
பானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை.
கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம்
மிக மிக அருமையாக இருக்கும்.
சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போது
நான் மிக ரசித்து மகிழ்வேன்.
ஸ்வர்ணகமலம் தெலுங்கு படத்தில் அவரின்
உன்னதமான நடிப்பு திறமை வெளிப்பட்டிருக்கும்.
ஆந்திர அரசின் பெருமை மிகு நந்தி விருது
வழங்கப்பட்ட படம் இது.
நாட்டியத்தை வெறுக்கும் பெண்ணாக
மிக அழகாக நடித்திருப்பார். வெங்கடேஷ்
அவருக்கு சரியான ஜோடி.
“அர்த்தம் சேசுகோரு”(புரிஞ்சிக்க மாட்டீங்களா)
இது இந்தப் படத்தில் பானுப்ரியாவின் பஞ்ச்
டயலாம். அதை அவர் சொல்லும் பாங்கு
சூப்பர்.
அழகன் திரைப்படத்தில் நடனத்துடன் கோபம் காட்டும்
இந்த சீன் மிக அருமை.
அன்னமய்யா திரைப்படத்தில் இந்தப் பாடலுக்கு அவரின்
நடனம் ம்ம்ம் சிம்பிளி சூப்பர்ப் பானுப்ரியா!

அழகன் படத்தில் மற்றுமொரு பாடல் உண்டு.
“கோழி கூவும் நேரமாச்சு தள்ளிப்போ மாமா”
கடலுக்கு செல்லும் கணவன் திரும்ப வராமல்
போகும் கதை. பானுப்ரியாவின் நடனம் அதில்
மிக அழகாக வெளிப்பட்டிருக்கும்.
வானமே எல்லை திரைப்படத்தில் கூட ஒரு
பாடல் உண்டு” நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்” சூப்பர் பாட்டு அது.
அவரின் நடனம் ரெம்பவே நல்லா இருக்கும்.


தாய்மைக்காக சற்றே தன் அழகை தியாகம் செய்திருந்தாலும்
தாய்மை தந்த பூரிப்பில் இந்த பானுப்ரியாவும்
அழகே. தாய்மையை விடச் சிறந்த அழகு
கிடையாது.
9 comments:
மீ தி ஃபர்ஸ்ட்டூ. :-)
ரைட்டு.. அவர் நல்ல நடிகையாச்சே. :-)
\\.. அவர் நல்ல நடிகையாச்சே. :-)//
வழிமொழிகிறேன்...
கடைசியா வந்த படத்துல எல்லாம் கீச்சுக்குரலில் கத்த ஆரம்பித்தபோது தான் கொஞ்சம் பிடிக்கலை..
கொச்சின் விமான நிலையத்தில் இந்த ஆண்ட்டி நமக்கு தெருஞ்சவங்க மாதீரி இருக்காங்களேன்னு ஓருத்தங்களப் பார்த்து மண்டை காய்ந்து அப்புறம் தான் கண்டுபுடிச்சேன் பானுப்பிரியான்னு. ( உங்க கடைசி படத்தில் இருப்பதைவிட இன்னும் மாறி இருக்காங்க இப்ப )
அழ்கன் இல் நடனம் ஆடி கொண்டே பதில் சொல்வார், தொலை பேசியில் உரையாடுவார், பானு ப்ரியா. அனந்துவின் ஐடியா அது.
கோபுர வாசலிலே, க்ஷத்ரியன் , அமரன் இப்படி சொல்லி கொண்டே போகலாம் பானு ப்ரியா பற்றி. கறுப்பாக இருந்தாலும் தன் கண்கள் மட்டும் குரல் வளத்தால் ரசிகர்களை ஈர்த்தவர்.
நிஷாந்தி ஏனோ அந்த அளவு சோபிக்க வில்லை.
குப்பன்_யாஹூ
புடவைகளில் அழகாகத் தெரிந்த ஒரே நடிகை.
அவர் நடித்த கோபுரவாசலிலே மற்றும் சத்ரியன் என்னுடைய ஃபேவரிட்.
நான் பிறக்கும் முன் வந்த நடிகை, பெரியவங்க சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்
கோழி கூவும் நேரமாச்சு..அழகன் பாடல் மிக அழகானது...பானுப்ரியாவின் நடனம் மிக நன்றாக இருக்கும்..
இப்ப இவுங்க பேத்தி கூட எதோ படத்துல கதாநாயகியா நடிக்கப்போகுதாம்ல கேள்விப்பட்டேன்!
பரவாயில்ல அக்கா நீங்க இன்னும் கூட நல்லா ஞாபகம் வைச்சிருக்கீங்க!
Post a Comment