Wednesday, August 03, 2011

ஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு

ஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி
நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான்.
ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளி என
எத்தனையோ விசேஷங்கள் இந்த ஆடி மாதத்தில்.

இன்று ஆடிப்பெருக்கு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் அம்மா எனக்கு ஆடி 18க்கு புத்தாடை கட்டாயம் வாங்கி
வைத்திருப்பார். ஆடிப்பெருக்கு அன்று வீட்டுப்பெண்ணிற்கு
புத்தாடை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வாங்கி
சில சமயம் அம்மாவே தைத்துக்கொடுப்பார். வயலட் நிற
வெல்வெட் துணியில் அடுக்கடுக்காய் இருக்கும் கவுன் ஒருமுறை
அம்மா தைத்துக்கொடுத்து அதைப் போட்டு வாஷிங் பவுடர்
நிர்மா பெண் போல் சுத்தியது கொசுவத்தி சுத்துது.

ஆடிப்பட்டம் தேடிவிதைன்னு சொல்வாங்க. ஆடிப்பெருக்கும்
அப்படித்தான். அது என்ன ஆடிப் பெருக்கு? ஆடி மாதத்தின்
18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. மழைக்காலத்தை
வரவேற்கும் ஒரு நிகழ்ச்சி. இன்று நதிக்கரை,குளக்கரைக்குச்
சென்று பூஜித்து படையல் படைத்து, நோன்புக்கயிறு
கட்டிக்கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்கள் கூட கழுத்தில்
மஞ்சள் நூல் கட்டுவது இன்று மட்டும் தான்.


இந்த நந்நாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும்
சொல்லலாம். காதோலை, கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும்
கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.
திருமணமான பெண்ணோ தன் மாங்கல்யம் நிலைத்து நிற்க பூஜை செய்வாள்.

சில இடங்களில் முளைப்பாரி எடுத்துச் சென்று நதி தீரங்களில் அல்லது
குளங்களில் கரைப்பது வழக்கம். எங்கள் புதுகையில் குளத்திற்கு ஒன்றும்
பஞ்சமே இல்லை. பல்லவன் குளம், ஐயர்குளம், ராஜாக்குளம் என
பல குளங்கள். இங்கெல்லாம் குடும்பத்துடன் மக்கள் வந்து பூஜை செய்ததைப்
பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் அம்மா இன்று அன்னைக்கு பூஜை செய்து கலந்த சோறு
செய்வார். புத்தாடை அணிந்து இன்று கண்டிப்பாய் பாடம் படிக்கச் சொல்வார்.
ஏதேனும் புதிய வகுப்பில் சேர்வதாக இருந்தால் இன்றைய தினம் மிக
விசேஷம். ஆடிப்பெருக்கில் ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு நல்ல காரியமும்
பெருகும் என்பது ஐதீகம்.


ஆடித்தங்கம் கூடும் என நகைக்கடைக்காரர்கள் ஆரம்பித்திருக்கிறாகள்.
ஆடித்தங்கம், அட்சய திருதியைத் தங்கம், தன் த்ரேயஸ் தங்கம் என
எல்லா நாளும் தங்க நகை வாங்கிக்கொண்டிருந்தால் அம்பேல்தான்.
நல்ல மனத்தோடு இறைவனை பூஜித்து, நிவேதனம் சமர்ப்பித்து
இருப்பதுதான் பண்டிகை. ஆடித்தங்கம் கண்டிப்பாய் வாங்க வேண்டும்
என்றெல்லாம் கொள்கை வைக்காமல் ஆடி 18க்கு அம்மனுக்கு
பூஜை செய்து மாங்கல்யம் தழைக்க, மங்களவாழ்வு கூட, பிரார்த்திப்பதே சரி.

பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை என்பது போல
ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு நீருக்கு நன்றி
சொல்லும் ஒரு நந்நாள்.

ஆடிப்பெருக்கு பாடல்களில் என்றும் நீங்காத நினைவில் இருக்கும்
இந்தப் பாடலை கேளுங்கள்.

மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி.



இயற்கையை பூஜித்து இன்பமான வாழ்வை பெறுவோம்.


இன்றைய தினம் நாகசதுர்த்தியும் கொண்டாடப்படுகிறது. நாகசதுர்த்தி அன்று
தெலுங்கர்கள் தங்கள் மக்கள் செல்வத்திற்காக பூஜை செய்வார்கள்.
ஏழேழு ஜன்மம் எடுத்தாலும் கல்லைப்போல் இருக்காமல் கருப்பையில்
குழந்தையை சுமக்க வேண்டும் எனும் பிரார்த்தித்து அந்த மக்களுக்காக
விரதம் இருந்து பூஜை செய்வார்கள்.


