Monday, February 09, 2009
ஆஷிஷ் துணுக்ஸ்
சின்ன வயது முதலே ஆஷிஷிற்கு
கார், பைக் பைத்தியம். தூங்கும்போதும் கூட
அவனருகில் கார் பொம்மை இருக்கும்.
பைக் சத்தம் கேட்டால் ஓடிவந்து என்ன
பைக் என்று பார்ப்பான். சைக்கிளைத் தன்
பைக்காக நினைத்து அதில் வித்தைகள் காட்டி
“கத்தி எடுத்தால் ரத்தம் பார்க்காமல் விடாது”
என்பது போல் ரத்தக்காயங்களுடன் தான் சைக்கிள்
வீட்டுக்குள் கொண்டுவரப்படும். :(
ஒரு முறை மாம்பலம் ஏரியாவில் பிசியான
நேரத்தில் பைக்கில் முன்னாடி அம்ர்ந்திருந்த
ஐயா ஏதோ வேகத்தில் ஏக்ஸிலரெட்டரை
திருப்ப அயித்தான் வண்டி ஓட்டமுடியாமல்
நிலை தடுமாறினார். அப்போது Ashish வயது 3 தான்.
**********************************************
நண்பர் ஒருவர் ஹோண்டா சிவிக் கார்
வாங்கி இருக்கிறார். மகனையும், அயித்தானையும்
ஒருட்ரைவ் அழைத்துச் சென்றார். ஆஷிஷ்
சிவிக் வாங்கியதுக்கு பதில் ”ஹைபீரீட்”
வாங்கியிருக்கலாம்! இன்னும் சூப்பரா
இருக்கும்” என்று சொல்ல,” அப்படி ஒரு
வண்டி இருப்பதே தெரியாதுடா தம்பி!!”
என்று சொல்ல ஐயா ஹைபீரிடீன் அருமை
பெருமைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறான்.
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்??!!”
என ஆச்சரியப்பட்டிருக்கிறார். (ம்ம் எனக்கு
ஹைபிரீட் தக்காளிதான் தெரியும் :)) )
*********************************************
இலங்கையில் இருந்த பொழுது கம்பெனி
RENT A CAR மூலம் வண்டி கொடுத்திருந்தது.
எங்கள் ஹோண்டா சிட்டி சர்வீஸுக்கு
போக வேற ஒரு மாடல் கொடுத்திருந்தார்கள்.
அருமையாக இருந்த அந்த வண்டியில்
எங்களை ஒரு ட்ரைவ் அழைத்துச் செல்லுமுன்
பெட்ரோல் பங்க் சென்றார் அயித்தான்.
பெட்ரோல் டேங்கை திறக்க பட்டன் எங்கே
இருக்கிறது என்று அவர் தேடிக்கொண்டிருக்க
“நாநா, இந்த வண்டிக்கு நடுவில் ஹேண்ட்
ப்ரேக் பக்கத்தில் இருக்கு பட்டன்!!!!” என்ற
பொழுது அயித்தான் வியந்து தான் போனார்.
****************************************
எனக்கு மிகவும் பிடித்த நிழல்கள் படம்
ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தின்
பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தது.
நான் டீவி போட்ட பொழ்து பாதி படம்
முடிந்து விட்டிருந்தது. பள்ளிவிட்டு
வந்த ஆஷிஷ் பக்கத்தில் அமர்ந்து
என்னுடன் படம் பார்த்தான்.
சந்திரசேகர் இசையமப்பாளராக வாய்ப்பு
கிடைத்ததும் வரும்” மடை திறந்து ஆடும்
நதி அலை நான்” ஆரம்பித்ததும்.
”ஹை! இதுதான் அந்தப் பாட்டா?
(எந்தப் பாட்டு? சத்தியமா புரியலை!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
பழசும் சூப்பராத்தான் இருக்கு!!”
என்றான்.
” நீ எந்தப் பாட்டத் தம்பி சொல்ற?
இந்தப் பாட்டு யோகி பி பாடி சூப்பரா
இருக்கும்மா!” என்றான். தனது
ஐ பாடில் இருந்துபாட்டையும் என்
காதில் ஒலிக்க வைத்தான்.
