Total Pageviews

Tuesday, June 30, 2009

HOME IMPROVEMENT COMMITTEE.

பிள்ளைங்க வளர வளர நமக்கு வேலையும் ஜாஸ்தியாகுது.
ஓவ்வொரு ஸ்டேஜ்லையும் ஒருவிதமா இருக்கும்.

வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் பெற்றோரைப் பார்த்து
“ம்ம் உங்களுக்கு பிரச்சனை இல்லை!!!! உங்க பையன்
வளர்ந்திட்டான்” அப்படின்னு சொல்லும்போது
அந்த பெற்றோர் கண்டிப்பா சிரிச்சுப்பாங்க.

அவங்க படும் கஷ்டம் அவங்களுக்குத்தானே தெரியும். :))

பெரிய கிளாஸ் போகப்போக பெற்றோர்களுக்கும் டென்ஷன் தான்.
அந்த டென்ஷனை பசங்க மேலே காட்டினா பாவம் பசங்க.

வளரும் குழந்தையோ, வளர்ந்த குழந்தையோ அட்வைஸ்
சொன்னா கண்டிப்பா பிடிக்காது. (நமக்குமே அப்படித்தானே!!)

எப்படித்தான் சமாளிப்பது???

ஒவ்வொரு வருடமும் பள்ளி துவங்கியதும் எங்க வீட்டில்
கமிட்டி மீட்டிங் நடக்கும். வீட்டின் தலைவர் எப்போதும்
டூரில் இருப்பதால் துணைத்தலைவராகிய எனக்கு வேலை
அதிகம். தலைவர் அவ்வப்போது மீட்டிங்கிற்கு வந்து
பேசுவார். இயலாத போது கலந்தாலோசித்து பிறகு
மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துகொள்வேன்.

கமிட்டில என்னதான் செய்வோம்?

கமிட்டி மெம்பர்ஸ் ஆஷிஷும் அம்ருதாவும் தான்.

“திட்டினா உங்களூக்கு பிடிக்காது.
உங்களை திட்டறதுல எனக்கும் இஷ்டமில்லை.
ஆக, ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்குவோம்.
நான் கோபப்படற மாதிர் நீங்க நடந்துக்க வேணாம்.
உங்களை சந்தோஷமா வெச்சுக்க வேண்டியது
எங்க கடமை” அப்படின்னு ம்யூச்சுவலா பேசி
முடிவெடுத்துட்டு கோல்டன் ரூல்ஸ் பட்டியல் போடுவோம்.
(இது 2008ல் போட்டது. வகுப்புக்கு தக்கவாறு கொஞ்சம்
கொஞ்சமா ஒவ்வொரு வருடமும் மாற்றம் இருக்கும்.அவர்களுக்கென சில
பொறுப்புக்கள் கொடுப்பேன்.)


இந்த வருடமும் திட்டமிட்டாச்சு.

இந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்திய
திட்டங்கள்:

1. தான் செய்ய வேண்டிய ப்ராஜக்டுகள், அடுத்த
வாரம் செய்து முடிக்க வேண்டிய வீட்டுப்பாடங்கள்
ஆகியவற்றை ஒரு பேப்பரில் எழுதி ஃப்ரிட்ஜில்
மேக்னெடில் ஒட்டி வைத்துவிட வேண்டும்.

2. வெள்ளிக்கிழமை இரவுக்குள் அந்த வாரப்பாடங்கள்,
ஹோம் வொர்க்குகள், ப்ராஜக்டுகள் முடித்துவிட்டால்
1 மணி நேரம் கம்ப்யூட்டர் விளையாடலாம்.

3. அந்த ஒரு மணிநேரத்தில் கேம்ஸ் போக
ஆங்கில வலைப்பூ மற்றும் தமிழ் வலைப்பூவில்
தலா ஒரு பதிவு இடவேண்டும்.
(மொழி வளர்ச்சிக்கு உதவுமே!!)

அப்பப்போ ஐடியா தோணும்போது கமிட்டி கூடி
பேசிமுடிவெடுப்போம்.

மழலையர்களுக்காக பேரண்ட்ஸ் கிளப்பில் இந்த
கோல்டன் ரூல்ஸ் பதிவும் இருக்கு.

Monday, June 29, 2009

மனதுக்கு இதமளிக்கும் தருணங்கள்

ஊர்ல எங்க குடும்பத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடம்
இருந்தது. அதை இப்ப வேறவங்களுக்கு கொடுத்திட்டாங்க.
அரசு உதவி பெறும் பள்ளியில அதுவும் ஒண்ணு.


எங்க அம்மாவகையில் பலரும் அங்கே ஆசிரியர்கள்.
என் தாத்தா(அம்மாவின் அப்பா) சுந்துசார். தாத்தா
பேரைக்கேட்டாலே நடுங்குவாங்க எல்லோரும்.
ஆனா அந்த பயத்துக்கு சமமா மரியாதை, அன்பும் இருக்கும்.

தாத்தா ஊர்ல நடந்து போகையில பாதி பேர் சல்யூட்
வெக்காம போகமாட்டாங்க. சைக்கிளில் போறவங்க
கூட இறங்கி தள்ளிகிட்டு தாத்தாவை கடந்து போயிட்டு
அப்புறமாத்தான் சைக்கிளில் ஏறுவாங்க.

ஊர்ல நிறைய்ய பேரு தாத்தாவோட மாணவர்கள்தான்.
சமீபத்தில ஹைதைக்கு தாத்தா வந்திருந்தாரு.
இங்க இருக்கற ரிடையர்டு டி.ஜி.பி அவரோட முன்னாள்
மாணவர்னு போன் நம்பரைத்தேடி, பேசினாரு.

அம்மா அதே பள்ளியில கிளார்க்கா வேலை செய்வதற்கு
முன்னாடி ஆரம்பபள்ளி ஆசிரியை. ரத்னா டீச்சருக்குன்னு
ஒரு தனி மரியாதையே இருக்கும்.

எங்க சித்தியும் அங்கே வேலைபாத்தவங்கதான். என் முதல்
குரு சித்திதான். இவங்களுக்கு கிடைக்கற மரியாதை
அப்ப பிரமிப்பா இருக்கும். கடைக்கு போகும்போதெல்லாம்
டீச்சர்னு யாராவது வந்து பேசும்போது, கொஞ்சம் எரிச்சலா
இருக்கும்.

”இதெல்லாம் ரொம்ப ஓவரால்ல இருக்கு” அப்படின்னு
கூட நினைச்சிருக்கேன். நானும் ஆசிரியையை வேலை
பாப்பேன்னு நினைக்கலை. (நான் நினைச்சது கல்லூரிப்
பேராசிரியை வேலை ஆச்சே!!)

ஆனா இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில 2 வருஷம்
டீச்சரா வேலைப்பார்த்தேன். கிட்டத்தட்ட ஹெச்எம் போஸ்ட்.
(புகழ் பெற்ற பள்ளியின் குடும்பத்தில் வந்தவள் என்பதால்
கொடுக்கப்பட்டாலும், பிறகு அதற்கு தகுதி உடையவளா
என்னை மாத்திக்கிட்டேன்)

அந்த வேலையை விட்டுட்டு மும்பை போயிட்டேன்.
அதற்கப்புறம் திருமணமாகி புதுகை சென்றபோது
பழநியப்பா காம்ப்ளக்ஸில் இருக்கும் புதிதாக வந்திருக்கும்
அரிசிகடையில் அரிசி வாங்க நான்,அம்மா,அப்பா
சென்றிருந்தோம். அங்கே உட்கார்ந்திருந்த அம்மிணி
எங்களைப்பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றாங்க.

அப்பா, அம்மா இவங்க கூட இருக்கும்போது
இதெல்லாம் சகஜம் அப்படின்னு இருந்துட்டேன்.
”டீச்சர் நீங்களும் உட்காரு்ங்க!!” அப்படின்னு
தனது சுழல் நாற்காலியைகொடுத்து உட்காரச்சொன்னாங்க.
நான் டீச்சரா வேலைப்பார்த்ததையே மறந்திட்டேன்.

யாருன்னு தெரியாம நான் குழம்பிகிட்டு இருக்க
“ உங்க ஸ்டூடண்ட் சிவரஞ்சனியோட அம்மா நான்”
அப்படின்னு அறிமுகம் செஞ்சுகிட்டாங்க. வகுப்புக்கு
வந்து வீட்டுக்கு செல்லும் வரை வாயேத்திறவாத
பேசாமடந்தையாக, எழுதச்சொன்னால் கண்ணீர்விட்ட
ரஞ்சனி நினைவுக்கு வந்தாள்.

கடைசியில் அவளை
எப்படியோ எழுத வைத்து, சிரிக்க வைத்தும் சாதனை
புரிந்திருந்தேன். ”இப்போ 2ண்ட் ஸ்டாண்டர் மொளண்ட்
ஜியான்ல படிக்கிறா டீச்சர்! என் மகளைப்பத்தி
கவலைப்பட்டுகிட்டு இருந்தேன். நீங்க அவளை மாத்தினீங்க!!”
என்று பாராட்டு பத்திரம் வாசிக்க அம்மா,அப்பாவுக்கு பெருமை.

அம்மாவுக்கும், தாத்தாவுக்கும்
கிடைத்த மரியாதை எனக்கும் கிடைத்த பொழுது அந்த நிமிடம்
ஆசிரியரின் பணி மகத்தானது, அதில் கிடைக்கும் திருப்தி
வேறெந்த பணியிலும் வராது என்பதை புரிந்து கொண்டேன்.




இலங்கையில் மாண்டிசோரி பயிற்சி முடித்து
ஆசிரியையாக ஒரு பள்ளியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த பொழுது,
ஒரு மாணவன். ”பென்சில் எடு என்று சொன்னாலே கண்ணில் கண்ணீர்
முட்டும். மதியம் கொண்டுவரும் ப்ரட்டை சாப்பிடவே மாட்டான்.
அவனை திட்டி, கொஞ்சி, கெஞ்சி சாப்பிட வைத்தேன். மெல்ல
மெல்ல எனக்கு நண்பனாகி என் கைப்பிடித்து எழுத துவங்கினான்.”
வீட்டிற்கு போய் அம்மாவிடம் என்னைப்பற்றி அதிகம் பேசுவானாம்.

பயிற்சி முடிந்து நான் வேலையை விட்டு வந்தபிறகு ஒரு நாள்
துணிக்கடை ஒன்றில் அந்த பையனின் அம்மாவைப் பார்த்தேன்.
“ஹாய் மேடம்!” என ஓடி வந்து கட்டிக்கொண்டு பேசினர்.
துணிக்கடையில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க,பக்கத்தில்
இருந்த தன் தோழியிடம்,”என் மகன் இன்று ஒழுங்காக
படிக்க, சாப்பிட இந்த ஆசிரியைதான் காரணம்” என்று
அறிமுகப்படுத்த மற்றவர்களும் என்னை சிநேகமாக பார்த்து
சிரித்தார்கள்.

நான் வேலையை விட்ட பிறகு கூட என்னிடம்
படித்த துளசி எனும் மாணவன் எனக்காக வாழ்த்துஅட்டை +
பூங்கொத்து ஒன்று தன் கையால் செய்து பள்ளியில் கொடுத்து
என்னிடம் சேர்க்கச் சொன்னதாக ஒரு ஆயாம்மா கொண்டுவந்து
என் வீட்டில் கொடுத்துவிட்டுப்போனார்.




தன் மாணவன் உயர்ந்த நிலையில் இருக்கிறான் எனும்
பெருமை ஆசிரியருக்கே உரியது. பெற்றவர்களைப்போல
அந்த வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கும் இருக்கிறது.

தன் பணியின் தன்மை உணர்ந்து, தன்னை அர்பணித்துக்கொண்ட
ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறம் தாழ்த்தி வணக்கங்களை
தெரிவித்துக்கொள்கிறேன்.

வரும் ஜூலை7ஆம்தேதி குரு பொளர்ணிமா.

நமக்கு வாழ்வில் ஏதேனும் கற்க உதவிய எவரும்
நமக்குகுருவே. எனக்கு சொல்லித்தந்த அனைத்து
உள்ளங்களுக்கும் என் வணக்கங்களும், மனமார்ந்த
நன்றிகளூம்.

Saturday, June 27, 2009

நம் வாழ்வு நம் கையில்....

நன்றாக படித்துக்கொண்டிருந்த தனது மகன்
தற்போது படிப்பில் கவனமில்லாமல் இருப்பதாகவும்,
கொஞ்சம் டிஸ்டர்படாக இருப்பதாகவும் வருத்தப்பட்ட
என் தோழி எங்கள் ரெய்கி மாஸ்டருக்கு போன் செய்து
என்ன செய்யலாம்? என கேட்டிருக்கிறார்.

மாஸ்டர் சொன்னது,” உன் மகனின் கட்டிலுக்கு கீழ்
வைத்திருக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு பிறகு
பார்” என்று சொல்லியிருக்கிறார்.


மகனின் விளையாட்டு பொருட்கள், உடைந்த பேட்
போன்றவை பாசிடிவி எனர்ஜியை வெளியே தள்ளி
நெகட்டிவ் எனர்ஜியாக மாறி படுத்தியிருக்கிறது.
மாஸ்டர் சொன்னபடி செய்ததில் நல்ல முன்னேற்றம்
இருப்பதாக சொன்னார்.

நம்பிக்கை இருப்பவர்கள் மேலே படியுங்கள்.
(வேண்டாத விவாதம் செய்ய விருப்பமில்லை)

நம் வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பொருட்கள்
குப்பைகளாகின்றன. 6 மாதத்திற்கு மேல் உபயோகப்படுத்தாத
எதுவும் குப்பையே. வீசிவிடுவது, அல்லது உபயோகப்படுத்துபவர்களூக்கு
கொடுத்து விடுவது நல்லது.

ஒரு காட்சி பாருங்கள்:
காலையில் எழுந்து காபி குடித்து, பேப்பர் படித்து
இன்று என்ன உடுத்தலாம் என கப்போர்டை திறந்தால்
எது எங்கே இருக்கிறது என்று தெரியாமல்
குழப்பமாக இருக்கிறதா?

வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லாமல்
தேடுவது உங்கள் பழக்கமா?

கலைந்து கிடக்கும் பொருட்களினால் தேடியது
கிடைக்காமல் கோபம், எரிச்சல் இவைகள் உங்களை
ஆட்கொண்டு இதுதான் நம் இயல்பு என நினைத்தீர்களானால்
நீங்கள் இந்தப் பதிவை கட்டாயம் படிக்க வேண்டும்.






மேலே இருக்கும் படம் பார்க்க அழகாக இருப்பதாக
தோன்றினாலும் கூர்ந்து பார்த்தால் மேலே சொன்ன
காட்சிகள் இந்த அறையின்வாசிக்கு கட்டாயம் ஏற்படும்.

