Thursday, December 22, 2011

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ்

நான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை
முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில்
சமையல் செய்ய ரொம்ப ஈசியா இருக்கும். நேரமும் மிச்சமாகும்.
இதைப்பார்த்த எனக்குத் தெரிஞ்சவங்க சிலர்,”வேலைக்கு போறவங்க
தான் இந்த மாதிரி செஞ்சு பாத்திருக்கேன். வீட்டுல இருக்கறவங்க
கூடவா இப்படி செய்வதுன்னு” கேப்பாங்க. வீட்டுல இருந்தாலு
நேரத்துல எல்லா வேலையும் முடிக்கணும்னு இவங்களுக்கு புரியாது.
காலை 6.30 மணிக்குள்ள டிபன், சமையல் எல்லாம் ரெடி
ஆகணும்னா கொஞ்சம் ப்ளானிங் அவசியம்ல. அவங்களை
விடுங்க.

நான் டப்பர்வேர் டப்பாக்கள் பத்தி பதிவு போட்டிருந்தேன்ல.
அதுக்கு தேவையான போட்டோக்கள் எடுக்க இணையத்துல தேடும்பொழுது
ஒரு டப்பர்வேர் கன்சல்டண்ட் டப்பர்வேருக்காகன்னே ஒரு
வலைப்பு வெச்சிருக்காருன்னு லிங்க் கொடுத்திருந்தேன்.
அவங்களுடைய சமீபத்திய பதிவு ரொம்ப பிடிச்சிருந்தது.
அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கி இங்க நம்ம தோழிகள்
எல்லாருக்கும் உதவும்னு பதியறேன். இனி நேரம்
நம் கையில். :))

அவங்க தன்னுடைய அந்த பதிவுக்கு வைத்திருக்கும் பெயர்
I Save Time, Eat Fresh and Feel Organized. Thanks to… டப்பர்வேர்.

இவங்க கொடுத்திருக்கும் டிப்ஸ் நான் கடைபிடிப்பதுதான்.
ஆனா எனக்குத் தெரியாததும் இங்க கத்துகிட்டேன்.

வாரத்துக்கு ஒரு தடவை காய்கறிகள் வாங்கி வந்து டப்பர்வேர் டப்பாவில்
போட்டு வெச்சிடுவாங்களாம். ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது என்னுடைய
அனுபவமும்.
இந்த டப்பாவுக்கு பேர் ஃப்ரிட்ஜ் ஸ்மார்ட். பேருக்கேத்த மாதிரியே
ஸ்மார்ட்தான். ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கும். கேரட், பீன்ஸ்
இப்படி எல்லாத்தையும் அழகா உள்ள வெச்சிடலாம்.

தனித்தனியா வெச்சிடறதால தேடாம எடுத்து உடன் சமையலை
முடிக்கலாம். இன்னொரு ஐடியா சொல்லியிருக்காங்க பாருங்க.
தக்காளியை தோலுரிச்சு
இந்த க்ரேட்டரில் துருவினா டொமட்டோ ப்யூரி ரெடி.

கால நேரத்துல மிக்சி போட்டு சுத்தி கஷ்டப்பட்டுகிட்டு
இருக்க வேணாம் பாருங்க
சாம்பார், ரசம், காரக்குழம்பு எல்லாத்துக்கும்
உபயோகப்படுத்தலாம். டக்குன்னு சூப் கூட செய்யலாம். இதப்பாத்து
நானும் செஞ்சு வெச்சிருந்தேன். பசங்களுக்கு காலை அவசரத்துல
அசத்தலா டொமாட்டோ ஸ்பாகட்டி செஞ்சு கொடுக்க முடிஞ்சது. :))


மேலே சொல்லியிருக்கற பீலர் சூப்பர் கிச்சன் கில்லாடி.
எப்படிங்கறீங்களா? அதை வெச்சு கோஸ் நறுக்கிடலாம்.

வெங்காயத்தை வேக வெச்சு அரைச்சு டப்பாவில் போட்டு
வெச்சிட்டா, நம்ம கிட்ட டொமாட்டோ ப்யூரி இருக்கு.
வெங்காய பேஸ்ட் இருக்கு. நார்த் இண்டியன் டிஷ் டக்குன்னு
செஞ்சு அசத்தலாம்.
இப்படி தேவையானதை கட் செஞ்சு ரெடியா வெச்சுக்கிட்டா
வேலை ஈசியாகுது. இஞ்சி தட்டிப்போட்டு டீ கூட அடிக்கடி
செஞ்சுக்கலாமே.

பாகற்காய், பட்டானியை எம்புட்டு அழகா வெச்சிருக்காங்க பாருங்க.

கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, பாலக் எல்லாம்
இந்த மாதிரி சுத்தமாக்கி எடுத்து வெச்சுகிட்டா வேலை ரொம்ப
சுளுவா முடிஞ்சிடும்.

பொதுவா ஃப்ர்டிஜ்ல எல்லாம் நீட்டா மூடி வைக்கணும். அடச்சு
வைக்க கூடாதுன்னு சொல்வாங்க.

