Friday, February 06, 2009

வாழ்க்கைக்கு உதவும் கல்வி : 4

காசு கொட்டி சாமன் வாங்குவாங்க. ஆனா அதோட
நிலமை இது தான்!!:(

கண்ணாடி மாதிரி பளிச்சுன்னு வெச்சுக்க
ஆசைதான் அப்படின்னு சிலர் வேக்யுவம்
க்ளீனர் வாங்கி அது மேலயும் தூசி படிஞ்சிருக்கும்.




தூசி தட்டுறதுன்னு நம்ம ஊர்ல சொல்லி
தூசியை தட்டி இன்னும் கொஞ்சம் தும்மல்
வரவெச்சிடுவாங்க.



உண்மையில் தூசிகளை தட்டக்கூடாது.
துணி அல்லது டஸ்டர் கொண்டு துடைத்து
எடுக்கவேண்டும். அப்பொழுதுதான் காற்றில்
பரவாது.


முறையா தூசித் தட்டறது சின்ன வயசுல
கத்துக்கொடுக்காட்டி நிலமை இப்படி ஆயிடும்!! :))


ஹோட்டல்களில் டேபிள் துடைப்பார்களே அது மாதிரி
மெல்ல அழுந்த துடைத்து தூசி எடுக்கவேண்டும்.
இதுவும் மாண்டிசோரி கல்வியில் இருக்கிறது.



பெருக்குவதனால் ஏற்படும் பயன்கள்(அந்த
பயிற்சியினால் ஏற்படும்)தான் டஸ்டிங்கிற்கும்.

இளமையிலேயே இதைப் பயின்றால்
அந்தப் பி்ள்ளை தன் வீட்டை சுத்தமாக
வைத்துக்கொள்ளும்.

20 comments:

நட்புடன் ஜமால் said...

அடுத்த பகுதி வந்தாச்சு ...

நட்புடன் ஜமால் said...

தூசி தட்டுறதுன்னு நம்ம ஊர்ல சொல்லி
தூசியை தட்டி இன்னும் கொஞ்சம் தும்மல் வரவெச்சிடுவாங்க.\\

ஹா ஹா ஹா


சரியே - நமக்கு ஆவாத மேட்டரு

pudugaithendral said...

வாங்க வாங்க.

நட்புடன் ஜமால் said...

\\பெருக்குவதனால் ஏற்படும் பயன்கள்(அந்த
பயிற்சியினால் ஏற்படும்)தான் டஸ்டிங்கிற்கும்.

இளமையிலேயே இதைப் பயின்றால்
அந்தப் பி்ள்ளை தன் வீட்டை சுத்தமாக
வைத்துக்கொள்ளும்.\\

ஆண் பிள்ளைகளுக்கும் கற்று தரணும்.

இது பெண்கள் வேலை என்று அவர்கள் நினைக்காமல் செய்ய வேண்டும்.

pudugaithendral said...

ஆண் பிள்ளைகளுக்கும் கற்று தரணும்.

இது பெண்கள் வேலை என்று அவர்கள் நினைக்காமல் செய்ய வேண்டும்.//

ரொம்பச் சரியா சொன்னீங்க ஜமால்.

சென்றவாரம் விருந்தினர் வந்தாங்கன்னு நானும் தங்கையும் கிச்சனில் பிசியாக இருக்க அயித்தான் வேலைக்காரம்மா வர லேட்டானதைப் பார்த்து துடைப்பத்தை எடுத்து பெருக்கிகிட்டு வந்தார்.

இதைப் பாத்த தங்கச்சி,”ஐயோ! பாவா!நீங்க ஏன் இதெல்லாம் செய்யறீங்கன்னு” கேட்டாள். முதல்
தடவை ஒரு ஆண்மகண் செய்வது பார்க்கிறாய். இதெல்லாம் நாமும் செய்யலாம் என்றார் அயித்தான்.

நானானி said...

// இதெல்லாம் நாமும் செய்யலாம் என்றார் அயித்தான்.//
நல்ல அயித்தான்!!

எங்க அயித்தானும் இதே போல் எல்ப் எல்லாம் செய்வார்கள். குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே பழக்கிவிட்டால் சுலபமாக கற்றுக் கொள்வார்கள். என் பேரன், ரெண்டு வயசுதான் ஆவுது. தொடப்பம், மாப், டஸ்டர் இவற்றையெல்லாம் அழகாக உபயோகிப்பான். கீழே தண்ணீர் கொட்டிவிட்டால்(கொட்டியது அவந்தான்) உடனே துணி எடுத்து வந்து துடைப்பான்.

மங்களூர் சிவா said...

நல்ல வேளை இன்னும் டோப்பா வைக்கலை :((

அதுக்கு எதுக்கு சஞ்சய் படத்தை போட்டிருக்கீங்க!?!?

:))))))

pudugaithendral said...

நல்ல அயித்தான்!!//

வாங்க நானானி,

pudugaithendral said...

எங்க அயித்தானும் இதே போல் எல்ப் எல்லாம் செய்வார்கள். குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே பழக்கிவிட்டால் சுலபமாக கற்றுக் கொள்வார்கள்.//

ஆமாம். அது மாண்டிசோரி முறைக் கல்வியில் கட்டாயப்பாடம். மேலை நாடுகளில் மாண்டிசோரி +ப்ரீஸ்கூல் இரண்டு முறைகளையும் இணைத்து சொல்கிறார்கள்.

என் பேரன், ரெண்டு வயசுதான் ஆவுது. தொடப்பம், மாப், டஸ்டர் இவற்றையெல்லாம் அழகாக உபயோகிப்பான்.//
என் சார்பா பாராட்டும் அன்பு
முத்தமும் கொடுத்திடுங்க.

கீழே தண்ணீர் கொட்டிவிட்டால்(கொட்டியது அவந்தான்) உடனே துணி எடுத்து வந்து துடைப்பான்.
குறும்பு + அழகு

pudugaithendral said...

அதுக்கு எதுக்கு சஞ்சய் படத்தை போட்டிருக்கீங்க!?!?


ஏன் இந்த மர்டர் வெறி சிவா??

butterfly Surya said...

நல்லாயிருக்கு..

pudugaithendral said...

thanks butterfly

Thamira said...

ஏதோ டிரெயினிங் கிளாஸுக்கு வந்தது போல இருக்குது.. (அந்த கார்ட்டூன்.. கொள்ளைச்சிரிப்பை அள்ளிக்கொண்டு போனது.)

இராகவன் நைஜிரியா said...

வீட்டில் வேலை செய்வதில் பாகுபாடு பார்க்ககூடாது..

இப்போதுள்ள சூழ்நிலையில், நிறைய பேர் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்கின்றார்கள்.

அது ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பாகுபாடு பார்க்காமல் அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பின் நாளில், பெற்றோரை பிர்ந்து குழந்தைகள் வெளியிடங்களுக்கு செல்லும் போது, இது மிக உதவியாக இருக்கும்.

வீட்டு வேலைகள் மட்டுமில்லாமல், சமையலும் குழந்தைகளுக்கு சற்று பெரியவர்கள் ஆனபின் கற்றுக் கொடுத்தால் நலம். ரைஸ் குக்கர் வைப்பது எப்படி, ஒரு குழம்பு, ஒரு ரசம் வைப்பது எப்படி என்று தனது தேவைகளை சமாளிக்கக் கற்றுக் கொடுப்பது நலம்.(அனுபவம் தான்.. அம்மா கற்றுக் கொடுத்த சமையல் தான் தனியாக வேலையில் இருந்த போது உதவியது)

பின்னூட்டத்தை பெரிதாக போட்டதற்கு மன்னிக்கவும்

வெண்பூ said...

இப்பதான் நாலு பகுதியுமே படிச்சேன் தென்றல்.. நீங்க இதுல சொல்ற எல்லாமே ரொம்ப சின்ன சின்ன விசயங்கள். ஆனா நாம அதை நம்ம குழந்தைகளுக்கு சொல்லித் தருவதில்லைன்றதுதான் மேட்டரே. ஒவ்வொரு விசயத்தையும் படங்களோட விளக்கி, அதை சொல்லித் தருவதால பயன்களையும் அழகா சொல்லியிருக்கீங்க. நன்றி.

Muruganandan M.K. said...

"உண்மையில் தூசிகளை தட்டக்கூடாது.
துணி அல்லது டஸ்டர் கொண்டு துடைத்து எடுக்கவேண்டும்.' உண்மை.

அதுவும் ஈரத் துணியால் துடைத்தெடுத்தால் தூசி பரவாது. அலர்ஜி, தும்மல், வீஸிங் தொல்லை உள்ளர்கள் இவ்வாறு செய்வது மேலும் நல்லது.

pudugaithendral said...

ஏதோ டிரெயினிங் கிளாஸுக்கு வந்தது போல இருக்குது..//
:))))
(அந்த கார்ட்டூன்.. கொள்ளைச்சிரிப்பை அள்ளிக்கொண்டு போனது.)//

:))))))))))))))

pudugaithendral said...

பின்னூட்டத்தை பெரிதாக போட்டதற்கு மன்னிக்கவும்//

ஆஹா இது என்ன? தங்களின் கருத்து பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் இராகவன்.

வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்

pudugaithendral said...

வாங்க வெண்பூ,

சின்னச்சின்ன விஷயங்கள் வாழ்க்கைக்கு பயனளிக்கும். மாண்டிசோரி முறைக்கல்வியில் இதுவும் ஒரு பாடம்.

லேட்டா வந்தாலும் எல்லா பதிவையும் படிச்சதக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க டொக்டர்,

ஒரு மருத்துவராக தங்களின் இந்தக் கருத்து பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி