Saturday, December 15, 2007

டாடா! பைபை!எல்லோருக்கும் போயிட்டுவரேன்.


புதிதா கிடைச்ச நட்பு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, இருக்கிறது.


உடம்பை நல்லா பார்த்துக்கோங்க.


என்ன செய்ய டாடா! பைபை! சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.


என்ன மொத்தமா பைபை சொல்றேன்னு நினைச்சீங்களா?


ஆசை, தோசை, அப்பளம் வடை.


பசங்களுக்கு லீவு விட்டாச்சு. வழக்கமா எங்காவது ஊருக்கு போவோம்.


வருஷத்துக்கு ஒரு முறைதான் இந்தியாங்கற ரூல மாத்தி அயித்தான்


இந்த முறை இந்தியா போகலாம்னு சொல்லிட்டாரு.


ஆக 2 வாரம் லீவு தான் சொன்னேன்.


எங்க போகப் போறேன்னு சொல்லலையே? வேற எங்க எனக்கு பிடிச்ச


ஹைதராபாத் தான். (ஷ்யாம் நிவாஸ் பதிவு போட்ட நேரம்னு நினைக்கிறேன்.)


அவருக்கு அபிஷயல் டிரிப். அதனால ஜாலியா கிளம்பறோம். 4 மாசம் முன்னாடிதான் போனாலும் பசங்க ஆவலா ஹைதராபாத் ட்ரிப் எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க. நானும் தான்.


ஸ்கந்த கிரி, லும்பினி பார்க், ஷ்யாம் நிவாஸ், மீடா பான், மிர்ச்சி பஜ்ஜி, ஹைதராபாதி பிரியாணி இதோ திங்கள் கிழமை வர்றேன்! வர்றேன்!ஹஸ்பண்டாலஜி பாடம் 2 வாரத்துக்கு லீவு.


நடுவில முடிஞ்சா பதிவு & பாடங்கள் தொடரும். (அதான் டேடாகார்ட் இருக்கே.)
வர்ற்ட்டா!!!!! :))

27 comments:

ரசிகன் said...

:))))))))

புதுகைத் தென்றல் said...

ரசிகன் சிரிப்பு எதுக்கு? நான் போறதுக்கா இல்ல பாடங்கள் இல்லையே அதுக்காக வா?

Seetha said...

மனசு ஒரு நிமிடம் டுபுக்ன்னுச்சு புதிகை.உங்களுக்கு பதிவு போடறதில ஏதானும் தொண்தரவோன்னு நினைச்சு.

பராவியில்லை. விடுமுறை தானே.
என்சாய்ய்ய்!!!!!

புதுகைத் தென்றல் said...

ஹா ஹா.

பயப்படாதீங்க சீதா. பிரச்சனையா? எனக்கா? ஹிந்தீல ஒரு வசனம் சொல்வாங்க.

ஹம் ஜோ பலா பத்த்ர் கோ ஷீஷே ஸே தோட்னே வாலே!

நாம யாரு கல்லை கண்ணாடியால் உடைப்போம்ல.

ரெண்டே வாரம் தான்.

வந்துடுவேன்.

ஆயில்யன் said...

விடுமுறையை கொண்டாட வாழ்த்துக்கள் :)

ஆனா பாருங்க இன்னும் நீங்க எந்த இடத்திலிருந்து வந்து, எந்த இடத்திலிருந்து சொல்லலை ஆனா எந்த இடத்துக்கு போறீங்கங்கறத மட்டும் சொல்றீங்க :) :(

~பொடியன்~ said...

//என்ன மொத்தமா பைபை சொல்றேன்னு நினைச்சீங்களா?


ஆசை, தோசை, அப்பளம் வடை.//

அப்டியே இதுல அல்வாவையும் சேர்த்துக்கோங்க ;)
( இதுல உள்குத்து எதும் இல்லை என்பதை நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும் :) )

சுரேகா.. said...

அப்படியே உங்க பெற்றோரையும் பாத்துட்டு போங்க..!

புதுக்கோட்டைக்கு வந்து போங்க.!

கானா பிரபா said...

சென்று வா மகளே
சென்று வா என்று பாட்டுப் போடலாம்.
இப்போதைக்கு உங்கள் விடுமுறைப்பயணங்கள் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

நன்றி ஆயில்யன்.

நான் என் உயிர்த்தோழி பதிவி பின்னூட்டங்களிலேயே உங்களுக்கு பதில் சொல்லியிருந்தேன்.

நான் தற்போது இருப்பது எழில் கொஞ்சும் இலங்கையில். அங்கிருந்து இந்தியா வருகிறோம். (I am born and brought up in pudukkottai, tamilnadu, India)

விளக்கம் போதுமா?

புதுகைத் தென்றல் said...

