Thursday, August 20, 2009

கண்டேன்!!! கண்டேன்!!! கதிர்காமனை

இந்தியப்பெருங்கடலில் கண்ணீர்த் துளி போல் இருக்கும்
இந்தத் தேசத்தின் மேல் காதல் வரம் காரணம்



அங்கே சென்ற பிறகு அதிகமான இணக்கத்துக்கு காரணம்

2001ல் 1மாதப் பயணமாக கொழும்பு சென்றிருந்தேன்.
கதிர்காமம் செல்ல வேண்டும் என்று அதற்கான
ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த பொழுது
கோவிலில் உருவ வழிபாடு இல்லை. திரைச்சீலையில்
இறைவனின் படம் வரைந்து அதற்குத்தான்
வழிபாடு என்று கேள்விபட்டதும்,”இதற்காக
6 மணிநேரம் பயணம் செய்து போகவேண்டுமா??!!”
என்று ஒரு எண்ணம்.

அப்போது அயித்தான் தங்கியிருந்த வீட்டின்
உரிமையாளர் பலவருடங்களாக அங்கே
இருப்பவர். மல்லு தேசத்துக்காரர்.
“அப்படி நினைக்காதே! திரைச்சீலைக்கு இருக்கும்
மகத்துவம் விசேஷமானது. மன்னர்கள்
தனது குறையை இறைவனுக்குச் சொல்ல
கனவில் அதற்கு விடை கூறுவான் இறைவன்.

இன்றளவும் வருடத்திற்கு ஒரு முறையாவது
கதிர்காமம் சென்று தரிசித்து வந்தவர்கள் தன்
வாழ்வில் முன்னேறுவது கண்கூடான ஒன்று”
என்று சொல்லவும் சரி என்று புறப்பட்டு போய்
தரிசித்து மகிழ்ந்து வந்தேன்.

அதன்பிறகு 2002 டிசம்பரில் மாற்றலாகி
கொழும்பு சென்ற பிறகு அடுத்த வருடத்திலிருந்து
தொடர்ச்சியாக கதிர்காமப் பயணம் உண்டு.

இந்தியாவுக்கு திரும்பும் நேரம் கதிர்காமம்
ஏரியாவில் பாதுகாப்பு பிரச்சனை இருந்ததால்
தரிசிக்காமலேயே வர நேர்ந்தது. அது
மனதில் மிகப் பெரிய குறையாக இருந்தது.

இந்த முறை இலங்கைக்கு போய்வரலாமா என்று என்
தோழி அண்ணபூர்ணா கேட்ட பொழுது
கதிர்காமம் செல்வதானால் வருகிறேன் என்று
பிடிவாதம் பிடித்தேன்.

முந்தைய பதிவு


கதிர்காமத்தில் இந்து முறைப்படி வழிபாடு இல்லை.
சிங்கள வழிபாடுதான்.

பழத்தட்டுக்கள் வாங்கி செல்வார்கள். அதை சாமிக்கு
படைத்து எடுத்து வருவார்கள். பழத்தட்டு வாங்கினால்
பெரிய க்யூவில் செல்ல வேண்டும். பழத்தட்டு வாங்கதவர்கள்
கோவிலின் நுழைவுவாயிலின் வலது பக்கமாக சென்று
தரிசித்து விட்டு வரலாம்.


காலை 4.30 மணிக்கு, மாலை 6.30க்கு பூஜை நடைபெறும்.
எப்போதும் 6.30 மணி பூஜைக்கு இருப்பது போல் பார்த்து
கோவிலுக்குச் செல்வோம்.

பூஜை நேரத்தில் சந்நிதிக்குள் நின்று உள்ளே நடப்பதை
பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த
முறை நாங்கள் வர கொஞ்சம் தாமதமாக அங்கிருந்தவரிடம்
”நான் உள்ளே செல்ல வேண்டும்”என்றதும் போங்கள்
என்று சொல்லிவிட சந்தோஷமாக உள்ளே நுழைந்து
நின்று கொண்டோம்.

யானை வந்து மலர்ச்செண்டு வைத்து கதிர்காமனுக்கும்,
பக்கத்தில் இருக்கும் விநாயகருக்கும் வழிபாடு செய்ததும்
பூஜை துவங்கும்.


இதோ கதிர்காமனின் சந்நிதி.


வேடவர்க்குல பெண்கள் இருவர் வந்து விளக்கேற்றி
சிறிய நடனம் செய்து வழிபாடு செய்வர் அதன் பிறகு
கொட்டு முழங்க, கோவில் சந்நிதியில் கட்டப்பட்டிருக்கும்
மணிகள் இசைக்கப்பட பூஜை நடக்கும்.

அந்த நேரத்தில் மணியோசை, கொட்டு சத்தம் தவிர
வேறெதும் கேட்காத அமைதி.

