Total Pageviews

Saturday, October 31, 2009

பெண்களின் பிரச்சனைகள்

பெண்களுக்கே இருக்கும் பலவித பிரச்சனைகளின்
காரணம் பெண்களுக்கே புரியாது, தெரியாது.
படித்த பெண்களும் இதில் விதி விலக்கல்ல.

திருமணத்திற்கு முன்பு வரை கொடியிடையாளாய்
வளைய வந்தவள் அப்புறம் ”கொடிய இடையாளாய்”
ஆகிவிட்டாள் என கேலி பேசுவது உண்டு. ஆனால்
அதற்கான காரணங்களை யாரும் உணர்வதில்லை.

தாய்மைக்கு பெண் கொடுக்கும் விலை தன் அழகு.
கரு உண்டான உடனே அவளின் உடல் தாய்மைக்கு
தயாராகி, ஹார்மோன்கள் மாறுகின்றன.

குழந்தை பிறக்கும் வரை இருவருக்கும் உண்கிறாள்.
பிறந்த பிறகோ பாலூட்ட சக்திவேண்டுமென உண்கிறாள்.
இவை எல்லாம் தருவது அதிக எடை. தவிரவும்
நம் இந்திய பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு
உடற்பயி்ற்சி செய்யும் பழக்கமில்லை.

கைக்குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்,
குடும்பம், வேலை, இத்யாதிகள் என இவற்றுக்குத்தான்
முதலிடம் கொடுக்கிறாளே தவிர தன்னை பற்றி
பரிபூரணமாக மறந்து விடுகிறாள்.

பிரசவம் தவிர குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை
பெண்ணுக்குத்தான் செய்யப்படுகிறது. இதனால்
ஏற்படும் விளைவு உடல் பருமன் என சமீபத்தில்
தமிழ் வார இதழ் ஒன்றில் பல பெண் மருத்துவர்களும்
ஒத்துக்கொண்ட விடயம்.

இதைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்கக்கூடும்!!!

ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம். வேலைக்கு போகும்/
போகாத பெண்களுக்கு இது அதிகம். தவிர மாமியார்,புகுந்தவீட்டு
பிரச்சனை, புரிந்து கொள்ளாத கணவன், குழ்ந்தைகளின்
கல்வி, எதிர்கால பயம் எல்லாமும் காரணம்.

மன அழுத்தம் அதிகமானால் ஒன்று அதிகமாக சாப்பிடத்தோனும்,
இல்லையேல் குறைவாக சாப்பிடுவோம். விளைவு உடல் பருமன்.

பிள்ளை வளர்ப்பு என்பது சாதாரணமான விடயம் அல்ல.
ஆனால் அந்த மாபெரும் பொறுப்பு பெண்ணின் கையில்தான்
இருக்கிறது. இதுவும் மன அழுத்தம் தரும் விடயம்தான்
என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.


பொதுவாகவே அனைவரும் பசிக்குத் தான் சாப்பிடுகிறோமே
தவிர போஷாக்கான உணவு எடுத்துக்கொள்வதில்லை. அதிலும்
பெண்கள் மீதம் இருப்பதை உண்பர். இல்லையே அன்றைக்கு
மோர் சோறுதான். இது பல வீடுகளில் நடக்கும் விடயம்.

இதில் போஷாக்கு எங்கேயிருக்கிறது. பழங்கள், சாலட்கள்
இவைகள் அன்றாட உணவில் எங்கே எடுத்துக்கொள்கிறோம்.

உடல் நிலை சரியில்லாவிட்டால் மருத்துவரிடம் போனால்
போதும் என்று நினைப்போமே தவிர சின்ன சின்ன விடயங்களுக்கு
மருத்துவரிடம் செல்வதில்லை.

தமிழ்த்துளி தேவா அவர்கள் பெண்களின் பிரச்சனைகள்
பற்றி தொடர் பதிவு
போட்டு வருகிறார். அதை படிக்கத்
தவறாதீர்கள்.

மருத்துவரை கலந்தாலோசித்து, தகுந்த நியுட்ரீஷியன் உதவியோடு
சத்தான உணவு எடுத்துக்கொண்டு, தகுந்த உடற்பயிற்சியும்
செய்ய வேண்டும்.

இதற்கான அவசியத்தை பெண்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.
ஆண்களும் தனது மனைவிக்கு தேவையான வசதிகளை
செய்து கொடுத்து, அனுசரணயாக இருக்க வேண்டும்.

இந்தக் கதையையும் படித்து பாருங்கள்
பெண்களின் நிலை புரியும்.

அவள்

அவள்

Thursday, October 29, 2009

வெள்ளிக்கொலுசு மணி.....


அடுத்த மாதம் இரண்டாவது பிறந்த நாள் கொண்டாடப்போகும்
என் வலைப்பூவில் இது என் 500ஆவது பதிவு.
ஆனந்தமாக இருக்கிறது. ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கு
நன்றி.

500 ஷ்பெஷலாச்சே. அதான் இந்த ஷ்பெஷல் கருத்தும்
கானமும் பதிவு.

அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அழகான கால்களுக்கு
கொலுசு அழகு சேர்க்கும். கொலு்சோசை கேட்டு
மயங்காதவர்கள் உண்டோ..




வெள்ளிக் கொலுசுமணி .... இளையராஜாவின்
இசையில் மறக்க முடியாத பாடல்.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

தண்டை ஒலி எழ குழந்தை நடந்து வரும்போது
அந்த ஜில் ஜிலீர் சத்தம் அப்பப்பா...

பெண்மையின் அடையாளம் இந்த கொலுசு. வீட்டில் பெண்
இருக்கிறாள் என்பதை கட்டியம் கூறுவது கொலுசு.

பாதக்கொலுசுமணி...

Get Your Own Hindi Songs Player at Music Plugin

மனைவியி்ன் கொலுசோசை கணவனுக்கு தன்
மனைவியின் இருப்பை உணர்த்துகிறது. சிணுங்கும்
அவளின் கொலுசுசத்தம் தூக்கத்தை கெடுத்தாலும்
அந்த ஓசையை மிகவும் ரசிப்பார்கள் என்று எங்கோ
படித்திருக்கிறேன்.


மூக்குத்தி அணியாத பெண்களும் உண்டு. ஆனால் கொலுசு
மாடர்ன் மங்கைகளும் அணியும் ஆபரணம்.

பாயல்(ஹிந்தி), பட்டியலு (தெலுங்கு) இது கொலுசின்
வேறு பெயர்கள்.

எனக்கும் கொலுசு மிகவும் பிடிக்கும். திருமணத்திற்கு
முன்பு வரை என் பிறந்தநாளுக்கு முன்பு பழைய கொலுசை
கொடுத்துவிட்டு மேற்கொண்டு பணம் போட்டு நல்ல
கொலுசு வாங்கி கொடுப்பார் அவ்வா.

புது கொலுசு ஜொலிக்க ஜல் ஜல்லென்று பள்ளிக்குச்
செல்வேன். எப்போதும் புது டிஜைன் கொலுசுதான்.
அப்பா திட்டினால் கூட அவ்வா தன் பென்சன் பணத்தில்
வாங்கி கொடுப்பார்.

கைபிடித்து தேவேந்திரன் மாமா நகைக்கடைக்கு அழைத்துச்
சென்று பொறுமையாக டிசைன் தேடி,ஸ்குரு கழண்டு
விடாமல் செப்புக் கம்பி போட்டு முடுக்கி என அவ்வா
பார்த்து பார்த்துச் செய்வார்.

திருமணத்திற்கு பிறகு அயித்தான் அவ்வா போல்
புது கொலுசு வாங்கி கொடுக்கிறார். பிள்ளைகளின்
பிறந்த நாளின் போது எனக்கும் ஏதேனும் பரிசு
கொடுப்பார்.(நாங்களும் பரிசு கொடுப்போம்)
இந்த முறை ஆஷிஷின் பிறந்த நாளுக்கு
எனக்கு புது கொலுசு. எப்போது கொலுசு வாங்கினாலும்,
புது கொலுசை கண்டாலும் அவ்வாவின் நினைவு வந்து
செல்லும்.




கொலுசு சத்தத்தால் வீடேநிறைந்தது
போலிருக்கும். விசேட நாட்களில் கொலுசு
அணிந்து அம்ருதா வீடெங்கும் இனிமையை நிறப்புதாகத்
தான் தோன்றுகிறது. தங்கை கொலுசு அணிந்தால் அண்ணாவுக்கு
அம்புட்டு பெருமை. நல்லா இருக்கு பாரு, என்று அடிக்கடி
அண்ணா சொல்வது இனிமை.

