அழகான விளம்பரம் இதை நீங்கள் ரசித்திருப்பீர்கள். துயில் எழுந்தது முதல் தன் அன்னையின் முகத்தில் முழிப்பதற்காக கண்களை மூடியபடி அன்னையை தேடிச்செல்லும் விளம்பரம் கவிதையான விளம்பரம். (pears soap)
அந்த விளம்பரக் குழ்ந்தையைப் போல நம் ரங்கமணிகள் காலையில் எழுந்ததும் கண்களை மூடியபடி தலகாணிக்கு கீழே இருக்கும் செல்லிடை தொலைப்பேசியை எடுத்து கொண்டு, கண்களை திறக்காமலேயே அப்படிக்கா போய் கணிணியைப் பார்த்து அதை உயிர்பிப்பார்கள். அதற்கு உயிர் வருவதற்குள் பல்லை தேய்த்து விட்டு, பேப்பரை எடுத்துக் கொண்டு, காபி, போன்கள், கணிணி சகிதம் செட்டிலாகி விடுவார்கள். மேற்சொன்னவை நடக்காவிட்டால் பொழுது விடியாத மாதிரி தான். குளித்து ரெடியாகி அலுவலம் போகும் வரை கணிணி உயிரோடு இருக்கும்,போன்
சத்தம் ஓயாது.
அலுவலகம் போய் வீடு திரும்பிய உடன், உடை மாற்றுவதற்கு முன் கணிணிபொட்டியின் சுவிச்சை தட்டிவிட்டு தான் உடை மாற்ற செல்வார்கள்.
(டிரஸ் மாத்திகிர நேரத்துக்குள்ள கணிணி உயிர்பெற்று தயாராகிவிடுமே! டைம் மேனேஜ்மென்ட்....)
கணிணித்துறையை சேர்ந்தவர்களாக இல்லாத போதும் ரங்கமணிகளூக்கு கணிணி முன் தான் பொழுது போகும். கணிணி, இன்டர்நெட், போன் ஆகியவற்றில் கோளாறு ஏற்பட்டால் "கப்பல் கவிழ்ந்தாற்போல" சோகமாகி, அதை உடனே சரிசெய்ய முயற்சிக்கள் நடக்கும். (பைப் ஒழுகுதுன்னு சொல்லி 4 நாளாகியும் பிளம்பர கூப்பிட மாட்டங்க)
இப்படி கணிணியுடனேயே இருப்பதாலேயே ரங்கமணிகள்
நவீன சித்ரகுப்தன்கள். கர்ணானுக்குத்தானே கவசகுண்டலம் காதோடு இருக்கும். செல்லிடை தொலைப்பேசியையும், கார்ட்லெஸ் போனனயும் காதோடு எப்போதும் வைத்திருப்பதால் ரங்கமணிகள் நவீன கர்ணன்கள்.
இவங்க இப்படியே இருக்காங்களே? என்ன செய்வதுன்னு பார்க்கறது தான் இந்த பாடம். அவங்க அப்படியே இருக்கட்டும். இது ஆண்டவனாக பார்த்து தங்கமணிகளுக்கு அருளிய பொன்னான நேரங்கள்.
அவர்கள் அப்படி "பிஸியாக"இருக்கும் போது தங்கமணிகள் தாங்கள்
விரும்பிய வேலைகளை செய்யலாம். கதைப் புத்தகம் படிப்பது, பாட்டு கேட்கலாம். மிக முக்கியமாக கோவை சரளா- வடிவேலு அடிதடி காட்சிகள், பார்த்து குறிப்பெடுத்து வைச்சுக்கனும். ஒன்னுமே இல்லாட்டி சீக்கிரமா தூங்கப் போகலாம். இப்படி உங்களுகேன்னு நேரம் கிடைக்கிறது அரிது.
மிக முக்கியமாக ஒன்று ஞாபகம் வெச்சுக்கனும். ரங்கமணிகள் கணிணி முன் அமர்ந்திருக்கும் நேரத்தில் தங்கமணிகள் மற்ற வேலைகளை முடித்துவிட்டு ரங்கமணிகளுக்காக காத்திருக்க கூடாதூ. அவர்கள் பிஸியாக இருக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு, ரங்கமணிகள் போதும் என்று நினனத்து
கணிணியையோ, போனையோ விட்டுவிட்டு வரும்போது நம் வேலைகளை செய்ய வேண்டும். இது ரொம்ப முக்கியம்.
