ஷூவிற்கும் காலிற்கும் இடையே ஒரு இதமான இணைப்பாக இருப்பது காலுறைகள்.
காலுறைகள் அணிவதால் கால்களுக்கு கதகதப்பு கிடைக்கிறது.
ஷூ, சாக்ஸ் போட்டால் ஒரு கம்பீரமான லுக் கிடைத்துவிடும்.
பேஷனபிளாக காட்ட ஷூவும் சாக்ஸும் முக்கிய பங்கு
வகுக்கிறது.
பாதத்தை அழுக்காகமல் தடுக்கவும் காலுறைகள்
உதவுகின்றன.
வியர்வையை உறிஞ்சுக்கொள்கிறது காலுறை.
காலுறைகள் வாங்குவதிலும் அதிக கவனம் தேவை.
காலநிலைக்கு தகுந்த வாறு சாக்ஸ் அணிவது அவசியம்.
பலர் ஷூக்களை கழட்டியவுடன் ஒரு துர் வாசனை வீசும். காரணம்
முறையாக பராமரிக்கப்படாத காலுறைதான்.
சாக்ஸ்தானே என்று பலர் அலட்சியமாக ஒரே சாக்ஸையே
3 நாட்களுக்கு அணிவார்கள். இது தவறு. நம் உடைக்கு
எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு
முக்கியத்துவம் காலுறைக்கும் கொடுக்க வேண்டும்.
கருப்பு, வெள்ளை,பிரவுன், கிரே ஆகிய நிற சாக்ஸ்கள்
எந்த உடைக்கும் பொருந்தும்.
உங்களின் பெல்ட்டின் நிறத்தோடு அல்லது Pant நிறத்தோடு
சாக்ஸின் நிறம் மேட்ச்சாக வேண்டும்.
ஸ்போர்ட்ஸ் ஷூவிற்கு போடும் சாக்ஸ் மற்ற ஷூவிற்கு
பொருந்தாது.
சம்பந்தமில்லாத கலரில் அணியப்படும் காலுறையினால்
உங்களின் தோற்றம் நன்றாக இருக்காது.
காலுறைகளை பராமரிப்பது எப்படி?
காலுறைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
இதெல்லாம் என்னன்னு கேக்கறீங்களா? அடுத்த பதிவுக்கான
தலைப்புதான்.
(தொடரும்னு போட்டா திட்டுவீங்க. அதுக்குத்தான்
கொஞ்சம் வித்தியாசமா :) )
9 comments:
சரி..!
/காலுறைகளை பராமரிப்பது எப்படி?
காலுறைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
இதெல்லாம் என்னன்னு கேக்கறீங்களா? அடுத்த பதிவுக்கான
தலைப்புதான்./
சரி..சரி...!
/(தொடரும்னு போட்டா திட்டுவீங்க. அதுக்குத்தான்
கொஞ்சம் வித்தியாசமா :) )/
ஹா...ஹா..ஹா...இது ரொம்ப சரி..:)
படங்கள் ரொம்ப நல்லா இருக்கு!
அந்த எழுத்துருவை சாய்க்காம நேரா தெரிய வைங்களேன்.
படிக்க சிரமமா இருக்கு!
நீங்களும் தொடரும் ஜோதியில் கலந்ததுக்கு நன்றி!
டீச்சர் புத்தி அக்காவ விட்டு இன்னும் போகல...ஏதாவது கத்துக்குடுத்துகிட்டே இருக்கீங்களே!!! :))
வந்தவங்க எல்லோரும் தாமதமா பின்னூட்டம் போடறதுக்கு மன்னிக்கனும்.
நிஜமா நல்லவன்,
இந்தோ பதிவு போடறேன்.
வாங்க சுரேகா,
நான் தொடரும் போடும் ஜோதியில் சேர்ந்தது உங்களால் தான்.
அந்த பெருமை உங்களுக்கு மட்டும் தான்.
டீச்சர் புத்தி அக்காவ விட்டு இன்னும் போகல...//
ரத்தத்தில் ஊறின விசயம் ஆச்சே அப்துல்லா எப்படி போகும் :)
Post a Comment