Thursday, February 21, 2013

சிறுதுளி...... பெருவெள்ளம்....

சேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்காலத்துக்குத்தானே!! அதற்காக இன்றைய தேவையை குறைச்சுக்கிட்டு, கஞ்சத்தனம் பட நான் ரெடி இல்லைன்னு சொல்றவங்க ஒரு பக்கம், கைல காசு மிஞ்சினாத்தானே சேமிக்க என்பவர் ஒரு பக்கம்னு அவங்க அவங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப சேமிப்பை பத்தி ஒரு கருத்து வெச்சிருப்பாங்க.

 பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் சினிமா கவுண்டமணி மாதிரி இருப்பதும் கூடாது, ஓவரா செலவு செய்வதும் கூடாது.  சேமிப்பு என்பதை நம்முடைய முதல் செலவா வெச்சுக்கிட்டா பழக்கம் தானா வரும்.

சேமிப்பை பத்தி தகுந்த வல்லுனர்கள் தான் முறையா சொல்ல முடியும். நான் என்னுடைய அனுபவத்தை, போன பதிவில் சொல்லியிருந்தபடி அக்காவிடம் கற்றதை இங்கே பகிர்கிறேன். தெரியாதவங்க தெரிஞ்சிக்க உதவும். தவறா ஏதும் சொல்லியிருந்தா மன்னிச்சிட வேண்டிக்கறேன்.

நம் வருமானத்தை 3ஆ பிரிச்சுக்கணூம். முதல் பாகம் தற்போதய செலவுகளுக்கு, இரண்டாவது எதிர்கால சேமிப்புக்கு, இன்னொன்று எதிர்பாராத செலவுகள், ஊர்சுற்றுதல் போன்றவைக்கு வெச்சுக்கணும்னு மறைந்த எங்கள் அந்தேரி தாத்தா சொல்வார். இப்படி பிரிச்சு தனியா வெச்சு செலவு செஞ்சா கையிருப்பு குறையாம வரவுக்குள்ள செலவை அடைக்கலாம் என்பது என் அனுபவம்.

எதிர்கால சேமிப்பில் FIXED DEPOSIT, RECURRING DEPOSIT, MUTUAL FUND, PF,   PPF, EPF, SHARES இதெல்லாம் அடங்கும். சேமிப்புக்கணக்குல பணத்தை போட்டு வைப்பதற்கும் ஃபிக்ஸட்டில் போட்டு வைப்பதற்கும் வட்டிவிகித வித்தியாசம் இருக்கும்னு பலருக்கும் தெரியும். அதனால சேமிப்பு கணக்கில் வைப்பதை விட, ஃபிக்ஸட்டில் வைப்பதால அந்தப்பணத்திற்கு நமக்கு கிடைக்கும் வட்டி கூடுதல் வருமானம். ஷேர்கள், ம்யூச்சுவல் ஃபண்டுகள் தேர்ந்த வழிகாட்டிகளின்  உதவியோட கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செய்யணும். (எனக்கு பயம். அதனால தள்ளியே இருக்கேன்)

பிஎஃப், இபிஎஃப்,  வேலை செய்யும் இடத்திலேயே சம்பளத்தில் பிடித்துக்கொண்டுதான் கொடுப்பாங்க. நம்ம கண்ணுக்குத் தெரியாம சேமிப்பு நடக்குது. மேலும் விருப்பம் இருக்கறவங்க வங்கிகளில் தனியா PPF, அக்கவுண்ட் ஆரம்பிச்சு அதுல ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டுக்கிட்டு வரலாம். 16 வருஷத்துக்கு அதுலேர்ந்து பணம் எடுக்க முடியாது. அதற்கப்புறம் எடுக்கலாம் என்பதால் எதிர்காலத்துல ரொம்ப உதவியா இருக்கும்.

நமக்கா சரியா புரியலைன்னா நாம நாடவேண்டியது நல்லதொரு ஆடிட்டரை அல்லது கன்ஸல்டண்ட்டை நம்ம வருமானவரி கணக்கு வழக்குகளை அவங்களையே பாத்துக்க சொல்லிட்டா அவங்க வரிகட்டுவது எல்லாம் பாத்துப்பாங்க. அவங்க கிட்டயே வருமான வரிவிலக்கு பெற சேமிக்க விருப்பம் இருக்குன்னு சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி இன்னன்ன இடத்துல பணத்தை சேமியுங்கன்னு சொல்வாங்க.

