Monday, December 10, 2007

அப்படிப்போடு!!

ஏதோ பழமொழி சொல்வார்களே அப்படி இருக்கிறது.

வலையுலகில் சிலர் தாம் பத்திரிக்கைகளில் படித்ததை பகிர்ந்து கொள்வர்.

இப்போது பத்திரிகையில் பிளாக்கில் படித்ததைப் பிரசூரிக்க ஆரம்பித்துள்ளனர்.

விகடனில் ஒவ்வொருவாரமும் ஏதாவது ஒரு வலைபதிவர் குறித்து வரும்.
(அப்படித்தான் வலையுலகம் பற்றி நான் ஆறிந்து கொண்டேன்.)

12.12.07 தேதியிட்ட குமுதத்தில் , பிளாக் மெயில் என்று 6 பக்கத்திற்கு (92-97)
வலைப்பதிவிலிருந்து 3 இடுகைகளை எடுத்து எழுதியிருக்கின்றனர்.

விதர்பா அவலம், பெரியாரின் நேரடி ஜெயில் விசிட், ஜாலியன் வாலாபாக்கின் "அந்த நாள்" இது தான் அந்த 3 இடுகைகள். எழுதியது யாரோ நான் அறியேன்.

ஆனால் பிளாக் குறித்து அவர்கள் கொடுத்திருக்கும் முன்னுரையில் ஒரு வரி மாத்திரம் மனதிற்கு நெருடலாக இருக்கிறது.

(பத்திரிகைக்கு எழுதினால் பிரசுரம் ஆகாது, பதில் வராது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் ஆளாளுக்கு ஒரு ப்ளாக்கை உருவாக்கிக்கொண்டு அதில் தமது எண்ணங்களை, பார்வையை எழுதிக் குவிக்கின்றனர்) என்பது தான் அது.

நீங்களே சொல்லுங்கள்.

13 comments:

✪சிந்தாநதி said...

பத்திரிகையில் பிரிசுரம் ஆகாது என்று நினைப்பவர்கள் எழுதுவதை இவர்கள் எதுக்கு எடுத்து பிரசுரிக்கிறார்களாம்.?

வலைப்பதிவின் பாப்புலாரிட்டி காரணமாக வலைப்பதிவர்/வாசகர்களும் தங்கள் பத்திரிகையை வாங்கிப் படிக்க வேண்டும் என்றுதானே?

இன்று வலைப்பதிவுகள் மாற்று ஊடகம் என்ற தகுதியை அடைந்து விட்டன. அதனால் இங்கே எழுதப் படுவன பற்றிய ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது.

ஆனாலும் அவர்கள் சொன்னதில் சிறிதளவு உண்மையும் இருக்கிறது... பத்திரிகைகள் வெளியிடத் துணியாத துணிச்சலான கருத்துக்களும் இங்கே வெளியாகின்றன.

இம்சை said...

ம்ம்ம் படிச்சிட்டு திரும்ப வரேன்

சுரேகா.. said...

எல்லாமே ஊடகம்தாங்க.. ஒன்றை சார்ந்துதான் ஒன்று இருக்க முடியும்..

ஒரு விஷயம் நியாயம்தான்...

நம்ம எழுதுற வேகத்துக்கு அவுங்களால பிரசுரம் பண்ணமுடியல..
அதுனால இப்புடி சொல்றாங்கன்னு எடுத்துக்குவோம்..

மேலும் இந்த வேக யுகத்துல நாம எழுதி , தபால்ல அனுப்பி ,அவுங்க பிரசுரிச்சு.....ஆவ்..

அதுக்கும் மேல...இது மாதிரி அழகான,(என்னங்க சிரிக்கிறீங்க!)பின்னூட்டமெல்லாம் கிடைக்காதுல்ல! அதுனால

அவுங்க கால்ல விழுந்து பிரசுரம் பண்றேன்னு சொன்னாலும்..நோ...
நம் ஓட்டு..வலைப்பூவுக்குத்தான்..

புதுகைத் தென்றல் said...

சிந்தாநதி

தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

புதுகைத் தென்றல் said...

சுரேகா சொல்வது சரி
ஆனால் எடுத்து ப்ரசூரிப்பதும் இல்லாமல், இந்த மாதிரி முன்னுரை தேவையா?

என் ஓட்டும் வலைப்பூக்குதான் நண்பரே.

புதுகைத் தென்றல் said...

பினாத்தல் சுரேஷ் மெயிலில் இட்ட பின்னூட்டம்.

//பத்திரிகைக்கு எழுதினால் பிரசுரம் ஆகாது, பதில் வராது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் ஆளாளுக்கு ஒரு ப்ளாக்கை உருவாக்கிக்கொண்டு அதில் தமது எண்ணங்களை, பார்வையை எழுதிக் குவிக்கின்றனர்//

இதில் உண்மையும் ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் பொதுமைப்படுத்துதல் தவறே.//

ரசிகன் said...

// புதுகைத் தென்றல் said...//பத்திரிகைக்கு எழுதினால் பிரசுரம் ஆகாது, பதில் வராது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் ஆளாளுக்கு ஒரு ப்ளாக்கை உருவாக்கிக்கொண்டு அதில் தமது எண்ணங்களை, பார்வையை எழுதிக் குவிக்கின்றனர்//

இதில் உண்மையும் ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் பொதுமைப்படுத்துதல் தவறே.

ரிப்பீட்டேய்ய்ய்......

பாச மலர் said...

//பத்திரிகைக்கு எழுதினால் பிரசுரம் ஆகாது, பதில் வராது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் ஆளாளுக்கு ஒரு ப்ளாக்கை உருவாக்கிக்கொண்டு அதில் தமது எண்ணங்களை, பார்வையை எழுதிக் குவிக்கின்றனர்//

பத்திரிகை வியாபார நோக்கில் நடத்துபவர்கள்தானே..அப்படித்தான் எழுதுவார்கள்...ப்ளாக்கில் இருக்கும் எல்லோருக்கும் இப்படி எண்ணம்
இருக்க வாய்ப்பில்லை...அங்கீகாரம் தேடுவது மனித இயல்புதான்..எனினும் அதற்காக மட்டும் யாரும் ப்ளாக் எழுதுவதில்லை..

சாமான்யன் Siva said...

போட்டியாளர்(Competitor) அப்படித்தான் சொல்வாங்க. விட்டுத்தள்ளூங்க.

ambi said...

ஆமா! அவங்களுக்கு பிரசுரம் பண்ண பக்கங்கள் கிடையாதே!

1)ஒரு புக் வாங்கினா ஸ்டிக்கர் பொட்டு இலவசமா தரலாம்.

2)நடுப்பக்கத்துல நமீதா படம் போட்டாகனும்,

3) நடிக/ நடிகைகள் வீட்டு நாய் குட்டி என்ன திங்குது?னு தமிழனின் அறிவை வளர்கற பேட்டி போடனும்.

நம்மள பாத்து பொறாமை, நீங்க கண்டுகாதீங்க. :)

புதுகைத் தென்றல் said...

கருத்து சொன்ன எல்லோருக்கும் நன்றி.

நானும் உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.


அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா ன்னு சொல்லிகிட வேண்டியது ததன்.

manipayal said...

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
நாம் தொடர்த்திடுவோம் நம் சிந்தனையை

புதுகைத் தென்றல் said...

வாங்க மணிப்பயல்,
தங்கள் முதல் வருகைக்கு நன்றி.