Tuesday, July 01, 2008
ஆண் (பிள்ளைகள்) பாவம்.
இது ஆண் பாவம் படத்தின் விமர்சனம் அல்ல.ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்று பெருமை பேசுவதைத் தவர இந்தசமூகம் ஆண்பிள்ளைகளுக்கு என்ன செய்தது?
ஒரு பெண்குழந்தை பருவ வயதை எட்டும் போது ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்வார்கள். சித்தி, அக்கா, அத்தை என்று ஒரு பட்டாளமே சேர்ந்து பெண்ணுக்கு புத்திமதி சொல்வார்கள்.
அவளுடைய உடம்பில் மாற்றம், பூப்பெய்துதல் ஆகியவற்றைசொல்லிக்கொடுப்பார்கள். அதனால் பெண்ணிற்கு தான்வளர்ந்து பெரிய மனுஷியாக ஆகிறோம் என்பது புரிகிறது.பெரியவர்களிடம் சந்தேகம் கேட்கும் ஆரோக்கிய சூழல் இருக்கிறது.
ஆனால் ஆண் பிள்ளை??????அவன் வயதுக்கு வருவது பெரிதாக யாரும் எடுத்துக்கொள்வதேஇல்லை. சொந்த அண்ண்ணே கூட இதைப் பற்றி பேசுவாராஎன்பது சந்தேகம்.
பெண்ணிற்கு தேவையான தகவல்கள் தரப்படுகிறது.
ஆனால்பருவ வயதில் ஆண்பிள்ளையை யாரும்
கண்டுகொள்வதேஇல்லை. ஆண்பிள்ளைக்கும் தன்
உடம்பில் ஏற்படும் மாற்றத்தை பற்றி பெற்றவர் எடுத்துக் கூற வேண்டும்.
அது வரை அம்மாவை கட்டிக்கொண்டு வளைய வரும்மகன்,
சட்டென்று ஒதுங்கி விடுவான். அவனுக்கு எடுத்துக்கூற
முடியாத தாய் என்ன செய்ய முடியும்?பெண்ணாக
இருந்தால் தன் அனுபவத்தை வைத்துஅவளுக்கு வேண்டிய
உதவி மற்றும் தகவல்களைதாய் தரமுடியும்.ஆண்பிள்ளைக்கு இந்த இடத்தில் தகப்பன் தானேஉதவ முடியும்?
ஆனால் எத்தனை வீட்டில் தகப்பன் நண்பனாக இருக்கிறார். வேலைப்பளு அது இது என்று ஒதுங்கிவிடுகிறார். நண்பர்களிடம் கிடைக்கும் தவறான தகவல்கள்தான் ஆண்மகனிடம் இருக்கும்.உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கண்டு இது சரியா தவறா? என்றகுழப்பமான மனநிலை ஏற்படுக்கிறது. இது தனக்கு மட்டும் தான்ஏற்படுகிறதோ என்று குழம்புகிறான். இது மனதளவில் குழந்தையைபாதிக்கிறது.
விவரம் அறிய நண்பர்களை நாடுகிறான் அல்லது வலைதளத்தைகுடைகிறான். தெரியவேண்டிய விடயங்கள் சரியாக போதிக்கப்படாமலேயே போகிறது.இந்த மாற்றங்களை சரியாக புரிந்து கொள்ள முடியாதசூழலால் சில குழந்தைகள் மனநல மருத்துவரைநாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பதுஅறியப்படாத உண்மை.
இப்படி பட்ட சூழ்நிலையில் தான் தன் எதிர்காலத்தையேநிர்ணயிக்கக்கூடிய மேல்நிலை தேர்வை எழுதுகிறான்.
ஒரு பெண்குழந்தைக்கு கிடைக்கும் பாதுகாப்பு,அன்பு,
அரவணைப்பு ஆண்பிள்ளைக்கும் அந்தவயதில் மிக்க
அவசியம் என்பதை ஏன் யாரும்வலியுறுத்த மாட்டார்கள்?
இது அவசியம் என்கின்றஎண்ணம் ஏன் தலை தூக்கவில்லை?
ஆட்டோ கிராப் திரைப்படத்தில் ஒரு காட்சி.அப்பாவிற்கு
தெரியாமல் மீசையை டிரிம் செய்யும் மகனுக்கு
கிடைக்கும் ”பூசை”ரொம்ப பேர் அனுபவமாகத்தானே இருந்திருக்கும்!!