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்....

Get Your Own Hindi Songs Player at Music Plugin

கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
ரத்ததில் தேன் வந்து தித்தித்ததே...

பெண்புத்தி முன் புத்தி படத்தில் இனிமையான
பாடல். (லிங்க் கிடைக்கவில்லை)
எப்போதும் இனிமையான நினைவைத் தரும் கொலுசு.

டிஸ்கி: பாடல்கள் தேடிய பொழுது தேடிக்கொடுத்த
அன்புத் தம்பி சென்ஷிக்கு ஷ்பெஷல் தேங்க்ஸ்

Tuesday, October 27, 2009

உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... கொஞ்சம் வந்திட்டு போறது!!!

யாரைக்கூப்பிடறேன்னு பாக்கறீங்களா?? எல்லாம்
அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க, நட்புக்கள், உடன் பிறப்புக்கள்
எல்லோர் கிட்டயும்தான் பேசணும்னு.

எதைப்பத்தி??? கொஞ்சம் விவகாரமான மேட்டர்தான்.
சில ஆண்களுக்கு கோபம் கூட வரலாம். ஆனா
பிள்ளை வளர்ப்புன்னு வரும்போது ஆண்/பெண்
பாராபட்சம் ஏது? அதனாலதானே இருவரையும்
சேர்த்து ”பெற்றவர்கள்” அப்படின்னு ஒருவார்த்தை
இருக்கு.


மக்களை பெற்ற மகராசன்/மகராசியா இருந்தாலும்
சரி, மக்களை பெறப்போகும் மகராசன்/மகராசியா இருந்தாலும்
சரி உங்க கருத்தை கண்டிப்பா சொல்லிட்டு போங்க.

மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அப்படின்னு
எல்லோருக்கும் தெரியும்.(அதான் அத்தாதண்டி
பாட்டில்ல சின்னதா போட்டு வெச்சிருக்காங்களே!!)

இப்பல்லாம் பொது இடத்தில் புகை பிடிப்பதுக்கு தடா
போட்டிருக்காங்க. சீரியல்கள், சினிமா எல்லாவற்றிலும்
கண்டிப்பா குடிப்பது போல காட்சி வருது. என்னதான்
மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அப்படின்னு
விளம்பரம் போட்டு அந்த காட்சியை காட்டினாலும்
இப்படி பட்ட காட்சிகளினால் சின்ன பசங்களுக்கு கூட
90 கட்டிங், மிக்ஸிங் எல்லாம் செய்முறை விளக்கப்படமா
பாத்து மனசுல பதிஞ்சிடுது. இப்படி வசனமில்லாத
காட்சியில்லாத சினிமா,சீரியல் கிடையவே கிடையாது.

இந்த சூழல் வளரும் இளைய சமுதாயத்துக்கு தவறான
செய்தியை கொடுக்குதா இல்லியா? தீயவற்றை
பார்க்காதேன்னு காந்தியின் 3 குரங்கு பொம்மை கருத்து
சொல்லுது. ஆனா இப்ப பசங்க பார்ப்பதும் இதே,
கேட்பதும் இதேன்னுல்ல ஆச்சு, நமக்குத் தெரியாம
பேசவும் செய்வாங்க தானே???????



சரி இதுக்கு நாம என்ன செய்ய முடியும்??
நல்லா செய்யலாங்க. பதிவுலகம்னா சும்மாவா?
ஒருங்கிணைந்து ஏதாவது செஞ்சு இப்படி பட்ட
காட்சிகள் இடம்பெறாம தடுக்க ஏதாவது செய்வது
நல்லது. பசங்களுக்கு எப்படியும் தெரியத்தான்
போகுதுன்னாலும்... நாமளே அதுக்கு வசதி
செஞ்சு கொடுத்தா மாதிரி ஆகிடக்கூடாதுல்ல...

இன்னொரு முக்கியமான விடயம் ”குடிமகன்களின்”
வாரிசுகள். இவர்களின் நிலமை???
குடிமகன்கள் நாட்டுச் சரக்கு அடிக்கறவங்க மட்டுமல்ல
நாகரீகமாக பார்டிங்கற பேர்ல சேர்ந்து தண்ணியடிப்பது,
வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடறவங்க.. OCCATIONAL
DRINKERS அப்படின்னு தன்னைசொல்லிக்கிட்டு
குடிக்கிறவங்க, COMPANY கொடுக்கறேன்பான்னு
ஒரு பெக் அடிக்கறவங்க, மீட்டிங்க், கஸ்டமர்ஸ்
அது இதுன்னு காரணம் சொல்றவங்க எல்லாருமே
“குடிமகன்கள்” தான்.

இவங்க பசங்க இவங்களை பார்த்தே வளர்வதனால்
அவங்களும் குடிமகன்களின் வாரிசுகளாக கண்டிப்பாக
ஆக வாய்ப்புக்கள் அதிகம்.

”எங்கப்பாவே குடிப்பாரு, அவரு என்ன என்னை கேள்வி
கேட்பது” இது 34 வயதாகும் ஒரு இளைஞனின் கேள்வி!!!
இந்தக்கேள்வி கேட்பது அந்த ஆணின் தெனாவெட்டை
காட்டுதுன்னாலும், அவர் வளர்ந்த சூழலை காட்டுதே!!!!

நான் காலேஜ்ல படிக்கும்போது கூட படிச்ச பொண்ணு
ஒரு நாள் தன் வீட்டில் நடந்ததைச் சொன்னா!!
செம அதிர்ச்சி. அவங்கப்பா புகழ்பெற்ற வக்கீல்.
ஐயா வீட்டிலேயே “குடி”யும் குடித்தனுமா இருப்பாராம்.
ஒருநாள் தோட்டத்துல உட்கார்ந்து அப்பா கட்டிங்
அடிக்கும்போது பாத்துகிட்டே இருந்து 10வயது பையன்
எடுத்து குடிச்சிட்டாராம். மெல்லவும் முடியாம மிழுங்கவும்
முடியாம அப்பா தவிக்க, அந்தப் பையன் ஒரு சிப்
அடிச்சதுக்கே மயங்கி, நாக்கு குழறின்னு இருக்க
அம்மா அழுதாங்களாம்.

புருஷனை குடிக்காதயான்னு பொண்டாட்டி சொன்னா
எத்தனை பேரு கேப்பாங்க??? என் சுயத்துல தலையிடாதே!!
என் இஷ்டம். பொம்பிளைங்களுக்கே இப்படித்தான்,
புருஷன் குடிச்சா பிடிக்காதே, அட்வைஸ் செய்ய
ஆரம்பிச்சிடுவாங்க இதெலாம் ரங்கமணிகள்,
கிட்டுமணிகள் அடிக்கும் டயலாக்க்குகள்.

பொண்டாட்டி சொன்னா கேட்க வேணாம்.
ஐயா உங்க புள்ளையும் உங்களை போல
குடிமகன்களாக ஆகத்தான் வேணுமா??
(குடிக்கற்வங்களை மட்டும் தான் சாமி
கேக்கறேன். பொதுவா கேக்குறதா நினைச்சு
நான் குடிக்கலை அப்படின்னு சண்டை
போட்டு பின்னூட்டம் வேண்டாம்.)


பிள்ளைகள் வளர ஆரோக்கியமான சூழலை
தரவேண்டியது பெற்றோரின் கடமையாச்சே!!!
தன் பிள்ளை எப்படி வளரணும்னு நினைக்கறோமோ
அப்படி நாம வாழ்ந்து காட்டணும். ஆயிரம்
பேர் தப்பு செஞ்சாலும்,”எங்கப்பாவுக்கு அந்த
பழக்கமில்லை, அப்பா திட்டுவாருன்னு ஒரு
பயம் வந்தா பசங்க அந்தத் தப்பை செய்வாங்களா????


முக்கியமான விடயம் இந்தக் காலத்து பசங்களுக்கு
”எல்லாமும்” நல்லா தெரிஞ்சிருக்கு. ட்ரக்ஸ்,டிரிங்க்ஸ்
பத்தி பசங்க பேசினா பயப்ப்ட்டு கோவப்படாம
அவங்களை பக்கத்துல அமர்த்தி பேசணும்...