இப்படி வைப்பதால நாம காசு போட்டு வாங்கும் சாமான்களும்
பாழாகாது. நம்ம வேலையும் சீக்கிரம் முடியும்.

இதனால அடிக்கடி மார்க்கெட்டுக்கு போகும் வேலை இல்லை.
என்ன இருக்கு. என்ன இல்லைன்னு தெரிஞ்சிக்கவும் வாய்ப்பு
இருக்கு. எத்தனை வாட்டி ஃப்ரிட்ஜில் காய்கறி கூடையில்
காய்ஞ்சு போன எலுமிச்சம்பழம், ப.மிளகாய், சுண்டிப்போன
கேரட்னு குப்பை கூடையில் போட்டிருப்போம். இனி
நாம அழகா அடுக்கி வெச்சு, ஆனந்தமா சமைக்கலாம்.
23 comments:

நட்புடன் ஜமால் said...

:)

Link has been mailed to இல்லத்தரசி

ஹுஸைனம்மா said...

ஹை... என் ஏரியா.. நானும் இப்படித்தான் எல்லாம் பிரிச்சு, நீட்டா அடுக்கி வச்சிடுவேன். (சமைக்கத்தான் மாட்டேன்..;-)))) )

டப்பர்வேர் என்கிட்ட கிடையாது. ஆனாலும், கருவேப்பிலை, மல்லி, புதினா, பச்ச மிளகாய்னு எல்லாத்தையும் வாங்கி வந்ததும், சுத்தம் செஞ்சு, தனித்தனி பிளாஸ்டிக் டப்பாவில், டிஷ்யூ விரிச்சு போட்டு வச்சிட்டா வாரக்கணக்கில இருக்கும்.

மற்ற காய்களும் தனித்தனி கவர்களில்தான்.. இதெல்லாம் விரைவான சமையலுக்கு மட்டுமில்லை, நேர்த்தியான ஃப்ரிட்ஜ்க்கும் உதவும்!!

//காய்ஞ்சு போன எலுமிச்சம்பழம், ப.மிளகாய், சுண்டிப்போன
கேரட்//

ம்ஹும்... ரொம்பக் கவனமா இருப்பேன் இதில். ஆனா, இதுவாவது பரவால்ல, ஒருத்தங்க ஃப்ரிட்ஜுல எப்பப்போனாலும் எல்லாவகை குழம்பு, பொரியல், பாயாசம்லாம் குட்டி குட்டி கிண்ணங்கள்ல இருக்கும்.... அரதப்பழசா... :-((((

//பீலர் சூப்பர் ... கோஸ் நறுக்கிடலாம்//

புது ஐடியா. நன்றி.

//வெங்காயத்தை வேக வெச்சு அரைச்சு//
நானும் முன்னல்லாம் வெங்காயாம் உரிச்சு அல்லது வெட்டி வைப்பேன். ஆனா, வெங்காயம் கிருமிகளை உறிஞ்சும் தன்மை உடையாதாம். (அந்தக்காலத்துல அம்மை போட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட வீடுகளில் வெங்காயம் உரிச்சு நடுவீட்டில் வைப்பது இதனால்தானாம்). அதுலருந்து வெங்காயம் மட்டும் அப்பப்போத்தான்...

pudugaithendral said...

வாங்க ஜமால்,

சந்தோஷம். :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இந்தப் பதிவு போடும் போதே நினைச்சேன். (ஏன்ன எப்பவும் நாம சேம்ப்ளாட்டாத்தானே இருக்கோம். ) :))

நானும் டிஷ்யூ பேப்பர் போட்டு வெச்சிடுவேன். வெங்காயம் அரிந்து வைக்க மாட்டேன். இது ஹோட்டல் க்ரேவி போல செய்ய உதவியா இருக்கும். அது கூட 1 நாள் விட்டு ஒரு நாள் தான் அரைப்பேன்.

pudugaithendral said...

ஒருத்தங்க ஃப்ரிட்ஜுல எப்பப்போனாலும் எல்லாவகை குழம்பு, பொரியல், பாயாசம்லாம் குட்டி குட்டி கிண்ணங்கள்ல இருக்கும்.... அரதப்பழசா... :-((((//

இந்தக் கண்றாவிகளை நானும் பார்த்திருக்கிறேன். இன்னொரு கொடுமை ஃப்ரிடிஜில் தயிர்,பால் இப்படி எது வைத்தாலும் மூட மாட்டாங்க சிலர். ஒரு வாசனை இன்னொன்னோட கலந்து கடவுளே....... இந்த ஃப்ரிட்ஜ் டிஸார்டர் பத்தி இப்ப ஒரு விளம்பரம் கூட பாத்தேன்.

உங்க வருகைக்கு நன்றிப்பா

Jaleela Kamal said...

