Tuesday, August 07, 2012

ஹோம்மேட் சாக்லெட் செய்யலாமா!!!!!

உங்களுக்கு சாக்லெட் பிடிக்குமா??!!!
எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே
இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடுதல்னு நினைக்கறவங்க மேலே லிங்குல
ஒரு கிளிக் செஞ்சு பதிவை படிச்சு பாத்திட்டு வாங்க. எதுவுமே
அளவா இருந்தா நல்லதுதான்?

கொழும்புவில் கலதாரி ஹோட்டலில் சாக்லெட் ரொம்ப சுவையா
இருக்கும். அதுவரைக்கும் எனக்கு கடைகளில் கிடைக்கும்
கேட்பரிஸ் வகைகள்தான் தெரியும். பூ மாதிரி, உள்ளே ட்ரைஃபுரூட்
வெச்சு, மில்க் அண்ட் சாக்லெட்னு வகை வகையா சுவையா இருக்கும்.
நண்பர்கள் கிஃப்டா அனுப்புவதும் சாக்லெட்டா தான் இருக்கும். எனக்கும்
அந்த மாதிரி சாக்லெட் வீட்டில் செய்யணும்னு ஆசை. ஆனா அந்த
ஆசை சமீபத்தில்தான் நிறைவேறியது. (2 வருஷமாச்சு :) )

கடந்த முறை ஊட்டி பயணத்தில் ஹோம்மேட் சாக்லெட் சாப்பிட்டோம்.
பசங்க நான் செய்வதைப்போலவே இருக்குன்னு சொல்வாங்க.
(அந்த பதிவுல ஹுசைனம்மா ரெசிப்பி கேட்டிருந்தாங்க) இதோ
இந்தப் பதிவுல சாக்லெட் செய்யலாம் வாங்க.

சாக்லெட் கம்பவுண்ட் வாங்கும் பொழுது முக்கியமா பார்க்க
வேண்டியது இருக்கு. 3 வகை கிடைக்குது. டார்க் சாக்லெட்,
மில்க் சாக்லெட்,வொயிட் சாக்லெட்.


டார்க் சாக்லெட் உடம்புக்கு ரொம்ப நல்லது. அதிக இனிப்பு
இருக்காது. அதனால குழந்தைகள் விரும்ப மாட்டாங்க.
பெரியவங்களுக்கு ரொம்ப நல்லது. டார்க் சாக்லெட்டுக்கு
மருத்துவ குணங்கள் இருக்குன்னு சொல்றாங்க. இங்க
போய் ஒரு எட்டு பாருங்க.



அடுத்து மில்க் சாக்லெட். இது இனிப்பா இருக்கும்.
நாம பொதுவா சாப்பிடும் சாக்லெட் மில்க் சாக்லெட்தான்.
இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.
டார்க் சாக்லெட்டும், மில்க் சாக்லெட்டும் கலந்து
உருக்கி சாக்லெட் செஞ்சா அழகான கலர்ல சுவையான
சாக்லெட் நல்லா இருக்கும்.

கடைசி வகை வொயிட். இதைத்தான் பலர் மில்க்
சாக்லெட்டுன்னு நினைப்பாங்க. கடைகளில் மில்கிபார்னு
விற்பது வொயிட் சாக்லெட்தான். கோகோ அதிகமா
வேணாம்னு நினைக்கறவங்க இந்த வகை சாக்லெட்
எடுத்துக்கலாம். (இது கோகோ பட்டரிலிருந்து
தயாரிக்கப்படுது)


முதலில் தேவையான பொருட்கள்:

choclate compound இது பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில்
கிடைக்கும். இந்த கம்பெனி நல்லா இருக்கும்.

அடுத்து மோல்ட். இதுல நிறைய்ய வெரைட்டிகள் இருக்கு.
நமக்கு வேண்டியதை செலக்ட் செஞ்சு வாங்கி வெச்சுக்கலாம்.
இதையே பலமுறை உபயோகப்படுத்திக்கலாம்.



