Friday, February 22, 2008

மாண்டிசோரி முறைக் கல்வி- பாகம் 2

இங்கே கொடுக்கப்பட்டுள்ள உபகரணங்கள் அனைத்தும்

உணர்ந்து அறியும் பயிற்ச்சிகுண்டானவை. (SENSORIAL)


1. இதன் பெயர். குமிழுடன் கூடிய உருளைகள்.
(KNOB CYLINDERS)


இந்தப் பயிற்சியினால் குழந்தையின் கண்ணுக்கும்,
கைக்கும் பயிற்சி. இந்த குமிழைப் பிடித்து பழகினால்
தான் பிறகு குழந்தை முறையாக பென்சில் பிடித்து
எழுத இயலும்.







2. ஜியாமென்டிரி வடிவங்களைத் தொட்டு பார்த்து அதற்குண்டான
கார்டுகளில் சரியாகப் பொறுத்தப் பழகுவதனால், ஜியாமென்டிரிக்கு
அறிமுகமும், வடிவங்களின் அமைப்பை உணரவும் வைக்க இது.


3. BARIC TABLETS : எடை பழக.

இந்த கணமான அட்டைகளை தன் இருகைகளில் வைத்து
எது சம்மான கணத்தில் இருக்கிறது என அறிந்துக்கொள்ள.


4. TOUCH TABLETS :



5. THERMIC BOTTLES :

இவைகளில் மிதமான சூடு, குளிர்ந்த நீர், சாதாரண நீர்
ஆகிய்வற்றை நிரப்பி கைகளில் உணரச்செய்ய.


6. TASTING BOTTLES : சுவையுணர்த்தும் பாட்டில்கள்.

பலவகையானச் சுவைகளை இந்தப் பாட்டில்களில்

நிறப்பி, சுவைத்து இணம் காணப் பழக்குதல்

7. SOUND BOX: ஒலிப் பெட்டி.

செவித்திறனை அதிகரிக்க. மெல்லிய ஓசையையும்
துல்லியமாக உணர இந்தப் பயிற்சி.


8. colour spools: நிறச் சட்டங்கள்.
இந்த உபகரணத்தினால் குழந்தைக்கு நிறக்கு குருடு இருந்தால்
அறிய முடியும். ஒரே மாதிரியான இரண்டு நிறங்களை
அடையாளம் காணவே இந்த உபகரணம்.



சாதாரண பள்ளிகளில்(நான் சொல்வது play school களில்)
சில சமையம் என்னச் சொல்லிகொடுக்க?!!
என்று யோசிக்கும் நிலை இருக்கும். மாண்டிச்சோரி முறையில்
அறிமுகப் படுத்த வகைகள் அதிகம்.......................
அந்த அறிமுகங்கள் தொடரும்.......





20 comments:

மங்களூர் சிவா said...

நிறைய புது தகவல்கள்.

நன்றி

pudugaithendral said...

வாங்க சிவா,

வருகைக்கு நன்றி.

இன்னும் பல தகவல்கள் வரும்..........

இம்சை said...

கலக்கறிங்க... எங்க ஊர்ல இதே முறையில் சொல்லிக்குடுக்கும் பள்ளி இருக்கான்னு பாக்கரேன்

pudugaithendral said...

வாங்க இம்சை,

இந்த மாதிரி கல்வி நம்ம ஊர்ல அதிகமா இருக்காது. மாண்டிசோரி அம்மையார் இந்தியாவில் பயிற்ச்சிகொடுக்க வந்தபோது, இந்த முறையை புரியாமல் வெளியேற்றப் பட்டாராம்.

இந்தியாவிலிருந்து இலங்கை வந்து பயிற்ச்சி கொடுத்திருக்காங்க. இங்க மாண்டிசோரி முறைக் கல்வி பள்ளிகள் அதிகம். (மாண்டிசோரின்னு பேர் சொல்லிகிட்டு பொய்யா நடத்தறவங்களும் இருக்காங்கன்னாலும், நல்ல மாண்டிசோரி பள்ளிகளும் இருக்கு.)

நிஜமா நல்லவன் said...