ரொம்ப வே இனிப்பா இருக்குங்க

நானும் காய் கறிகள் வாங்கினா தனித்தனியா கவ்ரில் போட்டு வைத்து விடுவது, முன்பு சிறிய பிரிட்ஜ் என்பதால் அப்படி,

வாங்கும் காய் கறீ எல்லாமே 15 நாள் ஆனாலும் அப்ப்டியே இருக்கும்

கத்திரிக்காய் தவிர

Jaleela Kamal said...

ஆனால் பீலரில் முட்டைகோஸ் புது ஐடியா

தக்காளிபியுரி நானும் இப்படி தான்
பிரிஜரில் கொஞ்சம் நேரம் வைத்தா தோல் கழன்று விடும்

அப்ியே கிரேட்டரில் செதுகிடலாம்

Jaleela Kamal said...

வெங்காயமும் வேகவைத்து அரைப்பது புது ஐடியா

வதக்கி அரைத்து வைத்தால் இன்னும் சூப்ப்ராக இருக்கும்

பால கணேஷ் said...

ஏனுங்க... இல்லத்தரசிகளுக்குன்னு தலைப்புல போட்டதை வன்மையா கண்டிக்கறேனுங்க. இல்லத்தரசர்கள் என்ன ஃபாரின்லயா இருக்கோம். நாங்க கத்துக்க மாட்டமா? இல்ல, அரசிகளுக்கு சொல்லி கூட இருந்து உதவ மாட்டமா? (விஷயங்கள் எல்லாம் அருமை).

ADHI VENKAT said...

நல்ல தகவல்கள். என்கிட்டயும் டப்பர்வேர் கிடையாது. ஹுசைனம்மா சொல்வது போல இஞ்சி, பச்சை மிளகாய், பட்டாணி போன்றவற்றை டிஷ்யூ போட்டு டப்பாக்களில் வைத்து விடுவேன். காய்கறிகளை இங்கே மார்கெட்டில் வாங்கும் போதே தனித்தனியாக கவரில் போட்டு தான் தருவார்கள். அதனால் அவற்றை அப்படியே ப்ரிட்ஜில் வைத்து விடுவேன்.

ஒரு புத்தகத்தில் படித்தது - இஞ்சியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டு திறந்த வாக்கில் ப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும் என்று. தண்ணீரை அவ்வப்போது மாற்றி விட வேண்டும்.

நானும் முதல் நாளே நறுக்கி வைத்து விடுவேன். சாம்பாருக்கு, சப்ஜிக்கு, பொரியலுக்கு......

இராஜராஜேஸ்வரி said...

"இல்லத்தரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ்"

பயனுள்ளது.. பாராட்டுக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ... நல்ல யோசனைகள்....

Unknown said...

டப்பர் வேர்ரின் அருமை வீட்டில் இருக்கும் பெரியவங்களுக்கு எவ்வளவு தான் சொன்னாலும் புரிவதில்லை.. இந்த பதிவினை பார்க்க சொல்லனும்.. பயனுள்ள தகவல்.. தனியாக இருக்கும் பொழுது தான் நீட்டாக வைக்க முடிகிறது..

pudugaithendral said...

வாங்க ஜலீலா,

காய்கறிகள் விக்கும் விலைக்கு அதை பதமா பதப்படுத்தி வெச்சுக்கறது என்பதே ஒரு கலை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

pudugaithendral said...

வதக்கை அரைப்பது ஒரு டேஸ்ட். வேக வெச்சு அரைப்பது நார்த் இண்டியன் டிஷஷுக்கு உபயோகிப்பது. ஹோட்டல் க்ரேவி திக்கா இருக்க இதுவும் ஒரு காரணம்

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

ஏனுங்க... இல்லத்தரசிகளுக்குன்னு தலைப்புல போட்டதை வன்மையா கண்டிக்கறேனுங்க.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தப்புத்தான்.
// இல்லத்தரசர்கள் என்ன ஃபாரின்லயா இருக்கோம். நாங்க கத்துக்க மாட்டமா? இல்ல, அரசிகளுக்கு சொல்லி கூட இருந்து உதவ மாட்டமா? //

ஆஹா தங்கமாச் செய்யுங்க அரசரே.(விஷயங்கள் எல்லாம் அருமை).//

நன்றீஸ் :))

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

இதெல்லாம் காலை நேரத்தில் அடுக்களையில் டென்ஷன் இல்லாமல் ஆனந்தமா சமைக்க உதவும்.

உங்க டிப்ஸுக்கும் நன்றி.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி இராஜராஜேஸ்வரி

pudugaithendral said...

நன்றி சகோ

pudugaithendral said...

வாங்க சிநேகிதி,

டப்பர்வேர் பத்தி பதிவு போட காரணம் அது ஃபுட்க்ரேட் ப்ளாஸ்டிக். மற்ற ஜிப்லாக் கவர்கள், டப்பாக்களை விட சுகாதாரமானது என்பதாலத்தான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி தனபாலன்,

நன்றி ஆசியா

ஜீவா said...

வாழ்த்துகள், உங்களோட இந்த போஸ்ட் வலைச்சரத்துல அறிமுகப்படுத்தப் பட்டுருக்கு...

http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_10.html

pudugaithendral said...

நன்றி காயத்ரி