என்னால் நம்பவே முடியவில்லை!!!
எனக்குள் இந்த மாற்றம் எப்படி வந்தது?
நன்றி சொல்லவேண்டும் நண்பர் பரிசல்காரன்அவர்களுக்கு.
ஒரு புகைப்படத்திற்கு கேப்ஷன் புதிர் போட்டு
பதிவு போட்டிருந்தார் பரிசல். அதற்கு எனது
பதிலுக்காக பாலபாரதி அவர்கள் எழுதிய
அவன் அது அவள் புத்தகத்தை பரிசாக
அனுப்பி வைத்திருந்தார்.
படிக்க புத்தகம் கிடைத்தால் போதும் அதை
முடித்து விட்டுத்தான் அடுத்த வேலை என்பது
என்னுடைய பழக்கம்.
அழகான எளிமையான நடையில் பாலபாரதி
அவர்களின் எழுத்தில் அந்தக் கதையைப் படித்தேன்.
மிக அருமையான எழுத்து. பாரட்டுக்கள்
பாலபாரதி.
சரி அந்தக் கதைக்கும் எனக்குள் நடந்திருக்கும்
மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம்!!!!
நான் மும்பையில் இருந்திருக்கிறேன். அதகளம்
செய்துகொண்டு ஆனந்தமாக லோக்கல் ரயிலில்
பயணம் செய்வது என் பழக்கம். ஆனால் வெள்ளிக்கிழமைகளில்
வாயே திறக்க மாட்டேன். பயந்து ஒடுங்கிக் கிடப்பேன். :(
அதற்கு காரணம் திருநங்கைகள். வெள்ளிக்கிழமைகளில்
அவர்கள் கண்டிப்பாக பணம் வசூலிப்பார்கள். அடாவடியாக பணம்
கேட்பது, கண்டபடி திட்டுவது, புடவை அணிந்து இருந்தாலும்
பெண்கள் பயணம் செய்யும் டப்பாவில் ஏறினாலும்
வீசும் பீடி, சுருட்டு வாசனை, எல்லாமாக சேர்த்து
அவர்களைக் கண்டு நான் நடுங்குவேன்.
கடவுளுக்கு அடுத்து நான் மிகவும் பயப்படுவது
இவர்களுக்கு மட்டும் தான். தவறான எண்ணம் ஏதும்
இல்லை. அவர்களை தவறாக விமர்சித்ததும் இல்லை.
இப்படி ஒரு நிலையை அவர்களுக்கு ஏன் கொடுத்தாய்
இறைவா என்று சில சமயம் மனம் கலங்கியதுண்டு.
ஆனாலும், அவர்களை எதிர்கொள்ளும் துணிச்சலோ,
பதில் பேசும் மனமோ இருந்ததில்லை. ஒவ்வொரு
வெள்ளிக்கிழமைகளிலும் இவர்கள் கையில் நான்
மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதே என் பிரார்த்தனையாக
இருக்கும்.
மும்பைக்கு அடுத்து திருநங்கைகளை நான் கண்டது
ஹைதராபாத்தில். எங்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும்
ஜூப்ளி பஸ்ஸ்டாண்ட் சிக்னலைத் தாண்டித்தான்
பிள்ளைகளின் பள்ளிக்கு செல்ல வேண்டும். தனியாக
போகும் போது சிக்னலில் பணம் கேட்டு அடாவடி
செய்து ஏற்பட்ட பயத்தினால் என்ன ஆனாலும் சரி
என்று பிள்ளைகள் பள்ளிக்கு தனியாக போகவே
மாட்டேன்.அயித்தான் தான் போய் வருவார்.
அவர்களைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டுதான்
இருந்தேன்.
நிலமை இப்படி இருக்க கடந்த வாரத்தில் ஒரு நாள்
என் வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு
பிள்ளைகளுடன் போய்க்கொண்டிருந்தேன்.
எதிரில் வந்த திருநங்கை ஒருவர் என்னை
மறித்து பணம் கேட்டார்.
ஒரு நிமிடம் திகைத்து பதில் சொன்னேன்.
இருங்கள்! என்னிடம் எவ்வளவு இருக்கிறது
என்று பார்க்கிறேன்” என்று அமைதியாக
ஹிந்தியில் சொன்னேன்.
50 ரூபாய் வேண்டாம். உன்னிடம் 20 ரூபாய்தான்
கேட்கிறேன் என்றார்.
சில்லைறை இல்லாததால் 10 ருபாய் தான்
இருந்தது. அதைக் கொடுத்தேன்.