தாலிக்கொடி பெரிதா? தொப்புள் கொடி பெரிதா என்று பட்டிமன்றம்
வைத்தால் இரண்டுமே பெரிது என்று தான் தீர்ப்பாகும்.
கணவனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளும் நந்நாள் இன்று.

அனைவரின் வாழ்வும் நலன் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.










25 comments:

ஷர்புதீன் said...

மேடம், வீடியோவை எப்படி சின்னதாக்க வேண்டும் என்பது தெரியனுமா?

Pandian R said...

ஆடி 18 சிறப்புப் பதிவிற்கு நன்றி!

Chitra said...

பாரம்பரிய வழக்கங்களை தெரியப்படுத்தும், நல்ல பதிவு.

pudugaithendral said...

வாங்க ஷர்புதீன்,

ஆமாம் கொஞ்சம் சொல்லுங்க.

நன்றி

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,

ஐடியா கொடுத்த உங்களுக்கும் நன்றி

pudugaithendral said...

ஆமாம் சித்ரா,

எதுக்காக செய்யறோம்னு தெரியாததால சிலர் கொண்டாடுவதையே விட்டுவாங்க.

வருகைக்கு நன்றி

அமுதா கிருஷ்ணா said...

ஆடி பெருக்கு திருச்சியில் தானே மிகவும் ஃபேமஸ்.நல்ல பதிவு.

பாச மலர் / Paasa Malar said...

போன வருடம் இந்த நாளில் திருச்சியில் இருந்து காவிரிப்படுகையில் ஆடிப்பெருக்கு பார்த்தது நன்றாக இருந்தது...மலரும் நினைவுகள் மீட்டியதற்கு உங்களுக்கு நன்றி..

vetha (kovaikkavi) said...

''..எத்தனையோ விசேஷங்கள் இந்த ஆடி மாதத்தில்...''
good post. Thanks.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு தென்றல்.

சாந்தி மாரியப்பன் said...

நம்மூர்ல அதுவும் காவிரிக்கரையில இது ரொம்ப புகழ்பெற்றதாச்சே.. பகிர்வுக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க அமுதா,

காவேரிக்கரையோரம்தான் ரொம்ப பேமஸ். எங்க ஊரு திருச்சியிலேர்ந்து ஒரு 60 கிமீ தானே.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஓ அப்படியா,

வருகைக்கு மிக்க நன்றி பாசமலர்

pudugaithendral said...

மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

pudugaithendral said...

ஆமாம் அமைதிச்சாரல்,

வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி.

மங்கலப் ப்கிர்வுக்கு பாராட்டுக்கள்.

ILA (a) இளா said...

நான் ஒரு 5/6 வருசத்துக்கு முன்னாடி இதே மாதிரி சுருக்கமா ஒரு பதிவு போட்டேங்க. அதுக்கு அப்புறமா ஆடி 18க்கு சரியா ஒரு பதிவு போட்டிருக்கீங்க. நீச்சல்குளம் படத்துல “ஆடி 18.. அடிடுவோம் கும்பிட்டு” அப்படின்னு ஒரு பாட்டு இருக்கே கேட்டிருக்கீங்களா?

Dhiyana said...

ப‌கிர்வுக்கு ந‌ன்றி தென்ற‌ல். நிறைய‌ தெரிந்து கொண்டேன்.

மாய உலகம் said...

ஆடி பெருக்கில் தென்றல் வீசியதில் மகிழ்ந்தேன்

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

pudugaithendral said...

வாங்க இளா,

அந்தப் பாட்டு கேட்டதில்லை. (அந்தந்த பண்டிகைக்கான ஷ்பெஷல் பாட்டுன்னு திருச்சி ரேடியோவுல கேட்ட காலம் இப்ப இல்லையே)

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி திஷு

pudugaithendral said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி மாய உலகம்

ADHI VENKAT said...

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி, வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக.....

இந்த பாடலும் இந்த நாளுக்கேற்ற பாடல்.

மூன்று வகை கலந்த சாதம், பாயசத்துடன் நைவேத்தியம் செய்து ஆடிப்பெருக்கு நல்ல படியாக கழிந்தது.

pudugaithendral said...

super kovai2 delhi,

thanks for u comments