சாமான் ரெடி. எப்படி செய்வது. இங்கதான் ரொம்ப கவனமா
செய்யணும். அடுப்பில் நேரடியா பாத்திரத்தை வெச்சு அதில்
மெல்ட் செய்யக்கூடாது. அதைவிட double boiling அப்படிங்கற
மெத்தட்ல செய்யலாம்.

double boiling கம்ப சூத்திரம்லாம் இல்ல. ஒரு பாத்திரத்தில்
தண்ணி வெச்சு அந்த தண்ணியின் சூட்டிலேயே இன்னொரு
பாத்திரத்தில் சாக்லெட் போட்டு உருகவைப்பதுதான்.

வீட்டில் மைக்ரோஅவன் இருந்தா இன்னும் சுளுவு. கண்ணாடி
பாத்திரத்தில் போட்டு 1 நிமிஷம் வெச்சு எடுத்து கரண்டியால
கலக்கினா மெல்டட் சாக்லெட் ரெடி.

இப்ப உருக்கிய சாக்லெட்டை ஸ்பூனில் எடுத்து மோல்டில்
ஊத்தவேண்டியதுதான். ஒட்டிக்குமேங்கற கவலை வேண்டாம்.
ஒட்டாது. எடுக்கவும் கஷ்டம் இருக்காது. அதனால மோல்டில்
நெய் தடவ தேவையே இல்லை.


மோல்டில் ஊத்தியதும் மோல்டை மெல்ல கையில் எடுத்து
தட்டினா சமமாகும். இல்லாட்டி இடையில் காத்து புகுந்து
பபிள்ஸ் வந்திடும். மோல்டை ஃப்ரிடிஜில் குறைஞ்சது 2 மணிநேரம்
வைக்கணும். அப்புறம் எடுத்து ஒரு ப்ளேட்டில் தட்டினீங்கன்னா
அழகான் சாக்லெட்டுகள் ரெடி.

இதுதான் பேசிக் முறை. இதில் உங்களுக்கு பிடித்த, உங்கள்
கற்பனையை சேத்து வெரைட்டி சாக்லெட் உருவாக்கலாம்.
நடுவில் ட்ரை ஃப்ரூட்ஸ் வைப்பது. ஒரு லேயர் மில்க்,
ஒரு லேயர் வொயிட் ஊத்தலாம். கற்பனை உங்கள் சாய்ஸ்!! :))
ஒரு வாட்டி உருக்கியது மொத்தம் மோல்டில் ஊத்திடுங்க.
மிச்சம் வெச்சு அடுத்தவாட்டி ஊத்திக்கலாம்னா வராது.
மோல்ட் பாக்கி இல்லாட்டி தட்டுல உங்களுக்கு விருப்பமான
ஷேப்ல ஊத்தி ஃப்ரிட்ஜில் வைக்கலாம். எங்க வீட்டுல
இன்னொன்னு செய்வோம் :))



பிஸ்கட் துண்டுகள் எடுத்து சாக்லெட்டில் பிரட்டி ஃப்ரிட்ஜில்
வைத்துவிடுவோம். மேரி, மில்க் பிகிஸ் போன்றவற்றில்
இதுமாதிரி செய்யலாம்.



நாமே வீட்டில் செஞ்சோம் எனும் திருப்தி. பரிசளிக்க பெஸ்ட்.
கிறிஸ்துமஸ் சமயங்களில் ஹோம்மேட் சாக்லெட் செஞ்சு
விற்பனை செய்யலாம். பர்த்டே பார்ட்டிகளிலும் ஆர்டர்
கிடைக்கும். (நான் இதெல்லாம் செய்யலை. ஒரு ஐடியாவுக்கு
சொல்றேன். :) )

நேத்துதான் சாக்லெட் செஞ்சேன். உடன் இருந்து படம் பிடிச்சது
அம்ருதம்மா. பசங்களுக்கு பரிட்சை, டெஸ்டுன்னு இருக்கும்
சமயம் வீட்டில் சாக்லெட் இல்லாட்டி எப்படி?

நான் கோகோ சாக்லெட் சாப்பிடுவதை தற்காலிகமா நிறுத்தி
வெச்சிருக்கேன். (நேர்த்தி :)) அதனால இன்னைக்கு வொயிட்
சாக்லெட் செய்யப்போறேன். நீங்களும் செஞ்சு பாருங்க.

