Thursday, May 01, 2008

வேலை!! வேலை!! வேலைக்கு இல்லை வேளை!!!!!

என் கணவரின் நண்பர் விருந்துக்கு அழைத்திருந்தார். இரவு 9 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்றோம். இப்போ வந்து விடுவார் என்று அவரது மனைவி சொன்னார். மணி 10.00ஆகிவிட்டது ." மன்னிக்கவும் இன்று கொஞ்சம் தாமதமாகி விட்டது"!!! என்று சொல்லிக்கொண்டு 11 மணிக்கு வந்தார். அவரது மகள் உடன், " எப்பவுமே அப்பா இந்த நேரத்துக்குத்தான் வருவார்", என்றார்.

நண்பர் ஒருவரை குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்திருந்த போதும் இப்படித்தான்... 8 மணிக்கு அங்கிருப்பேன் என்று சொன்னவர் வந்த போது பிள்ளைகள், உண்டு தூங்கி ஒரு சாமம் ஆகியிருந்தது.



அவர்களை குற்றம் சொல்ல இதை எழுதவில்லை. மனம் பதைக்கிறது.
குமுதம் இதழில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சொல்லியிருப்பதுதான்
இப்போதைய நிலை.

" இந்தியாவில் வந்து குவியம் பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நம் இளைய சமுதாயத்தின் மீது நேர அவதியைதான் முதலின் திணிக்கின்றன.

நிமிடத் துல்லியமாக அலுவலகத்தின் உள்ளே நுழை! ஒரு நிமிடத்தைக் வீணாக்காமல் உழை. ஆனால் நேரம் பார்க்காமல் பாடுபட்டு. வீட்டிற்கு பூவதில் அவதி காட்டாதே! வீட்டிற்கு சாவகாசமாகப் போகலாம்.
டார்கெட் உண்டு உனக்கு! அதை முடிக்காமல் போகாதே! முடிக்காமல் போகப் பார்க்கிறாயா? ஒரேயடியாகப் போய்விடு என்கின்ற பல்லவியைத்தான்
நாகரிகமாக இளைய தலைமுறையின் தலைக்குள் பதிக்கின்றன.




இதற்கு ஈடு கொடுக்க முடியாவிட்டால் இனி எந்த வேலையிலும் தாக்குப்படிப்பது கடினம் ! இவை அவரின் கருத்துக்கள்.

9 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினால்," என்ன இன்றைக்கு சீக்கிரம் கிளம்புகிறாய் ?"என்று கேள்வி கேட்கு உயர் அதிகாரி, மனச்சோர்வு , மனஅழுத்தம், மனஉளைச்சல்,
நேரம் காலம் பார்க்காமல் அலுவலகமே கதி என்று கிடப்பதால் வீட்டிலும் அமைதி இல்லை, அலுவலக வேலையின் நெருக்கடியினால் வரும் அலுப்பு,
இவை நம்மை இட்டுச் செல்லும் இடம் இதய மருத்துவமனை தான்.
அவர்களுக்கு நல்ல வருமானம் நம்மால்.

இதற்கு என்னதான் தீர்வு? எங்கே செல்லும் இந்தப் பாதை ?????????????...............................