சக்கையாக பிழிந்த வீட்டு வேலையினிலோ,
அலுவலக வேலையினாலோ களைத்து போயிருக்கும்
தங்கமணி, தனது அதிகப்படியான வேலை,
அது கொடுத்த அயற்ச்சி இதைப்பற்றி
சொல்லிக்கொள்வதாக (Just to share)
நினனச்சு ரங்கமணிகிட்ட சொல்றாரு.
உடனே ஐயா,"இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்ற?,
உனக்கு இஷ்டம்னா வேலை பாரு. கஷ்டம்னா
வீட்டுல சும்மா இரு. சும்மா புலம்பாத", அப்படீங்கறார்.
தங்கமணி புலம்பல. ஆனா தன் கணவனிடமிருந்து
எதிர்பார்த்தது அன்பா 2 வார்த்தை, ஒரு அரவணைப்பு,
இந்த 2 தான் தங்கமணியோட மனச்சோர்வை குறைக்கும்.
இது புரியாத ரங்கமணி, புலம்பறதா நினைச்சுக்கிட்டு
அட்வைஸ் பண்றாரு. பிரச்சனையைத் தீர்ப்பது
எப்படீன்னு? லாஜிக் பாயிண்டெல்லாம் சொல்ல
ஆரம்பிச்சிடுவாரு.
இதைக் கேட்ட தங்கமணிகளுக்கு கண்ண கட்டிக்கிட்டு
வரும். ஏமாற்றப்பட்ட எஃபக்ட் இருக்கும். தன்னோட
அனுபவத்தைப் பகிர்ந்துக்க நினனச்சாங்க தங்கமணி. தன்
கிட்ட பிரச்சனையை சொல்லி புலம்பறான்னு நினைச்சு
தீர்வு சொல்றாரு ரங்கமணி.
ரங்கமணிகளுக்கு தீர்வுகள், அட்வைஸ்கள் கொடுப்பது
ரொம்ப பிடிக்கும். ஆனால் பிரச்சனை வரும்போது
feelings பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.
அவங்க ஏதோ தன் பீலிங்கஸ் சொல்றாங்க, சும்மா
கேட்டுப்போம்னு இருக்காம தேவையில்லாத
அட்வைஸ்களை கொடுத்து சிக்கல பெரிசாக்கிடுவாங்க.
தப்பா செய்யணும்னு இல்லை. "தன்னால ஒரு நல்ல
முடிவைத்தர முடியும், தான் குடும்பத்தலைவன்
அப்படீங்கற", எண்ணத்தாலும் இப்படி ஆயிடுது.....
தன்னை, தன் நிலமையை புரிஞ்சிக்கனும்னு நினைக்கிறது
தங்கமணி. ஐயாவோ பிர்ச்சனைக்கு முற்றுப்புள்ளி
வைக்கணும்னு நினைக்கறாரு. (பிரச்சனையே இல்லையே?
இருந்தாத்தனே?)
இதுல முக்கியமான விஷயம் இந்தமாதிரி தப்பான
நேரத்தில் தங்கமணிகளுக்கு, ரங்கமணிகல் சொல்ற
"அட்வைஸ்" நிராகரிக்கப்படறதால ரங்கமணிகள்
மன உளைச்சலுக்கு ஆளாராங்க. இதை ரங்கமணிகள்
ரொம்ப பர்சனலா எடுத்துக்காம,"தன் மனத்தாங்கலைச்
சொல்றா, ஆதரவா காது கொடுத்து கேப்போம், அன்பா
அரவணைப்பா இருப்போம்னு," இருக்கணும்.
இதெல்லாம் நடக்கும???
ஆண்கள் பொதுவா அவங்களுக்குள்ள பிரச்சனைகளை
சொல்லமாட்டாங்க. அவங்க மொழி அப்படி. மீறி
சொல்றாங்கன்னா, "அட்வைஸ்" கேக்கங்கறாங்கன்னு
நினைப்பாங்க. இது ஆணின் இயல்பு.
பெண்கள் தன்னைப் பாதிக்கிறவிஷயத்தை பகிர்ந்து
கொள்ளும் போது அமைதியா கேட்டுக்குவாங்க.
சாய்ந்து கொள்ள தோளாக, சொல்றதை காது
கொடுத்து கேட்பது மாத்திரம் முக்கியம்னு இருப்பது
பெண்கள் இயல்பு.
ஆக, ரங்கமணிகள்கிட்ட புலம்பறதை முதல்ல நிப்பாட்டுங்க.
எப்படி? நண்பனாக, இனி எல்லாம் அவர்தான் அப்படின்னு
நினைச்சுதானே வந்தோம்னு மனசு பதைபதைக்கும்.
கொஞ்சம் கஷ்டம்தான்னாலும் பிரச்சனைகள் வளராமல்
இருக்க இது உதவும்.
இதுதான் இந்த வாரப் பாடம். அடுத்தவாரம் சந்திக்கலாம்.
17 comments:
நீங்க சொல்றது கரெக்ட்தானுங்கோ.
இல்லைனா என்ன நடக்கும்னு எங்களுக்கு நல்லா தெரிஞ்சிடுச்சிங்கோ குசும்பா நன்றி.
காது கொடுத்து என்ன,,, கண்ணு கொண்டே பாத்துட்டோம்.
நீங்க சொல்றதை இந்த தடவை ஏத்துக்கறேன்.
பெண்களுக்கு மேதைமை கொடுத்தால் பிடிக்காது
பாசம் கொடுத்தால் போதும்னு சொல்லுவாங்க!
அது உண்மைதான்.!
வாங்க மங்களூர் சிவா,
நீங்க கொடுத்திருக்கிற லிங்க்ல இருக்கிறது எல்லாம் எங்கயாவது, எப்பவாவது நடக்குறதுங்க.
வாங்க சுரேகா,
காது கொடுத்து என்ன,,, கண்ணு கொண்டே பாத்துட்டோம்.
நீங்க சொல்றதை இந்த தடவை ஏத்துக்கறேன்.
பெண்களுக்கு மேதைமை கொடுத்தால் பிடிக்காது
பாசம் கொடுத்தால் போதும்னு சொல்லுவாங்க!
அது உண்மைதான்.!//
நன்றி.
ரங்கமணிகள் உண்மையை ஒத்துக்கிறாங்களே?!!! என்னாச்சு?
///இது புரியாத ரங்கமணி, புலம்பறதா நினைச்சுக்கிட்டு
அட்வைஸ் பண்றாரு. பிரச்சனையைத் தீர்ப்பது
எப்படீன்னு? லாஜிக் பாயிண்டெல்லாம் சொல்ல
ஆரம்பிச்சிடுவாரு.////
நிறைய இடத்தில இது தான் நடக்குது.
//தன்னை, தன் நிலமையை புரிஞ்சிக்கனும்னு நினைக்கிறது
தங்கமணி. ஐயாவோ பிர்ச்சனைக்கு முற்றுப்புள்ளி
வைக்கணும்னு நினைக்கறாரு. (பிரச்சனையே இல்லையே?
இருந்தாத்தனே)//
இது பஞ்ச்...
வாங்க நிஜமா நல்லவன்,
அந்த மாதிரி நடப்பதுதான் ஒரு விரிசலை உண்டாக்குது.
வாங்க பாசமலர்,
இன்னும் உங்களைக் காணமேன்னு பார்திருந்தேன்.
<==
(பிரச்சனையே இல்லையே?
இருந்தாத்தனே)// ==>
அடப்பாவமே, இல்லாத பிரச்னைக்குத்தான் இவ்ளோ புலம்பலா?
வாங்க சிவா,
இல்லாத பிரச்சனைக்கு புலம்பல் இல்ல.
பொண்டாட்டி பேசினாலே பிரச்சனை பண்றான்னு நினைக்கறாங்களே அதுதான் பிரச்சனை :(((
<==
புதுகைத் தென்றல் said...
வாங்க சிவா,
இல்லாத பிரச்சனைக்கு புலம்பல் இல்ல.
பொண்டாட்டி பேசினாலே பிரச்சனை பண்றான்னு நினைக்கறாங்களே அதுதான் பிரச்சனை :(((
==>
கடைப்பிடிக்க இது கொஞ்சம் சிரமம்தான். பதிலுக்குப் பதில் ரங்கணிகளூம் புலம்பிட்டா சரியா போய்டும்.
[முதல்ல, பார்த்துட்டு இருக்கிற வேலயோ, இல்ல டிவி எதுவும் பார்த்துட்டு இருந்தா அத அப்படியே ஆஃப் பண்ணிடனும்(ம்யூட்ல வச்சிகிட்டு த.மணி நம்மை பார்க்காதப்ப அப்படியே டிவி பார்க்கலாம்!].த.மணி சொல்ரத அக்கறயா கேட்டுக்கிட்டு, பதிலுக்கு அத விட அதிகமா புலம்பினால்,த.மணி மனசு கொஞ்சம் கொஞ்சமா சமாதானமாயி ...... புலம்பறத நிறுத்தலாம்]
<==
புதுகைத்தென்றல் said
பொண்டாட்டி பேசினாலே பிரச்சனை பண்றான்னு நினைக்கறாங்களே அதுதான் பிரச்சனை :(((
==>
தங்கமணியே பிரச்னைனு நினைக்கறதுக்கு இது பரவாயில்லயே!
வாங்க சாமான்யன்,
//தங்கமணியே பிரச்னைனு !//
இப்படி ஒரு நினைப்பு பல ரங்கமணிகளுக்கு இருக்கு. அப்புறம் ஏன் ரங்கமணிகள் ஆகணும். பேசமா பேச்சிலராவே இருக்கலாம்.
//இல்லாத பிரச்சனைக்கு புலம்பல் இல்ல.
பொண்டாட்டி பேசினாலே பிரச்சனை பண்றான்னு நினைக்கறாங்களே அதுதான் பிரச்சனை //
அது!!!!!!!!!!!!!
வாங்க பாசமலர்,
நன்றி.
<==
புதுகைத் தென்றல் said...
வாங்க சாமான்யன்,
//தங்கமணியே பிரச்னைனு !//
இப்படி ஒரு நினைப்பு பல ரங்கமணிகளுக்கு இருக்கு. அப்புறம் ஏன் ரங்கமணிகள் ஆகணும். பேசமா பேச்சிலராவே இருக்கலாம்.
==>
செத்தாதானே சுடுகாடு தெரியும். பட்டாத்தான கஷ்டம் புரியும்!
வாங்க சிவா,
//செத்தாதானே சுடுகாடு தெரியும். பட்டாத்தான கஷ்டம் புரியும்!//
இது வேறயா...........
Post a Comment