Sunday, February 10, 2008

அரிதாகக் கிடைத்தது, தொலைந்தே போனது! திரும்பக் கிடைச்சது,இருக்குமா?

வருவாய் வருவாய் என நான் காத்திருந்தேன்,

வந்த சுவடே தெரியாமல் போனது எப்போது?


எதைச் சொல்றேன்னு யோசிக்கறீங்களா?

"ஞாயிற்றுக்கிழமை" இதைத்தான் சொல்கிறேன்.


சிறிய வயதில் ஞாயிறு பெரிதாக வித்தியாசம் இராது.
சீக்கிரம் எந்திரிக்கனும், கொஞ்சம் லேட்டா வேணா
குளிக்கலாம். "ரங்கோலி" பார்க்கறது, அப்பா, அம்மா,
தம்பி, நான் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து
சாப்பிடறநாள் என்பதுதான் அப்போதைய
"ஞாயிறு" ஷ்பெஷல்.


மும்பையில் வேலைக்குப் போக ஆரம்பித்தபின் வந்த
முதல் ஞாயிற்றுக்கிழமை நான் தூங்கி எழுந்தபோது
மணி மதியம் 2. அதன்பிறகு "சன்டே" எப்பவுமே
ஷ்பெஷல்தான். நானும் பெரிய மாமாவும் போட்டி போட்டுக்கொண்டு
தூங்குவோம். (சின்ன மாமா பாவம், ஞாயிற்றுக் கிழமைகளில்
கராத்தே சொல்லிக் கொடுக்க போய்விடுவார்). லேட்டா (குறைஞ்சது 10 மணிக்கு) எந்திரிக்கிறது. வீடு கிளீனிங்க், பரபரப்பு இல்லாமல் தலைகுளியல், பொறுமையா சினிமா பார்த்து, வாரத்திற்கு வேண்டிய துணிகளை இஸ்திரி போட்டு, சாயந்திரம் சும்மா அப்படி வெளியே போயிட்டு வர்றது, மாமாவின் குழந்தைகளுடன் ஆட்டம்..... இன்னும்
என்னன்வோ வகையில் ரொம்ப முக்கியமான ஒரு நாளாக
ஞாயிற்றுக்கிழமை இருந்தது.


திருமணத்திற்கு அப்புறம் , அலைஞ்சு, திரிஞ்சு நாம
கஷ்டப்பட்ட மாதிரிதானே அலுப்பா தூங்கறாருன்னு,
நாம எந்திரிச்சு செஞ்சாதானே காபி , சாப்பிடு அப்படின்னு,
கதை மாற ஆரம்பிச்சது.

குழந்தைகள் பிறந்ததுக்கப்புறம், "பொழுது விடிஞ்சு பொழுது
போறதே தெரியாதப்போ, ஞாயிறாவது? திங்களாவதுன்னு?"
ஆகிடுச்சு. அதிலும் கொஞ்சம் லேட்டா எந்திரிக்கலாம்னு
நினைச்சுகிட்டு இருக்கும்போது காலைல 5.30 மணிக்கு
"அம்மா! காபி குடிக்கலாமான்னு?!!!" சின்னக் குட்டி
எழுப்பிடுவா.

அதுக்கப்புறம், சமையல், சாப்பாடு, காய்கறி வாங்கறது,
அப்படின்னு ஞாயிற்றுக்கிழமை வந்த சுவடே தெரியாமல்
போய்கிட்டு இருந்தது.

இங்க வீட்டு வேலை செய்யறவங்களுக்குகூட "சன்டே"
லீவு. நமக்குத்தான் லீவே இல்லன்னு புலம்பிக்கினு
கிடந்தேன். பிள்ளைகள் கொஞ்சம் பெரிசாகிட்டாங்களா?
இப்ப அவங்களும் ஞாயிற்றுக்கிழமைன்னா கொஞ்சம்
லேட்டா எந்திரிக்கறாங்க.

அயித்தானும்," எந்த நாளும், சீக்கிரமா எந்திரிக்கிற, வேலை சரியா இருக்குன்னு", சொல்லி ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் லேட்டா
எந்திரிக்க சொல்லிப்புட்டாரு.