அதாவது வீட்டில் இருக்கும் :
ரங்கமணி பிஸி - தங்கமணி ஓய்வு!
தங்கமணி பிஸி - ரங்கமணி ????!!!!
இப்படீ சிலநாள் (பலருக்கு பல நாள்) டிரீட்மென்ட் கொடுத்தால் ரங்கமணிகள் கணிணி பக்கம் போக வேண்டும்
என்றால் தங்கமணிகளிடம் அனுமதி பெற்று போகும் நிலையும், நாளில் குறிப்பிட்ட
சில மணி நேரங்கள் மட்டுமே கணிணி முன் இருக்கும் நிலை ஏற்படும்.
செயற்பாடங்களை மறக்காம் பின்பற்றி செய்யுங்க. அப்பத்தான் பழகும். பயிற்சி சரியா வரும்.
அடுத்த புதன் பார்ப்போம்.
27 comments:
//
கணிணி, இன்டர்நெட், போன் ஆகியவற்றில் கோளாறு ஏற்பட்டால் "கப்பல் கவிழ்ந்தாற்போல" சோகமாகி, அதை உடனே சரிசெய்ய முயற்சிக்கள் நடக்கும்
//
ஓ அப்ப ரங்கமணி ஆகற எல்லா தகுதியும் எனக்கு இருக்கு போல!!!!!
//
அவர்கள் அப்படி "பிஸியாக"இருக்கும் போது தங்கமணிகள் தாங்கள்
விரும்பிய வேலைகளை செய்யலாம்.
//
அப்படி என்னத்த விரும்பிய வேலைய செஞ்சிடப்போறீங்க எதாவது அழுவாச்சி சீரியல் தானே பாக்க போறீங்க!!
அதனாலதான் ரங்கமணீகள் 'நெட்'டே கதி என இருக்கிறார்கள் என்பதை சொஞ்சம் புரிந்துகொள்ள முயற்சியாவது செய்யவும் :-))))
//
சீக்கிரமா தூங்கப் போகலாம். இப்படி உங்களுகேன்னு நேரம் கிடைக்கிறது அரிது.
//
அடடா!! அடடா !!
இல்லைன்னாலும்
//
டிரீட்மென்ட் கொடுத்தால் ரங்கமணிகள் கணிணி பக்கம் போக வேண்டும்
என்றால் தங்கமணிகளிடம் அனுமதி பெற்று போகும் நிலையும், நாளில் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே கணிணி முன் இருக்கும் நிலை ஏற்படும்.
//
பொறுத்திருந்து பாப்போம்!!!!
//
ரங்கமணி பிஸி - தங்கமணி ஓய்வு!
தங்கமணி பிஸி - ரங்கமணி ????!!!!
//
????!!!! = நிம்மதி, peaceful, happy இப்படி ஏராளம்.
சிவா,
இந்த அழுவாச்சி சீரியல்களை தங்கமணிகள் பார்க்கிறார்கள் என்றெல்லாம் பொதுவாக சொல்லக்கூடாது.
//
அடடா!! அடடா !!
இல்லைன்னாலும்
ரங்கமணி ஆவதர்கு முன்பே இப்படி என்றால், உங்களை மணக்க போகும் தங்கமணி நிசமாகவே பாவம்!!!
mangalore siva said
//ரங்கமணி பிஸி - தங்கமணி ஓய்வு!
தங்கமணி பிஸி - ரங்கமணி ????!!!!
//
????!!!! = நிம்மதி, peaceful, happy இப்படி ஏராளம்.//
பாவம் சிவா, நான் சொல்லியிருக்கும் டிரீட்மென்ட்
தங்கமணிகளுக்கு புரிந்திருக்கும்.
//
புதுகைத் தென்றல் said...
ரங்கமணி ஆவதர்கு முன்பே இப்படி என்றால், உங்களை மணக்க போகும் தங்கமணி நிசமாகவே பாவம்!!!
//
இப்படி எல்லாம் பேசற ஆளுங்க தாங்க கண்ணுக்குள்ள வெச்சு தாங்குவோம் இது புரியலியே எக்கா உங்களுக்கு!!!!
//
பாவம் சிவா, நான் சொல்லியிருக்கும் டிரீட்மென்ட்
தங்கமணிகளுக்கு புரிந்திருக்கும்.
//
இந்த உலகத்தில இருவத்தொம்பது வருசம் கழித்த ஜீவன் எனக்கும் புரியுதுங்கோ.