நாமதான் கேக்கணும். சிலர் சேமிக்க நினைக்க மாட்டாங்க. ஏன்னா, சேமிக்கும் தொகை கூட இருக்கும். வரி கட்டுவது  அந்த தொகையோட பாக்கும் போது கொஞ்சமா தெரியும். வரியை மட்டும் கட்டிட்டா கைச்செலவுக்கு பணம் இருக்கும்ல என நினைப்பது ரொம்ப தப்பு. இப்போ பலரும் தனியார் துறையில் தான் வேலை. முன்ன மாதிரி அரசாங்க உத்தியோகத்தில் கூட பென்ஷன்லாம் கிடையாது. ஆக சம்பாதிக்கும் காலத்திலேயே சேமிச்சு வெச்சுக்க வேண்டியது அவசியம்.

வருமான வரி விலக்குக்காக சேமிப்புன்னாலும், அது  வருஷத்துக்கு 1 லட்சம் தான். அதுக்கு மேல வரி கட்டித்தான் ஆகணும். ஆனா வருஷத்துக்கு 1 லட்சம் சேமிச்சா நமக்கு எவ்வளவு லாபம்!! இதை கணக்கு செஞ்சு பாத்துக்கிட்டா தெரியும். வருஷத்துக்கு ஒரு லட்சம்னா, மாசம்  8500 ரூவாகிட்ட தனியா ஆர்டி போட்டுக்கிட்டு வந்தாலே போதுமே.

எனக்குத் தெரிந்த வருமான வரி விலக்குக்காக சேமிக்க கூடிய சேமிப்புக்கள்:

1. PF,
2, EPF,
3. PPF,
4, NSC (NATIONAL SAVINGS CERTIFICATES)
5. MUTUAL FUNDS,
6. INSURANCE
 7. POMIS (POST OFFICE MONTHLY INCOME SCHEME)
இன்ஷ்யூரன்ஸில் பலவகை இருக்கிறது. அவற்றில் நம் தேவைக்கு தகுந்த மாதிரி  பார்த்து சேமிப்பது நல்லது. அதிலும் ப்யூர் பாலிசி என ஒன்று இருக்கிறது. அதாவது நாம் வாகனங்களுக்கு எடுப்போமே அது மாதிரி. ஆக்சிடண்ட் ஆனால் நமக்கு பயன் தருமே அது போல, தனி நபர் ஒவ்வொருவரும் ப்யூர் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.

இப்படி நிறைய்ய சொல்லிக்கொண்டே போகலாம். நம் தேவைக்கு, நாம் எவ்வளவு சேமிக்க முடியுமோ அதை மனதில் கொண்டே நாம் சேமிக்க துவங்க வேண்டும். பலர் இன்ஷூரன்ஸ்  பாலிசி எடுப்பார்கள், ஆனால் அதை அடுத்த வருடம் கட்டமுடியாமல் விட்டு விடுவார்கள். அதனால் நாம் கட்டிய பணமும் போச்சு.  எனக்குத் தெரிந்த ஒருவர்,  மாதாமாதம் ரெக்கரிங் டெபாசிட்டில் பாலிசி தொகையை செலுத்தி அதை வருட கடைசியில் மொத்தமாக கட்டிவிடுவார். ஐடியா நல்லா இருக்குல்ல.

கவர்ன்மெண்ட் வேலையா பென்ஷன் வரும் என பலரும் அரசாங்கவேலை
கிடைப்பதற்கு கண்டிப்பா ட்ரை செய்வாங்க. எல்லோருக்கும் அரசாங்கத்திலோ, வங்கிகளிலோ வேலை கிடைப்பதில்லி. ஆனா பென்ஷன் இல்லாத எதிர்காலம் எவ்ளவு கஷ்டம்!!! வயதான காலத்தில்  அடுத்தவர் கையை நாடிகிட்டு இருக்க ரொம்ப சங்கடமா இருக்கும்.

இதற்கும் தீர்வு இருக்கு. நமக்கு நாமே பென்ஷன் வழங்கிக்கலாம். :))
NEW PENSION SCHEME:   
மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம இதுல சேர்த்துக்கிட்டே வந்தா வயதான காலத்துல அதை பென்ஷனா மாசாமாசம் நாம வாங்கிக்கலாம்.
வங்கிகளில், போஸ்ட் ஆபிஸ்களில் இந்த கணக்கு நடைமுறையில் இருக்கு.