நான் எந்திரிக்கரதுக்கு முன்னாடி அயித்தானும், பிள்ளைகளுமா
சேர்ந்து காபி போட்டு வெச்சுப்புடறாக. வேலைக்காரம்மா
வரமாட்டாங்க என்பதால சிம்பிளான சமையல், பாத்திரம் கழுவ,
எடுத்துக் கவுக்கன்னு அயித்தானும், பிள்ளைகளும் வேலையை
பகிர்ந்துக்கிறதனால ஞாயிற்றுக்கிழமைகள்
இனிக்க ஆரம்பித்து 2 வருடங்கள் ஆச்சு.

இது தொடருமான்னுதான் தெரியல!!!!!. இந்தியாவில சனிக்கிழமைக்
கூட பள்ளிக்கூடமாமே, அயித்தான் அந்த டிராபிக்ல காரோட்டிப்புட்டு
வந்து கண்டிப்பா ரொம்ப லேட்டாத்தான் எந்திரிக்கப் போறாக.
என்னவோ போங்க.

கிடைக்காமல் கிடைத்த ஞாயிற்றுக்கிழமையை தக்க வெச்சக்கணும்னு
நாங்க எல்லோரும் ரொம்ப பிளான் செய்யறோம்.

எப்படி ஆகப்போகுதுன்னு தெரியல. உங்க ஞாயிற்றுக்கிழமையை

"பத்திரமா பாத்துக்கோங்க"


இங்க சொடுக்கினா எனக்குப் பிடிச்ச missing sunday பாட்டைக் கேக்கலாம்.

இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கல.

20 comments:

ஜோதிபாரதி said...

உங்கள் அனுபவம் பல்வேறு பரிணாமங்களைப் பெற்றிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இது ஏற்பட்டிருக்கும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜோதிபாரதி,

பதிவு போட்டு அடுத்த நிமிடமே உங்க பின்னூட்டம்.

வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

மங்களூர் சிவா said...

//
மும்பையில் வேலைக்குப் போக ஆரம்பித்தபின் வந்த
முதல் ஞாயிற்றுக்கிழமை நான் தூங்கி எழுந்தபோது
மணி மதியம் 2.
//
அவ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
மும்பையில் வேலைக்குப் போக ஆரம்பித்தபின் வந்த
முதல் ஞாயிற்றுக்கிழமை நான் தூங்கி எழுந்தபோது
மணி மதியம் 2.
//
அப்ப காலைல டிபன்????

மங்களூர் சிவா said...

//
கொஞ்சம் லேட்டா எந்திரிக்கலாம்னு
நினைச்சுகிட்டு இருக்கும்போது காலைல 5.30 மணிக்கு
"அம்மா! காபி குடிக்கலாமான்னு?!!!" சின்னக் குட்டி
எழுப்பிடுவா.
//
என்னாது காலைல 5.30 மணியா?????

அது எப்பிடி இருக்கும்!?!?!?

மங்களூர் சிவா said...

//
நான் எந்திரிக்கரதுக்கு முன்னாடி அயித்தானும், பிள்ளைகளுமா
சேர்ந்து காபி போட்டு வெச்சுப்புடறாக.
//
ம்.

அது!!

இல்லைனா சாப்பாடு கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியுமே!!!!

மங்களூர் சிவா said...

//
ஞாயிற்றுக்கிழமைகள்
இனிக்க ஆரம்பித்து 2 வருடங்கள் ஆச்சு.
//
வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

//
இந்தியாவில சனிக்கிழமைக்
கூட பள்ளிக்கூடமாமே
//

எதாவது கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல சேத்துவிட்டா நினைச்சப்ப போலாம் வரலாம். ஆடி , அமாவாசை எல்லாத்துக்கும் லீவுதான்.

நான்லாம் அப்பிடித்தான் +2 வரைக்கும் படிச்சேன்.

மங்களூர் சிவா said...

