ஆனால் அது தவறு. காலை உணவு என்பது ஒரு நாளின் துவக்கத்திற்கு மிகத் தேவையான் ஒன்று. BREAK FAST என ஆங்கிலத்தில் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இரவு உணவின் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உண்ணும் உணவாதலால் விரதத்தை முடிப்பதற்கு சமானம்.
காலை உணவு எடுத்துக்கொள்வதால், அறிவுக்கூர்மை, ஞாபக சக்தி அதிகரிப்பு ஆகியவற்றுடன் நம் படபடப்பும் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
பள்ளி செல்லும் குழந்தைகள் பலர் காலை உணவு உண்ணாமலே செல்கின்றனர். அதிக தூரப் பயணம், அவசரம், தாமதமாக எழுதல் ஆகியவை காரணங்களாக இருக்கின்றன. காலை உணவு தவிர்ப்பதால் குழந்தைகள் பள்ளியில் பாடங்களில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது, அதன் விளைவாக பள்ளியில் செயல்திறன் குறைந்து அவதிப்படுகிறார்கள்.
தினமும் ஒழுங்காக காலை உணவு எடுத்துக் கொள்ளும் குழந்தையைவிட, பசியோடு இருக்கும் குழந்தையின் கவனம் சிதறுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம்.
குழந்தைகளை உதாரணமாக காட்டியிருந்தாலும் இது எவ்வயதினருக்கும் பொது. ஆரோக்கியமாக, ஆக்கப்பூர்வமாக
செயல் பட விரும்புபவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது.
பழவகைகள், பழச்சாறு ஆகியவைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
பால் அருந்த மறக்கக் கூடாது.
காலை உணவு எடுத்துக் கொள்வதனால் கிடைக்கும் மற்றொரு நன்மை, நம் உடல் எடை அதிகரிக்காது. உடல் எடையின் மீது கவனம் செலுத்துபவர்கள், கட்டாயம் காலை உணவை தவிர்க்கக் கூடாது.
காலை உணவு சற்று ஹெவியாக இருந்தாலும் தவறில்லை, மதிய உணவை சமச்சீர் உணவாக சற்று அளவு குறைவாகவும்,
இரவு உணவை மிக மிக லைட்டகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
EAT YOUR BREAKFAST LIKE A KING, LUNCH LIKE A QUEEN, DINNER LIKE A BEGGER.
இதை மறக்காமல் நினனவில் வைத்துக் கொண்டு நேரம் தவறாமல்
சரியான சமச்சீர் உணவை அனனவரும் உண்டு ஆனந்த மாக வாழலாம்.
ஏனென்றால் "உணவே மருந்து".
HAPPY WEEKEND. டின்னர் பற்றிய ஒரு பதிவோடு உங்களை அடுத்த வாரம் சந்திக்கிறேன்.
15 comments:
.
சரியா சொன்னிங்க..,
காலை, வேலை அவசரத்தில் பலர் தவற விடும் எனர்ஜி பூஸ்டர் அது..(என்னிய போல..).
சரியா சொன்னீங்க தென்றல். நமக்கெல்லாம் 3 வேளையும் சாப்பிடனும். அதிலேயும் காலையில சாப்பிட்டு வேலைக்கு செல்லும் போது உள்ள சுறுசுறுப்பு இருக்கே... அனுபவிக்கனும். :)
இப்ப இருக்குற நிறைய பேருக்கு தெரிஞ்சிருந்தாலும் , நியாபகப்படுத்த வேண்டிய நிலைமைதான் .. நன்றி :-)
வாங்க ரசிகன்,
எனர்ஜி பூஸ்டரை தவறவிடக்கூடாதுன்னு ஞாபக படுத்த தான் பதிவு.
வாங்க காட்டாறு,
நீங்க சொல்வது சரி. எதையும் அனுபவச்சு செய்யனும். ஒரு கப் டீ குடிச்சா கூட இது தான் என் வாழ்நாளில் கடைசி டீன்ங்கற மாதிரி ரசிச்சு குடிப்பேன்.
காட்டாறு அண்ட் யாத்திரீகன் தங்கள் முதல் வருகைக்கு நன்றி.
நல்ல பதிவு இது..நிறைய பேர் தவற விடுவதும் காலை உணவைத்தான்..
நல்ல பதிவு. இன்றைய அவசர உலகில் சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு தேவையான நல்ல பதிவும் கூட.
அப்பிடி எல்லாம் சாப்பிடாம கொள்ளாம சம்பாதிச்சி 'எங்க' எடுத்துகிட்டு போகப் போகிறோம் என்பதை சிறிது சிந்தித்து பார்க்க வேண்டும்!
"கையில் என்ன கொண்டு வந்தோம்
கொண்டு செல்ல"
வாழ்க்கையை வாழ வேண்டும்.
//
EAT YOUR BREAKFAST LIKE A KING, LUNCH LIKE A QUEEN, DINNER LIKE A BEGGER.
//
எல்லாம் சரிதான் இந்த 'குயினு' எப்பிடி சாப்பிடும்!?!?!?
கையில எடுத்து வாயிலதான்னு எல்லாம் 'கடிக்க'ப்பிடாது சொல்லிட்டேன்.
இப்ப தான் உங்க பதிவு எல்லாம் பாக்கறேன், நல்லா எழுதுறீங்க! வாழ்த்துக்கள்!
ஹஸ்பன்டாலஜி எழுதும் சகோதரி இப்பிடி சொல்லிட்டீங்களே... : //EAT YOUR BREAKFAST LIKE A KING, LUNCH LIKE A QUEEN, DINNER LIKE A BEGGER//
நான் கேள்விப்பட்டது "Eat your breakfast like a Prince, lunch like a king, Dinner like a beggar". (Prince has no worries - so eats well, King has to rule a kingdom - hopefully he worries about the kingdom, so he eats moderately, No need to discuss the beggar!)
அப்ப தான் இந்த "போறது வர்றது" //எல்லாம் சரிதான் இந்த 'குயினு' எப்பிடி சாப்பிடும்!?!?!?//னு எல்லாம்;) கேள்வி கேக்காம இருக்கும்!
//
கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
அப்ப தான் இந்த "போறது வர்றது" //எல்லாம் சரிதான் இந்த 'குயினு' எப்பிடி சாப்பிடும்!?!?!?//னு எல்லாம்;) கேள்வி கேக்காம இருக்கும்!
//
'உளறுதலே என் பணி' இங்கயும் வந்து உளறனுமா?
அது என்ன 'போறது வற்றது'?
உணவே மருந்துன்னு சரியா சொன்னீங்க,
வாங்க கெக்கேபிக்குணி,
தங்கள் முதல் வருகைக்கு நன்றி.
நான் அறிந்த வகையில் 'காலை உணவு ராஜ போஜனமாக "ஹெவி ' யாக இருக்கனும், மதியம் பெண்கள் உண்ணுவது போல் கொஞ்சம் அளவாகவும், இரவு மிக மிக லைட்டாகவும் இருக்க வெண்டும் என்பது தான்.
அய்யோ, தப்பா சொல்லிட்டேனா!
போறவங்க வரவங்க... என்று வேண்டுமானால்! படித்துக் கொள்ளவும்.
(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... வந்துட்டாங்கப்பா!)
Post a Comment