Tuesday, August 09, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி - 9/8/11

ஆன்னா பந்த், ஊன்னா பந்துன்னு இருக்கு தெலங்கானா ஏரியா.
இவங்களை கேக்க ஆளே இல்லையான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
ச்சும்மா சும்மா பந்த் நடத்தறாங்கன்னு யாரோ ஒரு புண்ணியவன்
தெலங்கானா ராஷ்ட்ர கமிட்டி தலைவர் கே.சி.ஆர் மேல கேஸ்
போட்டிருக்காங்க. (நாளைக்கு பந்தாம்ல!!)
தவிர மார்ச்மாதம் மில்லியன் மார்ச்ன்னு ஒண்ணு நடத்தி அராஜகம்
செஞ்சாங்க. அதுக்கு போலீஸ் நல்லா கவனிக்கப்போகுதாம்.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை. ராமுலம்மாவுக்கு (விஜயசாந்தி)
நேரம் எப்படி இருக்கோ??!!!!

டிசம்பர் 09 லேர்ந்து இதுவரைக்கும் 16 பந்த் நடந்திருக்கு. நாளைய
பந்தை சேர்த்தா 17ஆம். இதுலயும் சாதனை படைப்போம்ல!!!


****************************************************************
இந்த வாட்டி பெருசா மழையில்லை. போனவருஷம் கொட்டி தீத்துச்சு.
அந்த மழையால எங்க வீட்டு வேலை முடியாம திண்டாடினோம்.
இப்ப மேகம் கருக்குது, மழை வரப்பாக்குது, வீசி அடிக்குது காத்துன்னு
தான் இருக்கு. ஆனா போன வாட்டி மாதிரி இல்ல. :((

வருண பகவான் கண்ணு தொறந்து பாரு ராசா!!!!!
***************************************************************
தங்கம், வெள்ளி விலை எங்கயே போயிடிச்சு. 3000 ரூபாய்ல 8 கிராம்
தங்கம் வாங்கினது போயி இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கிராம் 3000
ஆகப்போகுதாம்!! அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார
மாற்றத்தால (இதான் மொதோ தபாவாமே, இப்படி லேசா சரிஞ்சதுக்கே
இந்த மாற்றம்னா?!!) ஷேர் மார்க்கெட் அடி வாங்கிருக்கு. இதனாலயும்
இன்னும் தங்கம் விலை ஏறுமாம். போறபோக்கப்பாத்தா மாங்கல்யம்
மட்டும் தங்கத்துல போடுறோம். பொண்ணு பேர்ல ஃபிக்ஸட்டா
போட்டுடறோம்னு சொல்லும் காலம் வரும். 1981ல வெளிவந்த
மணல்கயிறு படத்துல விசு ஒரு வசனம் சொல்வாரு,” ஒரு குந்துமணி
தங்கத்துக்கூட ஆசைபடக்கூடாதுன்னு!!” இது இனி சாத்தியம் ஆகிடும்.

******************************************************************

அது ஏறுது, இது ஏறுது, வீட்டுக்கடன் வட்டி ஏறுது. கேஸ் 400 ரூபாய்
ஆகிடிச்சு. பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்னு சொன்ன உடனே
ஆட்டோ மீட்டரே இல்லாம ஃப்ளாட் ரேட்டா ஓடுது.வரிகட்டி மாளல.
சாப்பிட போனா சாப்பிட்ட பில்லுல 25 சதவிகிதம் வட்டியா
கட்டற நிலமை. எல்லாம் சூப்பர் ஜெட் ஸ்பீட்ல ஏறுது. ஆனா இதுக்கு தகுந்த மாதிரி சம்பளத்தையும் ஏத்த மாட்டேங்கறாங்களே!! என்னென்னவோ மாற்றம் வரும்னு
சொல்றாங்களே அதுமாதிரி இந்த குடியாட்சி சரியாவரலைன்னுபழைய
படி மன்னராட்சி வந்தா சரியாகுமோ?!! :((((
****************************************************************
ஆகஸ்ட் 5 தெலங்கானாப்பத்தி கண்டிப்பா பேசுவேன்னு சபதம் போட்டு
சுஷ்மா சுவராஜ் கலக்கு கலக்குன்னு கலக்கி பேசினாங்க. கடைசில
தெலுங்குல வேற படிச்சாங்க. ஆனா அதுக்கு காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த எம்பி ஒருத்தர் கேட்ட கேள்விதான் ஹைலைட்டே.
“ஆந்திராவுல மருந்துக்கு கூட ஒரு எம்பி கூட இல்லாத பிஜேபி
தெலங்கானா பத்தி பேசுதேன்னு”. இப்படி பேசினாலாவாது அடுத்த
எலெக்‌ஷன்ல ஒரு ஆளாவது அவங்க கட்சியைச் சேர்ந்தவங்க
தேர்ந்தெடுக்கபப்டுவாங்கன்னு நினைச்சிருப்பாங்க போல பாவம்!!

*********************************************************************
புது வீடு கட்டியிருக்கேன். புது வலைப்பூ ஆரம்பிச்சிருக்கேன்.
கொஞ்சம் இங்கிலிபீசுலயும் தாளிக்கலாம்னு தாளிக்க ஆரம்பிச்சிருக்கேன்.
அங்கயும் அடிக்கடி வந்து ஆதரவு கொடுங்க.
இன்றைய ஷ்பெஷலா பாலக் பனீர் ரைஸ் பதிவு வந்திருக்கு.
ஒரு எட்டு வந்து பாருங்க. மிக்க நன்றி

16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னத்துக்குங்க நகை.. பேசாம நீங்க சொன்னமாதிரி பணமாக்கொடுத்துடலாம்.. குழந்தைங்களுக்கு .. நோ யூஸ் போடவும் முடியறதில்ல ( உடறதில்ல திருடங்க )

pudugaithendral said...