எனகெல்லாம் எங்கப்பா சொல்லவில்லை” என்றுசொல்வது சுத்த எஸ்கேப்பிசம். நீங்கள் கடந்துவந்த பாதையை பாருங்கள். அந்த மனநிலையில்ஒரு அரவணைப்பிற்கு எத்தனை ஏங்கியிருப்பீர்கள்?அதை உங்களின் பிள்ளைக்கு ஏன் தரக்கூடாது?இந்த சமுதாயத்தில் ஒரு மாறுதல் வரக் காரண்மாகநீங்கள் ஏன் இருக்கக்கூடாது???
பெண்மை பூப்பதை கொண்டாடுகிறோம். ஆண்மகனுக்குஅந்த கொண்டாட்டமெல்லாம் இல்லை. ஆனால்ஆண்மகனுக்கு அநீதி இழைக்காமல் அந்தக் குழந்தையையும்அன்புடனும், அனுசரனையுடனும் வளர்க்கலாமே!பெற்றவரே கண்டு கொள்ளாத போது அந்தக் குழந்தைசெய்வது தான் என்ன?
வலையுலக நண்பர்களே! உங்களிடம் நான் வைக்கும்அன்பு
வேண்டுகோள் இதுதான். உங்கள் மகனிடம்நண்பனாக
பழகாமல் நட்புணர்வோடு பழகுங்கள்.இரண்டும் கெட்டான்
பருவமாகிய adolasense பருவத்தில்உங்கள் மகனின்
பக்கத்துணையாய் இருங்கள்.
உங்களின் மகன் மட்டுமல்லாமல், உறவில்வேறு யாரும்
இருந்தாலும் உறுதுணையாக இருங்கள்.இது நீங்கள்
அவனுக்கு செய்யும் உதவி அல்ல.சமுதாயத்திற்கு செய்யும் உதவி.
(என்னுடைய 150ஆவது பதிவுக்கு வந்திருந்த அனைவருக்கும்
என் நன்றிகள். தங்கள் அனைவரின் ஊக்குவித்தலால் தான்
இன்று 150 அடிக்க முடிந்தது. மீண்டும் அன்பு கலந்த நன்றி)
Subscribe to:
Post Comments (Atom)
66 comments:
me the firstu
me the secondu
me the thirdu...
/
.ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்று பெருமை பேசுவதைத் தவர இந்தசமூகம் ஆண்பிள்ளைகளுக்கு என்ன செய்தது?
/
அதானே என்ன செய்தது இந்த சமுதாயம் ஆண் பிள்ளைகளுக்கு!!
/
ஒரு பெண்குழந்தை பருவ வயதை எட்டும் போது ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்வார்கள். சித்தி, அக்கா, அத்தை என்று ஒரு பட்டாளமே சேர்ந்து பெண்ணுக்கு புத்திமதி சொல்வார்கள்.
/
ஆனா உருப்படியா எதாவது செய்வார்களா என்றால் அது ஒரு பெரிய ?
/
ஆனால் ஆண் பிள்ளை??????அவன் வயதுக்கு வருவது பெரிதாக யாரும் எடுத்துக்கொள்வதேஇல்லை. சொந்த அண்ண்ணே கூட இதைப் பற்றி பேசுவாராஎன்பது சந்தேகம்.
/
அவரே எதை தின்னா பித்தம் தெளியும் என அலைந்துகொண்டிருப்பார்
:))
/
ஆனால் எத்தனை வீட்டில் தகப்பன் நண்பனாக இருக்கிறார்.
/
ஆர்மி ஆப்பீசராக இல்லாமல் இருந்தால் பத்தாதா!?!?
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
/
நண்பர்களிடம் கிடைக்கும் தவறான தகவல்கள்தான் ஆண்மகனிடம் இருக்கும்.உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கண்டு இது சரியா தவறா? என்றகுழப்பமான மனநிலை ஏற்படுக்கிறது.
/
தப்புன்னு நினைக்கிறேன்
நண்பர்கள் கூடினால் பெண்களை "பற்றிய" தகவல்களே பேசிக்கொள்ளப்படுகிறது!!