இந்த நிலை எரிச்சல், கோபம் இல்லாத வாழ்க்கை வேண்டுமானால்
நாம் பின்பற்ற வேண்டியது ஃபெங் சுயி முறை.
ஃபெங் சுயி பொம்மைகளை வீட்டில் கொண்டுவந்து
வைப்பதால் மட்டும் பிரச்சனை சரியாகாது.

நம் வீட்டுலிலுள்ள பொருட்கள் சுவாசிக்கும் அளவுக்கு
காற்றோட்டமாக, எளிதாக எடுக்கும் முறையில்
வைக்கப் பட வேண்டும்.

1. வீட்டில் இருக்கும் கப்போர்ட் போன்றவற்றிற்கு
கதவு போட்டு மூடிவிட்டு உள்ளே குப்பையும்
கூர்வாளமாகவும் இருந்தால் ஃபெங் சூயி வேலை செய்யாது.

2. மனிதர்களின் தன்மை,குணம் மாறிக்கொண்டே இருக்கும்.
நாம் மாறுவது போல்தான் நம் வீடும் மாறும்.

3. கப்போர்ட், டிராயர்கள், அலமாரிகள் என எல்லா
இடங்களிலும் தூய்மையாக, அழகாக பொருட்களோ,
துணியோ அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. இந்தப் பொருள் இங்கேதான் இருக்கும் என
வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிவது அவசியம்.

5.புதியன புகுதலும் பழையன கழிதலும் இயல்பு
என்றாலும் புதியவற்றை நாம் எவ்வளவு அக்கறையோடு
வைத்துக்கொள்கிறோம் அப்போதுதான் அது நம்மிடம் தங்கும்.

6.அலமாரிதான் இருக்கிறதே என்று அடைத்துவைக்காமல்
உள்ளே என்ன இருக்கிறது? என்பது தெரியும்படி
அடுக்கி அழகாக வைப்பது அவசியம்.

7. அம்மாவோடது, பாட்டி உபயோகித்தது என அவர்களின்
நினைவாக சில பொருட்கள் வைத்திருப்போம். ஆனால்
அது அவர்களின் நினைவுகளைத் தருவதோடு இடத்தையும்
அடைத்துக்கொண்டு நம் வளர்ச்சிக்கு தடைபடுமேயானால்
அதை உபயோகிப்பவர்களூக்கு கொடுத்துவிடுவது நல்லது.

8. வேண்டாதது எது? என முடிவு செய்வது கொஞ்சம்
கஷ்டம் தான். கொடுப்பதா? வைத்துக்கொள்வதா?
போன்ற எண்ணங்கள் போட்டிபோடும். இது தவிர்க்க
முடியாது. ஆனால் குப்பைகளற்ற வீடு தரப்போகும்
வளர்ச்சியை யோசித்து பார்த்தால் நம்மால்
முடிவு எடுக்க முடியும்.

9. அலமாரியின் இடது பக்கத்தில் நகைகள்,
வேலைக்கு/பள்ளிக்கு போட்டுச் செல்லும் உடைகள்,
வைப்பதால் திறமை,வளர்ச்சி ஏற்படும். ஃபெங் சூயிபடி
இவை திறன், வளர்ச்சிக்கான இடம்.

10. நல்ல உடல்நிலை,புகழ் ஆகியவற்றை பெற
காஷுவலாக உடுத்தும் உடைகள், வார இறுதியில்,
உடற்பயிற்சிக்கான உடைகள் ஆகியவற்றை
அலமாரியின் மத்தியில் வைக்க வேண்டும்.

11.அலமாரியின் வலது பக்கத்தில் வெளியூருக்கு
போகும்போது கொண்டு செல்லும் உடைகள்
வைப்பதால் நல்ல உறவு, பயணங்கள், உதவும்
நட்புக்கள் கிடைக்கும்.


மனம் ஒரு இடத்தில் லயிக்காமல் அலைந்து
கொண்டிருக்க காரணம் இப்படி வைக்கப்பட்ட
செருப்புக்களாக கூட இருக்கலாம்!!!!




ஒரே பக்கத்தில் வைப்பதால் மனம் ஒருங்கிணைந்து
மகிழ்ச்சியாகும்.




அலமாரிகளின் கதவுகள் எளிதாக தி்றந்துமூடும்
வகையில் இருப்பது அவசியம்.

நமது வீட்டில் இருக்கும் கதவுகள், டிராயர்கள்
ஆகியவை திறக்க கஷ்டமாக இருக்கிறது
என்றால் நம் வாழ்க்கையும் அப்படித்தான்.

வீட்டில் போதுமான அளவு வெளிச்சம், காற்றோற்றம்
இருக்கிறதா என பார்கக் வேண்டும். மின்விளக்கு
போட்டால்தான் எதுவும் தெரியுமென்றால் இயல்புக்கு
சற்று மாறாக வாழ்வு இருக்கும்.

ஃபெங் சூயியின் இந்த பகுவாவை பார்த்தால்
ஃபெங் சூயி நமக்கு எவ்வளவு வளத்தை தரும்
என்பது தெரியும்.




இனிய இல்லம் எல்லோருக்கும் இனியதாய்
வாழ்வுக்கு வளம் சேர்க்கும்.




FENG SHUI பற்றிய பல தகவல்களுக்கு

Friday, June 26, 2009

இறைவன் ஒருவனே!!

திருமணமான புதிது. அயித்தான் மும்பையில் மீட்டிங்கிற்கு
போய்விட நான் சென்னையில் அயித்தானின் அண்ணன்
வீட்டில் இருந்தேன்.

“சென்னையில எங்கங்கம்மா பாத்திருக்க?” என மாமா
கேட்டார்.

சிர்ப்புதான் என் பதில்!!! எங்கேயும் போனதில்லை.
திருமணமாகி 1 மாதத்துக்குள் ஹைதையில் பக்கத்திலிரூக்கும்
கடைதான் தெரியும். அப்படி இருக்க சென்னை???


என்ன பையன்ம்மா இவன்!! (:)எனக்கு சப்போர்ட் செய்து
அயித்தானை திட்டவும் ஒருத்தர் இருந்தார்,
அவர் இப்ப இல்லாதது வருத்தமே :(((( )
”சரி வா நான் அழைச்சுகிட்டு போறேன்! என்று மாமா
அஷ்டலட்சுமி கோவில், பீச் அழைத்துச் சென்றார்.

அருகிலே இருந்த சாந்தோம் சர்சுக்கு அழைத்துச் சென்றார்.
மனமார பிரார்த்தித்தேன். இப்படி ஒரு நல்ல உறவைகொடுத்ததற்கு.

“அப்பா,அம்மாகிட்ட சொல்லாதே! என்னடா சர்ச்சுக்கெல்லாம்
கூட்டிகிட்டு போயிருக்கானேன்னு நினைப்பாங்க! எல்லாம்
ஒரே சாமிதாம்மா!” என்றார். அப்பா அப்படி நினைக்க
மாட்டார்.

அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்தது எல்லா மதமும் ஒன்றே,
எல்லா தெய்வமும் ஒன்றுதான் என்று சொன்ன போது
சந்தோஷப்பட்டார்.

அப்பாவைப்போன்றே எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து
அன்பாக பார்த்துக்கொள்ளும் உறவு புகுந்த வீட்டிலும்
கிடைத்தது பாக்கியம்.


திருச்சி ரேடியோவில் பக்தி நிகழ்ச்சியில் அனைத்து மதங்களின்
பாடல்களும் இடம் பெறும். அதைக் கேட்காமல் விட்டால்
ஏதோ மனது பாரமாகவே இருக்கும். இன்று நாகூர் ஹனிபா
பாட்டு வரணும், குழலும் யாழும் பாட்டு வருமா? என
ஒரு சின்ன சஸ்பென்ஸ். இந்த நிகழ்ச்சி மட்டும்தான்
திட்டு வாங்காமல் முழுமையாக கேட்பேன் என்பதால்
கூடுதல் மகிழ்ச்சி. :)))









Get this widget | Track details | eSnips Social DNA



எனது விஷ் லிஸ்டில் பாக்கி இருப்பது வேளாங்கன்னியும்,
நாகூர் தர்காவும். இறைவனின் அருளால் அதுவும் விரைவில்
நிறைவேறும் என நினைக்கிறேன்.

இறைவனை நோக்கிச் செல்ல இருக்கும் பலவழிகள் தான்
மதங்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

பாடல்கள் எப்படி??? ஓட்டு போட்ட்டுட்டு போங்க.

Thursday, June 25, 2009

பாவம்!!! கடவுள்!!!!

ஆண்டவனை பார்க்கணும், அவனுக்கும் ஊத்தணும்
அப்ப நான் கேள்வி கேட்கணும் சர்வேசா!!!
தலையெழுத்தெந்த மொழியடா!!
தப்பிச்செல்ல என்ன வழியடா!!! இது ஒரு
பிரப்லமான திரைப்படப்பாடல்.(படத்தின் பெயர்
ஞாபகம் இல்லை. நடிகர் சத்யராஜ் என்பது
மட்டும் ஞாபகம் இருக்கு)


என் குறை உன் காதிலேயே விழாதா??
காது செவிடாகிப்போச்சா? என நமக்கு
துன்பம் நேரும் போதெல்லாமோ நாம்
கேட்ட வரம்(!!!) கிடைக்காத போதோ
திட்டுவோம்.


நம் குறைகள், முறைகள், பிரார்த்தனைகள்
அவன் காதில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
நாமும் நாம் கேட்டதெல்லாம் வரமாக
கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது.

BRUCE ALMIGHTY படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அந்த படத்தில் வரும் ஒரு காட்சி மிக மிக பிடிக்கும்.
எப்போதும் “அடுத்தவனின் இடத்தில் நாம் இருந்து
பார்த்தால்தான் அவனது பிரச்சனை நமக்குத் தெரியும்”,
என்று சொல்வார்கள்.

ஆண்டவன் இடத்துக்கு நம்மால் போக முடியாது.
ஆனால் இந்தப் படம் ஒரு சராசரி மானுடனுக்கு
ஆண்டவன் தன் சக்திகளை அளி்க்க, மானுடன்
ஆண்டவனாக என்ன செய்தான்? என்பதைச் சொல்லும்
படம். ஜிம் கேரி நடிப்பு எப்போதும் பிடிக்கும்.
Morgan Freeman நடிப்பு அபாராம்.



படத்தை விடுங்கள் படத்தில் நான் குறிப்பிடும் காட்சி
மக்களின் குறைகள் ஆண்டவனாக மாறிய புரூஸின்
காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரால்
நிம்மதியாக இருக்கவே முடியாது. எப்போதும்
மரணஓலம், காப்பாற்று என்று அபயம் கேட்பவர் ஒரு
பக்கம், அது கொடு, இது கொடு என கேட்பவர்
என பாவம்!!! அப்போது புரூஸ் பிரார்த்தனைகளை
ஃபைலாக்கி பார்த்தால் அவர் இருக்கும் இடமே
தெரியாத அளவு ஃபைல்களால் நிறைந்துவிடும்.
கணிணியில் இமெயில் ஆக்கினால் ஏற்படும்
விளைவு
இங்கே இருக்கிறது.



ஆண்டவனின் நிலை பரிதாபமானது. முருகன், ஏசு,
அல்லா என தனித்து பார்க்காமல் இறைவன் ஒருவனே
என அனைவரும் நினைக்க வேண்டும் என்று பொதுவாக
கூறுவார்கள். உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும்
பிரார்த்திக்கும் போது அவரின் நிலையை எப்போதாவது
யோசித்திருப்போமா!!

நம் முன்னோர்கள், ஆன்மீக வாதிகள் யோசித்திருக்கிறார்கள்.
ஆம் பக்தி செய்வதில் பிள்ளையாய், தந்தையாய், தாயாய்
நினைத்து பக்தி செய்வது போல் சரணாகதி எனும் ஒரு
வகை உண்டு. மொத்தமும் உன் காலடியில்! என் வாழ்வு
இனி உன் பொறுப்பு என அவன் காலடியில் வைத்தால்
மாட்டேன் என்றா சொல்லப்போகிறான்!!!!

தன் குழந்தைக்குபசிக்கும் என்று அம்மாவுக்குத் தெரியும்.
எந்த சமயத்தில் பசிக்கும், என்ன விரும்பி சாப்பிடுவான்?
என்றும் தெரியும். அதனால்தானே குழந்தை எந்தக்
கவலையும் இல்லாமல் இருக்கிறது!!!

தன் குழந்தையின் தேவையை நிறைவேற்றவும்,
மிகச் சி்றந்த வாழ்க்கையை அளிக்க வேண்டுமென்பதற்காகவும்
தானே தந்தை கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்.

அப்படி இருக்க உலகத்தில் இருக்கும் அனைத்து
உயிர்களுக்கும் தந்தையான அவனுக்குத் தெரியாதா?
நம்மை எப்படி ”வளர்க்க”வேண்டுமென்று!!

இன்னொரு விடயம் இருக்கு.

அதை கொடு, இதைக்கொடு என நாம்
கேட்பதை இறைவன் கொடுக்கிறான் என்றே
வைத்துக்கொள்வோம், ஆனால் ஆண்டவன்
அதை விட மிகச்சிறந்த ஒன்றை நமக்குத் தர இருந்து
நாம் கேட்டோம், குழந்தை மனது வருத்தப்படக்கூடாது
என நினைத்து கேட்டது குறைவானதாக இருந்தாலும்
கொடுத்துவிடுவான். இழப்பு நமக்குத்தான்.

இந்த பாடெல்லாம் படவேண்டாம் என்பதால்தான்
சரணாகதியே மேல். எல்லாம் அவன் செயல்
என்று கைகளை மேலே காட்டிவிட்டு நாம்
ஒன்றும் செய்யாமல் இருப்பது சரணாகதி அல்ல.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய்வருத்தக் கூலி தரும்” எனும்
வள்ளுவரின் வாக்கை மறந்துவிட வேண்டாம்.

நாம் நமது வேலையை ஒழுங்காக பார்ப்போம்.
அவன் தன் வேலையை ஒழுங்காக பார்ப்பான்.

இங்கேதான் கீதையின் சாராம்சம் வருகிறது.

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”

தட்டவும் வேண்டாம் கேட்கவும் வேண்டாம்
அவன் தானே தருவான்.

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் அவன்.

அவனிருக்க பயமேன்!!!!

************

ஓட்டு போடுங்கன்னு சொல்ல மாட்டேன்
போடுவீங்கன்னு தெரியும்

ஏதோ நினைவுகள்...

