Tuesday, March 24, 2009

தலைவலிக்கு மருந்து....

தலைவலிக்கு என் மாமா தரும் மருந்து
வித்தியாசமானது.:)))

மும்பையில் வேலை பார்த்த பொழுது கணிணியில்
அதிக நேரம் வேலை பார்த்தது, ஏற்கனவே இருக்கும்
கண்பார்வை குறைபாடு(ஒரே ஒரு கண்மட்டும்
-9 பவர் :))))))) ), என பல காரணங்களினால்
தலைவலி அதிகமாக வரும்.

தலைவலிக்கு மாத்திரை சாப்பிடாமல்
அம்மம்மா மிளகு பாலில் கொதிக்க வைத்து
நெற்றியில் பத்து போடுவார்கள்!! அந்த பத்து
யாருக்கு போடப்பட்டிருக்கோ அவர்களுக்கு
அன்று தலைவலின்னு வீட்டுல இருக்கற
குட்டி பாப்பாவுக்கும் தெரியும்!!!!

உடனே சத்யாமாமா கடைக்கு போய் ”அதை”
வாங்கிகிட்டு வந்து வெச்சிடுவார்.

அது சாப்பிட்ட உடன் நிம்மதியா தூக்கம்
வரும்!!!!

அதனால தலைவலி போயிடும். :))


பல நேரம் ”அதை” சாப்பிடணும்
என்பதற்காகவே தலைவலின்னு சொல்லிடுவோம்.

நல்லவர்காக பெய்யும் மழை அனைவருக்கும்
பயன்படுவது போல, யாரேனும் ஒருத்தருக்கு
தலைவலி என்றால் மத்தவர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

மாமா ஃபேமலி பேக்தான் வாங்குவார். :))))

மருந்து வாங்கிகிட்டு வந்துக் கொடுக்கற
மாமாவுக்கே தலைவலின்னா நான் போய்
வாங்கிகிட்டு வருவேன்!!!

இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி.

”இத சாப்பிட்டாத்தான் தலைவலி வரும்னு
சொல்வாங்க. உங்க வீட்டுல வித்தியாசமா
இருக்கேன்னு” அயித்தான் அடிக்கடி கிண்டல்
செஞ்சு அந்தப் பழக்கத்தையே விட்டுட்டேன்.

நேற்று பயங்கர தலைவலி..
பசங்களுக்கு ரொம்ப நாளாச்சேன்னு பிட்சா
ஆர்டர் செஞ்சாரு. அதோட ”அதையும்”
ஆர்டர் செஞ்சிட்டாரு. தலைவலி இருக்கறப்ப
”அதை” சாப்பிட்டு எத்தனை நாளாச்சுன்னு!!!
நினைச்சுகிட்டே சும்மா இருக்க முடியமா,
சத்யாமாமாவுக்கு ஒரு மெசெஜை தட்டினேன்.

“எனக்கு இப்போ தலைவலி. நீங்க எப்பவும்
கொடுக்கும் மருந்தை சாப்பிட்டேன். :) “

அம்புட்டுதான். அடுத்த செகண்ட் போன் வந்திருச்சு
மாமாகிட்டேயிருந்து. :)))

“அதை” சாப்பிட்டியா???

”சும்மா கிடந்த என்னையும் கிளப்பிவிட்டாச்சு!!
இப்ப வீட்டுக்கு போகும்போது நான் “அதை”
வாங்கிகிட்டுத்தான் போகணும். இப்ப திருப்தியா??!!!”
அப்படின்னு கேட்டாரு மாமா.

“ஏதோ நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”னு
நினைச்சேன்னு சொல்ல மாமா பல்லை
நற நறன்னு கடிக்கற சத்தம். :)))

என்ன அது அந்த “அதை”?

நீங்க ஏதும் கன்னாபின்னான்னு கற்பனை செஞ்சு,
“கழுவேறிக் குடும்பமா இருக்கும்போல”ன்னு
முடிவு செஞ்சிடாதீங்க. :)))))))))))

மாமா தலைவலிக்கு தரும் மருந்து
இதுதான்.!!!!




அதென்னவோ ஐஸ்கிரீம் சாப்பிட்டால்
தலைவலி” போயே போயிந்தே! இடஸ்கான்!”

மாமாவின் பர்சை கொஞ்சமாக இளைக்க
வைத்த சந்தோஷத்தில் :))))

19 comments:

Anonymous said...

aggggggggggggggrr ithu thaana athu?

மாதேவி said...

அடடா நல்லா இருக்கே.

இதை பார்க்கும் எல்லோருக்கும் அடிக்கடி தலைவலி வரும்போல் இருக்கிறதே.

pudugaithendral said...

ggggggggggggggrr ithu thaana athu?//

:))))))))))

நட்புடன் ஜமால் said...