இதனால் ஏற்படும் தீமைகளை சொல்லிக்கொடுப்பது
நல்லது. 10 வயது முதலே இதைப்பத்தி
சொல்வது நல்லாதாங்க. பசங்க சைக்காலஜி
படிச்சவங்க சொல்றாங்க. அப்பாவுக்கு எந்த
தீயபழக்கமும் இல்லாம இருந்தும் பசங்க கெட்ட
பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிறதுக்கு காரணம்
அப்பாவும்,அம்மாவும் வேலை வேலைனு ஓட,
பெத்தவங்களுக்கும் பிள்ளைக்க்கும் இடையே விழும்
இடைவெளி காரணம்.

பிள்ளைகளுக்கு குவாலிட்டி டைம் ஒதுக்கி அவங்களோடு
ஒரு நண்பனை போல இருந்து வழி நடத்திக்கொண்டு
வருவது தான் சரியான பிள்ளை வளர்ப்பு.

நீங்க என்ன சொல்றீங்க!!!!!

Monday, October 26, 2009

JAI HO

10 வருடங்களுக்கு முன்பு சென்னையில் clinic plus 25ஆம் வருட
நிறைவுக்கொண்டாட்டத்திற்காக ஹிந்துஸ்தான் லீவர்
எஸ்.பீ.பாலு அவர்களின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.
அயித்தான் அப்ப ஹிந்துஸ்தான் லீவரில்தான் இருந்தார்
என்பதால் பாஸ் கிடைச்சது. மிக அருமையா இருந்தது
நிகழ்ச்சி. அதற்கப்புறம் ம்யூசிக்கல் ஷோவுக்கு போகும்
வாய்ப்பு, நேரம் கிடைக்கலை.

கடந்த சனிக்கிழமை 24.10 அன்னைக்கு ஹைதையில்
மாபெரும் நிகழ்ச்சி. போக முடியுமான்னு தெரியலை.
”போகலாமான்னு்!” அப்ளிகேஷன் போட்டுவெச்சேன்.


சனிக்கிழமை மதியம் 3 மணிவரைக்கும் ஒண்ணுமே
சொல்லலை. அன்றைக்கு வரும்போது கையில் ஜெய் ஹோ
டிக்கெட். பசங்களுக்கு ஒரே குஷி. எனக்கும் தான்.:))

நிகழ்ச்சி நடக்கவிருந்தது சம்ஷாபாத் ஏர்போர்ட் பக்கத்தில்.
நம்ம வீட்டுலேர்ந்து 1 மணிநேரம்(ட்ராபிக் இல்லாட்டி) ஆகும்.
4 மணிக்கு கிளம்பினோம். இதுல இன்னோரு சர்ப்ரைஸ்
என்னன்னா புது ப்ரிட்ஜில் பயணம்.

இந்தியாவின் மிக நீளமான மேம்பாலம் ஹைதையில் தான்
இருக்கு. கடந்த திங்கள்கிழமைதான் முதல்வர். ரோசய்யா
திறந்துவெச்சார்.



11.66கிமீ தூரத்துக்கான மேம்பாலம் இது. 12 நிமிஷத்துல
கடந்திடலாம். காரணம் இந்த மேம்பாலத்தில் நடப்பவர்கள், டூவீலர்ஸ்,
பஸ் போகத் தடை. ச்சும்மா கலக்கலா இருந்துச்சு.
இந்த பாலத்தால விமான நிலையத்துக்கு போறவங்களுகு
பயண நேரம் கணிசமா குறையுது.



ஏர்போர்ட்டுக்கு பகக்த்தில் இருக்கும் நோவாடெல் ஹோட்டலுக்கு
பக்கத்தில் இருக்கும் GMR ARENA வில் நிகழ்ச்சி. சரி கூட்டம்.
7.15 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.



3.15 மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் A.R.RAHMAN
தமிழ், தெலுங்கு, ஹிந்தி பாடல்கள் வழங்கினார்.
சாதனா சர்கம், சித்ரா,ப்ளேஷ் என பல பாடகர்கள்
பாடினார்கள். ரஹ்மானும் அவரது ஹிட் பாடல்களை
வழங்கினார்.

ட்ரம்ஸ் சிவமணி அடி வெளுத்துக்கொண்டிருந்தார்.
மனிதர் பாடல்களுக்கு இடையே தனது வாத்தியங்களை
கழுத்தில் மாட்டிக்கொண்டு மேடைக்கு நடுவில் வந்து
வாசித்தது சுவாரசியம்.

alt=""id="BLOGGER_PHOTO_ID_5396799377049307218" />

ஒரு சில பாடல்களைத் தவிர பல பாடல்களை கோர்த்து நடந்தது நிகழ்ச்சி.
ஜியாசே ஜியா, வெள்ளைப்பூக்கள் எல்லாம் அருமை.

ரஹ்மானின் சூப்பர் ஹிட்பாடல்களான முஸ்தபா,முஸ்தாபாவும்
ஹம்மா ஹம்மாவும் பாடப்பட்ட பொழுது எல்லோரும் எழுந்து
ஆட்டம் தான்.

ரசிக்கும் வகையில் இருந்தது நிகழ்ச்சிக்கு ஹைலைட்
BACK STAGE EFFECTS மிகப் புதுமையாக இருந்தது
மெருகூட்டியது.




ரஹ்மானின் ஹிந்தி உச்சரிப்பு ஆச்சரியமூட்டியது.
அவர் பாடிய எந்தப் பாடலும் புத்தகம் கையில் இல்லாமல்
மனப்பாடமாக பாடியது ஆச்சரியமோ ஆச்சரியம்.

தலைக்கனமில்லாத அந்த மாமனிதரின் இந்த நிகழ்ச்சியில்
கிடைக்கும் ஆதாயத்தை ஆந்திராவின் வெள்ள நிவாரணத்துக்கு
அர்ப்பணிபத்திருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.





நிகழ்ச்சிக்கு முதல்வர்.ரோசய்யாவுடன் மாலத்தீவு அதிபர்
தன் மனைவியுடம் வந்து கொண்டு சிறப்பித்தார்.

ஓபன் ஏரெனா என்று தெரியாமல் போய் குளிரில்
மாட்டிக்கொண்டோம். செம குளிர். ஆனாலும்
எழுந்து வர மனமில்லாமல் பிள்ளைகள். அவர்களுக்கு
பிடித்த பப்பு காண்ட் டான்ஸ் சாலா, டெல்ஹி 6,
ஜோதா அக்பர் பாடல்களும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.

முஸ்தபா,முஸ்தபா பாடலின் போது(இது அயித்தானுக்கு
ஃபேவரிட்) அயித்தானும் உடன் பாடுவதைக்கேட்டு
அம்ருதாவுக்கு செம ஆச்சரியம். அப்பா பாடி நான்
பாத்ததே இல்லை!! என்றாள்.

அந்தப் பாடலின் போது சற்றே திரும்பி பார்த்தால்
எல்லோரும் ஏதோ யோகா பயிற்சி செய்வது போல்
கைகளை மேலே தூக்கி ஆட்டிக்கொண்டு, இசையில்
கட்டுண்டு பாடிக்கொண்டிருந்தது தெரிந்தது.

இசைக்கு மொழி ஏது??? அதுதான் தமிழன் ரஹ்மானை
இத்தனை உயரத்துக்கு கொண்டு சென்று, பலரும்
விரும்பும் இசையமைப்பாளனாக ஆக்கியிருக்கிறது.

ஜெய்ஹோ பாடலும் வந்தே மாதரம் பாடலும் இறுதியில்
பாடப்பட்ட பொழுது மொத்த அரங்கமும் எழுந்து நின்று
மரியாதை செலுத்தியபொழுது மதம், இனம்,மொழி
எல்லாவற்றையும் கடந்து நின்றது மனது.....

Thursday, October 22, 2009

GOOGLE DOOGLE

எல்லாம் நம்ம கூகுளாண்டவ பத்தின மேட்டர் தான்.
தீபாவளின்னா ரேடியோவுல தீபாவளி சம்பந்தமா
வந்த பாட்டு போடுவது போல சமீபகாலமா
கூகுளில் கூகுள் இமேஜ் வித்தியாசமா வந்துகிட்டு
இருக்கறது பலரும் பாத்திருப்பீங்க.

நண்பர் பதிவர் ரங்கா வோட் போடுங்கன்னு லிங்க்
கொடுத்திருந்தார். பிள்ளைகள் வடிவமைத்தற்கு
நாம் வாக்குப்பதிவு செய்வது போல.




ஒவ்வொன்ணும் சிம்பிளி சூப்பர். எதை விடன்னு
தெரியாம ஒரு வோட்டுதான் போட முடியும் என்பதால்
வருத்தமா ஒரு வோட்டு போட்டேன்.