இதுக்கு மேல இதை விவாதிக்க வேண்டாம்!!
mangalore siva said,
//இப்படி எல்லாம் பேசற ஆளுங்க தாங்க கண்ணுக்குள்ள வெச்சு தாங்குவோம் இது புரியலியே எக்கா உங்களுக்கு!!!!//
ஆமாங்க! சன் டீவி, ஜெயாடீவீ, கலைஞர் டீவி, BBC, எல்லா நியூஸ்லையும் சொன்னாங்க.
இந்த வகுப்பில் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.
ரெண்டு கணினிகள் வச்சுக்கிட்டு ரங்க & தங்க மணிகள் இருக்கேப்பா.
சரியாச் சொல்லணுமுன்னா 3 கணினிகள் ரெண்டு பேருக்கு.
அதுசரி. எங்களை டீ குடிக்க வாங்கன்னு கூப்புடறீங்களா?
அத்தாம் பெரிய பாய்லர் பூரா தமிழ்மணத்துக்கும் தாராளம்:-))))
படம் நல்லா இருக்கு.
என்ன இருந்தாலும் ரங்கமணிகள் மாதிரி எந்த நேரமும் தங்கமணிகள் மாதிரி கணிணி முன்பு இருக்க மாட்டார்களே.
ஒரு வீட்டுக்கு 2 கணிணி இருந்தாலும் தங்கமணிகள் அதை பாவிப்பது குறைவு.
என் கணவரின் நண்பர் ஒருவர் சொன்னது இது,"இதெல்லாம் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்க கூடாது!" (கணிணி பாவபிப்பது குறித்து)
ஆமாங்க இங்கே டீ ரொம்ப பிரபலம்.
அது st.clair's tea factory முன் இருந்தது. அந்த பாய்லரை எடுத்து விட்டார்கள். அந்த இடம் இப்போ வெருமையாக இருக்கிறது.
இன்னிக்கு wifeology யும் போன் பத்திதான் போலருக்கு...இது ரெண்டயும் விட்டா இருக்கவே இருக்கு டிவி. இவங்க நமக்கு கம்பெனி குடுக்காமப் போயிப் போயி நாமதான் இப்பல்லாம் உலக அரசியல் கத்துக்கிட்டு எல்லா ரக விளையாட்டும் பாக்கக் கத்துக்கிட்டோமில்ல...இவங்க என்ன கத்துக்கிட்டாங்க நம்மகிட்ட?
இவங்களத் திருத்த முடியாதுங்க..
wifeologyயும் போன் பத்திதான். நமக்கு தான் ரங்கமணிகள் போன் பேசர அழகு தெரியுமே.
நாள் முழுவதும் கணிணித்திரையே பார்ப்பதால்(உழைப்பு!) நான் பல வருடங்களா இன்னும் கணிணி வாங்காம இருக்கேன்.கூடிய சீக்கிரம் வாங்கிடுவேன்னு நினைக்கிறேன்.
மங்களூர் சிவா,
உங்களோட எல்லா கமெண்டுக்கும் ரிப்பிட்...ட்...ட்ட்...ட்டேய்.
அலுவலகத்திலிருட்ந்து களைப்பா வர்ர ரங்கமணிக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்க கணிணிய விட்டா வேற என்ன இருக்கு? உங்களுக்கு பொறுக்காதே.
/
// ரங்கமணிகள் போதும் என்று நினனத்து
கணிணியையோ, போனையோ விட்டுவிட்டு வரும்போது நம் வேலைகளை செய்ய வேண்டும். இது ரொம்ப முக்கியம்.//
அவ்வ்வ்வ்......
ஏனுங்க தென்றல் நல்லா இருக்குற குடும்பத்துல கொழப்பத்த உண்டு பண்ணிறாதிங்கோ......
// ரங்கமணி பிஸி - தங்கமணி ஓய்வு!
தங்கமணி பிஸி - ரங்கமணி ????!!!!/
ரங்கமணி ????!-- சின்ன தங்கமணி
ஆகிடப்போவுது..
மக்களே இந்த ஜடியாவ குறிச்சி உஷாருங்கோ.........ஹிஹி...
<== என்ன இருந்தாலும் ரங்கமணிகள் மாதிரி எந்த நேரமும் தங்கமணிகள் மாதிரி கணிணி முன்பு இருக்க மாட்டார்களே. ==>
கணிணி வச்சிருக்கிற தங்கமணிய வந்து ஒப்புதல் வாக்குமூலம் குடுத்தால்கூட ஒத்துக்கிட மாட்டீங்கபோல.அதுதான் துளசியே சொல்ராங்கல்ல கணிணி வச்சிக்கிற எல்லாரும் ஓண்ணுண்ணு.