மேலும் கேட்டார். தைரியமாக,அமைதியாக, சிரித்த
முகத்துடன்,” நான் கொடுப்பதை சந்தோஷமாக
வாங்கிக்கொள்ளுங்கள், என்னால் இப்போதைக்கு
இயன்றது இதுதான்” என்று சொன்னேன்.
ஒரு நிமிடம் என்னை பார்த்தவர் ஒன்றும்
பேசாமல் 10 ரூபாயை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.
எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. எப்படி நான்
பயப்படாமல் பேசினேன்? என்று யோசித்துக்கொண்டே
வீடு வந்து சேர்ந்தேன். மேஜையில் இருந்த
அவன் - அது = அவள் புத்தகம் என்னைப் பார்த்து
சிரித்தது.
திருநங்கைகள் பற்றி , அவர்களின்
வாழ்க்கை முறை தெரிந்திருந்தாலும் எனக்குள்
அவர்களின் மீது இருந்த பயத்தை போக்கியது
அந்த புத்தகம் தான் என்பதை உணர்ந்தேன்.
இனி அவர்களைக் கண்டு பயப்பட போவதில்லை.
பரிசல்காரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பாலபாரதி அவர்களுக்கு மருமுறை என் பாராட்டுக்கள்.
(கணிணியில் சிறு பிரச்சனை இருந்ததால் இடையில்
ஒரு 10 நாள் லீவு போடும் படி ஆகிவிட்டது.
எனக்குத்தான் உடல்நிலை சரியில்லையோ என்று
அப்துல்லாவும், நிஜமா நல்லவனும் பதறி
போன் போட்டு விசாரித்தார்கள்.
அன்புக்கு மிக்க நன்றி.
21 comments:
நீங்க என்ன கேப்ஷன் குடுத்தீங்க?னும் பதிவில் போட்டு இருக்கலாம். இல்லாட்டி அந்த பதிவின் சுட்டியாவது. சரி விடுங்க. :))
நல்லா இருக்கு.
என்னங்க ஆச்சு உங்க பதிவுருவுக்கு..
ஏதோ மாத்தினாப்பல தெரியுதே..
கொஞ்சம் கவனிங்க
வாங்க அம்பி,
அந்த பதிவைத் தேடினேன். கூகிள் அப்பப்போ ஒளிச்சு வெச்சுக்குமே அது மாதிரி ஆகிடுச்சு. அதனால் தான் பரிசல் அவர்களின் வலைப்பூவுக்கு சுட்டி கொடுத்தேன்.
அங்கே நான் கொடுத்திருந்த கேப்ஷன் இணைந்த கைகள்.
என்னங்க ஆச்சு உங்க பதிவுருவுக்கு..
வாங்க இளைய பல்லவன்,
எனக்கு அவ்வளவு சுத்தமான தமிழ் தெரியாதுங்க. என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க பார்க்கறேன். :(
நீங்க இவ்ளோ பயந்தவங்களா!?!?!?
ம்.. நான் இன்னமும் அந்த புத்தகம் படிக்கவில்லை..
உங்கள் அனுபவம் போல தான் எனக்கும்.. தில்லியில் குழந்தை பிறந்தால் பணம் வாங்க வருவார்கள். முதல் முறை எனக்கு பெரிய ப்ரச்சனை இருக்கவில்லை ..சமாளித்துவிட்டேன்.. ஆனால் இரண்டாம் முறை ஆண்குழந்தை என்பதைக்காரணம் காட்டி .. தங்கத்தில் எதையாவது தந்தே ஆகவேண்டுமென்று உள்ளேயே வந்து உட்கார்ந்து கொண்டு மோசமாக நடந்து கொண்டார்கள்.. இத்தனைக்கும் நான் மிக மெதுவாக மதிப்பாகத்தான் பேசினேன். ஆப்பரேசன் ஆகி நிற்க இயலாமல் குளிர்க்காற்று (கதவைத்திறந்து வைத்திருந்ததால்) வேறு..இயலாமையில் எனக்கு வந்த அழுகையைக்கூட பொருட்படுத்தவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. :( கடைசியில் பேரம் 2500 க்கு முடிந்தது.
வாங்க சிவா,
திருநங்கைகள் சந்தித்திருந்து அவர்கள் செய்யும் அடாவடிகளை கண்டவர்கள் எவரும் என்னைப்போல் தான் பயப்படுவார்கள்.
வாங்க முத்துலட்சும்,
மும்பையில் என் மாமா வீட்டில் இருந்த பொழுது எதிர் பிளாக்கில் பேரம் மடியாததால் குழந்தையையே தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள்.