பிள்ளைகளின் கைவண்ணங்கள் அருமை.



GOOGLE DOOGLE இங்க போய் பாருங்க. உங்க வோட்டையும்
மறக்காம போடுங்க.

நன்றி

குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை நாகரீகங்கள்

முன்பெல்லாம் பள்ளியில் மாரல் ஸ்டடி என்று ஒரு
வகுப்பு உண்டு. நல்லது கெட்டது கதைகளாக
சொல்லப்படும்.

value education என்று பிறகு மாற்றினார்கள்.

இப்போது இரண்டு வகையும் இல்லை. அதனால்
பிள்ளைகள் மெத்த படித்திருந்தும் அடிப்படை
நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள்.

இது அவர்களின் வளர்ச்சியில் ஒரு குறைபாடாகிறது.
ஏட்டிக்குபோட்டியான வாழ்க்கைக்கு கொண்டு
செல்கிறது.


குழ்ந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும்
பொழுதிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் நல்லவிதமாக நடந்து கொண்டால்
உடன் பாராட்டு பத்திரம் வாசித்து தவறு செய்தால்
அடித்து திட்டி செய்வோம்.

தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு பதில், எப்படி
நல்ல விதமாக செய்திருக்கலாம் என்று எடுத்துச்
சொல்லலாம்.

10 முக்கியமான அடிப்படை நாகரீங்கள்
என்னவென்று பார்ப்போம்.

************************************

1. பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது
கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள்.
இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,”நாங்கள் பேசி
முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெளிவாக
சொல்ல வேண்டும்.Waiting their turn என்று ஆங்கிலத்தில்
சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில்
இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/
தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது
கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

2.பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா? நியாமே இல்லை.
பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு
மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன
வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும்.

(நண்பர்களை கூட வாடி,போடி, அடா,புடா என்று பேசுவதை
தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது
நலம்)

3. வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை
திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். வந்தவர்கள்
வாயிலில் தேமே என்று நிற்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும்.
கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.
இதனால் விருந்தினர்களுக்கும் மனது மகிழ்ச்சி.


4. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்
சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது
"You're welcome" சொல்ல மறக்காதீங்க.




5. சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.
பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும்.
அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே
போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய்விடுவார்கள்.
இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

6.விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எஜமான் பட நெப்போலியன்
போல,”கல்யாண வீட்டுல நான் தான் மாப்பிள்ளை, செத்த
வீட்டுல நா தான் பொணம், மாலையும் மரியாதையும்
எனக்குத்தான்” எனும் அந்த வசனம் சினிமாவில் சரி
நிஜத்தில் வெற்றி/தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை
வளர்க்க வேண்டும். அதுதான்Good sportsmanship.

7. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப்
பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை
சொல்லத்துவங்கக்கூடாது.

8. வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின்
மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு
வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால்
என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க
வேண்டும்.

9. லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே
நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியே
வந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என
பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே
செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி
வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான்
நாம் உள் செல்ல வேண்டும்.

10.வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது
மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு
படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின்
பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ப்ர்த்யேக பழக்க
வழக்கங்கல்,கலாசாரங்கள் இருக்கின்றன. அவை
அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை
பிள்ளைகள் உணர வேண்டும்.


************************************
பேரண்ட்ஸ் கிளப்பில் நேற்று போடப்பட்ட பதிவு.

Tuesday, October 20, 2009

நல்ல நேரம்

நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்
சீரியல்கள் கையில் நான் சிக்கவில்லை. :)))

அதுக்காக டீவியே பாக்குறதில்லைன்னு பொய்யும் சொல்லமாட்டேன்.

நல்ல ப்ரொக்ராமா இருந்தா கண்டிப்பா பாப்பேன்.

இப்ப நான் சொல்ல வந்தது NDTV GOOD TIMES.
சேனல்ல வர்ற நிகழ்ச்சிகள் நல்லா இருக்கு.




காலையில் No Kidding ஒவ்வொரு பெற்றோரும்
பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. காலையில் வேலையில்
இருப்போமேன்னு சொல்றவங்க இருக்கவே இருக்கு
வலைத்தளம்.


சமையல் ஒண்ணும் கம்ப சூத்தரமில்லைன்னு நான்
சொல்லலை இந்த டீவி நிகழ்ச்சி சொல்லுது.
கண்டிப்பா பாருங்க. வித்தியாசமான சமையல்
குறிப்புக்கள் நல்லா இருக்கு.



அப்பா! இவங்க ரெண்டு பேரும் அடிக்கற லூட்டி
சிம்பிளி சூப்பர்ப்...
தினமும் இரவு 8 மணிக்கு HIGHWAY ON MY PLATE.



எங்க என்ன ஷ்பெஷல்னு சொல்வது இந்த ஷோ.
நேத்து ஜோத்பூர்ல ஒரு கடையில இவங்க பண்ண
ஆர்டரை பாத்து பக்கத்துல இருந்த ஒருத்தர்
அடிச்ச கமெண்ட்,”எங்களுக்கும் ஏதும் மிச்சம் மீதி
வைங்கப்பா!!!” :)))



Join Rocky, Mayur இவங்க ரெண்டு பேரும் ஹைவேக்களில்
கிடைக்கும் சாப்பாடு, அந்தந்த ஊரின் ஷ்பெஷல் போன்றவற்றை
சொல்லும் விதமா இருக்கற இந்த ப்ரொக்ராம் நல்லா இல்ல
இல்ல.. ரொம்பவே நல்லா இருக்கு.



வேற எந்த ப்ரொக்ராம் நல்லா இருக்குன்னு
பாத்துட்டு சொல்றேன்.

இப்ப chak le India பாக்க லேட்டாகிடுச்சு வர்றட்டா

:)))))))))))

மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்

ரிலாக்ஸ்- இந்த வார்த்தை சொல்லும்போதே அதுவும்
ரி...லா...க்ஸ் என கொஞ்சம் சுருதியாக சொல்லிப்பாருங்கள்
நிஜமாகவே ரிலாக்ஸ்டாக இருக்கும்.

5 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் ஆவுறது எப்புடின்னு பாப்போம்.

பயில்வான் ஒருவரை மல்யுத்தத்துல மடக்க முடியாத
எதிராளி பயில்வானிடம்,”அண்ணே, உங்க உடம்புக்கு
என்னாச்சுண்ணே? வியர்த்திருக்கு, ரொம்ப டயர்டா’
இருக்கீங்க? ஏதும் ப்ராப்ளமாண்ணே” என
வெறும் பேச்சாலையே அவரை புல்தடுக்கி பயில்வானாக்கிய
கதை அனைவருக்கும் தெரிந்ததே.


Positive thinking இது மிக முக்கியம்.
சோம்பி கிடக்கும் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி
Positive thinkingனால் கிடைக்கும். எப்படி?
ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் கொடை கற்பனை.
அதிகம் சத்தமில்லாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக்கோங்க.
உங்களுக்கு மனதுக்கு பிடித்த காட்சி, இடம் இப்படி
ஏதாவது ஒண்ணை தேர்ந்தெடுத்து நீங்கள் அங்கே
போய் வருவது போல் கற்பனை செய்து பார்க்கணும்.





உதாரணமா, எனக்கு மிகவும் பிடித்தது கொழும்பு-கதிர்காமம்
பயணம். வலது புறம் கடலலைகள், இடது புறம் பச்சை பசுமை.
நடுவில் ஆனந்தமான பயணம். நீல நிறக் கடல்நீரில் வெயில்
பட்டு ஜொலிக்கும் அந்த ஜொலிப்பு.... இந்தப் பக்கம்
பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் இயற்கை வளம்.
முள்ளும் மலரும் சரத்பாபு போல “செந்தாழம் பூவில் வந்தாடும்
தென்றல்னு” பாடிக்கிட்டே ஒரு லாங்க் ட்ரைவ்.

அந்த நினைவுகளில் அப்படியே மூழ்கி வெளியே வரும்போது
ச்சும்மா ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது ஒரு வகை.


மற்றொரு வகை தூங்கப்போகும் முன் அல்லது சோர்வாக
இருக்கும் நேரங்களில் செய்யலாம்.

சவாசனம் போல படுத்துக்கொள்ள வேண்டும். படுக்க விருப்பமில்லாதவர்கள்
ரிலாக்ஸ்டாக நாற்காலியில் அமர்ந்துகொள்வது நலம்.

