Tuesday, September 02, 2008
கெளரி பூஜை
கணேசனுக்கு முன்பு அவனது அம்மா
பார்வதி வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
முதல் நாள் கெளரி பூஜை, மறுநாள்
விநாயக சதுர்த்தி.
தெலுங்கு கன்னட சம்பிராதயத்தில் திருமணத்தன்று
காலையில் கெளரி பூஜை செய்து விரதம் இருந்துதான்
திருமணம்.
திருமணத்தன்று பிறந்த வீட்டுப்பக்கம் 5, புகுந்த வீட்டு
பக்கம் 5 தாம்பூலம் (முறத்தில் வைத்து) கொடுக்கவேண்டும்.
(முதல் வாயனம் (தாம்பூலம்) தாய்க்குத்தான்)
காலில் மஞ்சள் பூசி,
முறத்தை புடவை கொங்கால் மூடி வாயனம் தரவேண்டும்.
சகி யெவரு? (வந்திருப்பது யார் என்று கேட்க)
நேனே கெளரி பார்வதி (நானே கெளரி பார்வதி)
என்று 3 முறை கேட்க 3 முறை சொல்ல வேண்டும்.
இஸ்தினி வாயனம் (கொடுத்தேன் வாயனம்)
புச்சுகுட்டினி வாயனம் (பெற்றுகொண்டேன்)
இதுவும் 3 முறை சொல்ல வேண்டும்.
மங்களப்பொருட்களுடன் வாயனம் கொடுக்க வேண்டும்.
(இந்த விரதம் முடிந்த பிறகுதான் பெண்ணை
மாமா மணமேடைக்கு தூக்கிவருவது)
திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு வருடமும்
இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
கலசத்தில் மஞ்சள் அல்லது ஆற்று மணலில் அம்மன் முகம்
செய்து, 16 முடி போட்ட தோரணம் வைத்து,
அந்த கெளரியை சொளபாக்யத்திற்காக பூஜை செய்யவோம்.
( அந்தக் காலத்தில் அம்மன் முகம் செய்ய ஆற்றிலிருந்து மேள தாளத்துடன்
மணல் எடுத்து வருவார்களாம்)
நான் மஞ்சளில் செய்த அம்மன் போட்டோதான் மேலே இருப்பது.
3 நாள் வைத்திருந்து கணபதியுடன் நீரில் கரைத்துவிடுவோம்.
கெளரி பூஜை ஷ்பெஷல் நைவேத்தியம் பூரணம்.
பூரணமாக இருக்க வேண்டி பூரணம் செய்து
படைக்க வேண்டும்.
தேவேந்த்ராணி நமஸ்துப்யம் தேவேந்த்ர ப்ரியபாமினி
ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யம் பத்ரு/புத்ர லாபம்ச
தேஹிமே.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கெளரித் தாயாருக்கு தாங்கள் செய்திருக்கும் நகை அலங்காரம் சிகை அலங்காரம் அருமை. இதோ நாங்களும் ஆசிகளைப் பெற்றுக் கொண்டோம்.
//கெளரி பூஜை ஷ்பெஷல் நைவேத்தியம் பூரணம்.//
சரி, அப்ப பூரணம் எங்கே? லேசுல விட மாட்டோம் இல்ல. :p
நீங்க எழுதினதை படிச்சதும் 'நேனு சந்ரமுகி!' டயலாக் நினைவுக்கு வந்தது. :))
நகை அலங்காரம் சிகை அலங்காரம் அருமை. //
நன்றி ராமலக்ஷ்மி.
நாங்களும் ஆசிகளைப் பெற்றுக் கொண்டோம்.//
கண்டிபபாய்
அன்னை அருள வேண்டும் என்பதற்குத்தானே பதிவிட்டது.
அப்ப பூரணம் எங்கே?//
ஆஹா பூரணத்தை சுமமாவா சாப்பிடுவாங்க. அதான் போளிக்கு பதில் பூரண பாயசமா செஞ்சேன்.
(அது எங்கேன்னு கேக்காதீங்க. அப்புறமா செஞ்சு தனியா பார்சலில் அனுப்பி வைக்கிறேன் :)) )
'நேனு சந்ரமுகி!' டயலாக் நினைவுக்கு வந்தது//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment