Tuesday, September 02, 2008
விக்ன நாசனா விநாயகா.
ஸ்ரீ கணேசாய நமஹ
நாரத உவாச:
ப்ரணம்ய சிரஸா தேவம் கொளரி புத்ரம் விநாயகம்
பக்தா வாசம் ஸ்மரே நித்யம் ஆயுட்காமர்த்த சித்தயே
ப்ரதமம் வக்ரதுண்டம்ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ரூதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷ்ம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்.
லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகட மேவ ச
ஸபதமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
நவமம் பாலசந்த்ரம்ச தசமம் து விநாயகம்
ஏகாதசம் கண்பதிம் த்வாதசம்து கஜானனம்
த்வாதசைதானி நாமானி த்ரி ஸந்த்யம் ய:படேந் நர:
ந ச விக்ன பயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ
வித்யார்த்தி லபதே வித்யாம் தனார்த்தீ லபதே தனம்
புத்ரார்த்தீ லபதே புத்ரான் மோக்ஷார்த்தீ லபதே கதீம்
ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பீ மாஸை: பலம்லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம்ச லபதே நாத்ர ஸம்சய:
அஷ்ட்ப்யோ ப்ராஹ்மணேப்யச்ச லிகித்வாய: ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ராஸாததா:
இதி ஸ்ரீ நாரத புராணே சங்கஷ்ட நாசனம்
நாம ஸ்ரீ கணபதி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.
மஞ்சளாக பிடித்து வைத்தாலும் பிள்ளையார்தான்.
வெல்லக்கட்டியை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்.
அதனால் தான் அனைவருக்கும் பிள்ளையார்
லவ்லி காட்.
விக்னங்களை களைவதில் அவருக்கு நிகர் அவரே.
மேலே கொடுத்திருக்கும் சங்கஷ்ட நாசன ஸ்லோகத்தை
சொல்வதால் சங்கடங்கள் தீரும்.
லதா மங்கேஷ்கர் அவர்களின் குரலில்
சுகஹர்தா துகஹர்தா- கணபதி ஆரத்தி பாடல்
(மராட்டி மொழியில்)
ஷங்கர் மகாதேவன் அவர்களின் குரலில்
கணேச ஆரத்தி - கணநாயகாய கணாத்யக்க்ஷாய தீமஹீ
விக்னங்களை நீக்கும் விநாயகனின் பிறந்த நாளில்
அவனடி பணிந்து அனைவரும் அருள் பெருவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//மேலே கொடுத்திருக்கும் சங்கஷ்ட நாசன ஸ்லோகத்தை
சொல்வதால் சங்கடங்கள் தீரும்.
//
உண்மை, என் தினப்படி வழிபாடில் இந்த சுலோகம் உண்டு.
ஆறு மாதம் நாளைக்கு இரண்டு வேளை இந்த சுலோகம் சொல்லி வந்தால் அவரவருக்கு அப்போதைய விருப்பம் என்னவோ அது நிறைவேறும் என்பது தான் கடைசியில் வரும் வரிகளின் அர்த்தம்.
எல்லாம் சரி, கொழுகட்டை எங்கே? :p
//1) வித்யார்த்தி லபதே வித்யாம் 2)தனார்த்தீ லபதே தனம்
3)புத்ரார்த்தீ லபதே புத்ரான் 4)மோக்ஷார்த்தீ லபதே கதீம்
//
1)படிப்பை விரும்புவர்க்கு படிப்பும், 2)பொருளை விழைபவர்க்கு பொருளும்,
3)மக்கட்செல்வத்தை வேண்டுபவர்க்கு மகவும்,
4)மோட்சத்தை விரும்புவர்க்கு அருளும் தருவாய் என பொருள்படும். எவ்ளோ ரத்ன சுருக்கமா இருக்கு இல்ல?
ஆறு மாதம் நாளைக்கு இரண்டு வேளை இந்த சுலோகம் சொல்லி வந்தால் அவரவருக்கு அப்போதைய விருப்பம் என்னவோ அது நிறைவேறும் என்பது தான் கடைசியில் வரும் வரிகளின் அர்த்தம்.//
அருமையான விளக்கம் அம்பி.
என் தினப்படி வழிபாடில் இந்த சுலோகம் உண்டு. //
ம்ம். விஷ்வ விநாயகா எனும் ஆல்பத்தில் பாலசுப்ரமணியம் பாடும் ராகத்தில் என் பிள்ளைகளும் பாடக் கற்றுக்கொண்டுள்ளார்கள்.
என் அலார்ம் ரிங்க் டோன் இந்த பாடல்தான்.
எல்லாம் சரி, கொழுகட்டை எங்கே//
அம்மா வந்த பிறகுதான் மகன் வருவான்.
அம்மாவிற்கு இன்று பூஜை (கொளரி பூஜை) நாளைதான் கொழுக்கட்டை.
ஆன்மீகம் மணக்குது, கொழுக்கட்டை கிடைக்குமா?
கொழுக்கட்டை கிடைக்குமா?
நாளை தான் கொழுக்கட்டை.
:))))))))))))))
எவ்ளோ ரத்ன சுருக்கமா இருக்கு இல்ல?//
மனம்போல் மாங்கல்யம் என்பது இதுதானோ?
பக்தி பற்றியெல்லாம் எழுதுவது சரிதான்.. ஆனால் அதனை எத்தனை பேர் படிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிரீர்கள்-வானொலி
அதனை எத்தனை பேர் படிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிரீர்கள்//
எம்புட்டு பேரு படிப்பாங்கன்னு கணக்கு வெச்சுகிட்டு பதிவெழுதக்கூடாது. நான் பதிய விரும்புவது தானே என் பதிவு.
எழுதப் படுகிற அனைத்து பதிவுகளுமே படிக்கப்படணும் என்று சட்டம் இல்லை வானொலி.
அருமையான பதிவு தென்றல்.
நான் தினம் படிப்பது விநாயகர் அகவல்.
வாங்க ராமலக்ஷ்மி,
அருமையான பதிவு தென்றல்.//
நன்றி.
//நான் தினம் படிப்பது விநாயகர் அகவல்//
அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி எனும் வரிகள் மிகவும் பிடிக்கும்.
Post a Comment