தொடங்கலாமா இனிப்புடன் ஆரம்பம்.





20 comments:

ஹுஸைனம்மா said...

ரொம்ப சிம்பிளா இருக்கேப்பா - சாக்லேட் காம்பவுண்ட் வாங்கி, மெல்ட் பண்ணி, மோல்டில் ஊத்தணும். இவ்வளவுதானா?

//வொயிட்
சாக்லெட் செய்யப்போறேன்//
படம் போடுங்க. பாக்கணும்.

சாந்தி மாரியப்பன் said...

நானும் ரொம்ப நாளா உங்க கிட்டேர்ந்து இந்த பதிவை எதிர்பார்த்துட்டிருந்தேன். நன்னிங்கோ :-))

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

சிலர் கோகோ பவுடர், பால் பவுடர், சர்க்கரை எல்லாம் சேர்த்து கலக்கின்னு செய்வாங்க. நான் கத்துகிட்ட இடத்துல இப்படித்தான் சொல்லிக்கொடுத்தாங்க. சிம்பிளாவும் இருக்கு. நாமே செஞ்சோம்னு பெருமை வேற :))

படம் போட்டா போச்சு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

போடணும்னு நினைச்சுகிட்டே இருந்தேன். பதிவு போடுவதே குறைஞ்சுகிட்டு வருது. :))

வருகைக்கு ரொம்ப நன்றி

கோமதி அரசு said...

தொடங்கலாமா இனிப்புடன் ஆரம்பம்.//

நல்ல ஆரம்பமாக இருக்க வாழ்த்துக்கள்.
இனிப்பு எடுத்துக் கொண்டேன்.
அம்ருதாவுக்கு வாழ்த்துக்கள் நல்ல புகைப்படம் எடுத்தற்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை செய்ததில்லை... இவ்வளவு எளிதாய் இருக்கே... (படத்துடன்) விளக்கத்திற்கு பாராட்டுக்கள்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... கலக்கலா இருக்கே... சாக்லேட்...

சின்ன வயசில கிலோ கிலோவா சாப்பிடுவேன். இப்ப நிறுத்திட்டேன்... :(

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பானசெய்முறை விளக்கம்! நன்றி!

இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

அமுதா கிருஷ்ணா said...

ஹை இவ்ளோ ஈசியா?

Unknown said...

ரொம்ப சிம்பிளா இருக்கேப்பா

M said...

//நான் கோகோ சாக்லெட் சாப்பிடுவதை தற்காலிகமா நிறுத்தி வெச்சிருக்கேன். (நேர்த்தி :)) அதனால இன்னைக்கு வொயிட் சாக்லெட் செய்யப்போறேன்//

தவறாக நினைக்க வேண்டாம். சாக்லெட் சாப்பிடுவதை நிறுத்துவது நேர்த்தி என்றால் வொயிட் சாக்லெட்டை சாப்பிடுவதும் சாக்லெட் சாப்பிடுவது போலவே. சில்வர்வேரில் உணவை வைத்து படம் பிடிக்கும் போது சில்வரில் படும் வெளிச்சத்தினால் படம் சரியாக வருவதில்லை. கவனித்தால் நல்லதே.

M said...

மீட் சாப்பிடுவதில்லை என்று வெஜிடேரியன் மீட் சாப்பிடுவது நகைப்புக்குரியது. அதே போலவே வொயிட் சாக்லெட்டும்.

M said...

http://en.wikipedia.org/wiki/Compound_chocolate

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

ரொம்ப சுளுவுதான். வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

ஒரேடியா நிப்பாட்டம அப்பப்பா சாப்பிடுங்க. தப்பில்லை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சுரேஷ்

pudugaithendral said...

வாங்க அமுதா,

ரொம்ப சிம்பிள். நீங்களும் அசத்துங்க

pudugaithendral said...

வாங்க ஃபாயிஷா,

ரொம்ப ரொம்ப சிம்பிள். (கரண்ட் இருந்தா போதும் :) )

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க எம்,

உங்க கருத்துக்கும் லிங்குக்கும் மிக்க நன்றி.

anand said...

VERY USEFUL.