அதேபோல தங்கத்தில் முதலீடு செய்வது தப்புன்னு சிலரும், செய்யலாம் தப்பில்லைன்னு சிலரும் சொல்லி குழப்புவாங்க.  முதலீட்டாளர்கல் சொல்வது என்னன்னா, நம்முடைய வருடாந்திர வருவாயில் 2 சதவிகிதம் வரை தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது. பிரித்து பிரித்து முதலீடு செய்வதுதான் லாபம் தரும். முன்னமே சொல்லியிருப்பது போல தங்கக்காசுகளாக வாங்கி வைப்பது நலம். இல்ல ஈகோல்ட் அதுவும் சிறந்த வழி.


வீடு வாங்க கடன் வாங்கினா அதற்கு நாம் கட்டும் வட்டி வருமான வரியில் தள்ளுபடி கிடைக்கும் என்பது எல்லோரும் தெரிஞ்சதுதான். அதனாலத்தானே லோன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கறோம். அந்த சொந்த வீடு எதிர்காலத்தில் நமக்கு பென்ஷன் போல உதவியா இருக்கும், தெரியுமா??
என்னுடைய முந்தைய பதிவில் இருக்கு பாருங்க.

நான் எல்லாரையும் கேட்டுப்பது என்னன்னா உங்களுக்கும் சேமிக்க தெரிந்த வழிகளை பதிவா போடுங்க. பலருக்கு உதவும். நட்புகளுக்குள் பேசிக்கொள்வது போல சங்கதிகளை தெரிஞ்சிக்கவும் இந்தக்களம் நமக்கு உதவியாய் இருக்கும். எனக்க்

சேமிப்போம் வளம் பெறுவோம்.


11 comments:

DHANESH KUMAR. R said...

சொந்த வீடு இருப்​ப​வர்​க​கள் கூட வீட்டு கடன் வாங்கி அந்த காசை நிலத்தில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதம் பத்தாயிரம், ஐந்து ஆயிரம் அல்லது உங்கள் தகுதிக்கேற்ப முதலீடு செய்யலாமே (இரண்டாவது பாகம் எதிர்கால சேமிப்பு. இந்த தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு.

ADHI VENKAT said...

அருமையான பகிர்வு. நல்ல ஆலோசனைகள் தான். தெரியாதவங்களுக்கு உதவியாக இருக்கும்.

நாங்கள் GPF, MF, RD, FD, LIC போன்றவைகளில் தான் சேமிக்கிறோம். தங்கம் ஈ கோல்டிலும், காசுகளாகவும் தான் வாங்குவது...

எவ்வளவு முடியுமோ ஆடம்பரத்தை குறைத்து விட்டு சேர்த்தால் பிற்காலத்துக்கு நிச்சயம் உதவியாகத் தான் இருக்கும் என்பது எங்கள் இருவரின் கருத்தும்...:)

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படித்தான் சேமிக்கிறாங்களோ... வீட்டு நிர்வாகம் என்பது சாதாரணமில்லை... இல்லமும் இல்லாளும் இறைவன் கொடுத்த வரம் தான்...

சேர்த்த பணத்தை சிக்கனமா...
செலவு பண்ண பக்குவமா…
அம்மா கையில் கொடுத்து போடு செல்லக் கண்ணு... அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு...

(அம்மா : தாய்க்கு பின் தாரம்...!)

pudugaithendral said...

வாங்க தனேஷ் குமார்,

உங்க ஐடியாக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஆதி,

எவ்வளவு முடியுமோ ஆடம்பரத்தை குறைத்து விட்டு சேர்த்தால் பிற்காலத்துக்கு நிச்சயம் உதவியாகத் தான் இருக்கும் என்பது எங்கள் இருவரின் கருத்தும்...//

இதுவும் சரி.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

அந்த நம்பிக்கை எல்லா ஆண்களுக்கும் வரணும். ஆனா பாருங்க பலர் தேவையில்லாம செலவு செஞ்சிடுவான்னு தப்பா நினைச்சுக்கிட்டு பொறுப்பை கொடுக்க யோசிப்பாங்க.

pudugaithendral said...

எப்படித்தான் சேமிக்கிறாங்களோ... வீட்டு நிர்வாகம் என்பது சாதாரணமில்லை... இல்லமும் இல்லாளும் இறைவன் கொடுத்த வரம் தான்...//

நிச்சயமா.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ப.கந்தசாமி said...

நல்ல கருத்து.

மங்களூர் சிவா said...

/
7. POMIS (POST OFFICE MONTHLY INCOME SCHEME)
/

it is not a tax saving scheme.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஐயா

pudugaithendral said...

வாங்க சிவா,

இதுல இன்னும் ட்ரை செய்யல. என் ஃப்ரெண்ட் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி