வெள்ளிக்கிழமை என்றுமே விஷேஷம். அதிலும் இன்று வரலட்சுமி விரதம்.
வேண்டிய வரங்களைத் தந்தருளும் வரலட்சுமியாக அன்னை இன்று நம்
வீட்டிற்கு வந்து அமர்ந்து அருள் புரிகிறாள்.
வேண்டுபவருக்கு வேண்டியதை வரமாக அருள்பவள் ஆதலால் அவள்
பெயர் வரலட்சுமி.
திருவிளக்கை ஏற்றிவைத்து பூஜை செய்தால் போதும். தீபத்தில்
குடி கொண்டு நம்மை அருள்பாளிப்பாள் அன்னை.
இந்த வாட்டி நிவேதனம் மைசூர்பாக் அதுவும் மைக்ரோ அவனில். :))
ரெசிப்பிக்கு tadka corner வந்தா கிடைக்கும்.
அன்னையவளை பூஜித்து அவளருள் பெருவோம்.
அனைவருக்கும் அன்னை எல்லா வளத்தையும் தந்து ஆசிர்வதிக்கட்டும்.
9 comments:
நல்லதோர் தரிசனம்.. மைசூர்பாவுக்கு 'அங்கே' வரேன் :-))
எச்சூஸ்மி.. லிங்க மறந்துட்டீங்க போலிருக்கு :-))
வரலட்சுமி விரத நன்நாளில் எல்லோருக்கும் எல்லா வளங்களும், நலங்களும் கிடைக்கட்டும்.
வரலக்ஷ்மி ராவே மா இண்டிகி......
வாங்க அமைதிச்சாரல்,
”அங்கே” வரேன்// ஓ வாங்க. :))
நேத்தைய பதிவுலதான் லிங்க் கொடுத்திருக்கேனேன்னு இன்னைக்கு கொடுக்கலைப்பா
வருகைக்கு நன்றி
வாங்க கோவை2தில்லி,
ஆமாம் லட்சுமி எல்லோர் வீட்டுக்கும் வந்திருந்து அருள் புரியட்டும்.
வருகைக்கு நன்றி
”வரலக்ஷ்மி மீரு இண்டிக்கு ஒச்சாரா?” அட தமிழே உனக்குத் தகராறு... இதுல தெலுங்கு வேற எதுக்குன்னு கேட்டுடாதீங்க சகோ....
வரலக்ஷ்மியின் பூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்....
"தாமரைப்பூவில் அமர்ந்தவளே!!!!"
அருமையான தரிசனம்.
வாங்க சகோ,
அன்னை வந்து அருள்பாலித்தாளே. (போட்டோ அப்புறமா வரும்)
உங்கள் வருகைக்கு நன்றி
வாங்க இராஜராஜேஸ்வரி
உங்க வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment