இல்லறவியல் முதல் பாடம் வீடியோ காட்சிகள் சில.
கல்யாணம் நிச்சயமானதும் கிட்டுமணிகள்
இப்படித்தான் இருப்பாங்க.
இந்தப்பாட்டை பாருங்க. (தெலுங்குப் பாட்டுதான்.
நமக்குத் தேவை இப்ப காட்சிகள்தான். இந்தப்
பாட்டில் வரும் காட்சிகள் மிக முக்கியம்.
அதனால கண்டிப்பா பாருங்க. :)
கிட்டுமணிகள் அப்படின்னா பெண்கள்
இப்படி இருப்பாங்க.
கல்யாண நாளும் வந்தது. கல்யாணமும் முடிஞ்சிருச்சு.
தேன்நிலவெல்லாம் கூட கொண்டாடினாங்கன்னு
வெச்சுக்கோங்க.
எல்லாம் நல்லாத்தானே போயிக்கினு இருக்கு??!!??
என்னன்னு கேக்கறீங்களா? அது சரி.
இதுவரைக்கும் நல்லாத்தான் இருக்கு.
திருமணம் ஆகுறவரைக்கும் அந்தப் பொண்ணையே
நினைச்சு, உருகி இருந்தவர் திருமணத்தி்ற்கப்புறம்
டோட்டல் சேஞ்ச் ஆகிடுவாரு.
பெரியவங்க பாத்து நிச்சயம் செஞ்ச திருமணம் ஆனாலும் சரி
காதலால் கசிந்துருகித் திருமணம் ஆனாலும் சரி.
கல்யாணத்துக்கு பிறகு தங்கமணிகள் நிலமை
ஒரே மாதிரிதான்.
இன்னைக்கு வீடியோக்களை பாருங்க.
அடுத்த வாரம் மீதி பாடத்தோட வர்றேன்.
20 comments:
மீ த ராப்.. :)
மன்னிக்கவும் எனக்கு வேலை செய்யற் இடத்துல (??) இங்க வீடீயோ தெரியாது இருந்தாலும் உங்க பதிவுக்காக ஹி ஹி ஹி ஹி..
வாங்க சஞ்சய்.
:)
மன்னிக்கவும் எனக்கு வேலை செய்யற் இடத்துல (??) இங்க வீடீயோ தெரியாது//
பாடத்துல வீ்டியோ மிக முக்கியம்.
அதனால பொறுமையா வீட்டுக்கு போய் வீடியோ பாத்துட்டு வாங்க.
இப்பத்தைக்கு அட்டெண்டென்ஸ் மார்க் செஞ்சுட்டேன். :)
அக்கா வீடியோ லோட் ஆக டைமாகுது..
நம்பளாக்கு வெயிட் பண்ற பழக்கமில்லை என்பதால் இந்த பாடத்தை ஸ்கீப் செய்து அடுத்த பாடத்துக்கு வரேன்... டமால் டுமில்னு அடி தடிலாம் இருக்கும்னு நினைச்சேன்... சப்புனு போச்சே... அட் லிஸ்ட் ரெண்டு பூரி கட்டை பறக்கும் சீனாவது போடுங்க...
இந்த பாட திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறேன்!
//திருமணம் ஆகுறவரைக்கும் அந்தப் பொண்ணையே
நினைச்சு, உருகி இருந்தவர் திருமணத்தி்ற்கப்புறம்
டோட்டல் சேஞ்ச் ஆகிடுவாரு.//
இந்த வரிக்காகவே!!! எதிர் பாடம் வரும் எச்சரிக்கை:)))
நம்பளாக்கு வெயிட் பண்ற பழக்கமில்லை என்பதால் இந்த பாடத்தை ஸ்கீப் செய்து அடுத்த பாடத்துக்கு வரேன்..//
பொறுமை கடலினும் பெரிதுங்க.
டமால் டுமில்னு அடி தடிலாம் இருக்கும்னு நினைச்சேன்... சப்புனு போச்சே... அட் லிஸ்ட் ரெண்டு பூரி கட்டை பறக்கும் சீனாவது போடுங்க...//
ஹா ஹா,
இருங்க இருங்க, அடி வாங்க அம்புட்டு
ஆசையா (நீங்க கிட்டுமணி அதாவது கல்யாணம் ஆகதவறா இருக்கலாம்)
இந்த பாட திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறேன்!//
அப்பாடி ஒரு எதிர்ப்பு வந்தாச்சு.
:)
இந்த வரிக்காகவே!!! எதிர் பாடம் வரும் எச்சரிக்கை//
இதுக்கெல்லாம் நாங்க பயப்படுவோமா என்ன :)))
present teacher :))
அழகான அஸ்திவாரம்.
பாடமோ அடுத்த வாரம்.
களை கட்டப் போகுது இனி ஒவ்வொரு திங்களும். வாழ்த்துக்கள்!
முதல் பாடல் அதன் வரிகளுக்காகவும் ஜோவுக்காகவும் பிடிக்கும்:)!
சஞ்சயின் கமெண்டை ரசித்தேன்:)!
புதுகைத்தென்றல், திருமண மலர்கள் தருவாயா ஜோ வுக்கு ராசியான பாட்டு போல, காதைக்கிள்ளும் மாமா யாருன்னு பாருங்க
லேட்டா வந்ததுக்கு அப்துல்லாவுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கணும். :)
மொத கிளாஸ்ங்கறதால போனாபோவுதுன்னு விட்டுட்டேன்.
ராமலக்ஷ்மி உங்க கவிதையை ரொம்ப ரசிச்சேன்.
ஆமாம் சின்ன அம்மிணி,
நீங்க சொல்வது சரிதான்.
நான் இந்த ஹஸ்பண்டாலஜி பதிவுகள் படிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
(இது ரகசியமாக போடப்பட்ட கமெண்ட்)
அந்த தெலுங்கு பாட்டு புரியலை இருந்தாலும் அதில் வரும் ஃபிகர் நல்லா இருப்பதாக என் கூட வேலை பாக்கறவர் சொன்னார்.
நான் எதும் பாக்கலை வெறும் பாட்டு கேட்டேன் அம்புட்டுதான்
நான் இந்த ஹஸ்பண்டாலஜி பதிவுகள் படிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.//
இதை நான் நம்பணும்.
:)))))))))))))))))))
ஃபிகர் நல்லா இருக்கு
நான் எதும் பாக்கலை வெறும் பாட்டு கேட்டேன் அம்புட்டுதான்//
பூங்கொடி உங்க தனி மெயில் ஐடிக்கு சிவாவின் கமெண்டுகள் கட்/ காபி/பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
(பாத்து செய்ய வேண்டியதை செய்யுங்க தாயி. ஹெல்ப் வேணும்னா மொபைலில் கூப்பிடுங்க பூங்கொடி :))))
Post a Comment