வாங்க கயல்,

ஆமாம்பா ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்பவே சாதரணமா இருப்பது பெஸ்ட். நகைக்கு உண்டான பணத்தை கொடுத்திடலாம் என்பதுதான் பெஸ்ட் சாய்ஸ்.

வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

என்னாதிது ...

முதல்ல வரதட்சனைய நிறுத்த போராடுவோம்

பணம் போடு நகை போடுன்னு கிட்டு

-------------

புது வீடு, வலை - வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

”நகை போடறதெல்லாம் ஓல்ட் ஃபேஷன்” அப்படின்னு சொல்லிக்க வேண்டியதுதான்.... :))) அட இங்கிலிபீசு-லயும் கலக்குவீங்களா... நல்லது.... பொறுமையா வரேன்....

Chitra said...

அது ஏறுது, இது ஏறுது, வீட்டுக்கடன் வட்டி ஏறுது. கேஸ் 400 ரூபாய்
ஆகிடிச்சு. பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்னு சொன்ன உடனே
ஆட்டோ மீட்டரே இல்லாம ஃப்ளாட் ரேட்டா ஓடுது.வரிகட்டி மாளல.
சாப்பிட போனா சாப்பிட்ட பில்லுல 25 சதவிகிதம் வட்டியா
கட்டற நிலமை. எல்லாம் சூப்பர் ஜெட் ஸ்பீட்ல ஏறுது. ஆனா இதுக்கு தகுந்த மாதிரி சம்பளத்தையும் ஏத்த மாட்டேங்கறாங்களே!!



...... எங்கும் புரட்சி ஓங்குக.... ஹி,ஹி,ஹி,ஹி....

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

ADHI VENKAT said...

ஆமாங்க. தாலி மட்டும் தங்கத்துல போட்டுட்டு பணமா கொடுத்துடலாம்.

இங்கயும் மழைத் தூறுது. ஆனா போன வருடம் போல் இல்லை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் டேஸ்டி ஸ்பைசி பிரியாணி... ரசித்தேன்...கலந்து கட்டி பரிமாறி இருக்கீங்க...நியூஸ் சேனல்ல ஆள் வேணுமாம்... உங்ககிட்ட கேக்க சொன்னாங்க...:))

pudugaithendral said...

வாங்க ஜமால்,

வரதட்சணை கேட்டா அடி பின்னிடுவோம்ல :)) மகளுக்கு நகை போட்டு அழகு பார்ப்பது என்பதோடு சீதனமா கொடுப்பது அவளுக்கூ ஒரு ஆதரவா இருக்குமேன்னு நினைப்புத்தான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

அந்த மொழியையும் விட்டு வைக்க வேணாமேன்னு ஒரு ட்ரை தான் :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சித்ரா,

புரட்சி போய் தீவிரவாதம் ஓங்கிடாம இருந்தாச் சரி.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அம்பாளடியாள்,

தங்களோட முதல் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

உங்க போஸ்ட்ல நகை போட்டுகிட்டு வெளிய போகவே பயமா இருக்குன்னு சொல்லியிருந்தீங்க. அதுவும் சரிதான்
அங்கேயும் அந்த நிலைதானா.

ஹுஸைனம்மா said...

ரொம்பப் பாவமா இருக்குப்பா ஆந்திராக்காரங்களைப் பாத்தா. தெலுங்கானா இந்தப் பாடுபடுத்துதே!! கோர்ட் தலயிட்டு, ஒரு நல்ல முடிவு சொல்லட்டும்.

நகை விலை ஏறுனதுல இன்னொரு கொடுமை என்னான்னா, மொய் வக்கிறது!! உறவு முறைகள்ல விசேஷத்துக்கு நகை போடணும்னா, ரெண்டு கிராமே 6000 ஆகுது. ஆனா, அந்த ரெண்டு கிராம் நகையப் பாத்தா, கையில இருக்கதுகூட தெரியாத சைஸ்ல இருக்கு!! :-((((

இதுல தாய்மாமன் சீர், பிறந்த வீட்டு சீர்னு விதவிதமா சீர் வேற!! வரதட்சணையோட சேத்து இதையும் ஒழிக்கணும்!!

pudugaithendral said...

வாங்க அப்பாவி தங்கமணி,

நான் ரெடி :)))

ஹைதை பிரியாணி கொஞ்சம் காரம் கம்மி. அதனாலத்தான் ஆவக்காய துணைக்கு சேத்திருக்கேன். அதுமாதிரி கொஞ்சம் காட்டம்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

நீங்க சொல்வது ரொம்ப சரி. மொய் விஷயத்துல கஷ்டமாத்தான் இருக்கு. வெள்ளியும் அதே நிலமைதான்.

ஒரு காலத்துல பட்டாசு வாங்க பெரிய்ய்ய்ய்ய்ய் பை எடுத்துகிட்டு போனோம். இப்ப 1000 ரூபாய்க்கு மஞ்சப்பைலதான் பட்டாசு வருது. மத்த சாமான்களும் இதே நிலைதான்.

நம்மால புலம்ப மட்டும்தான் முடியும்.

வருகைக்கு நன்றி