தக்காளி சாதத்துல என்ன ரிச் தக்காளி சாதம் ரிச்சா பலோட் தக்காளி சாதம்னு
கேக்கறீங்களா? :)) செஞ்சு சுடச்சுட சாப்பிட்டு பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க.
இன்னைக்கு என்ன சமயல் இதுதான் பலரின் மண்டை குடைச்சல் கேள்வி.
சமைச்சதேயே திரும்ப சமைக்க போரடிக்கும் என்னை மாதிரி ஆளுங்களுக்கு
ரொம்பவே கஷ்டம். வெரைட்டியா சாப்பிடணும்னு சிலருக்கு இருக்கும். எனக்கு
வெரைட்டி வெரைட்டியா சமைக்க பிடிக்கும்.
தக்காளி சோறு செய்யலாம்னு ப்ளான்னு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட சொன்னேன்.
உடனே அவங்க ஒரு ரெசிப்பி சொல்லி செஞ்சு பாக்க சொன்னாங்க. அவங்களும்
என்னிய மாதிரி தான். சேம் ப்ளட். (வெரைட்டி சமைக்கும் கேசுங்க நாங்க)
சரி செஞ்சு பாக்கலாம்னு பாத்தா செம ருசி!! ஆஷிஷ் அம்ருதாவுக்கும்
ரொம்ப பிடிச்சு போச்சு. சரி சரி. மேட்டருக்கு வருவோம்.
தேவையான பொருட்கள்:
சமைத்த சோறு - 2 கப்
தக்காளி - 1/4 கிலோ,(கழுவி நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்)
வெங்காயம் 1 அல்லது 2 (நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.
வேர்க்கடலை - 2 ஸ்பூன்,
கசகசா - 1 ஸ்பூன்,
வெள்ளை எள்ளு - 1 ஸ்பூன்.
காரம் - 1 அல்லது 1/2 ஸ்பூன்,
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை:
வாணலியில் முதலில் வேர்க்கடலை, எள்ளு, கசகசா தனித்தனியாக
போட்டு வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலை
தோல் நீக்கி எல்லாம் ஒன்றாக சேர்து கொஞ்சம் பேஸ்ட் போல
அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம் போட்டு
நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு
வதக்கவும். தக்காளி நன்கு வெந்தபின் உப்பு, காரம் சேர்த்து மேலும்
சில நிமிடங்கள் வதக்கவும். நன்கு வெந்ததும் அரைத்து வைத்திருக்கும்
விழுதை சேர்த்து நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும்
சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கலந்து கொத்துமல்லி
தூவி இறக்கினால் ரிச் தக்காளி சாதம் ரெடி!!!
சுடச்சுட சாப்பிட்டால்தான் ருசியே. தொட்டுக்கொள்ள வெங்காய ரய்தா,
சிப்ஸ் இருந்தால் ஜமாய்க்கலாம்!!
இந்த வகையில் சோறு உதிர் உதிராக இல்லாமல் கொஞ்சம் மெத்தென்று
இருக்கும். கொஞ்சமாக சாப்பிட்டாலும் போதும்.
26 comments:
ஏங்க இதெல்லாம் சுடச்சுட அனுப்பி வைக்கமுடியாத இணையத்துல..என்ன டெக்னாலஜி வளர்ந்து என்ன பிரயோசனம்..ம்...
ஏங்க இதெல்லாம் சுடச்சுட அனுப்பி வைக்கமுடியாத இணையத்துல..என்ன டெக்னாலஜி வளர்ந்து என்ன பிரயோசனம்..ம்...
ரெசிபி பார்க்கும் போதே வாயூருதே இன்னைக்கே செஞ்சிடுவோம்.....
(டெலிவரி ஆகஸ்ட் மாதம் :))
:))) ஆமாம். டெக்னாலஜி வளர்ந்து பிரயோசனமே இல்ல.
வருகைக்கு நன்றி கயல்
வாங்க சுதர்ஷிணி,
செஞ்சு பாத்து சொல்லுங்க. உடம்பை நல்லா கவனிச்சுக்கோங்க.