வாங்க பொடியன்,

பொடி கொஞ்சம் தூக்கலாவே இருக்கு.

அடிக்கடி வாங்க.

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கு நன்றி பிரபா.

புதுகைத் தென்றல் said...

புதுகை வராமலா சுரேகா,

அப்பா, அம்மாவை பார்க்காமலா?

போன முறை வந்த போது ஒரு நாள் தான் தங்க முடிந்தது.

பசங்க விடமாட்டாங்க. கிறிஸ்துமஸின் போது அங்கே தான் இருப்பேன்.

பாச மலர் said...

புதுகை,

பயணம் சிறக்க வாழ்த்துகள்..

புதுகைத் தென்றல் said...

நன்றி பாசமலர்.

ரசிகன் said...

// என்ன மொத்தமா பைபை சொல்றேன்னு நினைச்சீங்களா?

ஆசை, தோசை, அப்பளம் வடை.//

ஹா..ஹா..வீ.வீ.சி..

அதானே..மக்கள நாம அப்படி நிம்மதியா விட்டுட முடியுமா?..

ஹிஹி....

வாழ்த்துக்கள்.. சந்தோஷமா போயிட்டு வாங்க..ஆஷிக் அம்ருதாவுக்கு என்னோட வாழ்த்துக்கள் .என்ஜாய் குட்டீஸ்..ஜமாய்ங்க... :)

ரசிகன் said...

// ஆயில்யன் said...


ஆனா பாருங்க இன்னும் நீங்க எந்த இடத்திலிருந்து வந்து, எந்த இடத்திலிருந்து சொல்லலை //

மாம்ஸ் என்னாச்சு உங்களுக்கு..

ஹிஹி....

புதுகைத் தென்றல் said...

வாங்க ரசிகன்,

//அதானே..மக்கள நாம அப்படி நிம்மதியா விட்டுட முடியுமா?..

ஹிஹி....//


ஏதோ நம்மால ஆன ஒரு சின்ன ஹெல்ப்.

ஆஷிஷ் & அம்ருதா மற்றும் எங்கள் இருவரின் சார்பாக நன்றி

அனைவருக்கும் நன்றி.

கீதா சாம்பசிவம் said...

நாங்க தான் மிஸ் செய்யறோம் உங்களை, இருந்தாலும் நல்லா விடுமுறையை அனுபவிச்சுட்டு வாங்க, வாழ்த்துக்கள்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வெளியூர்கூட போய் அறியாதவன்,முதல் முதலா வெளிநாடு போற மாதிரி இது என்ன பதிவு.ஏதோ 2 வாரம் வருத்தமா/நிம்மதியா இருப்போம்.போய்ட்டு வாங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<===
//என்ன மொத்தமா பைபை சொல்றேன்னு நினைச்சீங்களா?
==>
அதுதாங்க நானும் நினைச்சேன்.இப்படி ட்விஸ்ட் கொடுக்றாங்களோ என்னவோ!

மங்களூர் சிவா said...

நல்லபடியா போய்ட்டு பொறுமையா வாங்கக்கா.

ஹஸ்பண்டாலஜி ரெண்டு வாரம் வரலைன்னா பரவாயில்லை (இதில் உள் குத்து எதும் இல்லை)!!!!

பசங்களை எல்லாம் விசாரிச்சதா சொல்லவும்.

ஐத்தானுக்கு டைம்க்கு சாப்பாடு போடவும்!!!

புதுகைத் தென்றல் said...

geetha sambasivam,

thanks for your comment and wishes.

புதுகைத் தென்றல் said...

samanyan

ennanga ippadi oruthar ooruku porennu sonna nimmathiya irukeengale.

sari sari nadathunga

e kalapai illathathal thanglish.

mannikavum

புதுகைத் தென்றல் said...

siva,

pasangalum ungalayi romba visarichatha solla sonnanga.

ennanga idhu comedy panreengale.

ayithanuku ozunga sappadu podasonnengal adai sonnen.

company guest houseladan tangiriukkomnalum, saappadu ellam veliyelathan. adanala avar than enna nera nerathukku sappida veliyela kootikittu poganum.
:))

நந்தா said...

உங்களது பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.....

Enjoy with your Family.......

ரொம்ப லேட்டோ???? பரவாயில்லை.

புதுகைத் தென்றல் said...

late aanalum vaalthukku nandri nantha.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
adanala avar than enna nera nerathukku sappida veliyela kootikittu poganum ==>
இந்த மாதிரி சமயங்களிலாவது(வெளிச்சாப்பாடு) அய்த்தான் ருசியா சாப்பிடுவார், நீங்களூம்தான்.
இந்தாங்க பிடிங்க URL
http://geocities.com/techsharing/TamilType.htm
தமிழிலில் டைப் செய்ய