பர்ச்டு, செகண்ட், தேர்டு எல்லாமே நீங்கதானா??!!! நி.நல்லவன் வந்து அழப்போறாரு.
:)))))))))))))
/
அதை உங்களின் பிள்ளைக்கு ஏன் தரக்கூடாது?இந்த சமுதாயத்தில் ஒரு மாறுதல் வரக் காரண்மாகநீங்கள் ஏன் இருக்கக்கூடாது???
/
அதானே புதுகை அக்கா நாங்க மாட்டோம்னா சொன்னோம் சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைங்க மொதல்ல
:)))))))))))))))
150 வது பதிவு கூடிய விரைவில் 1500 ஆக வாழ்த்துக்கள்
அப்பா- ஆர்மீ ஆபீசர் என்று நீங்கள் சொல்கிறீர்கள் சிவா,
குடும்பம் ஒரு கதம்பத்தில் பிரதாப் போத்தன் - அம்ஜத்கான்னு சொல்வார்.
வாழ்த்துக்கு நன்றி சிவா.
நண்பர்களிடம் பெண்களைப் பற்றித்தான் பேசுவார்கள் என்பது தெரியுமே!!
தனியா பின்னூட்டத்துல வேற வாக்குமூலம் கொடுக்கணுமா!
:))))))))))))))))))
ஹலோ அலையாதீங்க,
இது பிள்ளையைப் பெற்ற மகராசன்களுக்கு.
பெறப்போகும் மகராசன்கள் கொஞ்சம் பொறுமையா இருக்கோணூம்.
:))))))
//கடந்துவந்த பாதையை பாருங்கள். அந்த மனநிலையில்ஒரு அரவணைப்பிற்கு எத்தனை ஏங்கியிருப்பீர்கள்?அதை உங்களின் பிள்ளைக்கு ஏன் தரக்கூடாது///
நல்லா இருக்கு!
யோசித்து பார்த்து தனக்குதானே கேட்டுக்கொண்டு விடைபெற்றுக்கொள்ள வேண்டிய வினாக்கள்!
150வது பதிவுக்கு வாழ்த்துக்களுடன்...!
வாங்க ஆயில்யன்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்,
வாழ்த்திற்கும் நன்றி.
அப்படிப் போடுங்க அறுவாள மங்களூர் சிவா! கூட்டாளிகள் ஆண்களுக்கு சொல்லிக்கொடுக்காததையெல்லாம் அத்தை,மாமிகள் என்னத்த பெண்களுக்கு சொல்லித்தரப்போகிறார்கள்?
உங்களுடைய ஒண்ணர சதத்துக்கு வாழ்த்துக்கள்!
ஆமா பின்னுட்டத்துக்குப் பிறகு பின் செல்லப் போகும்ப்போது திடீர்ன்னு ஒரு படம் உங்க பதிவின் இறுதியில்?அது யாருக்குங்க அவ்வளவு பெரிய சாயா வெண்கலப் பாத்திரம்?
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
//உங்களின் மகன் மட்டுமல்லாமல், உறவில்வேறு யாரும்
இருந்தாலும் உறுதுணையாக இருங்கள்.இது நீங்கள்
அவனுக்கு செய்யும் உதவி அல்ல.சமுதாயத்திற்கு செய்யும் உதவி.
//
நல்லதொரு கருத்தோடு நிறைவுசெய்திருக்கீங்க. தரமான பதிவு.
150 க்கு வாழ்த்துக்கள்.
அருமையான பதிவுங்க.இன்னும் பொதுவில் நாம அலச முடியாத ப்ரச்சனைகள் இருக்கு அடலசண்ட் பசங்களுக்கு.
அதையெல்லாமே பசங்க பட்டுத்தான் தெரிந்து கொள்ளவேண்டி இருக்கு.நீங்க சொன்ன மாதிரி பசங்க பாவம்தான்.
இந்த கோணத்தில் வேறு யாராவது பதிவு எழுதியிருக்கிறார்களான்னு தெரியவில்லை.
//
பெண்ணிற்கு தேவையான தகவல்கள் தரப்படுகிறது.
ஆனால்பருவ வயதில் ஆண்பிள்ளையை யாரும்
கண்டுகொள்வதேஇல்லை.
//
ஏதாவது ”அந்த” மாதிரி தப்பு நடந்துவிட்டால் பெண்ணுக்குதான் அவஸ்தையான பின்விளைவுகள் அதிகம், அதனால் அவர்களுக்கு தேவையான தகவல்கள் ஆண்களை விட அதிகமாக தெரிவதில் தப்பில்லை.
வாங்க ராஜ நடராஜன்,
நான் சொல்லவந்தது ”மற்ற” விடயங்களைப் பத்தி அல்ல.
இது அடலசன்ஸ் வயதில் ஆண்மகனுக்கு கொடுக்கப்படவேண்டிய சரியான கைடன்ஸ் கொடுக்கபடுவதில்லை என்பது என் ஆதங்கம்.
வாழ்த்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜ நடராஜன்.
அது இலங்கையில் மலைப்ரதேசமான
நுவரேலியா சென்ற போது அங்கே
st.Clairs டீ பேக்டரிக்கு முன்பாக வைத்திருந்தார்கள்.
மிகவும் பிடித்திருக்க புகைப்படம் எடுத்துவிட்டேன்.
இப்போது அங்கே இந்த பாய்லர் இல்லை என்பது சோகமான விடயம்.
வாங்க நி.நல்லவன்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
வாங்க நிர்ஷான்,
வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.
வாங்க நந்து,
நீங்க சொல்லியிருப்பது போல பட்டுத்தான் தெரிஞ்சிக்கராங்க.
ஆனால் வீட்டில பெரியவங்க ஏன்
அவங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டக்கூடாது.
வருகைக்கு நன்றி நந்து.
உங்க ந்வாப்பழப்பதிவ நினைச்சுக்கிட்டே நவாப்பழம் சாப்பிட்டுக்கிட்டே வாழ்த்து போட்டுக்கறேன்..
250 கி 20ரூ கிடைச்சதுப்பா.. இன்னைக்கு :)
வாங்க சிவமணியன்,
முதல் வருகைக்கு நன்றி.
இங்கே கருத்து அடலசன்ஸ் நேரத்தில்
சொல்லிக்கொடுக்கப்படவேண்டிய
அத்தியாவசியமான விடயங்களைப் பற்றி மட்டும் தான்.
அது பெண்குழந்தைக்கு மட்டுமல்ல
ஆண்குழந்தைக்கும் போதிக்கப்படவேண்டும்.
வாங்க கயல்விழி,
அதிர்ஷ்டம்தான். 250 கிராம் 20 ரூபாய்க்கு நவாப்பழம கிடைத்ததே!!!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
வாங்க கயல்விழி,
அதிர்ஷ்டம்தான். 250 கிராம் 20 ரூபாய்க்கு நவாப்பழம கிடைத்ததே!!!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
நல்ல பதிவு... 150 க்கு வாழ்த்துக்கள்...
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
150வது பதிவிற்கு வாழ்த்துகள்,
ஆண்குழந்தைகளுக்கும் போதிக்கப்பட வேண்டும், இருப்பினும் நண்பர்கள்,ஊடகம் வாயிலாக ஓரளவிற்கு போதுமான விசயஙகள் அறிந்து கொள்ள வாய்ப்பு அதிகம். ஆனால் இந்த வாய்ப்பு குறைவாக பெற்ற, உடல்ரீதியாக ஆண்களை விட நடைமுறை சிக்கல் அதிகமான உள்ளதால் பெண்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் கருத்து.
///அப்படிப் போடுங்க அறுவாள மங்களூர் சிவா! கூட்டாளிகள் ஆண்களுக்கு சொல்லிக்கொடுக்காததையெல்லாம் அத்தை,மாமிகள் என்னத்த பெண்களுக்கு சொல்லித்தரப்போகிறார்கள்?///
புதுக்கோட்டை…. "புயள்" 'ல்'
iam 55th
ஆண்பிள்ளைகள் மீது இவ்வளவு உருக்கம் ஏன்? ஸ்ரீராம் அண்ணாச்சியின் மணிபர்ஸ் பத்திரம். 150 பதிவுக்கு ட்ரீட் வைக்கப் போறாங்க
வாங்க சரவணகுமரன்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
கொழும்பில் ஆரம்பிச்சு ஆந்திரா வரை தொடரும் 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
வாங்க நம்ம ஊர்க்காரரே,
வாழ்த்திற்கு நன்றி.
அதேதான் சிவமணியன்,
அதை வீட்டில் இருப்பவர்களே பக்குவாமாக ஏன் சொல்லிக்கொடுக்ககூடாது?
அதைத் தவிரவும் அரவணைப்பு மிக முக்கியாமாச்சே.
பெண்ணிற்கு அம்மா உதவுவது போல், மகனிற்கு அப்பா உதவ வேண்டும்.
ஆஹா வாங்க பிரபா,
வாழ்த்திற்கு மிக்க நன்றி.
ஆண்பிள்ளைகள் மேல் தீடீர் உருக்கம் இல்லை.
நான் ஒரு ஆசிரியை. சைக்காலஜி படிக்கும்போது அதில் பல விடயங்கள்.
பிள்ளையின் மனதை அறிதல் மிக அவசியம்.
நானும் ஒரு 12 வயது மகனுக்கு தாயாயிற்றே.
என் கணவர் தன் மகனை வழிநடத்துவது போல் என் தந்தையையோ அல்லது மற்ற ஆண்களையோ கண்டது இல்லை.
அந்த ஆதங்கம் தான் இப்படி ஒரு பதிவு.
150 க்கு வாழ்த்துக்கள் :-)
முக்கியமான, அவசியமான பதிவு....
//
பெண்ணிற்கு அம்மா உதவுவது போல், மகனிற்கு அப்பா உதவ வேண்டும்.
//
பொதுவாக நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்,மகள்-தாய், மகள்-தந்தை உறவு போல் அல்லாமல் மகன் - தந்தை உறவிற்கிடையே பெரிய இடைவெளி விழுந்து விடுகிறது.
இருப்பினும் தாங்கள் சொல்வது போல கடமையாக எடுத்துக் கொண்டு மனம்விட்டு உரையாட வேண்டும்.
கருத்துக்கு நன்றி.
150க்கு வாழ்த்துக்கள்...!
அதைவிட...
இந்தப்பதிவு சூப்பர்..!
இப்படி ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு...அவ்வளவு இதமாக நாசூக்காக...தரம் குறையாமல் கத்திமேல் நடக்கும்படி மிகச்சிறப்பாக கையாண்டு எழுதியுள்ளீர்கள்..
இதுக்குத்தான் அதிக வாழ்த்துக்கள்..
ஒரு ஆணாக--- நன்றிகள்!
வாங்க தேவதை,
வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.
ஆமாம் சிவமணியன்,
இந்தப் பதிவு அப்படி தந்தையர்கள்
மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்கினால் அதைவிட வேறேன்ன வேண்டும்.
வாங்க சுரேகா,
ரொம்ப நாளா ஆளைக் காணோமே.
ஆணி அதிகமோ.
திரை விமர்சனம் போல பதிவு விமர்சனம். :))))))))))
உங்கள் விமர்ச்னத்திற்கு மிக்க நன்றி.
(ஆணாக நன்றி)
தங்கள் மகன் பெரிதானதும் உற்ற நண்பராக இருக்க வேண்டுகிறேன் நண்பரே.
150வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;))
அட்டகாசமான பதிவு
அமர்களமான பதிவு
அக்கா பதிவு
இது எங்களை போல ஆண்களின் புலம்பல் பதிவு ;)
அக்கா மிக்க நன்றி இந்த பதிவுக்கு ;))
விளையாட்டாய் சொன்னாலும் ,யோசிக்க வேண்டிய மேட்டர் தான்:)
வாங்க கோபிநாத்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
பெண் பூப்படைவதை பற்றி எழுத
ஆலோசனை கூற பெண்கள் பத்திரிகை இருக்கிறது.
ஆனால் ஆண்களுக்கு என தமிழில் ப்ரத்யேகமான பத்திரிகை இல்லை.
நடிகர் டாக்டர் ராஜசேகர் முன்பு குமுதத்தில் கொளரவ ஆசிரியராக
குமுதம் தயாரித்திருந்தார்.
அதில் அவர் நடிகராக பரிமளிக்காமல், டாக்டராக ஆண்களுக்குத் தேவையான
பல விடயங்களைச் சொல்லியிருப்பார்.
வலைப்பூக்களில் இத்தனை ஆண்கள் ராஜ்ஜியம் செய்கிறீர்களே!
ஏன் ஒரு தனி வலைப்பூ அமைத்து
பல விடயங்களை அழகாகச் சொல்லக்கூடாது.
செய்வீர்களா?
ரசிகன் ஊருக்கு போயிட்டு வந்தாச்சா?!!!
விளையாட்டா சொல்லவில்லை.
யோசிக்க வைக்கும் ஒரு முயற்சி தான் இந்தப் பதிவு ரசிகன்.
நல்ல சிந்தனை - 150 வது பதிவிற்கு நல்வாழ்த்துகள்
ஆண் பிள்ளைகள் - ம்ம் - சொல்வது சரிதான். ஆனாலும் தகப்பன் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவனாகவே கற்றுக் கொள்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அப்படித்தான் கற்றுக் கொள்கிறார்கள். இருப்பினும் விவாதிக்கப்பட வேண்டிய பொருள்
வாங்க சீனா சார்,
வாழ்த்திற்கு நன்றி.
அவனா தெரிஞ்சுக்க ஆயிடம் வழின்னு எனக்கு மட்டுமல்ல உலகத்துக்கே தெரியும் சீனா சார்.
ஆனா அதை பக்குவமா பெற்றவரே ஏன் சொல்றது இல்லை என்பது தான் என் கேள்வி?
ஆண்பிள்ளைக்கும் வயதுக்கு வருதல் உண்டு. அந்த நேர கஷ்டத்தை, அவஸ்தையை, உடல், மன உபாதையை ஏன் தகப்பன் நண்பனாக இருந்து பகிர்ந்துக்கொள்ளக்கூடாது?
அக்கா முதலில் உங்க 150 வது பதிவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்ல விஷயத்த நாகரீகமா பதிவு பண்ணி இருக்கீங்க. நிறைய ஆண்களோட மனக்குறை இது. உங்க அட்வைஸ் படி நானும் என் பையனுக்கு சொல்லனும்னு ஆசை..ஆனா எனக்கு ரெண்டும் பொண்ணு. :0)
//அது இலங்கையில் மலைப்ரதேசமான
நுவரேலியா சென்ற போது அங்கே
st.Clairs டீ பேக்டரிக்கு முன்பாக வைத்திருந்தார்கள்.//
நான் என்னுடைய ஹனிமூனுக்கு அங்கு தான் போனேன்.சூப்பரான இடம் அது. நானும் நிறைய ஃகால்ப் கிளப் பார்த்து இருக்கேன்.நுவரேலியா போல அழகான கிரவுண்டை வேறு எங்கும் பார்த்ததில்லை.
வாழ்த்துக்கு நன்றி அப்துல்லா,
நுவரேலியா மிக அழகான இடம்.
நினைத்தால் காரில் கிளம்பிவிடுவோம். இப்போது
நினைத்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான்.
தங்கள் அனைவரின் ஊக்குவித்தலால் தான்
இன்று 150 அடிக்க முடிந்தது. மீண்டும் அன்பு கலந்த நன்றி//
அக்கா உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் எழுதத் துவங்கிதான் நான் பதிவுலகிற்கு வந்தேன்.அந்த வகையில் என்னை உருவாக்கியது நீங்க தான். உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றி.
உங்க 150வது பதிவுக்கு என் வாழ்த்துகள்! இனியும் பல பதிவுகளை இடுங்கள்.. தொடரட்டும்! :))
அருமையான பதிவு.. இந்த பதிவு நிறைய பேருக்கு போய் சேர வேண்டும் என்பது எனது விருப்பம்..
ஆங்.. 150-க்கு வாழ்த்துக்கள்..
500 பதிவு போட்டு 600ஆவது பதிவு சீக்கிரத்துல போடப்போறேன் இப்ப 150ஆவது பதிவுக்கு வாழ்த்தா!!
இருக்கட்டும். ஆரம்ப கால குரு என்பதால் மன்னிச்சிட்டேன்.
வாழ்த்துக்கு நன்றி
:-P
இந்த பதிவை இப்போதானே படிச்சேன்.. லேட்டா போட்டாலும் க்ரேக்டா போட்டுட்டோம்ல. ;-) (எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு!!! ஸ்ஸ்ஸ்.. இப்பவே கண்ண கட்டுதே! )
இதற்காக ஏங்கும் ஒரு இளைஞன் நான்.....
Mail id pls...
Post a Comment