வீட்டில் வயதானவர்கள் இருந்தால் கிடைக்கும்
சுகமோ சுகம். அவ்வா வீட்டில் இருந்ததால்தான்
அப்பாவும், அம்மாவும் எங்கள் கவலையில்லாமல்
வேலைக்கு போனார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அவ்வாவுக்கு காலை உணவு சாப்பிட்டு பழக்கமில்லை.
மதியம் 11 மணி வாக்கில் மீல்ஸ் சாப்பிடுவார். பிறகு
இரவு டிபன் தான். வயதானவர்கள் குழந்தையை போல.
சிறு திண்டி தின்ன அதிகம் விருப்பம் காட்டுவார்கள்.
செரிமான சக்தி குறைவு என்பதால்
உணவின் அளவு குறைத்து சாப்பிடுவதால் வரும் பசி இது.

சாப்பாட்டிற்கு பிறகு ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்த
பின்னர் நான் பள்ளியிலிருந்து வருவேன். தம்பியும்
வந்து சாப்பிட்டு விட்டு திரும்ப பள்ளி செல்வான்.
2 மணி வாக்கில் அப்பா சாப்பிட வருவார். பல நாட்கள்
கையில் பக்கோடா கொஞ்சமாக காராபூந்தியுடன் தான் வருவார்.

அப்பா கொஞ்சமாக எடுத்துக்கொண்டு மீதியை எங்களூக்கும்
பாட்டிக்கும் தருவார். பாட்டிக்கு அந்த ருசி அதாவது
தூங்கி எழுந்தவுடன் ஏதாவது சாப்பிட வேண்டும் எனும்
எனும் வாய்க்கு அந்த ருசி பிடிக்கும்.

அப்பா பக்கோடா வாங்கி வராத நாட்களில் அல்லது
ஊருக்கு போய்விடும் நாட்களில் காலையில் செய்த
கறியில் கொஞ்சமாக தன்க்கென எடுத்துவைத்துக்கொள்வார்
பாட்டி. அதை சாப்பிடுவார்.



எனக்கும் தம்பிக்கும் விடுமுறையாக இருக்கும் நாட்களில்
ஏதாவது சாப்பிடவேண்டுமென தோன்றும். சோறு தின்னச்
சொன்னால் விளக்கெண்ணெய் குடித்தது போல் முகம் மாறும்.

தம்பி அவ்வாவை தாஜா செய்வான். ”சரி! இந்தா உங்களுக்கு
பிடிச்சது வாங்கிக்கோங்க, எனக்கும் பூந்தி வாங்கிட்டு வா”
என்பார் பாட்டி. அதுவும் குறிப்பிட்ட கடைதான்.

கீழ் 3ஆம் வீதியில் ஒரு வீட்டில் இது போன்ற திண்பண்டங்கள்
தயாரிப்பார்கள். அவர்களது டேஸ்ட் நன்றாக இருக்கும்.
அது எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் என்பதால்
அப்பா ஆபீசுக்கு எதிரில் இருக்கும்(இப்போ அந்தக் கடை
இல்லை) தெலுங்கு மாமா கடையில் வாங்குவோம்.

அப்பாவுக்கு விடயம் தெரிய வேண்டாம். தெரிந்தால்
அனாவசியாமாக செலவு என திட்டுவார் என பாட்டி நினைத்து
அப்பாவுக்குத் தெரியாமல் வாங்கி வரச் சொல்வார்.

ஊருல எங்களைத் தெரியாதவங்களூம் உண்டா?
இந்த லட்சணத்தில் அப்பா ஆபீஸுக்கு எதிரில் இருக்கும்
கடையில் வாங்கினால்??? அந்த கடை மாமாவை
அப்பா, அம்மா, பாட்டி அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் போனாலே அந்த மாமா வேண்டியதை
பொட்டலம் கட்டி கொடுத்துவிடுவார். காசுகொடுத்தால்
அப்பாவோட அக்கவுண்ட்ல!!! சேத்திடறேன்!!!! என்பார்.

அக்கவுண்டில் அதிகமாக பணம் ஏறும் என்பதால்தான்
அப்பா திட்டுகிறார் என்று தெரிந்து பாட்டியே ஒரு முறை
கடைக்கு வந்து,” நான் பணம் கொடுத்தனுப்பினால் அதை
வாங்கிக்கொள்ளுங்கள்!! என்று சொல்லிவிட்டார்.


பாட்டிக்கு தோன்றும் போது எடு சைக்கிளை! என்று
கிளம்பிவிடுவோம். சில சமயம் அப்பா ஆபீஸுக்கு போய்
பாட்டி வாங்கி வரச்சொன்னார் என சொல்ல கோபத்துடன்
அக்கவுண்டில் வாங்கிகோ! என்பார் அப்பா.




பாட்டிக்கு பல் கிடையாது. அதனால் காராபூ்ந்திதான்
சாப்பிடுவார். ஒரு முறை தயிரில் ஊறவைத்த பக்கோடா
வாய்க்கு மெதுவாக இருக்க அப்போது முதல் பக்கோடாவும்
சாப்பிட ஆரம்பித்தார்.
இன்று ஊரில் எத்தனையோ கடைகள் இருக்கின்றன. ஆனால்
சில இடங்களில் அந்த டேஸ்ட் இன்னமும் மாறாமல் இருக்கிறது.
அதில் ஒன்று கீழ 2ஆம் வீதியில் பெரிய படிக்கட்டுகள் வைத்த
வீட்டு வாசலில் விற்கப்படும் பஜ்ஜி.


இன்னமும் மாலை 6 மணிக்கு் அங்கே சுடச்சுட பஜ்ஜி வியாபாரம்.
வாழை இலையில் சுற்றி தருவார்கள். அங்கேயே சாப்பிடுபவர்கள்
தான் அதிகம். அவர்களின் தேங்காய்சட்னி மிக ருசி.




சேட்டுக்கடை ஒன்று கீழ ராஜவீதியில் முன்பு இருந்தது
இப்போது கோர்ட் பக்கம் கடை வைத்திருக்கிறார்களாம்.
அவர்களின் சப்பாத்தியை விட பிரபலம் அல்வா. சுடச்சுட
அப்பா வாங்கி வருவார். இதன் முன் திருநெல்வேலி
அல்வால்லாம் ஒன்றுமே இல்லை என்று எங்கள் ஊர்க்காரர்கள்
சொல்வார்கள். சிவப்புக்கலரில் நெய் மினுமினுக்க சூப்பர் டேஸ்ட்.

அம்மாவுக்கு கை வலி என்பதால் அப்பா சப்பாத்தி சாப்பிடவேண்டுமென்று
தோன்றினால் சேட்டுக்கடைக்கு போய் சப்பாத்தி வாங்கிக்கொள்வார்.

போனில் பேசும்போது அப்பா,” சேட்டு கடைக்கு போயிருந்தேம்மா!!
அல்வாவைபாத்தேன். உங்க ஞாபகம் வந்துச்சு” எனச்சொல்லும்போது
மனதில் ஏதோ உருளும் !!

Tuesday, June 23, 2009

எல்லோரும் உஜாலாவுக்கு மாறிட்டாங்க!!!

எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
எப்படி இப்படி எல்லோரும் உஜாலாவுக்கு மாறிட்டாங்க???

சொட்டு நீலம்டோய் உஜாலாவை சொல்லலை.

இப்ப யாரைக் கேட்டாலும் சொல்லும் விடயம்
யோகா& தியானம்.

பள்ளிக்கூடத்துல பசங்களுக்கு யோகா ஒரு பீரியடாவே
கட்டாயமா வெச்சிருக்காங்க.

எனக்கு P.M.S பிராப்ளத்தின் போது சந்திச்ச டயட்டீஷியன்
காலையில் என்னை யோகப்பயிற்சி செய்யச் சொன்னார்.

ஆர்தோ டாக்டரிடம் சென்ற நண்பருக்கு பொழுது
யோகாவை பரிந்துரைத்து மெடிட்டேஷன்
செய்யுங்கள் என்று சொன்னாராம் டாக்டர்.

வாய்ப்புண் என்று மருத்துவரிடம் சென்ற
அயித்தானுக்கு மெடிட்டேஷன் செய்யச் சொன்னாராம்.
(வாய்ப்புண்ணுக்கு வயிற்றுப்புண் மட்டும் காரணமில்ல,
டென்ஷன்(ஆபிஸ் டென்ஷன் தான்னு சொன்னா
நம்பவா போறீங்க!)

சைனஸுக்காக ஆஷிஷை ஹோமியோபதி
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அவர்
மருந்து கொடுத்து தினமும் யோகா,மெடிட்டேஷன்
செய்யச் சொல்லுங்க. மிகவும் நல்லது.
It will help for personality development also என்றார்.

மருத்துவர்கள், கவுன்சிலிங் எக்ஸ்பர்டுகள்,
உடற்பயிற்சியாளர்கள் என எல்லோரும் பரிந்துரைப்பது
யோகாவைத்தான். அதான் எல்லோரும் உஜாலாவுக்கு
மாறிட்டாங்களான்னு கேக்கறேன்?

அனைவரும் யோகா, தியானத்தை
பரிந்துரைப்பது ஏன்??

யோகா நம் உடலுடன் சேர்த்து மனதையும்
புத்துணர்ச்சியாக்குகிறது. யோகா உடம்பை
மட்டுமல்ல உள்ளூக்குள்ளூம் நம்மை
வலுவாக்குகிறது.






ஈஷா, ஆர்ட் ஆஃப் லிவிங்க் போன்ற இயக்கங்கள்
யோகப்பயிற்சி கற்றுத்தருகின்றன.

இலங்கையில் இருந்த பொழுது ஆர்ட் ஆஃப் லிவிங் பயிற்சியில்
யோகா கற்கும் வாய்ப்பு கிடைத்தது. (ஒரு விஷயம் கேட்கணும்.
இங்கே மட்டும் 5 நாள்பயிற்சிக்கு 3000. முழு நாள் என்றாலும்
அதிகமாக இருக்கு. அங்கே தினம் 3 மணிநேரம் 1 வார பயிற்சிக்கு
1500 ஸ்ரீலங்கன் பணம்தான் கொடுத்தேன்)

யோகா கற்று பயிற்சி செய்ய ஆரம்பித்த பின் புதிதாய்பிறந்ததாய்
உணர்ந்தேன்.எடை குறைப்புக்கு இதை விட மிகச்சிறந்த வழி இருக்கவே
முடியாது.



என்னுள் எத்தனையோ மாற்றங்கள். மன்ச்சோர்வு குறைந்தது.
மெடிட்டேஷன் செய்வதால் டென்ஷன் குறைந்து உடம்பும்
மனதும் லேசானது போலிருக்கும். எந்த வேலையையும்
பொறுமையாக செய்ய உடம்பும், மனமும் ஒத்துழைக்கும்.






”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை
ஒத்துக்கொள்” என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.


யோகக்கலையையும் கற்றுக்கொள்வதாலும் நம்
கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
யோகா பற்றிய விக்கிப்பீடியாவுக்கு





தினமும் காலையில் 30 நிமிடம் செலவழித்தால் நாளெல்லாம்
புத்துணர்ச்சியாக இருக்கலாம். எங்கும் எவராலும் பரிந்துரைக்கப்படும்
யோகக்கலையை கற்று ஆரோக்கியாமாக வாழலாம்.

Monday, June 22, 2009

அப்துல்லா மாமா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்....

உங்க பாட்டு என்ன மாயம் செஞ்சுச்சுன்னு தெரியலை அப்துல்லா :))

ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கும் உங்க பாட்டு எப்பவும்
மண்டையில் ஓடிகிட்டே இருக்கும் போல.

அடிக்கடி கேட்டுகிட்டே இருந்து, இப்ப அடிக்கடி
முனுமுனுக்கும் பாடலாகி போச்சு உங்க பாட்டு.

கோமா பின்னூட்டத்துல சொல்லியிருந்தது போல
எஃப் எம்கள் அலறப்போகின்றன.

பாட்டைக் கேட்டதற்கப்புறம் தான் உங்களை சந்திச்சாங்க.

பொதுவா அவங்களுக்கு பாடல்கள் தன்னிச்சையா தெரியாது.
திரையில் ஓடும்போது அல்லது கேட்கும் போது கூட
பாடித்தான் பழக்கம்.

“காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா” மட்டும் விதிவிலக்கா
முனுமுனுக்கப்படுவது ஆச்சசரியம்... :)) ஆஷிஷ் டான்ஸ்
ஆடிக்கொண்டே அந்த பாட்டைப் பாடுவது சூப்பரா இருக்கும்.

சரி மேடைக்கு ஏன் வரச்சொன்னேன்???

மேட்டர் இருக்கு. சனிக்கிழமை இசையருவி டீவியில் நடந்த
இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோரின்
ராம்ப் ஷோ பார்த்துக்கொண்டிருந்தோம்.

அம்ருதா உடனே, ”நம்ம அப்துல்லா மாமா ஏன் ராம்ப்
ஷோவில் கலந்துகொள்ளவில்லை?!!” எனும் கேள்வியை
எழுப்பினாள்.

மாமா பாட்டு இப்பத்தானே ரிலீஸ் ஆகியிருக்கு?

ஆயிடுச்சுல்ல. அப்ப மாமாவும் பாடகர்தான். சோ
மாமாவும் ராம்ப் ஷோவுல வந்திருக்கணும்!!!!!
இது ஆஷிஷ்.


என்னத்த சொல்ல.

சீக்கிரமே இது மாதிரிஒரு நிகழ்ச்சியில் சுசித்ரா,
மஹதி போன்ற இசைக்குயில்களுடன் ஒரு ராம்ப் ஷோவில்
நீங்க கண்டிப்பா கலந்து கொண்டே ஆகவேண்டும்.

அப்துல்லா கண்டிப்பா மேடைக்கு வரவும்.

ஆமா சொல்லிட்டேன்.

Sunday, June 21, 2009

WORLD MUSIC DAY

இன்று உலக இசை தினம். எதெதற்கோ தினம் வைத்துக்
கொ்ண்ட்டாட்ங்கள் நடைபெறும் பொழுது இசைக்கு ஒரு நாள்
வைப்பது தவறே இல்லை.

இசைக்கு அப்படி என்ன முக்கியத்துவம்??


இசையை விரும்பாதார் யாரும் உண்டா???

இசைக்கு மொழி கிடையாது. இசைப்பிரியர்களுக்கு
இசைதான் மொழி.

யோசித்து பார்த்தால் என் பிள்ளைப்பிராயம் முழுதும்
இசையுடன் தான் கழிந்திருக்கிறது.

ரேடியோவும்,நானும் இணைப்பிரியா தோழிகளாச்சே!!!

எப்போதும் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற்போல் பாட்டு யோசிப்பது
என் பழக்கம். உபயம் விவிதபாரதி,திருச்சி அலைவரிசைகளில்
வந்த சினிமா பாடல்கள். ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள்
தொகுப்பு அருமையா இருக்கும்.



இசை என்னை மகிழ்விக்கும், தாலாட்டும், துவளும்போது
மனதுக்கு இதமாக்கும். எங்கும் எப்போதும் இசை இருந்தால்
போதும்.


இசைக்கு இறைவன் கூட அடிமை எனும் போது நாமெல்லாம்
எம்மாத்திரம்???


Get this widget | Track details | eSnips Social DNA






இசை நம்மை தளர்த்தி குதூகலிக்கச் செய்கிறது.

இசையை கொண்டாடுவோம்!!!

இனிமையான வாழ்வு வாழ்வோம்.

Saturday, June 20, 2009

அன்புள்ள அப்பா...

ஹலோ ரமணி சார்,

இன்றைக்கு தந்தையர் தினம். அதான் உங்களுக்கு
ஒரு கடிதம் எழுதலாம்னு... (ரொம்ப நாளாச்சுப்பா)

போன்ல யாரு கூட பேசினாலும் முதல் வாக்கியம்
”வணக்கம் ரமணி” என்ற சுய அறிமுகம் + வாழ்த்துக்களுடன் தான்
உங்க உரையாடல் துவங்கும்.

வாழ்த்தும்போது வளமான வாழ்வு, மனம்போல வாழ்வு
இதைத் தவிர வேறு வாழ்த்து வாயில் கேட்டதேயில்லை.


ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை மட்டுமல்ல
எனக்கு எப்போதும் தந்தையர் தினம் தான்.

பக்தி செய்யும் போது இறைவனை தந்தையாகத்தான்ப்பா
பார்க்கிறேன்.

சூர்ய வம்சம் படத்தில் ஒரு வசனம் வரும் அப்பா.(உங்களுக்கு
மிகவும் படமாச்சே) உளிக்கு தப்பின கல் சிற்பம் ஆவதில்லை.

ஆமாம், என்னை எப்படி எல்லாம் செதுக்கினீங்க. அதன்
பலனை நான் இப்ப சந்தோஷமா அனுபவச்சிகிட்டு இருந்தேன்.

அடிக்கடி டூருக்கு போகும் வேலை உங்களுக்கு. ஊருக்கு போகும்
அந்த நாட்களில் உங்கள் லுங்கியைக்
கையில் பிடித்துக்கொண்டுதான் என் இரவுகள் கழியும்.
பல முறை ஜுரம் கூட வந்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.

3 மாதம் சிலோனை சுற்றி பார்க்கப்போகிறேன் என்று
கிளம்பியவர், ஒரே மாதத்தில் திரும்பிய காரணம்
அங்கே என் மற்றும் தம்பியின் வயதொத்த பிள்ளைகள்
இருவரை பார்த்ததும் எங்கள் ஞாபகம் அதிகமாகி
திரும்பியது தான் என தெரிந்த போது பலரின்
புருவம் உயர்ந்தது.


தினமும் இரவு நான் தூங்கிய பிறகு வீட்டிற்கு வரும்
நீங்கள் எனக்காக வாங்கி வந்த தின்பண்டத்தை நான்
தூக்கத்தில் எழுந்து திண்ணாவிட்டால் எப்படி கோபப்படுவீர்கள்??

சைக்கிள் கற்றுக்கொண்டதற்கு, வேகமாக டைப் அடிப்பதற்கு
என எல்லாவற்றிற்கும் எனக்கு நீங்கள் தரும் ட்ரீட் இதோ.
இன்றும் இதில்லாமல் என்னால் முடியாது.




நீங்கள் வைக்கும் ரசத்துக்கு நானும் தம்பியும் அடிமை.
உங்களைப் போல் நானும் நல்ல ரசம் வைப்பதை ருசித்து
நீங்கள் அடித்த கமெண்ட்” என் கை மணம் அப்படியே உன்
கிட்ட இருக்கு”!!!

சமீபத்தில் எனக்கு கைவலி அதிகமாகி அவதி பட்ட பொழுது
போனில் நீங்கள் ,”புதுகைக்கு கிளம்பி வாம்மா! நான் சமைத்து
போடுகிறேன்” என்று சொன்ன பொழுது நீங்கள் அம்மாவா? அப்பாவா?
என நினைத்து குழம்பினேன்.

தந்தையின் நிலை நாம் பெற்றோர் ஆகும் போதுதான் தெரியும்.
இன்று என் பிள்ளைகளை வளர்க்க நீங்கள் கற்றுக்கொடுத்த
பாதைதான்.


என் பதிவுகளில் நிறைய்ய இடங்களில் நீங்கள் இருப்பீர்கள்
அப்பா. அந்தப் பதிவுகளின் தொ்குப்பு சில இங்கே.

கலர் டீவி

உங்கள் பிறந்த நாள் பதிவு

சைக்கிள் கற்ற அனுபவம்

இனியும் உங்களைப் பற்றி நிறைய்ய எழுதுவேன் அப்பா.

மனமார்ந்த தந்தையர்தின வாழ்த்துக்கள்.

அன்னை அன்பைத் தருகிறாள். தந்தை அறிவைத் தருகிறார்
என்பது உலக வழக்கு. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு
தந்தைக்கும் என் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
எம்டன் மகள்

Friday, June 19, 2009

விளக்கேற்று... விளக்கேற்று... வெள்ளிக்கிழமை...

என் அம்மம்மா ஒரு கதை சொல்வார். ”சம்பத் சுக்ரவாரம்”
எனும் விரதத்தின் கதை அது. 7 வீடுகள் வரிசையாக இருக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் காலை காட்சி எப்படி என்பதை கையில்
துணி மூட்டையுடன் பெண் ஒருவர் பார்த்து வருவார்.

ஒரு வீட்டில் இரவு போடப்பட்ட பாய், தலையணை
சுருட்டப்படாமல் அப்படியே இருக்கும்.

ஒரு வீட்டில் கிழிந்த உடையுடன் வீட்டுத் தலைவி
சுற்றிக்கொண்டிருப்பாள்.

ஒரு அம்மாள் தலையை விரித்து போட்டு நடுவீட்டில்
பேன்பார்த்துக்கொண்டிருப்பாள்.


மற்றொரு வீட்டில் கணவன் மனைவிக்குள் குடுமி, பிடி சண்டை நடக்கும்.

வேறொரு வீட்டில் கணவன் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருக்க
பெண் அழுதுகொண்டிருப்பாள்.

இப்படி 6 வீடுகள் அவந்தரையாக கிடக்க ஒரு வீட்டில்
அவர்கள் மிக ஏழ்மையாக இருந்தாலும் சுத்தமாக
வாசல் தெளித்து கோலம்போட்டு, மாவிலை வைத்து,
சாம்பிராணி வாசத்துடன் இருக்கும். துணி மூட்டையுடன்
இருக்கும் அந்த பெண் லட்சுமி தேவி எனவும் அன்னை
நிரந்தரமாக அந்த கிரகத்தில் வசிப்பதாகவும் கதை
இருக்கும்.

இந்தக் கதை சொல்லிகொடுக்கும் கருத்து எப்போதும்
நம் வீடு சுத்தமாக, சுகமாக, இனிமையாக இருக்கவேண்டும்
என்பதே.

ரெயிகி கற்கும் வரை இந்த திருஷ்டி கழித்தல் ஆகியவற்றின் மீது எனக்கு
நம்பிக்கை இருந்ததில்லை. அடுத்தவரின் நெகட்டிவிட்டி,
கண் திருஷ்டி எப்படி நம் அவுராவை தாக்குகிறது என்று தெரிந்தது
முதல் “cleansing” (திருஷ்டி கழித்தல்) கண்டிப்பாய் செய்துவிடுவேன்.


குமுதமோ விகடனோ ஞாபகம் இல்லை. அதில் வெளிவந்த
கதை என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும்
ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக
வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்.
ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும்
வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.

இருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு.
ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார்.

ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க
,
“உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும்
பயங்கர ஸ்ட்ரெஸ்!!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம்.
ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை
அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி
விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க
போகவேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வரவேண்டுமென்றும்
தாயார் சொல்கிறார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள்
இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது.




கைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல
அங்கே செல்கின்றனர் இருவரும்.


மணம் வீசும் மலர்களின் வாசம்...



அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம்
அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின்
இன்பத்தை அனுபவிக்கின்றனர் இருவரும்.

கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி
கிடைத்ததாகச் சொல்ல... தாயார் மகிழ்ந்த்தாக கதை போகும்.

உளவியல் ரீதியாகவும் இது உண்மை. மலருக்கு மருத்துவ
குணம் இருக்கிறது. தீபத்தின் ஒளியில் மன இருளும் அகலும்.

இப்படி பூக்களால் அலங்காரம் செய்து வைத்து..


அழகாக விளக்கேற்றி வரவேற்பரையில் வைத்தால்..



அழகு மட்டுமல்ல அந்த இடமே பவித்ரமாகும்



வீடும் கோவிலாக நிம்மதி தரும். கிராமங்களில்
இன்றும் செவ்வாய், வெள்ளி வீடு முழுதும் தூபம் காட்டும்
பழக்கம் இருக்கிறது.

வாய்ச்சண்டை தகராறு இல்லாத வீடே கிடையாது.
அப்படி இருக்கும்பொழுது அந்த வார்த்தைகள் நம் வீட்டிற்கு
நெகட்டீவ் எனர்ஜியாகி இருக்கும் பாசிடிவ் எனர்ஜியை
வேலை செய்ய விடாமல் தடுக்கிறது. தூபங்கள், மணியோசை
போன்றவை நெகட்டிவிட்டியை விரட்டி பாசிடிவிடியை
அதிகமாக்குகிறது.

நெகட்டிவிட்டி இல்லாத பொழுது, பாசிட்டிவிட்டி அதிகமாக
வேலை செய்து நன்மையைத் தரும். குடும்பத்தில் அமைதியைத் தரும்.
மனதில் அமைதி தவழ எல்லோரும் இன்முகத்துடன் இருப்பதால்
அவரவர் வேலையை தவறில்லாமல் செய்வதால் ஐஸ்வர்யம்
பெருகும். லட்சுமி தேவி என்றும் நம்மு்டன் இருப்பாள்.

Thursday, June 18, 2009

காசு மேல... காசு வந்து....

அயித்தானின் அண்ணன் மகள் திருமணத்தின் போது
நடந்ததுஇது. பெண்ணிற்கு நகை வாங்க
கடைக்குச் சென்றிருந்தோம்.

நகைகள் வாங்கும்போது கையிருப்பு கொஞ்சம்
பற்றாக்குறையாக இருந்தது. திட்டமிட்டதுக்கு மேல்
அத்தை(அண்ணன் மனைவி) தாலிக்கொடியும் 3 பவுனுக்கு
வாங்கியிருந்தார்.

”தாலிக்கொடி மட்டும் அப்புறம் வாங்கிக்கொள்ளலாம்”
என மாமா முடிவு செய்த பொழுது சிரிப்புடன் அத்தை
”அதையும் இப்பவே வாங்கலாம்”, என்று சொல்ல
மாமா எப்படி பணம் கட்டுவது என யோசித்துக்கொண்டே
தன் க்ரெடி கார்டை எடுப்பதற்குள் அத்தை சிரிப்புடன் தன்
கைப்பையிலிருந்து ஒரு பர்ஸை எடுத்து நகைக்கடைக்காரரிடம்
கொடுத்து ,” எத்தனை எடை? என்ன விலைக்கு
எடுப்பீர்கள் என பார்த்து சொல்லுங்கள் ”!!என சொல்ல
அனைவருக்கும் ஆச்சரியம்.

அத்தை கொடுத்த பர்ஸிலிருந்து விழுந்தது
அத்தனையும் தங்கக் காயின்கள். 20/25 காசுகள் இருக்கும்.
ஒன்று, இரண்டு கிராம் எடைகள் இருந்தன.

3 பவுன் தாலிக்கொடி வாங்க அந்த பணம்
போதுமானதாக இருந்தது. சந்தோஷத்துடன்
வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

“எப்படி இப்படி சேர்த்து வைத்தாய்?” என மாமா
கேட்க அத்தை சொன்னது ஆச்சரியமாக அதே
சமயம் உபயோகமான தகவலாகவும் இருந்தது.

ஆசிரியையாக வேலை பார்த்த அத்தை தன்
கைச்செலவில் மிஞ்சும் பணம், உறவினர்கள்
கொடுக்கும் பணம் ஆகியவை சேர்ந்ததும்
தங்கக்காசாக வாங்கி வைத்துவிடுவாராம்.

இப்படி கொண்டி உள்ள காசுகள் கோர்த்துக்கொள்ள
உதவும். ஆனால் அவை திருப்பி கொடுக்கும்பொழுது
விலை குறைவாக போகும்.


பதிலாக இப்படி ப்ளையின் காசுக்கள் வாங்குவதுதான்
சிறந்தது என்று ஒரு கடைக்காரர் சொல்லிக்கொடுக்க
அதே போல் சேர்த்து வைத்ததாகச் சொன்னார்.

எனக்கும் இது நல்ல யோசனையாகப் பட்டது.



தங்கத்தில் முதலீடு செய்வது மிக நல்லது. கஷ்டபட்டு
சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டினால்தான்
பணம் பெருகும். நிலம்,வீட்டில் முதலீடு செய்வது
சாலச்சிறந்தது. அதற்கடுத்தாக வருவது தங்க முதலீடு.
தேவைப்படும்போது பணமாக மாற்ற ஏதுவானதும் கூட.

என் தோழி ஒருவரிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்த
பொழுது அவரும் இதை ஆமோதித்து தன் கருத்தைச் சொன்னார்.

தனது மகள்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம்
வைக்காமல் அதற்கு ஈடான தொகைக்கு தங்கக் காசுகள்
வாங்கி வைத்துவிடுவாராம்.
நல்ல நாள், பெரிய நாள் என எல்லா நாட்களுக்கும்
உடைகள் எடுக்காமல் சில சமயம் தங்கக்காசாக
வாங்கி வைத்துவிடுவாராம்.

”என் மகள்கள் பெரிதானதும் அவர்களுக்கு பிடித்தமான,
அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ற நகைகள் வாங்கிக்கொடுக்க
இந்த காயின் கலெக்‌ஷன் உதவும். இப்போதைய தேவைக்கு
2 தோடு, 1 செயின், 1 நெக்லெஸ் வாங்கியுள்ளேன்” என்ற
போது ”ஆமாம்!! இதுவும் நல்லாத்தான் இருக்கு” என
நினைத்தேன்.

ஐடியா நல்லா இருக்குல்ல..

இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி போன்ற வங்கிகள்
தாமே தங்கக் காசுகளை விற்கின்றன. அவற்றை வாங்க
மாதாந்திர சேமிப்புத் திட்டமும் இருக்கிறது. சேமிப்புக்கு
சேமிப்பும் ஆச்சு, தங்கம் வாங்கினாப்லயும் ஆச்சு.

FAILING TO PLANNING IS PLANNING TO FAIL
என்று எங்கோ படித்திருக்கிறேன்.

திட்டமிட்டு் வாழ்வோம். நம் முதல் செலவு சேமிப்பாக
இருக்கட்டும்.

இனி உங்கள் வீடுகளிலும் காசு மழை கொட்டட்டும்..

Wednesday, June 17, 2009

எங்க ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுபோச்சுண்ணே....

””நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!!!”” அப்படின்னு
கேட்டுக்க வேண்டிய நிலமையா போச்சு...

எங்க ஊரு (ஹைதை :) ) ரொம்ப நல்ல ஊரா இருந்துச்சு.
என்னிய பொறுத்தவரைக்கும் எந்த ஊர்ல ஆட்டோகாரங்க
வாய்ச்சண்டை போடாம தன் ஊருக்கு வரும் விருந்தினரை(!!)
மனிதரா மதிச்சு பேசி வண்டில போக வேண்டிய இடத்துக்கு
கூட்டிகிட்டு போறாரோ அது ரெம்ப நல்ல ஊரு.

ஹைதை அப்படித்தான் இருந்துச்சு. செகந்திராபாத்
ஷ்டேஷனில் இறங்கியதும் வெளியே வந்தால் ஆட்டோக்கள்
வரிசையாக இருக்கும். அருகில் போலிஸ்காரரும் இருப்பார்.
பயணிகள் ஏறிக்கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்தைச்
சொன்னால் போதும். ஆட்டோ அண்ணன்கள் எந்த தகறாரும்
செய்யாமல் மீட்டர் போட்டு கூட்டிச் செல்வார்கள்.



சிடிக்குள் எங்கு செல்லவேண்டுமென்றாலும் மீட்டர்தான்.
சிலர் சூடு வைத்தாலும், மீட்டர் போட்டு கூட்டிகிட்டு போறாங்க,
பேரம் பேசுதல், வாய்சண்டை இல்லாமல் நிம்மதியா
போய்கிட்டு இருந்துச்சு.


அப்படியே இருந்துட்டா?? நிலை மாறும் உலகில் யாரு ஒரு
ஹைதை ஆட்டோ அண்ணாத்தே சென்னைக்கு ஒரு விசிட்
அடிச்சிட்டு வந்திருப்பாரு போல!!!

அட! நம்ம சகாக்கள் அடுத்த ஊர்ல கொள்ளையில்ல
அடிக்கறாங்க!!! அப்படின்னு பாடம் கத்துகிட்டு வந்து
இங்க இருக்கற ஆட்டோ அண்ணன்களுக்கு சொல்லி கொடுத்து
விட்டாங்க போல!! இப்ப இங்க நிலமையே தலைகீழாகிப்போச்சு!!!


ஆட்டோன்னு கூப்பிட்டா தலையை வலமும் இடமும் ஆட்டிட்டு
போயிடறாங்க...

சிலர் இன்னும் மேல் வண்டி காலியா இருந்தாக்கூட நிக்காம
சர்ருன்னு போயிடறாங்க.

தப்பித்தவறி வர்றவங்களும் மீட்டர்லாம் போடறதே இல்லை.
சென்னைப்பாடத்தை கரெக்டா ஃபாலோ செய்யறாங்க.
ஃப்ளாட் ரேட்தான். இதுல ஒரு சந்தோஷம் என்னன்னா!
சென்னையில இருக்கற மாதிரி அடாவடி இல்ல. மீட்டரை
விட அஞ்சோ, பத்தோ கூட இருக்கும் அம்புட்டுதான்.

மினிமம் ரேட் (12 ரூபாய்) வரக்கூடிய இடங்களுக்கு
அநியாயமா 20, 25, 30ன்னு ரேட் பேசுவாங்க.


மீட்டர் போட்டு ஒட்டுற சில நல்ல உள்ளங்களும்
இருக்காங்க.

எங்க ஊரு கெட்டுபோச்சுன்னு புலம்பினாலும்
எனது சென்னை விசிட்டுகளின் போது ஒவ்வொருமுறையும்
அயித்தானுக்கும் ஆட்டோக்காரர்களுக்கு சண்டை
நடக்காமலேயே இருககாது!! (கோபமே படாத
மனிஷனையும் சண்டை போட வெச்சு புண்ணியம்
கட்டிகிடுவாங்க)

அவங்களுக்கு இருப்பது வாயா!! இல்ல வேறு
ஏதேனுமான்னு புரியலை. ஆட்டோல யாரும்
ஏறாட்டி அன்னைக்கு வீட்டுல அடுப்பு எரியாதுன்னாலும்
“தெனாவெட்டா” பேசென்ஜர்ஸை” அவர்கள்
நடத்தும் விதம் படித்த நமக்கு அவமானமாக
இருக்கும். இப்படி ஆட்டோவுல போறதுக்கு
நடந்தே போகலாம்னு”! தோணும். அந்த அளவுக்கு
மோசம்.




எனது சமீபத்திய சென்னை விசிட்டில் ஆட்டோக்காரர்களுக்கு
அநியாயாமாக பணம் அழுதேன். நல்ல உள்ளம் படைத்த
ஒரு ஆட்டோக்காரர் ,”இது அடாவடின்னு எனக்கும் தெரியுதும்மா.
மீட்டர் வெச்சிருக்கோமே தவிர யாரும் போடுவதேயில்லை.
அடுத்தவங்கதான் போடறதில்லை, நாமளாவது போடலாமேன்னு
பாத்தா மத்த ஆட்டோக்காரங்க தகராறு செய்யறாங்கம்மா.
அதனால்தான் போகவர ஆகும் சார்ஜை(ஒன்வேயா இருந்தாலும்!!)
பயணிகள் கிட்ட வாங்கறோம்.
அரசு ஏதும் செய்ய மாட்டீங்குது” என்று என்னிடமே
புலம்பினார்.

பாஷா படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் பாடலில் சுத்தமாக
நிஜமில்லை. இது ரஜினி என்னும் ஒரு நடிகர் ஆட்டோக்காரனாக
நடிக்க அவருக்காக எழுதப்பட்ட பாடல் என்பது என் எண்ணம்.



சிங்காரவேலன் படத்தில் கமல் சென்னைக்கு வந்து ஆட்டொக்காரர்களிடம்
படும் அவஸ்தை, கருவாட்டு வாசத்துக்கு ஆட்டோக்காரர் படும்
அவஸ்தை இதெல்லாம் ஒரு முறை நினைச்சு பாத்துக்கோங்க.
சூப்பர் காமெடில்ல..அந்த வீடியோ தேடினேன். கிடைக்கலை.


ஆட்டோக்காரர்களின் ஓட்டும் விதம் அவர்களால் ஏற்படும்
விபத்துக்கள் எல்லாவற்றையும் யோசிச்சுத்தான் சிங்கையில்
ஆட்டோக்கு நோ சொல்லிட்டாங்க.

ஆட்டோக்காரர்களிலேயே மிகச் சிறந்தவராக நான் கருதுவது
அண்ணன் ரவியைத்தான் அவரைப்பற்றிய பதிவு இங்கே..


சிலரை மாற்ற முடியாது அதில் ஆட்டோக்காரர்களுக்குத்தான்
முதலிடம்...

Monday, June 15, 2009

நிலை மாறும் உலகில்?!!?

இது என்னுடைய அனுபவம் மட்டுமல்ல.
பலரின் அனுபவமாக இருந்திருக்கும் என்பதில்
சந்தேகமேயில்லை.

ஏர்போர்டுகளில் இருப்பது போல் ரயில்வேஷ்டேஷன்களிலும்
ட்ராலி இருந்தால் இந்த போர்டர்களுடன் போராட வேண்டியிருக்காதே
என்று அத்தனை பேரும் அலுத்துக்கொண்டிருப்போம் தானே!!

ரயில்வே ஷ்டேஷனில் இத்தனை தான் கூலி என எழுதி
வைத்திருந்தாலும் அடாவடியாக பேசுவது, ரயில் நிற்குமுன்னே
பயணிகளை இறங்கவிடாமல் பெட்டிக்குள் ஏற முயல்வது,
தெனாவெட்டாக பேசுவது என எல்லா ”சிறப்பு” அம்சங்களும்
இல்லாத போர்ட்டர் ஒருவரை நாம் கண்டிருந்தால் நாம்
ஏதோ பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்கிறோம் என்று
அர்த்தம்!!!!

வேறு வழியில்லாததால் அதிகாலையில் இவர்களுடன்
சண்டையிட்டு போகும் இடத்திற்கு தாமதமாகுமே!
என எப்படியோ பேரம் பேசி, மூட்டையைத் தூக்கிச்
செல்வார்கள்.

போர்ட்டர்கள் மேல் எப்போதும் எனக்கொரு மரியாதை +
இரக்க குணம் உண்டு. நம்மால் சுமக்க முடியாத
சுமையையும் அவர் ஒருவரே தலையிலும், கைகளிலும்
தாங்கி தன் பிழைப்பை நடத்துகிறாரே என்று
நியாயமான கூலிதான் கொடுப்பேன். அடாவடியாக
பேசுவர்கள் மீது கோபம் தான் வரும்.

வடிவேலு சொல்வது போல் ” அந்த அடாவடிக்கும்
ஆண்டவன் முற்றுபுள்ளி வெச்சிட்டான்ல்!வெச்சிட்டான்ல”
என எகத்தாளம் போடத் தோணுது. இப்போது
எவரும் யாரும் கொண்டு செல்வது ட்ராலி பேக்தான்.


என்ன ஒரு சொளகர்யம் இதில்!!. சின்ன புள்ளைங்களும்
சர்.. சர்ர்..ன்னு இழுத்துகிட்டு வந்திடலாம். போர்டர்களூடன்
மல்லுகட்ட வேண்டியதில்லை என்பதே பெரிய சந்தோஷம்.




ஆனால் சந்தோஷமும் படமுடியவில்லை. போர்ட்டர்கள்
ட்ராலி பேக் கொண்டு செல்லும் அதிக பயணிகளைப்
பார்த்துக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருக்கிருக்க
வேண்டிய நிலமையில் இருக்கிறார்கள்.

”என்னது உங்க மாப்பிளை ஃப்ளைட்ல வந்தாப்லயா?
கேவலமா இருக்கு!!!!” என விகடனில் ஜோக் போடும்
அளவுக்கு விமான டிக்கெட்கள் விலை குறைந்து
கிடைக்க பலரும் விமானத்தில் தான் பறந்தார்கள்.

இப்போது நிலை மாறி அதிகமாக ரயில் பயணத்தைதான்
அனைவரும் தேர்ந்தெடுக்கிறார்கள். (பெங்களூர்,
ஹைதை போன்ற ஊர்களில் ஒதுக்கு புறமாக
விமானநிலைய வைத்திருப்பதால் விமான நிலயத்துக்கு
காரில் செல்லவே 500 ஆகிறது)

வி.ஐ.பி சூட்கேஸ் (வெறும் பொட்டியே செம கணம்)
பயணத்துக்கொண்டு செல்வதை பெருமையாக நினைத்தவர்கள்
கூட இப்போது ட்ராலி பேக்தான். இந்த நிலையில்
கஷ்டபடுவது போர்டர்கள்தான். இந்த பெட்டிகள்
அவர்களின் வயிற்றில் அடித்த மாதிரிதான் இருக்கின்றன.

முன்பு ஒரு கதை(யா)(கட்டுரையா)படித்தேன்.
கோவில்களில் கற்பூராரத்தியின் போது சிகண்டி,
தவில்,சங்கம்,மணி இன்னும் சில மங்கள் வாத்தியங்கள்
இசைப்பார்கள். அதற்கென ப்ரத்யேக வாசிப்பவர்கள்
கோவிலிலேயே இருந்து 3 கால பூஜைக்கும் வாசிப்பார்கள்.

ஆனால் சமீபகாலமாக கோவிலுக்குச் செல்லும் அனைவர்களும்
மின்சாரத்தில் இயங்கக்கூடிய பஞ்சவாத்தியம் ஒலிப்பதை
கேட்டிருப்பீர்கள். சுவிட்சு ஒண்ணைத் தட்டிவிட்டால்
டம் டம்மென வாத்திய ஒலி வருகிறது.

பல கோவில்களில் இந்த மிஷின்கள்தான் இப்போது.
அப்படியானால் இதற்கு முன்னர் வாசித்தவர்கள்
என்னவானார்கள்??!! வேலையில்லாமல் அவர்கள்
ஹோட்டல்களில் சர்வராகவோ, மாவரைப்பவராகவோ
வேலை பார்ப்பது போல் அந்தக் கதை/கட்டுரையில்
இருக்கும். அவர்களின் நிலை இப்படியும் ஆகுமோ
என்று நினைத்து மனது வலித்தது.

ட்ராலி பேக்குகள் நிறைய்ய உபயோகத்தில்
வந்தபின்னர் போர்டர்களின் நிலை என்ன?
எந்த விதத்தில் மாறப்போகிறது???????

Friday, June 12, 2009

பாதச் சுவடுகள்....

துன்பமும் இன்பமும் நிறைந்ததுதான் நம்வாழ்க்கை.

துன்பத்தில் சோர்ந்து போவதும், இன்பத்தில்
அமிழ்ந்து போவதும் இயல்பு.

துன்பம் நேர்கையில் யாழெடுத்துயாரும்
இன்பம் சேர்க்க மாட்டோம். மாறாக
இந்த நிலைத்தந்த இறைவனை திட்டி தீர்ப்போம்.


“என்ன நினைத்து என்னை படைத்தாயோ!
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ?
முன்னம் இருந்த நிலை மறந்தாயோ?
முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ?”

எனும் பாடல் வரிகள் மனதில் ஓடும்.

நானும் அப்படித்தான் இருந்தேன்.
எனக்கு ஏன் இந்த நிலை என்று மனம் குமுறி
உள்ளுக்குள் அழுதிருக்கிறேன்.

ஆஷிஷ்க்கு 1 வயது இருக்கும். கடுமையான
குளிர் ஜுரம் எனக்கு வந்திருந்தது. இரவு 12 மணிக்கு
ஆரம்பித்து விடியும் வரை குளிர் வாட்டும், தாப ஜுரம்
அடிக்கும். (அயித்தான் ஊரில் இல்லாத பொழுது)
மறுநாள் காலையில் சாதரணமாக எழுந்து
“எனக்குத்தான் ஜுரம் இருந்ததா? என்று
கேட்கும் அளவுக்கு நார்மலாக இருப்பேன்.
என் அன்றாட வேலையையும் செய்வேன்.

இதே நிலை தொடர்ந்தது. தனதுடூரை
அவசரமாக முடித்து பாதியிலேயே ஊர் திரும்பினார்
அயித்தான். காலையில் அவர் வரும்பொழுது
ஜுரம் குறையவேயில்லை.

மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். 104 டிகிரி ஜுரம்.
ஸ்ட்ரெச்சரில் வந்தாயாம்மா? என்று மருத்துவர்
கேட்டார்.”இல்லையே! நடந்துதான் வந்தேன்!”
என்றேன். ”ஆண்டவனருள்! “என்று சொல்லி
மருந்து கொடுத்தார்.

வெளியே வரும்பொழுது என் கண்ணில் பட்டது
மணலில் பாதச் சுவடுகள் எனும் வால் ஹேங்கர்.




ஆஹா, கருணையுடன் தன் குழந்தை கஷ்டப்படக்கூடாது
என இறைவன் என்னை தன் கையில் அல்லவா ஏந்தி
நடந்திருக்கிறான்!!

எவ்வளவு திட்டியிருப்போம்!!

குழந்தையின் கை கண்ணில் பட்டுவிட்டால் பெற்றோர்
வெட்டியா எறிவார்கள்!! அப்படித்தான் குழந்தை நான்
திட்டியதை இறைவன் பொருட்படுத்தாமல் என் ரணங்களுக்கு
மருந்தாக, துன்பத்தில் பாதம் என்னை நோக நடக்கவிடாமல் தன்
கைகளில் தாங்குகிறான் என புரிந்தது.

இப்போதெல்லாம் எதற்கும் கவலைப்படுவதில்லை.
”பாதச் சுவடுகளை” நினைத்துக்கொண்டு
“எல்லாம் அப்பா பார்த்துக்கொள்வார்!” என்றிருக்கிறேன்.

Thursday, June 11, 2009

உங்களுக்கு சாக்லேட் பிடிக்குமா?

குழந்தைங்க மட்டுமல்ல பெரியவங்களுக்கும்
பிடிச்சது சாக்லேட்.

இனிப்பு உடம்புக்கு கெடுதல் என்றாலும்,
கொஞ்சமா சாப்பிடலாம். சாக்லெட் சாப்பிடுவதில்
சில நன்மைகளும் இருக்கு.

ஜெர்மனைச் சேர்ந்த HEINRICH HEINE UNIVERSITY
நடத்திய ஒரு ஆய்வில் சாக்லெட் சாப்பிடுபவர்களின்
தோல் மினுமினுப்பதாக கண்டுபிடிச்சிருக்காங்க.
ரத்த ஓட்டத்தை அதிகரித்து தேவையான சத்துக்களைத்
தருவதாக கண்டுபிடிச்சிருக்காங்க.



கோகோவை பானமாக அருந்துபவர்களுக்கு
ஸ்ட்ரோ்க், இருதயநோய், கேன்சர், சர்க்கரை
வியாதி ஆகியவை வரும் சாத்தியம் குறைவாம்.

சாக்லெட் நமது தூக்கத்துக்கும் மன அமைதிக்கும்
மருந்தாக இருக்குன்னு யூகே ஹாஸ்பிடல் ட்ரஸ்ட்
நடத்திய ஆய்வில் கண்டுபிடிச்சிருக்காங்க.

பரிட்சை நாட்களில் பிள்ளைகளுக்கு தினமும்
ஒரு பீஸ் சாக்லெட் உண்ணக் கொடுப்பதால்
அவர்களின் மூளைக்கு நல்லதாம். குறைந்தது
3 மணி நேரத்துக்கு மூளை சுறுசுறுப்பா இருக்குமாம்.
கோகோ அல்ஸமைர் வியாதிகாரர்களுக்கும் உதவுமாம்.


பெண்களுக்கு முக்கியமான செய்தி மார்பக புற்றுநோய்
ஏற்படாமல் இருக்க சாக்லெட் உதவுமாம்.

ஆஹா இம்புட்டு நல்லதான்னு அதிகமா
சாப்டா என்னாகும்னு பாக்கலாமா?

மனநிலை தடுமாற்றமுடையவர்களாக வாய்ப்பிருக்கு.

அதிகமாக சாக்லெட் சாப்பிட்டால் உடம்பு கால்சியத்தை
ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைந்து விடும்.

உடல் பருமன் ஏற்பட வாயிப்பிருக்கு.


*******************************

சிலருக்கு சாப்பாடு முடித்ததும் இனிப்பாக
ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும்.
sugar craving அப்படின்னு பேரு இதுக்கு.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவா
இருக்கும்போது இப்படி இருக்கும்.
(hypoglycaemia - low blood sugar)

உடல் அதிகமாக டீஹைட்ரேட் ஆகும்
போது சர்க்கரை அளவு குறைந்து போகும்.

அப்போது கொஞ்சம் சாக்லேட் அல்லது
இனிப்பு சாப்பிட்டால் சரியாகும்.
(பலருக்கு சர்க்கரை அளவு குறைந்தால்
மயக்கம், தலை சுற்றல் போன்றவை
ஏற்படும்) கையில் சாக்லெட் அல்லது
டாஃபி, மிட்டாய் போன்றவற்றை
வைத்துக்கொண்டு வாயில் போட்டுக்கொண்டால்
சரியாகிவிடும்.


சந்தோஷமா, அளவோட சாக்லெட் சாப்பிடலாம் வாங்க.

இப்படியும் ஒரு நாள் ஆகலாம்!!!!!!

என்னிக்காவது ஒரு நாள் இப்படித்தான் ஆகும்னு
ரொம்ப திடமா நம்பறேன்.

நான் யார் எனும் கேள்வி அடிக்கடி மண்டைக்குள்ள
ஓடுது. ஆன்மீகத் தேடல் அப்படின்னு ஏதும்
நினைச்சீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல.


ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அடையாளம்
அவரது பெயர் தான். என் பெயர் எனக்கே
மறந்து போய்விடும் போல இருக்கு.

எனது பெயர் பற்றிய முந்தைய பதிவு

வீட்டில், பள்ளியில் தவிர பெரும்பாலும்
என்னை ரமணிசார் மகள் எனவோ, சுந்து சார் பேத்தி எனவோ
ரத்னா டீச்சர் மகள் எனவோ தான் தெரியும்.
அம்மா, அப்பா இருவரும் வேலைக்கு
போனதால வார இறுதிகளில் தான் அதிகம்
பேச நேரம் கிடைக்கும்.

கல்யாணத்துக்கப்புறம் என் பெயர் என்ன என்பது
சுத்தமா மறந்தே போயிடும் போல இருக்கு.
வீட்டில்வேறு பெரியவர்கள் கிடையாது. ஆரம்பம்
முதலே தனிக்குடித்தனம்.

கல்யாணத்துக்கு கங்கணம் கட்டும் போதே
என்னை பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு
கங்கணம் கட்டிகிட்டாரு போல மனிஷன்.

இது நாள் வரை என்னை பெயர் சொல்லி
கூப்பிட்டதே இல்லை. :(

ஒரு தடவையாவது கூப்பிடுங்கப்பா?ன்னு
கெஞ்சினாலும் ம்ம்ஹூம்.

போம்மா!உன்னை பேர் சொல்லிக்கூப்பிட
நிறைய்ய பேர் இருக்காங்க(!!!)
மனசார கண்ணா!ன்னு கூப்பிட்டுக்கறேன்.
அப்படின்னு சொல்லிட்டாரு.
அழைக்கும் தொனியில் அன்பு, பாசம்
தெரியுது. ஆனால் என் பெயர் சொல்லிக்
கூப்பிடணும்னு ஆசை!!!

நானும் என்னன்னவோ செஞ்சு பாத்திட்டேன்
ம்ஹீம்....

ஆஷிஷ் பிறந்த பிறகு என் பெயர்
ஆஷிஷ் அம்மா என்று ஆகிவிட்டது.

அவனது பள்ளி, நண்பர்கள் அக்கம்பக்கத்தவர்கள்
இப்படி எல்லோருக்கும் ஆஷிஷ் அம்மா.

அம்ருதா பிறந்த பிறகு அம்ருதாம்மா என
அழைத்தவர்கள் அம்ருதாவை நன்கு
அறிந்தவர்கள்.


இந்த அபார்ட்மெண்ட்க்கு வந்த புதிதில்
எனக்கு மிகவும் பரிச்சியம் இல்லாதவர்கள்
கூட ஹாய்! சொல்வார்கள். குழப்பாமாக
பார்க்கும் என்னை “நீங்க ஆஷிஷ் அம்மாதானே!
என்றோ நீங்க அம்ருதாவோட அம்மாதானேன்னு
கேட்டு பரிச்சயம் செய்து கொள்வார்கள்.

ஒருவரும் உன் பெயர் என்னன்னு கேட்டதே இல்லை.

என் பிள்ளைகளின் பெயர் சொல்லி அவர்களின்
அம்மா என்று அழைக்கப்படும்பொழுது அளவில்லா
சந்தோஷம் தான். ஆனாலும் சில சமயங்களில்
எனக்கென ஒரு பெயர் இருக்கிறது, அதைச்
சொல்லி அழைக்க யாருமே இல்லையா? என்று
தோன்றும்.


பதிவெழுத வந்த பொழுது ஊரின் பெயர் வரவேண்டும்
என நினைத்து தென்றல் என்று வந்தால் பெண்
என புரிந்து கொள்ள வசதியாய் இருக்குமென்று
இந்த புனைப்பெயரை வைத்துக்கொண்டேன்.

வலையுலகிலும் என்னை தென்றல் என்றே
பலரும் அழைக்கின்றனர்.

சிறுவயதில் ஒரு கதை படித்திருக்கிறேன்.
ஒரு ஈ தன் பெயரை மறந்து, தன் வழியில்
தென் படுபவர்களிடமெல்லாம் தன் பெயர்
தெரியுமா! என்று கேட்டு கடைசியில்
எப்படியோ தன் பெயரை தெரிந்து கொண்டதாக
கதை.




இந்த நிலை இப்படியே நீடித்தால் சீக்கிரம்
என் பெயர் என்ன என்பதையே மறந்துவிடுவேன்.
அதனால் என் பெயரை பதிவு செய்து வைத்தாலாவது
நான் மறந்து போனாலும், நீங்கள் யாராகிலும்
எனக்கு ஞாபகப்படுத்தலாமே!!! :))

எனது பெயர் திருமதி. கலா ஸ்ரீராம்.

ஞாபகம் வெச்சுக்கோங்கப்பா. மறந்துட்டா எடுத்து
கொடுக்க வசதியா இருக்கும்.

Wednesday, June 10, 2009

கல்லிலே கலைவண்ணம் கண்டோம்...

மாமல்லபுரத்து சிற்பங்கள் மிக அற்புதம்.
வெறும் கல்லாய் பார்க்காமல் சொல்லிப்
பார்த்து புரிந்து கொள்ள கைடு ஒருவரை
ஏற்பாடு செய்து பார்த்த பொழுது பல
அரிய விடயங்கள் தெரிந்தது.

சிற்பக்கலையின் பெருமை புரிந்தது.
உளியின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது.

கல்லிலிருந்து சிற்பம் உருவாகும் அதிசயத்தை
பிள்ளைகளோடு பிள்ளையாய் பார்த்து
வியந்தேன்.

அர்ச்சுனன் தவசு, கடற்கரைக்கோவில்,
ஐந்து ரதம் எல்லாம் அற்புதம்.

மாமல்ல புரம் சென்று வந்ததன்
அடையாளமாக அந்த சிற்பங்கள்
இருப்பது போல் ஏதும் வாங்க வேண்டுமென
கடை கடையாகத் தேடினோம். சின்ன
சைஸ் சிற்பங்கள் முதல் பெரிய சைஸ்
சிற்பங்கள் வரை கிடைக்கின்றன.
ஆனால் மாமல்ல புரத்தின் சிறப்பான
சிற்பங்கள் உள்ள ஏதும் கிடைக்கவில்லை.

ஒரு ஃப்ரிட்ஜ் மேக்னெட்டாவது கிடைக்குமா
என்று பார்த்தால் இல்லை. கடைசியில்
ஒரு கடையில் நெட்டியில் கடற்கோயில்
கிடைத்தது.


நம் சுற்றுலாத்துறை ஹாப் ஹாப் டூர்
போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து புறப்பட்டு மாமல்ல புரம்
வரை வரும் இந்த பயணத்தில் ஒரு இடத்தில்
இறக்கிவிட்டு நாம் அந்த இடத்தை பார்த்த
பிறகு வேறொரு பஸ்ஸில் அடுத்த இடத்துக்கு
செல்வது போல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சிறப்பு மிக்க இடங்களின் நினைவுப் பொருட்கள்
நியாயமான விலையில் எல்லா இடத்திலும்
கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லா இருக்கும்.

crocodile park M G M விசிட்..

ஆஷிஷுக்கும் அயித்தானுக்கும் ரொம்ப பிடிக்கும்.
நேஷனல் ஜியாகரபி சேனலில் எத்தனை முறை
காட்டினாலும் விழுந்து விழுந்து பார்ப்பார்கள்.

முதலைகள் இருவரின் விருப்பம். ஆஹ
முதலைகள் பார்க் சென்றோம். வித்யா வேறு
தன் பதிவில்,”தூங்கும் முதலைகளை எத்தனை
முறை பார்ப்பது!”” என்று எழுதியிருக்க யோசனையுடனே
சென்றேன்.

நன்றாகத்தான் இருந்தது. (முதல் விசிட் என்பதால்
இருக்கலாம்) வெயிலின் கொடுமைக்கு தப்பிக்க
தண்ணீருக்குள் ஓடிக்கொண்டிருந்த முதலைகள்,
வெளியே வந்து கொஞ்சம் சன் பாத் எடுத்த முதலைகள்
என்று பிள்ளைகள் ரசித்தனர்.

வாயை பிளந்துகொண்டு தூங்கும் முதலைகள்,
போகும் போது தன் வாலால் படாரென்று அடித்து
அடுத்த முதலையின் தூக்கத்தை கெடுத்த முதலை
என்று பிள்ளைகள் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

அங்கே வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகையில்
இருப்பதை பிள்ளைகளுக்கு படித்துக்காட்டி
பொறுமையாக வந்து கொண்டிருந்தார் அயித்தான்.

ஒரு பையன் சின்ன சைஸ் முதலையை
கையில் பிடித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ்
கொடுத்துக்கொண்டிருக்க ஆச்சரியத்துடன் அங்கே
போனோம். அந்த பையனின் கையில் இருக்கும் பொழுதே
மெல்ல வாயைத் திறக்க ஆஷிஷ் டெர்ரராகி விட்டான்.

நீயும் போய் போட்டோ எடுத்துக்க! என்று சொல்ல
போம்மா, பயமாயிருக்கு என்று சொல்லிவிட்டான்.
நான் எடுத்துக்கறேன்பா போட்டோ என்று நான் போய்
உட்கார்ந்து கையில் முதலையை பிடித்துக்கொள்ள
அண்ணனும், தங்கையும் அருகில் வந்து முதலையை
பிடித்தனர்.(ஜில்லென்று இருந்தது முதலை!!)
அப்புறம் அயித்தானும் போட்டோ எடுத்துக்கொண்டார்.

கரியால் வகை பெரிய முதலையை கண்ணாடி கூண்டிற்குள்
வைத்திருந்தனர். கொழும்பு தெஹிவளை மிருககாட்சி
சாலைக்கு போனால் ஆஷிஷை முதலைகள் இருக்குமிடத்திலிருந்து
கூட்டி வருவது கஷ்டம். இங்கே கேட்கவே வேண்டாம்
ஆசை தீர சுற்றினான். பார்த்தான். அப்பாவிடம்
விவரங்கள் தெரிந்து கொண்டார்ன். இருவரின்
பேச்சையும் கவனமாக கேட்டபடியே அம்ருதம்மா
வந்து கொண்டிருந்தாள்.

அங்கே தெரிந்து கொண்ட விடயம்:

முதலைகள் நமக்கு நன்மை செய்கிறது.

நம் சுற்றுபுறத்தை பாது காக்கிறது.

முதலைகள் தன் தேவைக்கு அதிகமாக
உண்பதால்தான் அந்த மெஹா சைஸ்.

முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனத்தை
சேர்ந்தது.
அங்கே இருந்த 1 மணிநேரத்தில் பலமுறை
மனதில் நிழலாடிய உருவம் ஸ்டீவ் இர்வினுடையதுதான்.

ஆஷிஷும் அயித்தானும் இவரது ரசிகர்கள். அவர்களோடு
பார்த்து பார்த்து நானும் இவரது ரசிகை ஆகிப்போனேன்.





அடுத்து சென்றது எம் ஜீ எம்.
அங்கேயா போனீங்க!! உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி
என்று இவரின் நண்பர்கள் கேட்டதன் பொருள்
புரியவில்லை. பிள்ளைகள் விரும்புவார்களே
என்று அழைத்துச் சென்றோம். ஆனால் இனி
இலவசமாக யாரும் அழைத்தாலும் செல்லகூடாது
என தீர்மானித்து விட்டோம்.

ரைட்ஸ் பெரிய்ய அட்ராக்‌ஷன் இல்லை.
நீச்சல்குளம்தான். ஆனால் அதற்காக
ஹைஜீனிக் என்று சொல்லி அவர்கள் தரும்
நீச்சல் உடையைத்தான் போட்டு நீச்சல்
குளத்தில் இறங்க வேண்டுமென்றார்கள்.
ஆனால் அதிகமான க்ளோரினாலா, உடையாலோ
அடுத்த நாள் வரை நால்வரும் பிடில் வாசித்துக்கொண்டிருந்தோம்.

:(((

தக்‌ஷின் சித்ரா விசிட்

அடுத்த நாள் காலை உணவு முடித்து கிளம்பினோம்.
தக்‌ஷின் சித்ரா பார்க்க போகத்திட்டம். வழியில்
இருந்த நுங்குகளைக் காட்டி நான் செய்து விளையாடிய
நுங்கு வண்டியைப்பற்றிச் சொல்ல, கெட்டியாக
இருக்கும் அந்த ஓட்டில் எப்படிம்மா செய்வீர்கள்? என்று
கேட்க சாலை ஓரத்தில் காரை நிறுத்தி

நுங்கு வாங்கி சாப்பிட்டுக்கொண்டே ஒரு நுங்கு பழத்தை
எடுத்து வண்டி செய்து காட்டினேன். “ஹை நல்லா
இருக்கே, எப்படி தள்ளுவீங்க? என கேட்க” டீ வடிவ
குச்சியைத் தேடி கிடைக்காமல் சொல்லிக் காட்டினேன்.

சூப்பர்மா! என்றார்கள் பிள்ளைகள்.

தக்‌ஷின் சித்ரா- தென்னகத்துக்கு ஒரு மாதிரி.
தென்னகத்து வீடு வகைகளின் மாதிரிகள்,
உபயோகிக்கும் வகை சாமான்கள் என
அருமையாக இருந்தது. பிள்ளைகளுக்கு
மிகவும் பிடித்தது செட்டிநாட்டு வீடுதான்.

ஆம்பூர் வீட்டுக்கு முன்னால்
பாண்டி விளையாடும் கட்டம்
போட்டு வைத்திருக்க மகளுக்கு பாண்டி
விளையாடச் சொல்லிக்கொடுத்துக்கொண்டே
நானும் சிறுமியாகி விளையாடினேன்.

அப்பாவையும், மகனையும் காணோம்.
திரும்பி பார்த்தால் இருவரும் கிளி ஜோசியக்காரரிடம்
உட்கார்ந்திருந்தார்கள். :))

ஆஷிஷுக்கு ரொம்ப நாளாகவே அது என்ன கிளி ஜோசியம்?
என பார்க்க ஆசை. கிரகம் கிளி ஜோசியத்தில்
அவனைப் பற்றி சொன்னது எல்லாம் சரியாகவே
இருக்க, அயித்தானும் பார்த்துக்கொண்டார்.
அதுவும் சரியாக இருந்துவிட என்னை உட்கார
வைத்து என் பெயர் சொல்லி பார்க்க “ஊராருக்கு
உதவி இ.வா இருப்பேன்” என்ற உண்மையை
படரென போட்டு உடைத்தார்.(மொத்தமும் சரியாக
இருந்தது) அடுத்து அம்ருதம்மா. ஹி ஹி
இதுவும் சரியா இருந்து தொலைத்துவிட்டது.


ஜோசியத்தையே நம்பாத நான் இதையா நம்புவேன்.
சரிப்பா! ஏதோ ஃப்ளூக்குல அவங்க சொல்றது
உண்மையா இருக்கு. அடுத்த நடக்க போறதை
சொல்லியிருக்காருல அது நடக்கட்டும், அப்புறம்
நம்பறேன் என்று சொல்லிவிட்டு நடையை கட்டினேன்.

குயவர் வீட்டில் பிள்ளைகள் பானை (சின்னதுதான்)
செய்தனர். இன்னொரு வீட்டில் பனை ஓலையில்
கூடை பின்னக் கற்றனர். இருவருக்கும் ஒரே பெருமை.
அந்தக்கால மாவு அரைக்கும் எந்திரம் (திரகலி என்று
தெலுங்கில் தெரியும், தமிழில் தெரியலை. அரிசியை
போட்டு சுற்ற மாவு வருமே!) அதில் மாவு அரைத்தார்கள்
அண்ணனும் தங்கையும்.

இவ்வளவு கொஞ்சத்துக்கே கை வலிக்குதே! நிறைய்ய
மாவு அரைக்க எம்புட்டு வலிக்கும்!! என்று கேட்டார்கள்.
அதுதான் கைக்கு எக்ஸர்ஸைஸ் என்று சொல்ல
வியந்தார்கள்.

ஓடு, முற்றம், தோணித்தகரம்(மழை நீர் ஓட்டிலிருந்து
கீழே விழ வைக்கப்படும் தகரம்) எல்லாம் காட்ட
கட்டடக்கலையை வியந்து பார்த்து தெரிந்து கொண்டார்கள்.


வெயிலில் சுற்றி களைத்துப்போனாலும் தென்னகத்தின்
அழகை ரசித்தோம். கேரளா, கர்நாடகா, ஆந்திரா
வீடுகளும் இருந்தன.

தக்‌ஷின் சித்ராவில் சுற்றிய போது மனதில்
பட்ட விஷயம் ஒன்றுதான். அவ்வளவு
பெரிய இடத்தில் பல அரிய விடயங்களை அழகாக
நிர்மாணித்திருக்கிறார்கள். எங்கே ஆரம்பித்து
எங்கே முடிப்பது? என்பது புரியாமல் சுற்றிக்கொண்டே
இருக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் முறைப்படுத்திருக்கலாமோ!!
என்று தோன்றியது.

ஆனாலும் தக்‌ஷின் சித்ராவில் பாராட்டப்படவேண்டிய
விடயம் ”ஹனலி” எனும் ஹோட்டல். இதை நிர்வகிப்பது
பிரபல அறுசுவை நடராஜன் அவர்கள்.

பிசிபேளாஹுலி், வாழைககாய் பொரியல், கடலைப்பருப்பு
போட்ட கோஸ் கூட்டு வீட்டுச் சாப்பாட்டை நினைவூட்டியது.

Tuesday, June 09, 2009

அம்மம்மோய்! அப்பப்போய் மாயாஜாலமாம்!!!

சென்னையில் விழா முடித்து நேராக சென்றது
மாமல்லபுரத்திற்கு. அங்கே பஸ்டாண்டிற்கு அருகில்
இருக்கும் மாமல்ல ஹெரிடேஜ் ஹோட்டலில்
தங்கினோம்.

ஈ.சி.ஆர் ரோடில் இருக்கும் மாயாஜால்லில்
”பசங்க” படம் பார்க்கச் சென்றோம். ஹைதையில்
மல்டிப்ளக்ஸில் 200 ரூபாய் டிக்கட். மாயாஜாலில்
140. பரவாயில்லையே!! என நினைத்துக்கொண்டே
புக் செய்து சென்றோம்.

எங்கள் கார் உள்ளே செல்லவும் ரஜினி காந்த்
அவர்களின் கார் வெளியே செல்லவும் சரியாக
இருந்தது. ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னைப்
பார்க்க கொடுத்துவைக்கவில்லை. :))

வார இறுதியோ, வேலை நாளோ இங்கே ஹைதையில்
ஐமேக்ஸ், ஐநாக்ஸ், பீவீஆர் எல்லாம் வழியும்.
செம பிசி ஏரியா. வெள்ளிக்கிழமை சாயந்திரம்
காற்று வாங்கிக்கொண்டு கிடந்த மாயாஜாலை
ஆச்சரியமாக பார்த்தோம்.

படம் ஆரம்பிக்க நேரம் இருக்கவே பிள்ளைகள்
பெளலிங் விளையாண்டார்கள். தியேட்டருக்குச்
சென்றோம். ஆள் அரவமே இல்லை. 6.45 மணிக்கு
ஷோ. டிக்கெட் கிழிக்கும் ஆளைக்கூட காணவில்லை.

5 நிமிடத்தில் ஒருவர் வந்து தியேட்டருல் சென்றோம்.
ஆள் அரவமே இல்லாமல் காற்று வாங்கிக்கொண்டிருந்தது
தியேட்டர்!!!! ஐமாக்ஸ், பீவிஆர்
போல் உள்ளமைப்பு இருக்கும்னு நினைச்சோம்.
நாங்கள் 4 பேர் மட்டும் தான் அங்கே.

இன்னைகு ஷோ உண்டா? இல்லை கேன்சலா?
யாரும் வராவிட்டால் படம் பார்க்க முடியாமல்
போய்விடுமே!! பசங்க படம் பார்க்க முடியாமலேயே
போய்விடுமோ!! என்று ஏகப்பட்ட குழப்பத்துடன்
உட்கார்ந்திருந்தோம். 7 மணி வாக்கில் 10 பேர்
இருந்தோம் தியேட்டரில். மெல்ல ஏழு பதினைந்து
மணி வாக்கில் படம் ஆரம்பித்தார்கள்.( பாதி தியேட்டர்
நிரம்பியிருந்தது)

அருமையான படம். ரசித்தோம். 10 மணிக்கு மேல்
ஆகிவிட்டது படம் முடிய. வயிற்று பசி கிள்ள
கீழே இருக்கும் ஃபுட் கோர்ட் சென்றோம். நூடில்ஸ் கிங்கில்
”சாரி வீர் ஆர் க்ளோஸ்ட்” என்றார்கள். இருந்தது
மெர்ரி ப்ரவுனும், யூ எஸ் பிட்சாவும் தான்” :((

இங்கே ஹைதையில் ohri'sல் வைரிட்டி கிடைக்கும்.
வேறு வழியில்லாமல் அன்று பிட்சா சாப்பிட்டோம்.
பசங்க வெஜ் பர்கர் வித் ஹேப்பி மீல் வாங்கிக்
கொண்டார்கள்.

டோல்கேட்டுக்கு அந்தப் பக்கம் இருப்பதாலேயே
மாயாஜால் வார நாட்களில் காற்று வாங்குவதாக
டிரைவர் சொன்னார். இருக்கலாம். அதற்காக
நம் இந்திய உணவு வகைகள் அதிகம் இல்லாத
ஃபுட் கோர்ட் எல்லாம் டூ மச். ஒரே ஆறுதலாக
மெர்ரி ப்ரவுனில் குழந்தைகளுக்கான ஹேப்பி மீலில்
பெப்ஸி, கோக் போன்றவை தராமல் ஆரஞ்சு ஷ்குவாஷ்
கொடுத்தது.

ஐமாக்ஸ், பீவீஆர் ரேஞ்சுக்கு எதிர் பார்த்து சென்ற
மாயாஜால் பிடிக்கலை.

நைட் அண்ட் லைஃப் இஸ் சோ எங் அண்ட்
பியூட்டிஃபுல் இன் ஹைதராபாத் :))

கேள்வியும் நானே!!! பதிலும் நானே!!!!

கேள்வி பதில் தொடரில் மாட்டமலேயே இருக்கோமேன்ன்
சந்தோஷப்பட்டுகிட்டே இருந்தேன். சொக்கன் விடலை!!
பட்டாம்பூச்சியாரின் வடிவத்தில் வந்து மாட்டி விட்டுடுச்சு.

சரி, சரி வாங்க என்ன பதில் சொல்லியிருக்கேன்னு
பாப்பீக.


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்ன பெயர் வைக்கலாம்னு யோசித்து பிறந்த ஊருக்கு
”பெருமை”!! சேப்போமேன்னும், புயலா வீசும் நாம
பேருலையாவது தென்றல் இருக்கட்டுமேன்னும் நானே
நாமகரணம் செஞ்சுகிட்டதுதான். என் நிஜப் பெயர் பிடிக்கும்.
அதில் அயித்தானும் பேரையும் சேர்த்த பிறகு ரெம்பவே
பிடிக்கும். :))



2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் அழுததுதான் எல்லோருக்கும் தெரியுமே.
20.3.09 மாமா இறந்த பொழுது கண்கள் குளமல்ல...
நாகார்ஜுன சாகர் அணையை திறந்த மாதிரி
அழுதேன். :((


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு பிடிக்கும். மத்தவங்களுக்குகொஞ்சம்
டவுட்டுதான். :)


4).பிடித்த மதிய உணவு என்ன?