மிக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து,வெளியேற்ற வேண்டும்.



சரியான மூச்சுவிடும் முறை எது தெரியுமா?
மூச்சு உள்ளே இழுக்கும்போது வயிறு முன்னே
வரவேண்டும். வெளியே விடும்பொழுது வயிறு
உள்ளே செல்லவேண்டும். இந்த சுவாச முறையில்
நுரையீரல்களில் தேவையான சுவாச காற்று
செல்லும்.

TAKE A DEEP BREATH AND RELAX என்று மந்திரம்
போல் சொல்லிக்கொள்வது நலம் தரும்.

கண்மூடி புருவமத்திக்கு மனதை ஒருங்கிணைத்து
10-0 தலைகீழாக எண்ணி ஆல்ஃபா லெவலுக்குச்
சென்று NOW MY MIND IS GETTING RELAXED, NO
MORE TENTION என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளவேண்டும்.

அப்படியே கண்களை சுருக்கி(டைட்டாக) விரித்து
கண்கள் ரிலாக்ஸாவதாக சொல்லவும்.

முகமலற சிரித்து, புன்னகையை முகம் முழுதும்
செலுத்தி புன்னகை நிறைந்த முகமாக்கிக்கொண்டு
முகத்துக்கு புத்துணர்ச்சி தரவும்.

கழுத்து, பின் கழுத்துஆகிய பகுதியில் கவனம்
செலுத்தி தசைகளை தளர்ச்சி அடைய செய்யவும்.

தோள்பட்டைகளை உயர்த்தி அப்படியே ரிலாக்ஸாக
விடவும்.

கைவிரல்களை மடித்து டைட்டாக மடிக்கவும்.
பிறகு மெல்லத் திறக்கவும்.

இருதயத்தில் அன்பு நிறைந்திருக்கட்டும்.
அன்பே கடவுள், அன்பே சத்தியம் என்று
சொல்லி நெஞ்சுப்பகுதியை இலகுவாக்கிக்கொள்ளுங்கள்.

மேலே சொல்லியிருக்கும் சுவாசப்பயிற்சி போல்
வயிற்றை இலகுவாக்கிக்கொள்ளவும்.

இடுப்பு பகுதியில் கவனத்தை கொண்டு சென்று
இடுப்பு தசைகளை தளர விடவும்.

அப்படியே தொடை, முழங்கால்கள் என
நிதானமாக சென்று பாதத்தை கீழ் நோக்கி
அழுத்தவும். பிறகு ரிலாக்ஸ்டாக விடவும்.

இப்போது அந்த நிலையிலேயே 2 நிமிடம்
இருக்கவும். கண்மூடி உள்ளுக்குள் நிகழும்
மாற்றத்தை அவதானித்துக்கொண்டு இருக்கவும்.

தசைகளில் இருக்கும் இறுக்கத்தைக் குறைக்கும்
இந்தப் பயிற்சியினால் தசை, மனம் இரண்டும்
ரிலாக்ஸாகிறது.

செய்துதான் பாருங்களேன்!!!

Monday, October 19, 2009

ஆயுளைக்குறைக்கும் ஒரு சொல்!!!!

100 வயது வாழ்வதை தீர்க்காயுசுன்னு சொல்வாங்க.
வாழும் காலத்தில் நோய் நொடி இல்லாமல் வாழ்வதும்
தீர்க்காயுசு மாதிரிதான். நோய் நொடியைவிடவும்
கொடியது இந்தச் சொல்.

இதைச் சொல்லாதவங்களே
கிடையாது?? குழந்தைக்கும் கூட இது உண்டு
ஆச்சரியமா இருக்கா?





படத்தை பாத்தா நம்மையாரோ மறைஞ்சிருந்து போட்டோ
பிடிச்சிட்டாங்கப்பான்னு நினைக்கத் தோணுதா??

வாங்க வாங்க. இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

மன அழுத்தம் இது தான் அந்தச் சொல். குழந்தைகளுக்கும்
ஸ்ட்ரெஸ் உண்டு என்பதை நாம் புரிந்துக்கொள்ளனும்



இதனால வர்ற பாதிப்பு பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
நம் அன்றாட வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் வித்தை
மன அழுத்தத்துக்கு ரொம்பவே தெரிஞ்சிருக்கு.


சில பேர் மன அழுத்தம் அதிகமா இருக்கும் போது
அதிகமா சாப்பிடுவாங்க இல்லாட்டி சாப்பிடவே மாட்டாங்க.


தூக்கமின்மை,மலச்சிக்கல், வாய்ப்புண், அல்சர், பேதி,
தலைவலி, முதுகுவலி எல்லாம் மன அழுத்தம்
தர்ற கொடைதான்.


”எல்லாம் தெரியும் சாமி. யோகா, உடற்பயிற்சி,
மெடிட்டேஷன், பாட்டு இதெல்லாம் செய்ய நமக்கு
நேரமில்லை, இப்படியே இருந்திட வேண்டியதுதான்”
அப்படின்னு சொல்லிட்டா எப்ப்பூடி???

5 நிமிஷம் நேரம் ஒதுக்க முடிஞ்சா போதும்.
எளிதான பயிற்சி இருக்கு. 5 நிமிஷமா ட்ரை செஞ்சு
பாக்கறேன்னு சொல்றீங்களா? சரி அடுத்த பதிவுல
கண்டிப்பா சொல்றேன்.

அதுக்கு முன்னாடி ஒரு டெஸ்ட் செஞ்சு பாத்து
உங்க மன அழுத்தம் எந்தளவுக்கு இருக்குன்னு
பாத்து வெச்சுக்கோங்க. இல்லத்தரசி, வேலைக்குப்போறவங்க,
போகாதவங்க, பெரியவங்க, சின்னவங்க, எல்லோரும்
ஒருமுறை இந்த டெஸ்ட் செஞ்சு பாத்துகிட்டா நல்லது.

எங்க போய் டெஸ்ட் செய்ய? எனக்கு நேரமில்லைன்னு
ஓடாம, அப்படியே கம்ப்யூட்டர் பக்கத்துலேயே உக்காந்து
இந்த டெஸ்டை முடிச்சிடுங்க.

இங்கயும் டெஸ்ட் செஞ்சு பாக்கலாம்.

அடுத்த பதிவுல சந்திக்கறேன்.

Friday, October 16, 2009

நிஜமான பண்டிகை கொண்டாடுவோம்!!

இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருத்தமடையும்.

இது எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல் பலருக்கும்
இருக்கும் கருத்து என்றுதான் நினைக்கிறேன்.

என்ன மேட்டர்??? அடுத்த பதிவில் சொல்றேன்.
என்று போன பதிவில்சொல்லியிருந்தேன்.

அப்போதெல்லாம்
பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனும்
தந்ததுண்டு. ஆனால் இருந்தது ஒரு சேனல் தான்
என்பதாலும் 24 மணி நேர ஒளிபரப்புக்கள் கிடையாது
என்பதாலும் உற்றார், உறவினரை சந்திக்க,
பெரியவர்கள் வீட்டுக்குச் சென்று ஆசிரிவாதம்
வாங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் உண்டு.
புத்தாடை கட்டி கர்வமாக வீதியில் நடந்திருப்பேமே
ஞாபகம் இருக்கா??

பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இறைவனுக்கு
பூஜை செய்வதற்காக மட்டுமல்ல உற்றார்,
உறவினருடன் கலந்து மகிழத்தான். ஆனால்
இன்று நடப்பது என்ன?

அவசர அவசரமாக எண்ணெய்க்குளியல்,
பூஜை,புத்தாடை, பட்டாசு வெடித்து
காலை முதல் நள்ளிரவு வரை தீபாவளி
சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது தான் :((

நான் சென்ற முறை உறவினர் வரச்சொன்னாரே
என்று அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். என்னை
வரச்சொல்லிவிட்டு எல்லோரும் டீவி முன்
இருந்தனர். வா என்றழைத்ததோடு சரி. பேசவேயில்லை.
ஏன் போனோம் என்றாகிவிட்டது. :((( சேர்ந்து
கோவிலுக்கு போகலாம் வாங்கள் என்றழைத்ததற்கு
”ஆஹா, அந்த நேரத்தில் சிறப்புத்திரைப்படம் இருக்கு
நான் வரவில்லை!!!” என்று சொல்லிவிட்டார்.

இலங்கையில் இருந்த போதெல்லாம் நாம்
இந்தியாவை விட்டு தூரத்தில் இருக்கிறோம். இதனால்
நம் பிள்ளைகள் கலாச்சாரம்,பூஜை ஆகியவற்றை
மறந்து விடக்கூடாது என்பதுதான் பலரின் எண்ணம்.
(வெளிநாட்டில் வாழும் பலரின் மனதில் இந்த
எண்ணம் தான் ஓடிக்கொண்டிருக்கும்)

அதனால் ஒவ்வொரு பண்டிகை, பூஜை எல்லாம்
சிறப்பாக கொண்டாடுவோம். அங்கிருக்கும்
நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர்
போனில் வாழ்த்திக்கொள்வது பத்தாமல்
நேரில் வந்து வாழ்த்து சொல்வார்கள். நாங்களும்
செல்வோம்.

எங்கள் குரூப்பின் பெயர் “ப்ரவாஸாந்த்ரா(PRAVASANDHRA)"
அர்த்தம் ஆந்திராவைவிட்டு வெளியே இருப்பவர்கள்.

எப்போதும் இனிப்பாக நினைவில் இருப்பது
யுகாதி(தெலுங்கு வருடப்பிறப்பு), தீபாவளி.

யுகாதி மிக முக்கியமான கொண்டாட்டம்.
பிள்ளைகள் பாரம்பரியத்தை உணர்த்தும்
விதமாக நடனம், ஸ்லோகங்கள் ஆகியவை
அரங்கேற்ற 2 மாதங்களுக்கு முன்பே சொல்லிக்
கொடுப்போம். பெரியவர்கள், சிறியவர்கள்
சேர்ந்து நடத்தும் குடும்ப விளையாட்டு,
என கேளிக்கை, கொண்டாட்டம் இருக்கும்.

மிக முக்கியமான பஞ்சாங்க ஸ்ரவனம் உண்டு.
வந்திருக்கும் அனைவருக்கும் பரிசு, என
பல விதமாக உழைத்து செய்வோம். பெண்கள்
நாங்களே எல்லா ஏற்பாட்டுகள்(அனைவரையும்
ஒருங்கினைத்தல், அழைப்பிதழ் தயாரித்தல்,
பிள்ளைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு
சான்றிதழ்கள் தயாரித்தல்,பிள்ளைகளை
தயார் செய்வது, விழா நடத்த ஹோட்டல்
புக் செய்வது, பரிசுகள்) செய்து யுகாதி அன்று
ஆண்கள் கையில் கொடுத்து நடத்தச் சொல்வோம்.

மிக முக்கியமான கண்டீஷன் என்னவென்றால்,
ஆங்கிலம், ஹிந்தியில்பேசக்கூடாது.நிகழ்ச்சி
நடைபெறும் பொழுது தெலுங்குத்தவிர
வேறு மொழி பேசினால் உடனே “மாத்ரு பாஷா,மாத்ரு பாஷா”
என்று சவுண்ட் விடுவோம். :))
பாராம்பரிய உடையில் தான் வரவேண்டும்.

ஏன் இந்த கண்டீஷன்??
எப்போதும் மற்ற பாஷைக்ள் கலந்து பேசுவோம்.
யுகாதி அன்று மட்டுமாவது தெலுங்கு மட்டும்
பேசினால் நம் நாட்டில் இருக்கும் எஃப்கட் கிடைக்கும்.
மொழி மறந்துவிடாமல் பிள்ளைகளும்
பேசுவார்கள். இது தெலுங்கர்கள் மட்டும் பங்கேற்கும்
நிகழ்ச்சி.

தீபாவளி அனைவருக்கும் பொதுவானது. அதுவும்
மிக சிறப்பாக கொண்டாடுவோம். வெடி வெடிக்க
ஏதுவாக நிறைய்ய காலியிடம் இருக்கும் நண்பரின்
வீடுதான் கொண்டாடும் இடம்.


கொண்டாட்டத்தில் கலந்து வரும் தோழிகள்
முன்னாடியே பேசிவைத்து “POT LUCK"
முறையில் ஒவ்வொருவரும் உணவுதயாரித்து
கொண்டு செல்வோம். நாங்கள் வாங்கி வைத்திருக்கும்
பட்டாசுகளை கொண்டு சென்று எல்லா பிள்ளைகளும்
சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.

ஒன்றாக கலந்து, பேசி மகிழ்ந்து, உண்டு
பண்டிகை கொண்டாடிய மகிழ்ச்சியில் பிள்ளைகள்
மறுநாள் பள்ளிக்கு மட்டம் அடித்து என
இனிய நினைவுகள் தான்.

இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருந்தும் காரணம். நம் தாய்த்திருநாள் நாட்டில்
பண்டிகைகள் கொண்டாடப்படும் விதம். அங்கு
எல்லோருடனும் கலந்து மகிழ்ச்சியாக இருந்துவிட்டு
“இங்கே எனது வீடு, எனது பிள்ளைகள், எனது
குடும்பம்” என்று தனியாக இருப்பது போல் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும். பண்டிகை காலங்களில்
டீவிக்கு சற்று ஓய்வுக்கொடுத்து, உற்றார் உறவினர்
வீட்டுக்குச் சென்று கலந்து மகிழ்ந்து உறவை
பலப்படுத்திக்கொள்வேன் எனும் சங்கல்பம் அனைவரும்
செய்து கொண்டால் நிஜமான பண்டிகை கொண்டாடி
அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.



நிஜமான பண்டிகை கொண்டாடி அனைவரும் வாழ்வில்
மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.

வலையுலக நண்பர்கள்,உடன் பிறப்புக்கள், மற்றும் அவர்களது
குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக
மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்




VOTE போடுவீங்கன்னு எனக்குத் தெரியும்.:)))

Wednesday, October 14, 2009

தீபாவளி ஏற்பாடுகள்

நம்மூரில் தீபாவளி அன்றுதான் பெரிய பண்டிகை.
கொண்டாட்டம் விருந்து எல்லாம். ஆனால்
உண்மையில் 5 நாட்கள் தீபாவளி பண்டிகை
என்பது மும்பை போனபோதுதான் தெரியும்.


நம்மூரில் பொங்கலுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து
வெள்ளை அடித்து, பளிச்சென்று செய்வோம்.

வடக்கே தீபாவளிக்கு அமர்க்களப்படும். அந்த ஐடியா
எனக்கும் பிடிக்க நானும் பின் பற்றுவேன்.

ஜன்னல்களும் புத்தாடைக்கட்டி தீபாவளிக்கு நான் ரெடின்னு
சொல்லும். கலர் கொஞ்சம் டார்காக இருப்பதுபோல்
பார்த்துக்கொள்வேன். கோல்டன் கலரில் செய்தாலும்
அமர்க்களமாக பண்டிகைக்கான தோற்றத்துடன் வீடே
ஜொலிக்கும்.

ஏற்றப்படாத மெழுகுவர்த்திகளை வைத்து
அலங்காரம் செய்வது வீட்டில் நுழைந்த உடன்
நல்ல மூடை கொடுக்கும்.

அகல்விளக்குகள் (எரியவிடாமல்) அலங்காரமாக
வைத்தாலும் சூப்பரா இருக்கும்.

வீட்டுக்கு வெளியே இப்படி வைப்பதும் அழகைத்தரும்.




தீபாவளியன்று செய்யப்படும் லட்சுமி பூஜை மிக
விசேசம். இது போல் லட்சுமி காலடி வீடெங்கும்
போடுவார்கள்.


அது என்ன 5 நாள் பண்டிகை??

1. DHANTHERYAS - முதலாம் நாள் பண்டிகை. தன் திரேயஸ்.
இன்று லட்சுமி பூஜைக்கான வெள்ளிக்காயின், அல்லது தங்கம்
குறைந்த பட்சம் எவர்சில்வர் பால்காய்ச்சும் பாத்திரமாவது
வாங்கிவருவார்கள்.

தன்வந்திரி- இவர் நாராயணின் அம்சம். அம்ருத கலசத்தோடு
வெளிப்பட்டநாள் என்றும் சொல்வார்கள்.
2.CHOTI DIWALI- நரகசதுர்தசி
3.BADI DIWALI,LAKSHMI POOJA- லட்சுமி பூஜை செய்யப்படும்.
இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகுவதாக நம்பிக்கை.

4.GOVARDHAN POOJA/NEW YEAR - மார்வாடிக்காரர்களுக்கு
புத்தாண்டு.(சித்திரை வருடப்பிறப்பு). இந்நந்நாளில்தான்
ஸ்ரீக்ருஷ்ணர் கோவர்தன கிரி மலையை கையில் ஏந்தி
தன் பக்தர்களை ரட்சித்ததாக கதையும் உண்டு.