கோல்டாக இருக்கும் ஓல்ட் பாடல்:
Get Your Own Hindi Songs Player at Music Plugin
மடை திறந்து யோகி பி வெர்ஷன்
ஆஹா!!!
ஒண்ணு நல்லா புரிஞ்சிருச்சு. என் குட்டி
ஆஷிஷ் வளர்கிறான். கொஞ்சம் பெரிய
பையனும் ஆகிவிட்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
அட நல்லாயிருக்கே தலைப்பே
“கத்தி எடுத்தால் ரத்தம் பார்க்காமல் விடாது”
என்பது போல் ரத்தக்காயங்களுடன் தான் சைக்கிள்
வீட்டுக்குள் கொண்டுவரப்படும்\\
ஹா ஹா ஹா
இதெல்லாம் சகஜம்க்கா ...
\\எனக்கு
ஹைபிரீட் தக்காளிதான் தெரியும்\\
ஹா ஹா
என்ன அக்கா
வருத்தப்படாதிய.
\\ஒண்ணு நல்லா புரிஞ்சிருச்சு. என் குட்டி
ஆஷிஷ் வளர்கிறான். கொஞ்சம் பெரிய
பையனும் ஆகிவிட்டான்.\\
அதே அதே ...
வாங்க ஜமால்,
இதெல்லாம் சகஜம்க்கா //
ஆமாம். சைக்கிளை அப்படியே போட்டுட்டு நான் ஆஷிஷை அப்போலோக்கு(அதுதான் அங்கே பக்கத்தில்) தூக்கிகிட்டு அடிக்கடி ஓடினதும், எமர்ஜன்சி மருத்துவர்கள் உனக்கு ப்ரிவிலேஷ் கார்ட் கொடுத்திடலாம் தம்பின்னு சொன்னதும் கூட சகஜம் தான்
:))))
வருத்தப்படாதிய.//
வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது, அந்தக் காலத்தை விட இக்காலக் குழ்ந்தைகளுக்கு எக்ச்போசர் அதிகம். கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
சந்தோஷமாத்தான் இருக்கு.
உலகம் வேறு.. குழந்தைகள் உலகம் வேறு..
அருமை.
வாழ்த்துக்கள்..
உலகம் வேறு.. குழந்தைகள் உலகம் வேறு.. //
ஆமாங்க. பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே சிறகு விரிவது ஆச்சரியமான விடயம்.
வருகைக்கு நன்றி
அது என்னமோ இயல்பாவே பையன்களுக்கு கார் மேலும் பைக் மேலும் ஆர்வம் வந்துடுதுங்க. என் அண்ணன் பையன் குட்டியா இருக்கும் போதே கார் பேரெல்லாம் பளிச் பளிச்சுன்னு சொல்வான். ஆனா அண்ணன் பொண்ணு என் பொண்ணுல்லாம் அதிக பட்சம் அது அத்தை கார், மாமா கார் என்ற அளவோட நின்னுடறாங்க.
பையனுக்கு சீக்கிரம் ஒரு கார் வாங்கி கொடுங்க :)
ஆஷிஷுக்கு வாழ்த்துக்கள்.. விரைவில் எதிர்பதிவு போடுகிறேன்:)
பையனுக்கு சீக்கிரம் ஒரு கார் வாங்கி கொடுங்க :)//
அது சரி. சைக்கிள் வாங்கிக்கொடுத்ததுக்கு அடிக்கடி ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போனேன். கார் அவரு சம்பாதிச்சு வாங்கிப்பாராம்.
அதுல அம்பாசிடர ஒரு காராக் கூட கன்சிடர் செய்ய மாட்டான். அவரு ரேஞ்ச்சே தனி. :))
ஆஷிஷுக்கு வாழ்த்துக்கள்.. விரைவில் எதிர்பதிவு போடுகிறேன்:)//
நன்றி போடுங்க. காத்துகிட்டு இருக்கேன்.
நல்லாருந்துது கலெக்க்ஷன்!!
வாழ்த்துகள் ஆஷிஷு-க்கு!
அது என்னமோ தெரியல தென்றல், ஆம்பளை பசங்களுக்கு கார், பைக், ஃப்ளைட் இப்படி ஆட்டோமொபைல்தான் பிடிக்குது. என் மகனுக்கும் கார், பைக், ரயில், பஸ் என்றால் பைத்தியம்..
