது.( பொண்ணு பாக்கப்போனதைப்பத்தி
இன்னும் பதிவு வரலைன்னு ஞாபகம் இருக்கட்டும்)

மறந்து போகக்கூடாத பாடல்களை அவ்வப்போது
ஞாபகப்படுத்தும் எங்கள் பாஸ் கானா பிரபாவுக்கு
இந்த விருது.

சமீபத்துல நான் படிக்க ஆரம்பிச்சு விரும்பி படிக்கற
(சில சமயம் படிச்சிட்டு பின்னூட்டம் போடாம
வர்றதும் உண்டு) பதிவரில் சேட்டைத் தம்பி.
இந்த ஒரு போஸ்டுக்காகவே இந்த விருது. என் ராசி பலன்
எப்பன்னு காத்துகிட்டு இருக்கேன். பாப்போம் சரியா
சொல்றீங்களான்னு.

நானானி. இவங்க ப்ளாக் பக்கம் ஒரு ரவுண்ட் அடிச்சா
எப்படியெல்லாம் சுவாரசியமா பதிவு போடலாம்னு
ஐடியா கிடைக்கும். தான் நனையாமல் கார் மட்டும்
குளிச்ச போஸ்ட் படிச்சிருக்கீங்களா?? இல்லையா.
சீக்கிரம் போய் படிங்க. நானானிக்கு இந்த விருது.

வலையுலக ஆசிரியை துளசி டீச்சருக்கு
இந்த விருது.

பக்கடோ சுத்தி வந்த காகிதத்தையும் படிக்கும்
என்ன மாதிரி ஆளுங்க இருப்பாங்கன்னு நல்லாத்
தெரியும் போல விதூஷுக்கு. தன் வலைப்பூவுக்கு
அந்தப் பெயர்தான் வெச்சிருக்காங்க. சுவாரசியமாவும்
இருக்கும். அவங்களுக்கு இந்த ராணி விருது.

கிறுக்குவதா சொல்லிக்கிட்டு கலக்கல் போஸ்டுகள்
போடும் வித்யாவுக்கு இந்த விருது.

விருதுபெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

22 comments:

Vidhoosh(விதூஷ்) said...

அட. ரொம்ப நன்றி தென்றல். :)
கௌரவப் படுத்தியதற்கு அரசியார் அன்போடு உங்களுக்கு வழங்குவது கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் இருக்கும் புறம்போக்கு நிலங்களையும் ஆயிரம் போர்கிலிகளும். பொற்கிழி-ன்னுதான் சொல்லவந்தேங்க... :))

மற்ற ராஜா ராணிகளுக்கும் வாழ்த்துக்கள். :)

நன்றி தென்றல்.

அன்புடன்
ஸ்ரீவித்யா

கானா பிரபா said...

;) விருதுக்கு நன்றி பாஸ், நம்ம கடமையைத் தானே செஞ்சோம்

புதுகைத் தென்றல் said...

வாங்க வித்யா,

ஏற்கனவே கலவர பூமியில காத்து.. + 41 டிகிரி வெயில்ல காஞ்சுகிட்டு கிடக்கேன். இதுல போர்கிலியா...அவ்வ்வ்வ்வ்

அது ஏதோ புறம்போக்கு நிலம் சொல்லியிருக்கீங்க. அதுக்கு தாங்க்ஸ்.

:))

புதுகைத் தென்றல் said...

உங்க கடமையை கண்னும் கருத்துமா செய்வதற்குத்தான் இந்த விருது பாஸ். வலையுலகின் அப்துல் ஹமீது நீங்க.

வித்யா said...

நன்றி அக்கோவ்:)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !
விருது வழங்கிய உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் .!
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

Jaleela said...

விருது பெற்ற அனைத்து ராஜா, ராணிகளுக்கு.

விருது கொடுத்த ராணிக்கு, விருது வாங்கிய ராணி எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. விருது கொடுத்த அழகே தனி. விருதினால் அவர்களுக்கு அழகா, அவர்களால் விருதினுக்கு அழகா என்று சினிமாத்தனமா கேட்கத் தோன்றுகிறது. வாழ்த்துகள்.

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் வித்யா

புதுகைத் தென்றல் said...

நன்றி சங்கர்

புதுகைத் தென்றல் said...

நன்றி ஜலீலா

புதுகைத் தென்றல் said...

நன்றி வல்லிம்மா

சேட்டைக்காரன் said...

மிக்க நன்றி!

வலையுலகில் வெறும் நான்கு மாதங்களாக நடை பயின்று கொண்டிருக்கும் எனக்கும் விருதளித்து கவுரவித்த உங்கள் பெருந்தன்மைக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்! புதியவர்களை ஊக்குவிக்கும் உங்கள் பணி தொடர வேண்டும்.

நானானி said...

தென்றல்!
வாவ்...! சுட்டெரிக்கும் கோடையில் புது வெள்ளை மழை கொட்டியது போலிருக்கு. ரொம்ப சந்தோஷம்!!!

உலக அழகி(கிழவி) ரேஞ்சில் ரெண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு ஆச்சரியப்படணும் போலிருக்கு!!!!!

SurveySan said...

Danksu! :)

ராமலக்ஷ்மி said...

விழாவில் கலந்து கொள்ள இதோ நானும் வந்துட்டேன். ராஜாக்களுக்கும் ராணிக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

புதுகைத் தென்றல் said...

வாங்க சேட்டைத்தம்பி,

4மாசமாத்தான் எழுதறீங்கன்னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

ரொம்ப சந்தோஷ்ம் நானானி.

வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் சர்வேசன்,
பொண்ணு பாக்கப்போன பதிவு சீக்கிரம் வரட்டும்

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

வருகைக்கு ரொம்ப நன்றி

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அமைதிச்சாரல் said...

பட்டமளிப்பு விழாவில் பட்டம் சூட்டிக்கொண்ட ராஜா,ராணிகளுக்கு வந்தனம்.