Wednesday, November 19, 2008

இதுவும் பராமரிக்கப்படவேண்டிய இடம் தான்.

இந்த பில்டர்களுக்கு என்ன நினைப்போ தெரியாது.
1800 சதுர அடி வீடா இருந்தாலும் சரி இந்த இரண்டு
இடம் மட்டும் ரொம்ப சின்னதா வெச்சிடுவாங்க.
அது சமையற்கட்டும், பாத்ரூமும் தான்.




இப்பல்லாம் அட்டாச்ட் பாத்ரூம் தான். அதுவும்
ரொம்ப சின்னதா இருந்தா பரமாரிக்கறது ரொம்ப
கஷ்டம். அழகா வெச்சுக்க முடியாது பாருங்க.
பாத்ரூம்ல என்ன அழகுங்கறீங்களா?

ஒரு வீட்டின் ஆரோக்கியத்தி்ற்கு
சமையற்கட்டும், பாத்ரூம் அழகா
முறையா பராமரிக்கப்படணும்.



பாத்ரூம் பத்தின வி்க்கிப்பீடியாவுக்கு.





எங்க வீட்டை வாடகைக்கு விட்டிருக்கோம். அவங்களுக்கு
கொடுத்திருக்கும் கண்டீஷன் பாத்ரூமை ஒழுங்கா
மெயிண்டெயின் செய்யணும்.

வீட்டில் கதவு உடைஞ்சா மாத்திடலாம், பெயிண்ட்
போனா புது பெயிண்ட் அடிச்சுக்காலாம். பாத்ரூம்
ஒழுங்க பராமரிக்கப்படலனா மொத்த டைல்ஸ் கம்மோர்டை
எடுத்து, மொத்தமா மாத்தவேண்டி வரும்.

இதுல காம்பரமைஸ் செஞ்சுக்கவே முடியாது
என்னால.



ஒரு ரூம் சைஸுக்கு பெரிசா வேணாம். ஜக்கூசி எல்லாம்
அதுல இருக்கணும்னு இல்ல.
பெரிசா இருக்கவேணாமா பாத்ரூம்?

பாத்ரூம் பராமரிப்பது எப்படி?
இது தெரியாதா? பினாயில் போட்டு கழுவுறது,
ஹார்பிக் ஊத்தி கழுவுறது இதுதானேன்னு
கேக்கறீங்களா?

இல்லையே? அப்புறம்?
அதுதானே அடுத்த பதிவு.

எங்களுக்கு மிகவும் பிடித்த இலங்கையில் இருக்கும்
கந்தலாமா ஹோட்டலின் ஜக்கூசி படம்
(ஆஷிஷ் & அம்ருதா சாய்ஸாக)


10 comments:

நாமக்கல் சிபி said...

ஆமாங்க! பாத்ரூம் பெரிசா இல்லைனா சங்கடமா இருக்கும்!

புகழன் said...

ஜக்கூசி அப்படின்னா என்னங்க புதுகை?

புகழன் said...

//இல்லையே? அப்புறம்?
அதுதானே அடுத்த பதிவு
//

இப்படி ஸ்பிலிட் செய்துதான் அதிக பதிவுகளை எழுதி சாதனை செய்துள்ளீர்களோ?


நல்ல முயற்சி
தொடருங்கள்
வாழ்த்துகள்.

pudugaithendral said...

வாங்க சிபி,

பாத்ரும் பெரிசோ, சிருசோ அதை அழகா பரமாரிக்கணும். அது ரொம்ப முக்கியம்.

pudugaithendral said...

ஜக்கூசி பாத் டப் வகையில் ஒன்று.

அதில் 4 பக்கமும் வந்து நீர் மசாஜ் செய்வது போல் இருக்கும்.

ஸ்பாக்களில், நட்சத்திர ஹோட்டல்களில் இருக்கு, (டப்பு பார்ட்டிஸ் வீ்டுகளிலும் இருக்கும்)

விக்கிப்பீடியா தகவல்களுக்கு இங்கே


http://en.wikipedia.org/wiki/Jacuzzi

pudugaithendral said...

இப்படி ஸ்பிலிட் செய்துதான் அதிக பதிவுகளை எழுதி சாதனை செய்துள்ளீர்களோ?//

பதிவு பெரிதாக இருந்தால் படிக்கும் சுவாரசியம் போய்விடும். பதிவு எழுதப் படும் நோக்கம் சரியாக போய் சேராது. அதனால் தான் இரண்டு பதிவாக போடுவதே தவிர இப்படி போடுவதால்
எண்ணிக்கை கூடும் என்பதற்காக இல்லை நண்பரே.

:))))))))))))))))

பாச மலர் / Paasa Malar said...

அடுத்த பதிவில் நிறைய டிப்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்..

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

அடுத்த பதிவு போட்டாச்சு.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சிவா.