5. BAIDUJ - உடன் பிறப்புக்கள் கலந்து உறவை
பலப்படுத்திக்கொள்ளும் திருநாள். திருமணத்திற்கு
பிறகு தாய்வீட்டு விசேடங்களில் பெரிதாக பங்கேற்க
முடியாமல் போகும். ஆனால் இந்நந்நாளில் தன் அக்கா,
தங்கை கையால் உண்ப்வர்களுக்கு நல்ல ஆயுசு,ஐஸ்வர்யம்
கிடைக்கும் என்பது நம்பிக்கை

மேலதிக தகவல்களுக்கு இங்கே பாருங்கள்.


அம்மா வீட்டில் தீபாவளிக்கு முதல் நாள்
கொண்டாட்டமாக இருக்கும்.

உக்காரை, வகைவகையான பஜ்ஜி, முள்ளங்கி வெங்காய
சாம்பார் என மெனு கலக்கலாக இருக்கும்.
இப்போது நானும் இந்த மெனுதான் செய்வேன்.

அடுத்த நாள் அதாவது தீபாவளியன்று மெனு
அதிகமாக செய்ய மாட்டேன். இதனால்
பண்டிகை நாளன்று வேலையும் குறைவு.
வயிற்றுக்கு இதமான மெனு இதுதான் திட்டம்.

வீட்டுக்கு வருபவர்களுடன் அளவளாவ முடியும்.

ஆனால் இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருத்தமடையும்.

இது எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல் பலருக்கும்
இருக்கும் கருத்து என்றுதான் நினைக்கிறேன்.

என்ன மேட்டர்??? அடுத்த பதிவில் சொல்றேன்.

Tuesday, October 13, 2009

சந்தோஷமான அதே சமயம் எச்சரிக்கை தரும் பதிவு

கிட்டத்தட்ட 4 மாதத்திற்கு மேலாக கைவலி என்னை
பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது நண்பர்கள் எல்லோருக்கும்
தெரியும்.


ஸ்பாண்டிலைடிஸ் என்று ஆரம்பித்து
பிசியோதெரபி எல்லாம் செய்தும் குறையாத
வலியால் எனக்கு வந்திருப்பது பைப்ரோமயாலஜி என
முடிவு செய்து அதற்கும் மருத்துவம் நடந்து
கொண்டிருந்தது. ஒருவருக்கு இருவராக அதை
கன்பர்ம் செய்து மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டு
வலியோடு வாழ்வதெப்படின்னு யோசிச்சுகிட்டு
இருந்தேன்.


குறையாத வலியில் அவதிப்படும் என்னைப்பார்த்த
பக்கது வீட்டு டாக்டர் பைப்ரோமயாலஜிக்கு ப்ரத்யேக
கவுன்சிலிங் உண்டு. வலியை எதிர்கொள்ள அது உதவும்னு
சொல்லி தான் வேலை செய்யும் KIMS- KRISHNA INSTITUTE OF
MEDICAL SCIENCE -SECUNDERABADக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே ரிமுடாலஜி மருத்துவர் சரத்சந்த்ரா அவர்களை
சந்தித்து என் வலிகளைப்பற்றிச் சொல்ல பெரிய
லிஸ்ட் டெஸ்ட்கள் எழுதிக்கொடுத்தார். ஆஹா!!
அப்படின்னு நினைச்சேன்.

அயித்தான் விடாமல் வம்படியாக அழைத்துச் சென்றார்.
4 சிரிஞ் ரத்தம் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டார்கள்.
அடுத்தநாள் ரிப்போர்ட் வாங்கி மருத்துவரிடம் சென்றபோது
அவர் சொன்னது எனக்கு பயங்கர அதிர்ச்சி.

“உன் வலிக்கு காரணம் பைப்ரோமயாலஜி அல்ல. நான்
சந்தேகப்பட்டது போல் விட்டமின் டி குறைபாடு” என்று
சொல்லி இளவயதில் வலியும் வேதனையும் நீ படக்கூடாது
என்று சொல்லி விட்டமின் டீ சப்ளிமெண்ட் மருந்துகள்
கொடுத்திருக்கிறார்.

2 மாதத்திற்கு பிறகு மறுமுறை வந்து காட்டச் சொன்னார்.
வாரத்துக்கு 4 நாள் வெயில் மேலே பட நிற்க வேண்டும்.
தினமும் கடைக்கு,அந்த வேலை இந்த வேலை என்று
வெயிலில் போய் வரும் எனக்கே விட்டமின் டீ குறைபாடு
என்றால் வீட்டிலேயே அடைந்து கிடைக்கும் தங்கமணிகளே
கவனமா இருங்க.

விட்டமின் டீ குறைஞ்சா என்னவாகும்னு தெரிஞ்சிக்க
நெட்ல போட்டா மேட்டர் கொ்ட்டுது.


இம்புட்டு ஆகும்.




மொத்த உடம்பும் வலி. அதிலும் எலும்பு வலி.
கால்சியம் சத்து குறைந்து விடுகிறது. அதிலும் பெண்களுக்கு
மார்பகப்புற்று நோய் வருவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு
காரணம்.

எச்சரிக்கை பதிவுன்னு சொன்னதன் காரணம்
இந்தக் குறைபாடு பற்றி பலருக்கும் தெரிய
சாத்தியமில்லை. தேவையான மருந்தோடு
தகுந்த உணவும் முக்கியம்.

காட்லீவர் மாத்திரையில் அதிக அளவு
விட்டமின் டீ கிடைக்கிறது.

சோயா பால், சோயா பொருட்கள் மிக்க நலம்.

பத்திரமா பாத்துக்கோங்க. சீக்கிரம் என் வலி
குறைந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி
உங்க எல்லோரையும் பதிவு போட்டு
ஒரு வழி ஆக்கிடும் நாள் ரொம்ப தூரத்துல
இல்லீங்கோ.
:))))))))))))))

மீ த புலம்பிங்.. :))

நம்ம நேரம் இப்படியாகிடிச்சே...ன்னு தான் புலம்பிங்.
அப்படி என்ன நேரம்???

நேரம் 1: அப்பா மகள் கூட்டணி எல்லார் வீட்டிலும்
நடப்பதுதான். இது ஏன் இப்படின்னு முன்னாடி
ஆராய்ச்சி
எல்லாம் செஞ்சு பதிவு போட்டிருந்தேன்.

என் பிள்ளைகள் இருவருமே அப்பா கோண்டாகத்தான்
இருந்தார்கள். எங்கேயிருந்து வந்த மாற்றம் என்று புரியவில்லை.
ஆஷிஷ் என் பக்கம் சாய ஆரம்பிக்க அம்ருதா அப்பா
பக்கம்.

அவர்கள் இருவரும் சென்னைக்காரர்கள், நாங்கள்
இருவரும் புதுகைக்காரர்கள் என்ற ரீதியில் மட்டுமே
கலாய்ப்புகள் நடந்தன. வர வர அப்பாச் செல்லம்
அதிகமாக தலைக்காட்ட நானும் மகனும் அடக்கி
வாசிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது!!!!

ஒரு நாள் ஏதோ பேசிக்கொண்டிருந்த பொழுது அயித்தானிடம்
”ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்கு.
ரொம்ப தான் பொண்ணுன்னு செல்லம் கொடுக்கறீங்க,
கல்யாணம் செஞ்சு அனுப்பும்போது என்னை விட
நீங்க தான் அழப்போறீங்க. ஜாக்கிரதை”ன்னு சொன்னேன்.

“நான் என் பொண்ணை எல்லாம் கல்யாணம் செஞ்சு
அனுப்ப மாட்டேன். பொண்ணும் மாப்பிள்ளையும்
என் கூடத்தான் இருப்பாங்க. அதுக்கு ஒத்துக்கறவங்க
என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கட்டும்” இது அயித்தான்.

“ஆஹா! அப்ப என்னை மட்டும் ஏன் கூட்டிகிட்டு வந்தீங்க?
நீங்க வீட்டு மாப்பிள்ளையா வந்திருக்கலாம்ல??””

“அப்ப உங்கப்பா கூப்பிடலை அதானால நான்
உன்னை கூட்டிகிட்டு வந்தேன்!!!”” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
புலம்பாம என்ன செய்ய????

