”நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்”
என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்றாற்போல் இருந்தார்.
அந்த மிடுக்கு, கம்பீரம் நான் பார்த்து வியந்த
ஒன்று.

பாந்தமாக புடவை உடுத்தலாம். புடவையிலும் கம்பீரமாக
திகழலாம் என்று எனக்கு உணர்த்தியவர்.

ஆண்மைக்கு மட்டுமல்ல பெண்மைக்கு கம்பீரம் உண்டு
என்று காட்டியவர்.
பாரத தேசத்தை ஆண்ட பெண் என்ற தனிச்சிறப்பு இவருக்கு
மட்டுமே உரித்தானது.

எனக்கு அரசியல் தெரியாது, புரியாது. இந்திரா காந்தி
அவர்களின் தன்னம்பிக்கை மிக்க பேச்சு மிகவும்
பிடிக்கும்.

டிஸ்கி:
அவர் கொல்லப்பட்டபோது வெளிவந்த புகைப்படங்கள் அத்தனையையும்
சேர்த்து ஆல்பமாக்கி வைத்திருந்தேன். பெரிய சைஸ் ஆல்பம்
அது. அந்த ஆல்பத்திற்காக என் பள்ளி தலைமை ஆசிரியர் முதல்
அனைவரிடமும் பாரட்டை பெற்றிருந்தேன். எப்படியோ அது
தொலைந்து போய்விட்டது என்பதில் எனக்கு இன்றளவும்
வருத்தம்.
15 comments:
தென்றல், மனம் கவர்ந்த பெண்மணியை நினைவு கூர்ந்து மரியாதை செய்யும் பதிவு.
எனக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை மிகவும் பிடிக்கும்.அவர் கொல்லப் பட்ட போது நீங்கள் பள்ளியிலிருந்தீர்களா? நான் இளங்கலை இறுதியாண்டில். நான் எழுதிய கண்ணீர் அஞ்சலி எனது வகுப்பிலும், எனது உறவினர் ஒருவரால் மங்கையர் கழக இரங்கற் கூட்டத்திலும் வாசிக்கப் பட்டது.
அவர் கொல்லப் பட்ட போது நீங்கள் பள்ளியிலிருந்தீர்களா? //
ஆமாம். 9த் படிச்சிகிட்ட்டிருந்தேன்.
நான் எழுதிய கண்ணீர் அஞ்சலி எனது வகுப்பிலும், எனது உறவினர் ஒருவரால் மங்கையர் கழக இரங்கற் கூட்டத்திலும் வாசிக்கப் பட்டது.//
அப்ப கலக்கியிருப்பீங்க.
நீங்க நம்ம வலையுலக கவிக்குயிலாச்சே.
எனக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை கொஞ்சம் பிடிக்கும்
இந்திராகாந்தியின் துணிச்சல் வேறு எவருக்கும் வரவே வராது.
Strong woman, நான் பத்தாவது படிக்கும்போதுதான் இறந்து போனாங்க. ஒரே கலவரம்.
அவர்கள் இறக்கும் பொழுது நான்
ஐ-ஞ்சாப்பூ.
மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் செல்ல பேரூந்து எல்லாம் இல்லை.
நடந்தே போனேன்.
கால்களில் வலி இல்லை மனதில் தான்.
ஒரு பெண்மனியாக அன்னை தெரசாவிற்கு பிறகு இவரை பிடிக்கும் அந்த சிறு வயதிலும்
வாங்க கபீஷ்,
எனக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை கொஞ்சம் பிடிக்கும்//
இதுதான் அவரின் சிறப்பு.
இந்திராகாந்தியின் துணிச்சல் வேறு எவருக்கும் வரவே வராது.//
ஆமாம் விலேகா,
வாங்க சின்ன அம்மிணி,
ஆமாம். எனக்கு நினைவிருக்கிறது.
வாங்க அதிரை ஜமால்,
அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
/*ஆண்மைக்கு மட்டுமல்ல பெண்மைக்கு கம்பீரம் உண்டு
என்று காட்டியவர். */
ஆம். எனக்கு அவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு பிடிக்கும்.
:((
உலகுக்கே பெண்மையின் தலைமையை அறிய வைத்தவர்!
இந்தியாவின் இரும்பு பெண்மணியாச்சே!
இப்படி ஒரு பெண்மணி இன்று நம் நாட்டுக்கு இல்லையே என்று நான் ஏங்காத நாளில்லை!!
Post a Comment