கேட்டதை விட பெரியத் தொகை கொடுத்துதான் குழந்தையை மீட்டுக்கொண்டு வந்தார்கள்.
போலிசும் ஒன்றும் செய்ய இயலாது.
இவர்களின் இந்த நடவடிக்கைதான் எனக்கு பிடிக்காது.
திருநங்கைகளுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை என்று ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அரசாங்கம் தலையிட்டு இந்த அவலநிலைக்கு ஏதேனும் செய்தால்தான், பொதுமக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
சிவா,
திருநங்கைகள் கேட்ட பணத்தைக் கொடுக்காவிட்டால் பேசும் பேச்சு....
காது கொடுத்து கேட்க முடியாது.
சாபம் வேறு கொடுப்பார்கள். இவை மனத்தை மிக மிக பாதிக்கும்.
இவை என் அனுபவங்கள். அதனாலேயே அவர்களைக் கண்டு பயம்.
திருநங்கையாக இருப்பாதால் ஆண்களிடம் பெரிதாக வம்பு செய்ய மாட்டார்கள். பெண்களிடம் நடந்து கொள்ளும் விதமே வேறு. :(
புத்தகத்தை படித்து முடித்ததும் நெஞ்சம் கனத்துப்போனது எனக்கு. ஆனால் உங்களைப் போலவே எனக்கும் அவர்கள் குறித்த எண்ணத்தில் ஒரு மாற்றம் வந்திருப்பது நிஜம்.
உங்கள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
மங்களூர் சிவா said...
நீங்க இவ்ளோ பயந்தவங்களா!?!?!?
//
இங்க பாருய்யா கல்யாணம் ஆயியும் வீரன் மாதிரி பேசுரத...
வாங்க வெண்பூ
மாற்றம் நம் மனதில் மட்டும் வந்தால் போதாது . திருநங்கைகள் மனதிலும் மாற்றங்கள் வரவேண்டும்.
அவர்களை குற்றம் சொல்லவில்லை ஆனாலும் சில நடவடிக்கைகள் நம்மை காயப்படுத்துகிறது.
இங்க பாருய்யா கல்யாணம் ஆயியும் வீரன் மாதிரி பேசுரத...
விடுங்க அப்துல்லா இப்போதைக்கு சிவா ஆரம்ப சூரப்புலி :)
(கூடிய சீக்கிரம் சிவாவை பத்திவீட்டுல எலி வெளியில புலின்னு பதிவு போட வேண்டியது வரும் அப்துல்லா. நீங்க போடுவீங்களா? இல்லை நான் போடுவேனான்னு நாம பேசி முடிவு செய்யலாம்.)
:))))))))))))))))))))))
//
புதுகைத் தென்றல் said...
வாங்க முத்துலட்சும்,
மும்பையில் என் மாமா வீட்டில் இருந்த பொழுது எதிர் பிளாக்கில் பேரம் மடியாததால் குழந்தையையே தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள்.
கேட்டதை விட பெரியத் தொகை கொடுத்துதான் குழந்தையை மீட்டுக்கொண்டு வந்தார்கள்.
//
ஐயய்யோ :(((((((
//
புதுகை.அப்துல்லா said...
மங்களூர் சிவா said...
நீங்க இவ்ளோ பயந்தவங்களா!?!?!?
//
இங்க பாருய்யா கல்யாணம் ஆயியும் வீரன் மாதிரி பேசுரத...
//
இன்றைக்கு நான் நாளைக்கு நீங்க அதனால இப்பிடி எல்லாம் சொல்லப்பிடாது!!
:))))
நாங்க பூனாவில் இருந்தப்ப சிலசமயம் திருநங்கைகள் வருவாங்க. கீழே வீட்டு அம்மா சாப்பாடு கொடுப்பாங்க. வாங்கிக்கிட்டுப் போயிருவாங்க. குழந்தை பிறந்த வீடுகள்தான் அவுங்க இலக்குன்னு சொல்லக் கேள்வி.
இன்றுதான் படித்தேன்!
பாலாவிற்கு இது ஒரு வெற்றி!
உங்கள் அனுபவத்தை அழகாகச் சொல்லி இருக்கிங்க வாழ்த்துகள்....
தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் பார்த்ததில்லை.கடைகளில் வசூலிப்பார்கள்.இப்படியெல்லாம் செய்வார்களா?
இப்படியெல்லாம் செய்வார்களா?//
நடக்குதே....
வருகைக்கு நன்றி கண்மனி
Post a Comment