\\அந்த பத்து
யாருக்கு போடப்பட்டிருக்கோ அவர்களுக்கு
அன்று தலைவலின்னு வீட்டுல இருக்கற
குட்டி பாப்பாவுக்கும் தெரியும்!!!!\\

இது நல்லாக்கீதே!

pudugaithendral said...

பார்க்கும் எல்லோருக்கும் அடிக்கடி தலைவலி வரும்போல் இருக்கிறதே.//

ஐஸ்கிரீமுக்காக தலைவலியா? தலைவலிக்காக ஐஸ்கிரீமான்னா சீக்கிரம் யாராவது பதிவு போட்டாலும் போடலாம் மாதவி.
:))))

நட்புடன் ஜமால் said...

\\நல்லவர்காக பெய்யும் மழை அனைவருக்கும்
பயன்படுவது போல, யாரேனும் ஒருத்தருக்கு
தலைவலி என்றால் மத்தவர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

மாமா ஃபேமலி பேக்தான் வாங்குவார். :))))\\

இங்கனையே தெரிஞ்சுடுச்சே!

(நாமளும் உங்க ஜாதி தேன்)

pudugaithendral said...

வாங்க ஜமால்,

பத்து நல்லா இருக்காது. மிளகுப்பத்து என்பதால் எரியும். :( :))

வெண்பூ said...

இதை இன்னும் முயற்சி பண்ணினதில்லை.. அடுத்த முறை செஞ்சிரவேண்டியதுதான்.. :)))

வால்பையன் said...

அடடே நல்ல மருந்தா இருக்கே!

அமுதா said...

என் பொண்ணுகிட்ட மட்டும் சொன்னேன்னால் அவளுக்கு தினம் தலைவலி வந்துவிடும்

இராகவன் நைஜிரியா said...

நம்ம வீட்ல வேற மாதிரிங்க...

குழந்தை ஐஸ்கீரிம் சாப்பிட்டால் உடனே ஜுரம் வந்து விடும். கூடவே இருமலும்.. (எதோ டான்சிலிட்டிஸ்.. டான்சில்ஸ் என்றெல்லாம் சொல்லுகின்றார்கள்).

அதனால், நானும், என் மனைவியும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை விட்டு வருடங்கள் பல ஆகின்றன.

வேறு வைத்தியம் இருந்தா சொல்லுங்க..

pudugaithendral said...

வாங்க வெண்பூ,

செஞ்சு பாத்துட்டு ஜலதோஷம் பிடிச்சா என்னிய திட்டாதீங்க.

pudugaithendral said...

நல்ல மருந்தா இருக்கே!//

ஆஹா,

நி்ஜமா ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் தலைவலி போகுமான்னு தெரியலை.

ஏதோ எங்க மாமா வாங்கிக் கொடுப்பாரு.

pudugaithendral said...

என் பொண்ணுகிட்ட மட்டும் சொன்னேன்னால் அவளுக்கு தினம் தலைவலி வந்துவிடும்//

சொல்லாதீங்க!!! சொல்லாதீங்க!!!

(இதை குளிக்காதே!! குளிக்காதேன்னு ஒரு சோப் விளம்பரம் வருமே அது மாதிரி படிங்க)

pudugaithendral said...

குழந்தை ஐஸ்கீரிம் சாப்பிட்டால் உடனே ஜுரம் வந்து விடும். கூடவே இருமலும்..//

இதுதான் உண்மை.
ஆனால் எங்க மாமாவின் வைத்தியமும் பலிச்சுது.

சிலருக்கு சூடா பால் குடிச்சா இரவில் நல்ல தூக்கம் வரும்னு சொல்வாங்க பாருங்க அது மாதிரி எங்களுக்கு ஐஸ்கிரீம். :)))

அன்புடன் அருணா said...

அடடா....எனக்கு அடிக்கடி தலைவலி வருமே......இது நல்ல மருந்தா இருக்கே....
அன்புடன் அருணா

மணிநரேன் said...

////பல நேரம் ”அதை” சாப்பிடணும்
என்பதற்காகவே தலைவலின்னு சொல்லிடுவோம்////

ஆஹா...எந்த காலத்திலும் (பருவநிலை) ஐஸ்கிரீம் சாப்பிட இப்படி ஒரு வழியா!!!!!!!

pudugaithendral said...

அடடா....எனக்கு அடிக்கடி தலைவலி வருமே......இது நல்ல மருந்தா இருக்கே....
அன்புடன் அருணா//

:))))))

pudugaithendral said...

ஆஹா...எந்த காலத்திலும் (பருவநிலை) ஐஸ்கிரீம் சாப்பிட இப்படி ஒரு வழியா!!!!!!//

yessu :))