// ரங்கமணிகள் போதும் என்று நினனத்து
கணிணியையோ, போனையோ விட்டுவிட்டு வரும்போது//
கணிணியோ,போன்னோ திருப்திய குடுக்காததால,சலிச்சு போய்,அதுல கெடைக்க்காத நிம்மதிய தங்கமணியின் அன்பான பேச்சு குடுக்குமின்னு கடைசியா நம்பி வர்ர ரங்கமணிக்கு இப்படியா வேட்டு வைக்கறது..
அவ்வ்வ்வ்வ்வ்.....கண்டனங்களோட
இந்த கிளாசிலிருந்து நான் வெளிநடப்பு செய்யறேன்..
அடுத்த கிளாஸுல பாப்போம்,..ஹிஹி..
saamanyan said,
//அலுவலகத்திலிருட்ந்து களைப்பா வர்ர ரங்கமணிக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்க கணிணிய விட்டா வேற என்ன இருக்கு?//
ஐயோ! ஐயோ! நகைச்சுவையாய் இருக்குதப்பா.
அதுக்கு கல்யாணம் செஞ்சுக்கவே வேண்டாமே.ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணடிக்கிரீங்க.
இந்த ஆணாதீக்கத்தை வன்மையாக
கண்டிக்கிறேன்.
என்னது என் கமெண்ட் இவ்வளவு வேகமா இற்றைப்படுத்தப்படுது. ஓ,நீங்களூம் கண்ணியில்தான் இருக்கீங்களோ
ஏதோ பழமொழி சொல்ல வாய் வருது ரசிகன். வேணாமேன்னு பார்க்கறேன்.
ரசிகன் சொன்னது,
//கணிணியோ,போன்னோ திருப்திய குடுக்காததால,சலிச்சு போய்,அதுல கெடைக்க்காத நிம்மதிய தங்கமணியின் அன்பான பேச்சு குடுக்குமின்னு கடைசியா நம்பி வர்ர ரங்கமணிக்கு இப்படியா வேட்டு வைக்கறது..//
ஆக கடைசியில தான் பொண்டாட்டி.
இதுக்கு பிரம்மசாரியேவே இருக்கலாம்
என்ன இது புதுகை நீங்கள் ரொம்ப நல்ல பெண்ணாக இருக்காங்ட்டியும் இப்பிடிஎல்லாம் கொன்சிக்கிட்டு இருக்கீங்க..ஆடிகறக்கிற மாட்டை ஆடித்தான் கறக்க வேணும், அடிச்சு கறக்க வேண்டிய மாட்டைஅடிச்சுதான்ன்...
எழுதறது யாரு. .
.யார் கணீனி முன்னால உக்கார்ருரதுன்னூ போட்டியில் விட்டுகொடுக்கும் மனபான்
மையின் மறு பெயரான ஒரூ தங்க மணி!!!
அப்பப்போ 'மெடிகல் லீவ்' எடுத்துட்டீங்க்கன்னா ரங்அமணி சம்சுத்தானே ஆகணும்
ஆமா தெரியாமத்தான் கேக்குறேன்..
நம்ம வீட்டு ரங்கமணிக்கு இந்த பதிவு பத்தி தெரியுமா!?
பாவம் மனுஷன்...நம்ம்ம்பி கணிணியை விட்டுட்டு போறாரு..!
சீதா அதுக்கும் ஒரு பதிவு வருதுல்ல.
சுரேகா,
என் வீட்டில் எனக்கு இல்லாத உரிமையா?
இங்கே சிதம்ரமும் இல்ல மதுரையும் இல்ல.
அர்த்த நாரீஸ்வரர் தான்.
<== செல்லிடை தொலைப்பேசியையும், கார்ட்லெஸ் போனனயும் காதோடு எப்போதும் வைத்திருப்பதால் ==>
புளூடூத் ஒலிவாங்கிய விட்டுட்டீங்களே.இல்ல அதத்தான் சொல்றீங்களா?
<==
ஆக கடைசியில தான் பொண்டாட்டி.
இதுக்கு பிரம்மசாரியேவே இருக்கலாம் ==>
துளசியோட பின்னூட்டம்தான் பதில்.
நானும் வெளிநடப்பு செய்றேன்.
நடத்துங்க, நடத்துங்க.
Post a Comment