Wednesday, August 19, 2009

போனோமே!!! கதிர்காமம்..

12.08.09 அண்ணபூர்ணா, பாலகிருஷ்ணா திருமணநாள்.


வாழ்த்து சொல்லி அவர்களுக்கு வாங்கியிருந்த பரிசைக்
கொடுத்தோம்.

ஹோட்டலில் காலை உணவு முடித்து செக் அவுட் செய்து
கொண்டு வந்ததும் ரெடியாக காத்திருந்தது எங்கள் வேன்.

முதலில் சென்றது வெள்ளவத்தை கதிரேசன் கோவில்.
இது அண்ணபூர்ணா தம்பதிகளின் விருப்பமான கோவில்.
தங்கள் திருமண நாளை முன்னிட்டு அங்கே தரிசனம்
செய்ய வேண்டுமென சொல்ல போனோம்.

அதற்கு பக்கத்திலேயே இருக்கும் மாணிக்க விநாயகர்
கோவில் என் விருப்பக் கோவில். அங்கே தான்
முருகனுக்கு தனி சந்நிதி அழகாக இருப்பார் சாமி.
(சஹானா தொடரில் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி
அமர்ந்து தியானம் செய்வது போல் வருமே அந்தக்
கோவில்)

அங்கே இருக்கும் குருக்கள் முருகனுக்கு மட்டுமே
பூஜை செய்பவர். கதிரேசன் கோவில் முடித்து
மாணிக்க விநாயகர் கோவிலுக்கு வந்தோம்.

விநாயகசதுர்த்தி வர விருப்பதால் ப்ரத்யேக
பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.

பிராகரம் சுற்றி வரும்பொழுது முருகன் கோவில்
பூஜாரி அடையாளம் கண்டு கொண்டு,
அயித்தானின் கைகளைப் பற்றிக்கொண்டு
நலம் விசாரித்து முருகனுக்கு நான் வாங்கியிருந்த
மாலை சாற்றி அர்ச்சனை செய்து கொடுத்தார்.

கதிர்காமம் செல்லப்போகிறோம் என்றதும் சந்தோஷப்பட்டார்.

கொழும்பு, கண்டியைத் தவிர வேறெங்கும்
நம் இந்திய ஹோட்டல்கள் கிடையாது. கதிர்காமம்
செல்லும் வழியில் ஹோட்டல்கள் பெரிதாக கிடையாது.
அங்கே சோறு சம்பா அரிசியில் சமைக்கப்படும்.
கொஞ்சம் வாசனையாக இருக்கும்.

புதிதாக அதை சாப்பிட்டு வயிற்றுக்கு பிரச்சனை
ஆகிவிடுமோ என்று பயந்து சண்முகாஸில்
எலுமிச்சை சோறு, தயிர் சோறு, அப்பளம்
ரெடி செய்து கொடுக்கம்படி சொல்லியிருந்தோம்.
அதை வாங்கிக்கொண்டு ஆரம்பமானது பயணம்.


கதிர்காமத்திற்கு இரண்டு வழிகளில் செல்வது
எனக்கு மிகவும் பிடிக்கும். கொழும்பிலிருந்து
கிட்டத்தட்ட 300 கிமீ தொலைவில் இருக்கிறது
கதிர்காமம்.

அவிசாவெள்ளை, ரத்னபுரி, எம்பிலிபிட்டிய,
உடவளவே, கதிர்காமம் இது ஒரு வழி.
இதில் சாப்பிட நிறுத்தி
சென்றாலும் 5 1/2 மணி நேரத்தில் செல்லலாம்.

வலது பக்கம் கடற்கரை, இடதுபக்கம் எழில் கொஞ்சும்
பசுமை என வரும் BENTOTA, HIKKADUVA, GALLE, MATARA,
TANGALLE, TISSAMAHARAMA, KATHIRGAMAM இது அடுத்த
வழி. இந்த வழியில் செல்ல 6 1/2 - 7 மணி நேரம்
பிடிக்கும்.




எப்படி போகலாம்ங்க என்று கேட்டார் வேன் டிரைவர்.
போகும்போது
அவிசாவெள்ளை, ரத்னபுரி, எம்பிலிபிட்டிய,
உடவளவே, கதிர்காமம்.

வரும்போது கதிர்காமம்
TISSAMAHARAMA,TANGALLE, MATARA,GALLE,HIKKADUVA,BENTOTA,
என்றதும் இன்னமும் ரூட் மறக்காம இருக்கீங்களே! என்று
புகழ்ந்துவிட்டு பசுமை கொஞ்சும் பாதையில் வண்டியை
செலுத்தினார்.

இந்த வேனில் உள்ளே டீவி இருக்கும். நாங்கள்
கொண்டு சென்றிருந்த டீவிடி போட்டு விட்டதும்
அனைவரும் ஆனந்தமாய் படத்தை பார்த்துக்
கொண்டு வர நான் மட்டும் பசுமையை
என் கண்களால் படம் பிடித்துக்கொண்டே
வந்தேன்.

(2 நாளில் குறைஞ்சது 4 படமாவது பாத்திருப்பாங்க)

ரத்னபுரி பேரே சொல்கிறது இலங்கையின் பிரசித்தி
பெற்ற தரம் வாய்ந்த ரத்னங்கள் கிடைக்குமிடம்.

உடவளவு -
இங்கே யானை சவாரி நன்றாக இருக்கும்.


காசைக்கொட்டி யானையை பார்க்க தேசிய பூங்காவிற்கு
வரும் விருந்தினர்களுக்கு டாடா காட்டிவிட்டு
யானைகள் உடவளவு-கதிர்காமம் சாலை ஓரத்தில்
வந்து நிற்கும். யானைகள் தாண்டி வந்துவிடாத படி
மின் கம்பி வேலி போட்டிருப்பார்கள். 1 அல்லது 3
யானைகள் பார்க்க கிடைக்கும்.

உடவளவு நீர்த்தேக்கம் வரண்டு போய் கிடக்கிறது.
காடும் காய்ந்து போயிருப்பதால் உணவுக்காக
மின் கம்பிகளுக்கு அருகில் வந்து நிற்கின்றன
யானைகள்.



இந்த முறை நாங்கள் கண்டது 13 யானைகள்!!!!



குழந்தைகள் நால்வருக்கும் ஒரே குஷி.

விதம் விதமாய்,
போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.




அங்கேயே ஒரு இடத்தில் உட்கார வசதியாக
கட்டையால் செய்து வைத்திருந்தார்கள்.
எங்கள் சாப்பாட்டுக்கடையை அங்கே திறந்து
ஆனந்தமாக சாப்பிட்டோம்.

அங்கிருந்து ஒரு மணிநேரத்தில் திஸ்ஸமஹாரமாவை
அடைந்தோம். அங்கே சிலோன் ஹோட்டல் கார்ப்பரேஷனுக்கு
சொந்தமான ஹோட்டலில் தங்கினோம்.

அங்கிருந்து 20 கிமீ தொலைவில் கதிர்காமம் இருக்கிறது.

30 நிமிடம் ஓய்வெடுத்துக்கொண்டு 5.45 மணி வாக்கில்
கதிர்காமத்திற்கு கிளம்பினோம். 30 நிமிடத்தில்
கதிர்காமத்தை அடைந்தோம்.

12 comments:

நிஜமா நல்லவன் said...

:)

நட்புடன் ஜமால் said...

நல்ல விபரமா இரண்டாம் பதிவும் போட்டாச்சி

பெயர்களே புதுமையாக இருக்கின்றன :)

நிஜமா நல்லவன் said...

ஊரு பேரு எல்லாம் வாயில் நுழையவே இல்லை...நல்லா என்ஜாய் பண்ணி இருக்கீங்க:)

pudugaithendral said...

பெயர்களே புதுமையாக இருக்கின்றன //

சிங்கையில் சில பெயர்களை நீங்கள் சொன்னால் எங்கள் நிலையும் அதுதான் ஜமால்

pudugaithendral said...

.நல்லா என்ஜாய் பண்ணி இருக்கீங்க//

யெஸ்ஸோ யெஸ்ஸு

தாரணி பிரியா said...

Enjoyo enjoy pola :)

அபி அப்பா said...

ரிஷான் கல்யாணத்துக்கு அங்கே போக உத்தேசம்!!!!! ஆண்டவன் மனது வைக்கட்டும்! அவனே கண்டி, கதிர்காமம் அழைத்தூ போவதா சொல்லியிருக்கான்!!!

pudugaithendral said...

Enjoyo enjoy pola//

ஆமாம்.

pudugaithendral said...

கண்டிப்பாய் கந்தன் கருணை உங்களுக்கு கிடைக்கும் அபிஅப்பா

ஷங்கரலிங்கம் said...

இலங்கையில் தமிழர்களுக்கு பயம் இல்லையா?

ஷங்கரலிங்கம் said...

கேட்ட கேள்வி, இந்தியாவில் இருந்து செல்பவர்கள் பற்றி அக்கா.

pudugaithendral said...

கேட்ட கேள்வி, இந்தியாவில் இருந்து செல்பவர்கள் பற்றி //

எந்த பிரச்சனையும் இல்லை. சென்னையிலிருந்து செல்லும் விமானத்தி்ல் இருக்கைகள் ஃபுல்லாக
இருக்கின்றன.

பலரும் வியாபாரிகள் தான். அவர்களின் ஆட்டம், கத்தல் பேச்சுக்கள் கோவத்தை வரவழைக்குது. :(((