வருகைக்கு நன்றி
டெக்னாலஜி வளர்ந்தப்புறம் அனுப்பிவையுங்க.. சுடச்சுட சாப்டுறேன். இப்ப கண்ணால ருசி பார்த்துக்கறேன்.ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்கு :-))
ரிச்சா பலோட் தக்காளி சாதம்னு
கேக்கறீங்களா? குசும்பு தானே...
ஏற்கனவே தெரிஞ்சது தானேன்னு நினைக்கதேவையில்லை.. கடலை சேர்ப்பதுக்கூட கூடுதல் சுவை தரலாம்.. நீங்கள் தொடருங்கள்... பார்த்து செய்து சாப்பிடுகிறோம்...பகிர்வுக்கு பாராட்டுக்கள்
ரொம்ப நல்லா இருக்கு....பகிர்வுக்கு நன்றி...
வித்தியாசமான முறையில் தக்காளி சாதம்.கலர்ஃபுல்லாக கண்களைபறிக்கின்றது.
வந்து ருசித்ததற்கு நன்றி அமைதிச்சாரல்
வாங்க மாய உலகம்,
கடலை,கசகசா,எள்ளு 3 சூப்பர் சுவை தரும். உடம்புக்கும் நல்லது.
வருகைக்கு நன்றி
வாங்க மாய உலகம்,
கடலை,கசகசா,எள்ளு 3 சூப்பர் சுவை தரும். உடம்புக்கும் நல்லது.
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி கீதா ஆச்சல்
வருகைக்கு நன்றி ஸாதிகா
இதுல வேர்க்கடலையை அப்படியே - அரைக்காம போடுவேன்.. அது நல்லா crunchyஆ இருக்கும் - புளியோதரை மாதிரி ;-)
அடுத்த முறை இந்த ‘ரிச்சா பலோட்’ தக்காளி சாதம்தான் எங்க வீட்டில!! கசகசா இல்லை; கடலை, எள்ளூ மட்டும் சேத்து செய்யலாம்தானே?
வாங்க பொன்ஸ்,
அதுவும் சுவை தான்.
வருகைக்கு நன்றி
லாம்னு தான் நினைக்கிறேன் ஹுசைனம்மா. செஞ்சு பாத்து சொல்லுங்க.(துபாய்ல கசகசாவுக்கு தடைன்னு படிச்சேனே. அது உண்மையா?) கேள்விக்கு எதிர் கேள்வி கேக்காட்டி எப்பூடி? :))
வருகைக்கு நன்றி
ஆமாப்பா, துபாய் உள்ளிட்ட அரபு (முஸ்லிம்) நாடுகள் எல்லாத்துலயும் கசகசாவுக்குக் கடுமையான தடை. அது போதை ஏற்படுத்தும் என்பதால்தான்.
மற்றபடி, நான் சமைக்க ஆரம்பிச்சப்பவே கசகசா பயன்படுத்துவது இல்லை என்பதால், எனக்கு சிரமமா இல்லை. (ஏன்னா, நான் சமைக்க ஆரம்பிச்சதே, அபுதாபி வந்தப்புறம்தானே!! ;-))))) )
நானும் முத்துலெட்சுமி கட்சி தான்... என்ன டெக்னாலஜி வளர்ந்து என்ன.... ஹைதையில் நீங்க செய்த உடன் தில்லியில் நான் சாப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.... அதுமாதிரி ஆதி செய்யற புதுப்புது சமையலை நீங்க ஹைதையில் சாப்பிட்டா....
தகவலுக்கு நன்றி ஹுசைனம்மா
வாங்க சகோ,
அப்படி ஒரு வசதி இருந்தா 3 வேளையும் நாங்களே சமைக்காம ஃப்ரெண்ட்ஸுங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டேண்டிங் வெச்சுக்கலாம். :)))
வருகைக்கு நன்றி
ஆஹா!! தக்காளி சாதம் என்றாலே மிகவும் பிடிக்கும். இதில் எள், கசகசா, வேர்கடலை காம்பினேஷனா!!!!
பச்சை வேர்கடலை உபயோகிக்கலாமா? செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்.
super recipe
வாங்க கோவை2தில்லி,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கிதான் உபயோகிக்கணும்
வருகைக்கு நன்றி
நன்றி கீதா
Post a Comment