Monday, November 10, 2008

புதியதோர் உலகம்

மெல்லிசை பாடல்கள்,
அருமையான திரைக்கதை,சிறந்த பாத்திரப்படைப்பு,
அதை உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள்,
இப்படி ஒரு அற்புதமான கலவையாய் ஒரு
திரைப்படம்.
telugu
ஹாப்பி டேஸ் ”சந்து” வருன் சந்தேஷ்,
ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு
ஜோடியாக ஸ்வேதா( குழந்தை நட்சத்திரமாக
இருந்த இவர் ஹீ்ரோயினாக நடித்திருக்கும் முதல்
திரைப்படம் இது), மகனை நண்பனாக வளர்க்கும்
தந்தையாக பிரகாஷ் ராஜ், அன்பை பொழியும்
தாயாக ஜெய்சுதா.
கதை இதுதான்:
பிரகாஷ் ராஜ், ஜெயசுதா தம்பதியரின் மகன்
வருன் ரெசிடென்சியல் பள்ளி ஒன்றில் தங்கி
ஜூனியர் காலேஜ் படிப்பு படித்துக்கொண்டிருக்கையில்
அங்கு வந்து சேரும் பணக்காரப் பெண் ஸ்வேதாவுடன்
காதல் கொள்கிறார். காதல் கசமுசா வெளியே கசிய
பள்ளி்யிலிருந்து அழைத்துச் செல்லப்படுகிறார்
ஸ்வப்னா, இருவரும் எப்படி இணைகிறார்கள்?
என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.டீன் ஏஜ் பையனின் காதல் என்றது வெறும்
காதல் சம்பந்தப் பட்ட படம் என்று சொல்லிவிட
முடியாது. பாத்திரப் படைப்பு அப்படி.

பிஸிக்ஸ் மாஸ்டர் கதா பாத்திரம் மிக
அருமை. பாலு,ஸ்வப்னா காதலை
தெரிந்துகொண்ட அவர் வகுப்பில்
டீன் ஏஜ், 20 - 30, 30 +
என பருவங்கள் சம்பந்தமாக சொல்லும்
வார்த்தைகள் சத்தியமான நிஜம்.


டீன் ஏஜ் மகன் பெற்றோரிடமிருந்து எப்படி
மெல்ல விலகுகிறான், அதனால் பெற்றோரின்
மனநிலை என்ன? என்பதை மிக அழகாக
சித்தரித்துள்ளார் இயக்குனர்.

தந்தை மகனின் பாசப் பிணைப்பை மிக அழகாக
காட்டியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டாலா.


பள்ளியிலிருந்து 1 மாதத்திற்கு வெளியேற்றபப்ட்டதை
சொல்லாமல் பாலு மறைத்ததை பிரகாஷ் ராஜ்
தெரிந்துக்கொள்ளும் போது ஒரு வசனம் சொல்வார்.
மிக அருமை.” அவனை இது வரை அடித்தது
கிடையாது. வெறும் அன்பை மட்டுமே காட்டி
இருக்கிறேன். இப்போதும் அன்பை மட்டுமே
காட்டப்போகிறேன். அவன் அதை உணர்வான்”.

இப்படிச்சொன்னவரிடம் கடைசிவரை உண்மையைச்
சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போய்
ஸ்வப்னாவுடன் வாழ நினைக்கிறான்.

வெளியூர் செல்லும் தந்தையை ரயிலில் ஏற்றிவிடப்
போகும் காட்சி மிக அருமை. தந்தையை
ஏற்றிவிட்டு வந்து தான் ஓடிப்போகு பொழுது
மறந்துவிட்டு போன சட்டை ஒன்றை (காதல் சின்னம்)
எடுக்க வரும் பாலுவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சிதான்
கிளைமாக்ஸ்.


படத்தின் இறுதியில் ஒரு வசனம் சொல்வார்கள்.
அது மிக அழகான, ஆழமான அர்த்தம் கொண்ட
வார்த்தைகள்.

“ டீன் ஏஜ் வயதில் ஈர்ப்பு அதிகம். ஆனால்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நல்லதா?
கெட்டதா? என்று யோசிக்கவும். பெற்றவர்கள்,
பிள்ளைகள் இருவரும் வேண்டுவது ஒன்றே.
அது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை ஜாக்கிரதையாக
தன் பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யும்
பெற்றோர்களை பிள்ளைகளும், பிள்ளைகள்
விரும்பும் சந்தோசத்தில் இருக்கும் நிஜத்தை
பெற்றோர்களும் உணர்ந்தால், இந்த உலகமே
புதியதொரு தங்கமான உலகம் ஆகிவிடாதா”
என்பதே அது.

உன்னதமான வார்த்தைகள்.

6 comments:

புதுகை.அப்துல்லா said...

“ டீன் ஏஜ் வயதைப் புரிந்து கொண்ட பெற்றோர்கள்,
அந்தப் பெற்றோர்களின் பாசத்தைப் புரிந்து கொண்ட
டீன் ஏஜ் பிள்ளைகள்” இருந்தால் அது
புதியதொரு தங்கமான உலகமாகிவிடும்” என்பதே
அது.

//

மிக,மிக உண்மை.

புதுகை.அப்துல்லா said...

ஹையா மீ த ஃபர்ஷ்டு :)

புதுகைத் தென்றல் said...

ஆஹா,

கொஞ்சம் மாடிபை செஞ்சுட்டு வர்றதுக்குள்ள கமெண்டா..!!!

வாங்க அப்துல்லா, நீங்க தான் ஃபர்ஷ்டு.

VIKNESHWARAN said...

நான் இரண்டாவது...

புதுகைத் தென்றல் said...

வாங்க விக்கி,

வருகைக்கு மிக்க நன்றி.

கானா பிரபா said...

கலக்கல் பாட்டுக்கள், படம் இனிமே தான் பாக்கணும் ;)