//
கிடைக்காமல் கிடைத்த ஞாயிற்றுக்கிழமையை தக்க வெச்சக்கணும்னு
நாங்க எல்லோரும் ரொம்ப பிளான் செய்யறோம்
//
இந்தியா வாங்க மொதல்ல எல்லா நாளும் ஞாயிற்றுகிழமைதான்.

பாச மலர் said...

இங்கே வெள்ளி விடுமுறை...பாதித் தூக்கத்திலேயே போய்விடும்..வியாழன் இரவு தாமதமாகப் படுப்பதால்..பத்திரமாகப் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று விடுமுறை..

புதுகைத் தென்றல் said...

வாங்க மங்களூர் சிவா,

காலை டிபன் எல்லாம் கிடையாது.

அடிச்சுப்போட்ட மாதிரி தூங்கி எழுந்திருச்சா அம்மம்மா சாப்பாடு ஊட்டி விடுவாங்க.

அன்பான அம்மம்மா.

ம்ம்ம். அது அந்தக்காலம்.

புதுகைத் தென்றல் said...

//நான் எந்திரிக்கரதுக்கு முன்னாடி அயித்தானும், பிள்ளைகளுமா
சேர்ந்து காபி போட்டு வெச்சுப்புடறாக.
//
ம்.

அது!!

இல்லைனா சாப்பாடு கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியுமே!!!!//

ஆமாம் ரொம்ப லொள்ளுதான் சிவா.

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கு நன்றி மங்களூர் சிவா,

கவுர்ண்மெண்ட் ஸ்கூல் மட்டம் இல்லத்தான் நமக்கு பாஷை இடிக்கும்.

இந்தியாவுல எந்த நாளும் ஞாயிற்றுக் கிழமையா? இந்த ரவுசுதானே வேண்டாங்கறது.

காமெடி பண்ணாதீங்க சிவா.

புதுகைத் தென்றல் said...

வாங்க பாசமலர்,

எங்களுக்கு ஞாயிறுன்னா, உங்களுக்கு வெள்ளிக்கிழமை.

அதென்னமோ சரி. தூக்கத்தில தான் போகுது விடுமுறை.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
வாங்க மங்களூர் சிவா,

காலை டிபன் எல்லாம் கிடையாது.

அடிச்சுப்போட்ட மாதிரி தூங்கி எழுந்திருச்சா அம்மம்மா சாப்பாடு ஊட்டி விடுவாங்க.

//
வேலைக்கு போற பெண்ணுக்கு சோறு ஊட்டிவிட்ட அந்த அம்மம்மாவுக்கு கடும் கண்டணங்கள்.

இப்பிடி எல்லாம் செல்லம் குடுத்து வளர்த்தால் குசும்பன் பதிவில் இருப்பதை போல அல்லவா வளர்வார்கள்.

எங்க அக்கா புதுகை தென்றல் Excemption.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

இந்தியாவுல எந்த நாளும் ஞாயிற்றுக் கிழமையா? இந்த ரவுசுதானே வேண்டாங்கறது.

//
ஒரு முறை மங்களூர்க்கு எட்டி பார்த்துவிட்டு முடிவு செய்யவும்.

புதுகைத் தென்றல் said...

சிவா,

வேலைகுப் போகிற பொண்ணுக்கு ஊட்டி விட்ட அம்மம்மாவுக்கு கண்டனம்னு சொல்லியிருந்தத போன் போட்டு அம்மம்மா கிட்ட சொன்னேன்.

அவங்க் சிரிக்கிறாங்க. கல்யாணத்துகு மொத நாள் வரை ஊட்டிவிட்டிருக்காங்களே!!!!!!!!!!!!!!

AMMAMMA'S PET IS THAT ME

YES YES YES YES YES

புதுகைத் தென்றல் said...

EXCEPTION ன்னு ஒத்துக்கிட்டீங்களே நன்றி.

அது சரி மங்களூர்ல என்ன அப்படி லீவா?

விளக்கமா ஒரு பதிவு போடுங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நான் இந்தப் பதிவ படிச்சுட்டேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சாமான்யன்,

தங்கள் வருகைக்கு நன்றி.