சோறு இல்லாம எதுன்னாலும் சரி தான். (அடுத்தவங்க
சமைச்சுபோட்ட சோறானாலும் சந்தோஷம் தான்) சுத்த சைவம்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் விருப்பத்தை விட அடுத்தவங்க விருப்பமும்
தெரிஞ்சுக்கணும்ல. அவங்களுக்கு ஓகேன்னா எனக்கும்
ஓகே தான். ஆனா ஒரே ஒரு கண்டீஷன் மட்டும்
எனக்கு நானே வெச்சிருக்கேன். உண்மையான
நட்பா இருப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிக்கலாம். ஆனால் அலையை நினைச்சு பெம்மா இருக்கும்.
குற்றால அருவியில குளிச்சது மறக்க முடியாத அனுபவம்.



7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்ணைப்பாத்து பேசாட்டி அவங்க மனசை படிக்க முடியாதே!
ஆக கண் தான்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் பிடிவாதம் எனக்கு பிடிச்ச விஷயம். பிடிவாதத்தினாலேயே
நிறைய்ய கற்றுக்கொண்டுள்ளேன்.

என் கோபம் எனக்கு பிடிக்காது. ஆனால் பல விடயங்களில்
விசுவாமித்திரரின் நேரடி வாரிசாகத்தான் இருந்திருக்கிறேன்.

அடுத்தவங்களைப்பத்தி அதிகமா கவலைப்பட்டு அவங்களுக்காக
நல்லது செய்யறேன்னு செஞ்சு இ.வாவாவே இருப்பது.
(மாத்தவே முடியலை.)


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : ரெம்ப நல்லவர், என்னால் பிரிந்திருக்க முடியாத
அளவு பாசமானவர்.

பிடிக்காத விஷயம் : அதிகமா டூர் போறது :(((((


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?.
பிறந்த வீட்டில் அன்பு அம்மம்மா, புகுந்த வீட்டில்
மறைந்த சுப்ரமண்ய மாமா(கணவரின் அண்ணன்)


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு பேண்ட் , ரெட் டீஷர்ட்


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கூன் பரி மாங்க் எனும் ஹிந்தி படத்திலிருந்து
எனக்கு மிகவும் பிடித்த “ஹஸ்தெ ஹஸ்தே கட் ஜாயே
ரஸ்தே ஜிந்தஹி யூ ஹி சல்தி ரஹே”

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு!!

14.பிடித்த மணம்?
மழை பெய்ததும் கிளர்த்து எழும் மண்ணின் மணம்,
பிறந்த குழந்தையின் வாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நானானி: சின்னச் சின்ன விடயத்தையும் வித்தியாசமான கோணத்தில்
பார்த்து பதிவெழுதுவது. அட இத மறந்துட்டோமேன்ன்னு நாம
யோசிக்கும் விதத்தில் இருக்கும் இவரது பதிவுகள்.

தேவா: காரைக்குடி டாக்டர். தமிழ்த்துளியில் அப்பச்சியை பற்றி
கதையும் எழுதுவாரு, பார்கின்சம் பற்றி மருத்துவக் குறிப்பும்
கொடுப்பாரு.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

வண்ணத்துப்பூச்சியாரின் திரைப்படங்கள் பற்றிய அறிமுகம்
மிக மிக பிடிக்கும். பல மொழிப் படங்களையும் அறிமுகப்
படுத்துவதற்காக ஷ்பெஷல் பாராட்டு.

17. பிடித்த விளையாட்டு?
அப்பாவுடன் அமர்ந்து சீட்டு விளையாடுதல் பிடிக்கும். இப்போ
பிள்ளைகளுடன் ஓடி பிடித்து விளையாட்டு, நொண்டிஆட்டம்.


18.கண்ணாடி அணிபவரா?
வீட்டை விட்டு வெளியே போனால் கூலிங் கிளாஸ்
இல்லாமல் போக மாட்டேன்.


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதுக்கு இதம் தரும், குடும்பத்தினருடன் அளவளாவிக்கொண்டு
பார்க்கக்கூடிய திரைப்படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டர்ல பசங்க. டிவிடியில சுவராபிஷேகம்.


21.பிடித்த பருவ காலம் எது?
மழை மனதுக்கு மிகவும் இதமான பருவம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
செம பிசியா இருந்ததால 1 மாசமா புத்தகம்
ஏதும் படிக்கலை. வாரப்புத்தகங்கள் தான்.



23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அது அயித்தான் மற்றும் மகனின் டிபார்ட்மெண்ட்.


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : மெல்லிய இசை
பிடிக்காத சப்தம்: அதிக இரைச்சலான எதுவும் பிடிக்காது.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
நாடோடி கூட்டத்துல ஒரு கூட்டமா அலைஞ்சு கிட்டு
இருக்கோம். இதுல வீடுன்னு எதைச் சொல்ல??
இலங்கை, சிங்கை, மலேஷியா வரை போயாச்சு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
செய்யும் வேலையை சிறப்பாச் செய்வது என் தனித்
தி்றமைன்னு சொல்லிக்கொள்வதில் பெருமை.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
உதட்டளவில் நட்பு கொள்ளல், நம்பிக்கைத் துரோகம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அயித்தானைக் கேட்டால் நிறைய்ய சொல்வார்.:)
என் கோபம் தான் எனக்குள் இருக்கும் சாத்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அந்தமானுக்குச் சென்று அந்த மானைப் பாருங்கள்
அழகுன்னு பாடணும்னு ஆசை இருக்கு.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இருக்கும் இந்த நிலையிலிருந்து கீழே இறங்காமல்
இருந்தால் போதும்.

31.கணவர் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அவரில்லாம ஒர் அணுவும் அசையாது என்பதால்
இந்தக் கேள்வியை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

மனம்போல் வாழ்வு!!

Monday, June 08, 2009

பராக்! பராக்! வருண தேவன் பராக்!!!!

ஹைதையின் பேர் கேட்டாலே எல்லோரும் சொல்வது
ஐயோ! வெயில் தாங்க முடியாதே!! என்பதுதான்.

ஆனால் அந்த இரண்டு மாதங்களையும் தாண்டிவிட்டால்
வாழ்க்கை இங்கே ஒரு சொர்க்கம் தான். ஹைதையை
நான் மிகவும் விரும்ப இதுவும் ஒரு காரணம்.

ஹைதை வெயிலை விட சென்னை வெயிலுக்குத்தான்
ரொம்ப திண்டாடிவிட்டோம். உஸ் புஸ்ஸுன்று
தாங்கவே முடியவில்லை.(ஏசி கூட வேலை செய்யாது
போல இருக்கு சென்னையில் :( )

ஹைதையில் பெய்யென பெய்யும் மழையாக
ஜூன் மாதம் கட்டாயம் மழைக்காலம் துவங்கிவிடும்.
”ஆஷாட மேகம்”(ஆடிமாத மேகம்) என்று
பொதுவாகச் சொன்னாலும் ஜ்யேஷ்ட(ஆனி) மாதமே
மழை வந்துவிடும்.


இந்த வருடம் பருவமழை சற்று முன்னதாகவே
தொடங்கிவிட்டது. சென்ற மாத கடைசியிலேயே
மழை அப்பப்போ பெய்தது. கடந்த சனிமுதல்
மாலை வேளைகளில் மழை பொழிய துவங்கிவிட்டது.

2 நாள் மழைக்கு ஊரே ஏசி போட்டாற்போல்
ஆகிவிட்டது. :)))

இனி ஜாலி ஜாலி ஜிம்கானா தான்.

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோன்னு என்று
மழைக்காலப் பாடல்களில் மூழ்க வேண்டியதுதான்.



Get Your Own Hindi Songs Player at Music Plugin

மழைக்காலத்தில் மயிலின் மனது மகிழ்வது போல்
என் மனமும் மகிழ்வுடன் இருக்கும். எவ்வளவு
மழை பெய்தாலும் சந்தோஷமே. துணி காயவில்லை,
வெளியே போகமுடியவில்லை, என அங்கலாய்க்கமாட்டேன்.
ஆனந்தமாக அனுபவிப்பேன். வெயிலின் கொடுமை
இரண்டு மாதமே! அழகான மழைக்காலம், ஆனந்தமான
குளிர்காலம் என அடுத்த மார்ச் வரை ஹைதை
ஒரு சொர்க்கமே!!!



என் மகனுக்கு மழைக்காலம் என்றால் பக்கோடா/பஜ்ஜி வித்
மசாலா டீ தான் :)) அவரும் மழை விரும்பியாச்சே!!!!


இதனால் தான் இந்தியாவில் எங்கே இருக்கலாம்?
என்ற கேள்வி மனதில் எழுந்த பொழுது கண்ணை
மூடிக்கொண்டு ஹைதைக்கு டிக்கெட் வாங்கியது. :)))

Thursday, June 04, 2009

நானும் பாராட்டிக்கறேன்..

எங்க பாக்காமலேயே போய்விடுவேனோன்னு நினைச்சேன்.

பார்த்து பரவசப்பட்டேன். நான் சொல்வது எங்க ஊரு
பசங்க படத்தை. :))

என்னுடைய முந்தைய பதிவு

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தை பார்க்கும்
”பாக்கியம்” எனக்கு கிடைக்கவில்லை. பேரில் மட்டும்
எங்க ஊர் இருந்ததா? இல்ல எங்க ஊரையும் காட்டினாங்களான்னு
தெரியாது. ஆனா பசங்க படம் எனக்கு பெரிய எதிர்
பார்ப்பை உண்டாக்கியிருந்தது. என் எதிர்பார்ப்பு
மகிழ்வையே தந்துச்சு.

ச்சும்மா கலக்கியிருக்காங்க....

கதையெல்லாம் சொல்ல மாட்டேன். படத்தை
தியேட்டரில் பார்த்துகிட்டே நம் பள்ளி நாட்களுக்குச்
செல்லும் சுகமான அனுபவத்தை எல்லோரும்
பெறணும். ஆங்கில வழி கல்வி தடத்தை விட
என்னைப்போல தமிழ் வழியில் படிச்சவங்களுக்கு
சத்தியமா இந்தப் படம் ஒரு கொசுவத்திதான்.


அட நம்ம ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்,
நமனசமுத்திரம் பிரிட்ஜ், நச்சாந்துபட்டி ஸ்கூல்,
திருமயம் கடை, பஸ்டாண்ட்
அப்படின்னு எந்த இடம்னு தேடிகிட்டே இருந்ததுல
படத்தை இன்னும் கொஞ்சம் ரசிக்க முடியாம
போயிடிச்சு... கண்முன்னே ஃப்ரேம் பை ஃப்ரேம்
எங்க ஊரு தெரியறப்போ சந்தோஷமா இருக்கு.

எனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த குடும்பத்தினர்
“இது எந்த இடமோ? கோயம்புத்தூர் பக்க்மா?
ச்லாங் டிஃப்ரண்டா இருக்கேன்னு சொல்லிக்கிட்டு
இருந்தாங்க. ”ஹலோ இது புதுக்கோட்டைங்க,
எங்க ஊரு அப்படின்னு சொல்லணும்னு
மனசு துடிச்சிச்சு”!!

முறுக்குக்கு பேர் போன மணப்பாறையிலிருந்து
ஹீரோ கலக்கியிருக்காரு(பசங்கதான் ஹீரோன்னாலும்)
செல்போன் ரிங்க்டோன் மறக்கவே முடியாது.

படம் சூப்பர்னு ஒவ்வொருத்தரும் பாராட்டும்போது
நான் காலரை தூக்கிவிட்டுகிட்டேன்!! :))

பெரியவங்களுக்கும் பாடம் இருக்கு. குழந்தையின்
நிலையிலிருந்து பார்க்கும்போது பெத்தவங்க
செய்யும் தவறு புரியும்.

படத்தயாரிப்புக்குழுவினர்,நடித்தவர்கள், ஜேம்ஸ் வசந்தன்
அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.(பாட்டு சூப்பர் ஜேம்ஸ்)

பார்க்காம விட்டுடாதீங்க...

அன்பாலே அழகான அம்பேத்கர் மண்டம்பம்...

என்ன எல்லோரும் சொளக்கியமா?
சென்னையில் பதிவர் சந்திப்பு இருக்கும்
என்று சொல்லியிருந்தேன். நானானி
அவர்களின் ஏற்பாட்டால் மிக
சிறப்பாக நடந்தது.

திங்களன்று மதியம் 3 மணிக்கு R.A Puram
அம்பேத்கர் மண்டபத்தில் பதிவர் சந்திப்பு
நடந்தது. முக்கியமான பங்கு நானானி அவர்களுக்குத்தான்.

நானானி, கோமா, வல்லி சிம்ஹன்,
அமுதா கலந்து கொண்டோம். பர்மிஷன்
போட்டுக்குகொண்டு எட்டியாவது பார்த்துவிட
வேண்டும் என்று வந்திருந்தார் அமுதா.

நானானிம்மா, வல்லிம்மா இருவரும்
இனிமையாக எழுதுவதைப்போலவே,
இனிமையாக அன்பாக பேசுகிறார்கள்.

அன்பைக் கொட்டும் அந்த வார்த்தைகள்
மனதுக்கு இதமாக இருக்கிறது.

குட்டி பதிவர்களாக ஆஷிஷும், அம்ருதாவும்
கூட கலந்து கொண்டார்கள்.

வெயிலையும் மீறி இதமானகாற்று வீசிக்கொண்டிருந்தது.

பரஸ்பர அறிமுகம் முடிந்து
கலந்துரையாடிக்கொண்டிருந்தோம்.

ஸ்நாக்ஸ் ஜூஸ் எல்லாம் எடுத்து வந்திருந்தார்கள்
நானானியும் கோமாவும். உங்கள் அன்பை
என்னவென்று சொல்வது!!!!

வேறு சிலரும் கலந்து கொள்வதாக இருந்தது.
வார இறுதியாக இருந்தால் அனைவரும்
கலந்து கொண்டிருப்பார்கள். அலுவலக
நாளாக இருந்ததால் பலரால் கலந்து
கொள்ள முடியவில்லை.:(


சர்ப்ரைஸ் விசிட்டாக அப்துல்லாவும்
வந்து கலந்துக்கொள்ள பிள்ளைகள்
இருவரும் ஒரே சந்தோஷம்.

“மாமா, உங்க பாட்டு பாடுங்க”! என்று
அம்ருதா அடம் பிடிக்க...

“உங்க பாட்டை கம்ப்யூட்டரில் வெச்சு
கேட்டுகிட்டுத்தான் வேலை நடக்குது!!”
அப்படின்னு சொல்லி மாமாவை பாட
வைக்க முயற்சி செஞ்சாங்க.

குரல் கட்டி போயிருந்த நிலமையிலும்
ஒரு வரி மருமகபிள்ளைகளுக்காக
பாடிவிட்டுத்தான் சென்றார்.


”இந்த சந்திப்பு உனக்காக. அனைவருக்காகவும்
வார இறுதியில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு
செய்து சந்திக்கலாம்”, என்று நானானிம்மா
சொன்ன பொழுது மனசுக்கு மகிழ்ச்சியாக
இருந்தது.