வாழ்த்துகள் ஆஷிஷு-க்கு!//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி முல்லை.
ஆமாம் வெண்பூ,
இப்பக்கூட எக்ஸாமில் நல்ல மார்க் எடுத்தால் ரிமோட் கார் வாங்கிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறான்.
துணுக்ஸ்..மினுக்ஸ்..
//ஒண்ணு நல்லா புரிஞ்சிருச்சு. என் குட்டி
ஆஷிஷ் வளர்கிறான். கொஞ்சம் பெரிய
பையனும் ஆகிவிட்டான்.
//
இந்த முறை ஹைதை வரும்போது ஆஷிஷ் இருக்கும் நேரமாகப் பார்த்து வரணும் :))
துணுக்ஸ்..மினுக்ஸ்..//
ரசித்தேன்
இந்த முறை ஹைதை வரும்போது ஆஷிஷ் இருக்கும் நேரமாகப் பார்த்து வரணும் :))//
ஆமாம் போன தடவை உங்களை பார்க்கலியேன்னு வருத்தப் பட்டாப்ல.
//இப்பக்கூட எக்ஸாமில் நல்ல மார்க் எடுத்தால் ரிமோட் கார் வாங்கிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறான்.//
பையனுக்கு சீக்கிரம் வாங்கி கொடுங்க
very nice.//
வாங்க சிவா
பையனுக்கு சீக்கிரம் வாங்கி கொடுங்க//
ஆமாம் வாங்கிக் கொடுக்க திட்டம் தீட்டியாச்சு
ஆஷிஷ் வளர்வது பத்தி படிச்ச உடனே உஷாக்காவோட பதிவு நினைவுக்கு வந்துட்டது :).
கலக்குறீங்க. ரொம்பவே நல்லா இருக்கு.
ஆமா.. ஆஷிஷூக்கு எப்படி அந்த ஹைப்ரிட் கார் பத்தித் தெரிஞ்சதுன்னு கேட்டு ஒரு பதிவு போடுங்களேன்...
இந்தக் கால பசங்கள் கார் பற்றிய எல்லா விவரங்களையும் நுனிவிரலில்தான் வைத்திருக்கிறார்கள். என் மகனும் ஆஷிஷ் போலவே. வாரம் ஒருமுறை வரும் டைம்ஸ் ஆட்டோ படிக்கத் தவறுவதேயில்லை. எல்லா லேட்டஸ்ட் மாடல்களும் தெரியும்.
நாங்கள் வைத்திருப்பதும் ஹோண்டா சிவிக்தான். இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கிய போது ஹைபிரிட் வந்திருக்கவில்லை.
உஷாக்காவோட பதிவு நினைவுக்கு வந்துட்டது //
link pls
ஆஷிஷூக்கு எப்படி அந்த ஹைப்ரிட் கார் பத்தித் தெரிஞ்சதுன்னு கேட்டு ஒரு பதிவு போடுங்களேன்...//
அப்படியே போட்டுடுவோம்.
வருகைக்கு நன்றி
வாங்க ராமலக்ஷ்மி,
புத்தகத்தோடு என் டீ டீவியில் கார் & பைக் ஷோ வேறு பார்ப்பான்.
எங்களிடம் இருப்பது சிட்டி். அம்பாசிடர் வாங்கறோம்டா தம்பின்னு(!!!) கெஞ்சினேன். (சும்மா வம்பிழுக்கத்தான்) அந்தக் கார் வாங்கினால் நான் எங்கும் வரவில்லைன்னு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்.
(அம்பாசிடர் காருக்க்ம் ஆஷிஷ்ற்கும் இருக்கும் லிங்க் தனிப் பதிவா வருது)
/* என் குட்டி
ஆஷிஷ் வளர்கிறான். கொஞ்சம் பெரிய
பையனும் ஆகிவிட்டான்.*/
பிள்ளைகளின் ஒவ்வொரு வளர்ச்சியும் நமக்கு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் உள்ளது இல்லையா? வாழ்த்துக்கள்
பிள்ளைகளின் ஒவ்வொரு வளர்ச்சியும் நமக்கு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் உள்ளது இல்லையா? //
சில சமயங்களில் ப்ரமிப்பாவும் இருக்கு.
Post a Comment