Tuesday, July 01, 2008

ஆண் (பிள்ளைகள்) பாவம்.




இது ஆண் பாவம் படத்தின் விமர்சனம் அல்ல.ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்று பெருமை பேசுவதைத் தவர இந்தசமூகம் ஆண்பிள்ளைகளுக்கு என்ன செய்தது?



ஒரு பெண்குழந்தை பருவ வயதை எட்டும் போது ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்வார்கள். சித்தி, அக்கா, அத்தை என்று ஒரு பட்டாளமே சேர்ந்து பெண்ணுக்கு புத்திமதி சொல்வார்கள்.






அவளுடைய உடம்பில் மாற்றம், பூப்பெய்துதல் ஆகியவற்றைசொல்லிக்கொடுப்பார்கள். அதனால் பெண்ணிற்கு தான்வளர்ந்து பெரிய மனுஷியாக ஆகிறோம் என்பது புரிகிறது.பெரியவர்களிடம் சந்தேகம் கேட்கும் ஆரோக்கிய சூழல் இருக்கிறது.



ஆனால் ஆண் பிள்ளை??????அவன் வயதுக்கு வருவது பெரிதாக யாரும் எடுத்துக்கொள்வதேஇல்லை. சொந்த அண்ண்ணே கூட இதைப் பற்றி பேசுவாராஎன்பது சந்தேகம்.



பெண்ணிற்கு தேவையான தகவல்கள் தரப்படுகிறது.
ஆனால்பருவ வயதில் ஆண்பிள்ளையை யாரும்
கண்டுகொள்வதேஇல்லை. ஆண்பிள்ளைக்கும் தன்
உடம்பில் ஏற்படும் மாற்றத்தை பற்றி பெற்றவர் எடுத்துக் கூற வேண்டும்.


அது வரை அம்மாவை கட்டிக்கொண்டு வளைய வரும்மகன்,
சட்டென்று ஒதுங்கி விடுவான். அவனுக்கு எடுத்துக்கூற
முடியாத தாய் என்ன செய்ய முடியும்?பெண்ணாக
இருந்தால் தன் அனுபவத்தை வைத்துஅவளுக்கு வேண்டிய
உதவி மற்றும் தகவல்களைதாய் தரமுடியும்.ஆண்பிள்ளைக்கு இந்த இடத்தில் தகப்பன் தானேஉதவ முடியும்?




 ஆனால் எத்தனை வீட்டில் தகப்பன் நண்பனாக இருக்கிறார். வேலைப்பளு அது இது என்று ஒதுங்கிவிடுகிறார். நண்பர்களிடம் கிடைக்கும் தவறான தகவல்கள்தான் ஆண்மகனிடம் இருக்கும்.உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கண்டு இது சரியா தவறா? என்றகுழப்பமான மனநிலை ஏற்படுக்கிறது. இது தனக்கு மட்டும் தான்ஏற்படுகிறதோ என்று குழம்புகிறான்.  இது மனதளவில் குழந்தையைபாதிக்கிறது.


விவரம் அறிய நண்பர்களை நாடுகிறான் அல்லது வலைதளத்தைகுடைகிறான். தெரியவேண்டிய விடயங்கள் சரியாக போதிக்கப்படாமலேயே போகிறது.இந்த மாற்றங்களை சரியாக புரிந்து கொள்ள முடியாதசூழலால் சில குழந்தைகள் மனநல மருத்துவரைநாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பதுஅறியப்படாத உண்மை.



இப்படி பட்ட சூழ்நிலையில் தான் தன் எதிர்காலத்தையேநிர்ணயிக்கக்கூடிய மேல்நிலை தேர்வை எழுதுகிறான்.


ஒரு பெண்குழந்தைக்கு கிடைக்கும் பாதுகாப்பு,அன்பு,
அரவணைப்பு ஆண்பிள்ளைக்கும் அந்தவயதில் மிக்க
அவசியம் என்பதை ஏன் யாரும்வலியுறுத்த மாட்டார்கள்?
இது அவசியம் என்கின்றஎண்ணம் ஏன் தலை தூக்கவில்லை?


ஆட்டோ கிராப் திரைப்படத்தில் ஒரு காட்சி.அப்பாவிற்கு
தெரியாமல் மீசையை டிரிம் செய்யும் மகனுக்கு
கிடைக்கும் ”பூசை”ரொம்ப பேர் அனுபவமாகத்தானே இருந்திருக்கும்!!


எனகெல்லாம் எங்கப்பா சொல்லவில்லை” என்றுசொல்வது சுத்த எஸ்கேப்பிசம். நீங்கள் கடந்துவந்த பாதையை பாருங்கள். அந்த மனநிலையில்ஒரு அரவணைப்பிற்கு எத்தனை ஏங்கியிருப்பீர்கள்?அதை உங்களின் பிள்ளைக்கு ஏன் தரக்கூடாது?இந்த சமுதாயத்தில் ஒரு மாறுதல் வரக் காரண்மாகநீங்கள் ஏன் இருக்கக்கூடாது???



பெண்மை பூப்பதை கொண்டாடுகிறோம். ஆண்மகனுக்குஅந்த கொண்டாட்டமெல்லாம் இல்லை. ஆனால்ஆண்மகனுக்கு அநீதி இழைக்காமல் அந்தக் குழந்தையையும்அன்புடனும், அனுசரனையுடனும் வளர்க்கலாமே!பெற்றவரே கண்டு கொள்ளாத போது அந்தக் குழந்தைசெய்வது தான் என்ன?



வலையுலக நண்பர்களே! உங்களிடம் நான் வைக்கும்அன்பு
வேண்டுகோள் இதுதான். உங்கள் மகனிடம்நண்பனாக
பழகாமல் நட்புணர்வோடு பழகுங்கள்.இரண்டும் கெட்டான்
பருவமாகிய adolasense பருவத்தில்உங்கள் மகனின்
பக்கத்துணையாய் இருங்கள்.


உங்களின் மகன் மட்டுமல்லாமல், உறவில்வேறு யாரும்
இருந்தாலும் உறுதுணையாக இருங்கள்.இது நீங்கள்
அவனுக்கு செய்யும் உதவி அல்ல.சமுதாயத்திற்கு செய்யும் உதவி.



(என்னுடைய 150ஆவது பதிவுக்கு வந்திருந்த அனைவருக்கும்
என் நன்றிகள். தங்கள் அனைவரின் ஊக்குவித்தலால் தான்
இன்று 150 அடிக்க முடிந்தது. மீண்டும் அன்பு கலந்த நன்றி)