*******************************************

சேலை கட்டி மகள் நின்றால் எந்த தகப்பனுக்கும்
உள்ளுக்குள் ஆனந்தம் தான். ஆனால் அந்த
ஆனந்தத்துக்கும் மேலே பயம் வரும். மகளை
பத்திரமாக கரை சேர்க்க வேண்டுமே என்ற பயம்.
அதனாலேயே அப்பா நான் சேலை கட்டினால்
என்னுடம் பேச மாட்டார்!!!(அப்போது) பாவாடை,
தாவணி, பாவடை சட்டை ஓகே, நோ சேலை.

கல்லூரிக்கு சேலை கட்ட வேண்டிய பொழுது
அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்குவேன்.
அம்மாவுக்கு ஆரம்பிக்கும் தலைவலி. அம்மாவின்
நல்ல புடவைகளுக்கு ப்ளவுஸ் தைத்து வைத்துக்கொள்வேன்.
வேலைக்கு போகும் அம்மா,”இன்று தனக்கு எந்த
புடவை கிடைக்குமோ!” என்று யோசிக்கும் அளவுக்கு
படுத்துவேன். நிறைய்ய திட்டியிருப்பாரோ என்னவோ!!!

10 வயதாகும் என் மகள் என் புடவையை எடுத்து
வைத்துக்கொண்டு தனக்கு ப்ளவுஸ் தைத்துக்கொடுக்கச்
சொல்கிறாள்!!!

துணிகளை மடித்து வைக்கும் பொழுது புடவையாக
இருந்தால்,” அப்படியே இருக்கட்டும்! நான் கட்டி
பாத்துட்டு அப்புறம் மடிச்சு வைக்கலாம்!” என்கிறாள்.


கட்டிக்கொண்டு கண்ணாடி முன் அழகு பார்த்து,
அப்பாவுக்கு காட்டி,” சூப்பர்டா செல்லம்”
பாராட்டு வாங்கிய பிறகு தான் புடவை கைக்கு வரும்.

(அயித்தானின் லுங்கி, செருப்பு ஆஷிஷ் அபேஸ்
செய்ய ஆரம்பிச்சிருப்பதும் நடக்குதுன்னாலும்)

முற்பகல் செய்யின் பிற்பகல் இல்ல அதுக்கும் முன்னாடியே
ஆப்பா வரும்..

************************************************

இந்தக் கைவலி வந்தாலும் வந்துச்சு, வீட்டுல என் நிலமை
ரொம்பவே கஷ்டமாகிடுச்சே :((

அடிக்கடி ஊருக்கு போகும் வேலை என்பதால் தான்
ஊரில் இல்லாத பொழுது என்னை கவனிக்க தன்
ஒற்றர் படையிடம்(ஆஷிஷ் அம்ருதா தான்) சொல்லிவிட்டு போயிருக்கிறார்
அயித்தான். நான் ஏதாவது வேலை செஞ்சா உடன்
ஆஷிஷோ அம்ருதாவோ கையை ஆட்டிக்கொண்டு
“நாநாவிடம் சொல்றேன், சொல்றேன். துணியை
எதுக்கு மடிக்கணும், காய்கறி எதுக்கு தூக்கிகிட்டு
வரணும்” என்று கோள் மூட்டத் துவங்கியிருகிறார்கள்.

அப்பா வந்ததும் சொல்வது இல்லாட்டி போன் செஞ்சாவது
போட்டுக்கொடுத்துவிடறாங்க.:))

என்னத்த புலம்பி என்னத்த செஞ்சுன்னு புலம்பிக்கினே
இருக்கேன். பதிவெழுத கூட விடமாட்டேங்கறாங்கப்பா..

32 வயசுக்கு மேல தீபாவளி எப்படி இருக்கும்னு
நண்பர் நர்சிம் பதிவுல கேட்டிருந்தார்.

இப்படி புலம்பிக்கினு, பிள்ளைங்க செய்வதை
ரசிச்சிக்கினு வாழ்க்கை ஓடும். இதுவும் ஒரு சுகம் ஃப்ரெண்ட்.

Tuesday, October 06, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்

எங்கள் வாழ்வில் எங்கள் சின்னி ஆஷிஷ்
அன்புப் பரிசாக வந்த நாள் இன்று. 7.10.09

என் தந்தையின் அன்பை எனக்கு
உணர்த்திய நாள் இன்று(பிரசவ வலியில்
நான் தவித்ததற்கு அப்பா ஆஸ்பத்திரி
வாசலில் உட்கார்ந்து அழுதிருக்கிறார்!!!)




ஒரு குழந்தை பிறந்த பொழுதுதான் தாயும் பிறக்கிறாள்.
அந்த வகையில் எனக்கு இன்று பிறந்த நாள்.




சின்னி ஆஷிஷ் teenager ஆகிற
இந்நந்நாளில் அவன்
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்
இறைவனின் ஆசிர்வாதமும், அன்பு நெஞ்சங்களின்
ஆசிர்வாதமும் என்றும் இருக்க வேண்டுகிறேன்.

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்.

Monday, October 05, 2009

ஹைதை- ஆவக்காய பிரியாணி 5.10.09

சென்ற மாதம் வரை வறண்டு போன நிலங்கள்,
வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தன.
விவாசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக
செய்திகள்.

இப்போதோ வரலாறு காணாத வெள்ளம்.



மந்த்ராலயம் கோவில் மூழ்கிவிட்டது. கர்ணூல் மற்றும் மெகபூப் நகர்
பெரும் பாதிப்புக்குள்ளாகியது. விஜயவாடா அபாய நிலையில் இருக்கிறது.
ஸ்ரீசைலம் நீர்த்தேக்கமும் அபாய நிலையில்.

என்னே இயற்கையின் ஆட்டம்!!!!!!!

************************************************
சனிக்கிழமை இரவு 10.30 மணிவாக்கில் ஒரு போன்
வந்தது. வெள்ளத்த்தில் பாதிக்கபப்ட்டவர்களுக்கு
தேவையான சாமான்களை நாளை ஹெலிகாப்டரில்
அனுப்புகிறோம். உங்கள் வீட்டில் பழைய நல்ல
துணிகள் இருந்தால் கொடுங்கள் என்றார் தோழி.
அவரது கணவர் தனது போலிஸ் நண்பரி உதவியோடு
இந்த நற்செயலை செய்வதாகச் சொன்னார்.

எங்கள் அப்பார்ட்மெண்டில் அனைவரும் உடனடியாக
ரெடி செய்து கொடுத்தார்கள். 1 வாரம் முன்புதான்
துணிமணிகள் பழையதானவற்றை
அநாதை ஆசிரமத்தில் கொடுக்கலாம் என்று
எடுத்து வைத்திருந்தேன். இரண்டு பைகள் நிறைய்ய
துணி. மொத்தம் 15 பைகள் நிறைய்ய துணிகள்
சென்றது.

இதில் முக்கியம் எங்கள் அப்பார்மெண்ட் பிள்ளைகள்
அந்த இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று வாங்கிக்
கொண்டு போய் தோழியின் வீட்டில் கொடுத்ததுதான்.

ஆண்டவனருள் அந்த பிள்ளைகளுக்கு எப்போதும்
இருக்கட்டும்.
****************************************


15 நாளுக்கு முன் டீவியில் அந்த செய்தியை
பார்த்து அதிர்ந்து போனேன். காதலை ஏற்க
மறுத்த பெண் குளித்துக்கொண்டிருந்த பொழுது
அவளது கழுத்தில் வெட்டியிருக்கிறான் பாதகன்.
தடுக்க வந்த பெற்றோரையும் கத்தியால்
குத்தி கொன்றிருக்கிறான்.தாய் அங்கேயே
இறந்துவிட, உயிருக்கு போராடும் தந்தை...
மஹா கொடுமை... இது.

அவரை படம் பிடிப்பதை விட்டு அருகில்
இருக்கும் ஏதாவதொரு மருத்துவமனையில்
சேர்த்திருந்தால் முதலுதவி கிடைத்து
உயிர் பிழைக்க வாய்ப்பிருந்திருக்கும்.

பாவம் அந்தப் பெண் கழுத்தில் காயத்தோடு
அநாதையாக நிற்கிறாள்.

கலி முத்தியது என்பது இது தானோ!!!!

***********************************

கணேஷா விசர்ஜன் தான் பார்த்திருக்கிறேன்.
தசரா அன்று துர்கா விசர்ஜன் பார்க்கக் கிடைத்தது.
ஷமீர் பேட் ஏரியில் துர்கா விசர்ஜன் படம்.