மாண்டிசோரி முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா இப்படி எல்லாம் நல்ல இருக்கும்ன்னு தெரியாது. ரொம்ப நன்றி புதுகைதென்றல். அடுத்த பாடத்துக்கு காத்திருக்கிறேன்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

அடுத்த பாடம் விரைவில் வரும்.

Unknown said...

மாண்டிசோரி கல்வி தான் மிகக் சிறந்தது என்றே கருதுகிறேன். பாசமலர் பதிவிட்ட போதும் இதைப் பேசி இருந்தேன். இப்போ நீங்கள் மாண்டிசோரி ஆசிரியர் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. சிறு வயதில் கிடைக்கவில்லை. நம் குழ்ந்தைகளுக்காகவாவது கிடைக்கட்டும்!

pudugaithendral said...

வாங்க கெக்கேபிக்குணி

//மாண்டிசோரி கல்வி தான் மிகக் சிறந்தது என்றே கருதுகிறேன். பாசமலர் பதிவிட்ட போதும் இதைப் பேசி இருந்தேன். இப்போ நீங்கள் மாண்டிசோரி ஆசிரியர் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. சிறு வயதில் கிடைக்கவில்லை. நம் குழ்ந்தைகளுக்காகவாவது கிடைக்கட்டும்!//


Preschool diplomaவும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் எனக்கு மாண்டிசோரி முறைதான் சிறந்ததாக படுகிறது.

ஆம வருங்காலக் குழந்தைகளுக்காவது இம்முறைக் கல்வி கிடைக்கட்டும்.

தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்துக்கு நன்றி.

Yogi said...

நல்ல தெரியாத தகவல்கள் தந்தற்கு நன்றி :)

pudugaithendral said...

இந்த வலைப்பூவிற்கு பொண்வண்டு
முதல் வந்தமைக்கும், கருத்துக்கும் நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

தகவல்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்..

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

வருகைக்கு நன்றி.

ரசிகன் said...

கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா இம்புட்டு எளிமையா குழந்தைகளுக்கு தானா பொருள்களை கத்துக்க/உணர்ந்துக்க உதவும்ன்னு படங்களைப் பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. நல்ல புதிய தகவல் ,அருமையான படங்களுடன் பயனுள்ள பதிவு. நன்றிகள்.

நந்து f/o நிலா said...

ஆஹா இதெல்லாம் பாத்தா எனக்கே ஸ்கூலுக்கு போகனும்ன்னு ஆசை வருது

pudugaithendral said...

வாங்க ரசிகன்,

வருகைக்கும், பின்னூட்டதுக்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க நந்து,

இந்த முறைக் கல்வி கற்ற பிள்ளை
கண்டிப்பாக நல்ல எதிர்காலத்துடன்
வரமுடியும்.

ஏட்டுச்சுரைக்காயாக இல்லாமல், வாழ்க்கையின் அன்றாடத்தேவைக்கு
உதவும் கல்வி முறை.


ஆனால் நம் நாட்டில் மாண்டிசோரி முறைக் கல்வி பரவலாக இல்லை.

Yogi said...

// இந்த வலைப்பூவிற்கு பொண்வண்டு
முதல் வந்தமைக்கும், கருத்துக்கும் நன்றி. //

நிறைய தடவை வந்திருக்கிறேன்.. முதல் பின்னூட்டம் :)

pudugaithendral said...

வாங்க பொண்வண்டு,

பின்னூட்டம் இட்டால்தானே ரெஜிஸ்டர் மார்க் ஆகும்.

:)))))))))))))))

நிஜமா நல்லவன் said...

நந்து f/o நிலா said...
ஆஹா இதெல்லாம் பாத்தா எனக்கே ஸ்கூலுக்கு போகனும்ன்னு ஆசை வருது





நிலா கூட சேர்ந்து நீங்களும் போங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் said...
Preschool diplomaவும் செய்து கொண்டிருக்கிறேன். ==>
இவ்ளோ படிப்பும் படிச்சுட்டு, பதிவும் போட்றீங்கன்னா, பெரிசுதான்.