சந்நிதியில் நுழைந்து இறைவனை பார்த்ததும்
கண்களிலிருந்து பெருகும் நீரைக் கட்டுப்படுத்த
முடியவில்லை.
தாயாய் தந்தையாய் இருக்கும் தயாபரன்
குமரனிடம் ” உன்னைப் பார்க்காமல் தேசத்தை
விட்டு போகவைத்தாயே!என்று கோபப்பட்டேன்.

மணியோசை முழங்க முழங்க இன்னும் கண்ணீர்.
பக்கத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள், என்ன
நினைப்பார்கள் என்ற நினைப்பு வந்தாலும்
அடக்கமுடியாத அழுகை.

பார்த்ததே போதும் என்ற நிலையில்” என்ன
வேண்ட!!!” நான் வேண்டித்தான் அவன்
கொடுக்கப்போகிறானா. எனக்கு என்ன?எப்போது?
தேவை என்பதை உணர்ந்தவனாச்சே!!

எனக்காக ப்ரத்யேக கோரிக்கைகள் இல்லை.
அனைவரின் நலனுக்காக பிரார்த்தித்தேன்.

1 1/2 வருடங்கள் கழித்து தன்னைப் பார்க்க
என்னை வரவழைத்தற்கு நன்றி சொன்னேன்.

கோவிலில் பூஜை முடிந்ததும் விழுந்து
வணங்க பொதுவாக அனுமதிக்க மாட்டார்கள்.
பெரிய அதிகாரிகள், தலைவர்களுக்குத்தான்
அந்த பாக்கியம். இந்த முறை நானும்
என் தோழியும் கோவில் நிர்வாகிகளிடம்
வணங்க அனுமதி கேட்க எங்கள் இருவருக்கும்
மட்டும் அவன் சந்ந்தியில் தலை சாய்த்து
வணங்க அனுமதி கிடைத்தது மிகப் பெரிய
பாக்கியம்.


இதோ கோவில் பிரசதாம் உங்களுக்காக.




வெளியே வந்து நுழை வாயிலின் முன் நின்று
நானும் அண்ணபூர்ணாவும் சஷ்டிகவசம்
சொன்னோம்.





அருமையான அனுபவம், தரிசனம் கிடைத்த
மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் தெரிய
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.


மாணிக்க கங்கை இறைவன் கந்தன் தனது
அம்பால் வரவழைத்த நீர். அதன் மேல்
கட்டப்பட்டிருக்கும் சிறு பாலம் தாண்டிதான்
கோவிலுக்கு வரும் பாதை. பாலத்தைத் தாண்டி
வரும்பொழுது காவடி ஆடி வரும் பக்தர்களைக்
கண்டோம்.




கதிர்காமம் வெப்சைட்

விக்கிப்பீடியாவுக்கு

கடைவீதிகள் தாண்டி வாகனம் நிறுத்தியிருந்த
இடத்திற்கு வந்தோம். மெயின் ரோடில் இருந்த
சைவக்கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் டிரைவர்
அண்ணா. வண்டியை நிறுத்திவிட்டு அவரையும்
சாப்பிட வரச் சொன்னோம்.

பிள்ளைகள் மிகவும் விரும்பிய இடியாப்பம், தேங்காய்ப்பால்
சொதி, ஸ்ரீலங்கன் தால் எல்லாம் சாப்பிட்டோம்.

ஹோட்டலுக்கு சென்று அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு
உணவு முடித்து பயணத்தை துவங்க வேண்டுமென
முடிவு செய்து கொண்டோம்.

அடுத்த பயணம்??? அடுத்த் பதிவில்...

13 comments:

ஆயில்யன் said...

கதிர்காம வேலனை கண்ட பயண குறிப்புக்களும், இலையில் இருக்கும் பிரசாதமும் இனிக்கிறது! :)

நட்புடன் ஜமால் said...

எனக்காக ப்ரத்யேக கோரிக்கைகள் இல்லை.
அனைவரின் நலனுக்காக பிரார்த்தித்தேன்.]]

அக்கா! நீங்க ரொம்ப நல்லவங்க ...

pudugaithendral said...

நன்றி பாஸ்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஜமால்

எம்.எம்.அப்துல்லா said...

//அடுத்த பயணம்??? //

நுவரேலியா??

Muruganandan M.K. said...

பக்கத்தில் இருக்கும் நாங்களே அறியாத பல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.
போட்டோக்களுடன் அழுத்தமாக இருக்கிறது

மங்களூர் சிவா said...

சூப்பர்!
நல்லதரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

கோபிநாத் said...

\\அருமையான அனுபவம், தரிசனம் கிடைத்த
மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் தெரிய
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
\\

அந்த மகிழ்ச்சி இப்போது எங்கள் முகத்திலும்க்கா ;)))

முருகா நீயே துணை!

கூடவே வந்துக்கிட்டு இருக்கேன்.

pudugaithendral said...

நுவரேலியா??//

நுவரேலியா கண்டி அதிகமுறை பார்த்தாச்சு. இந்த முறை அங்கே செல்லவில்லை அப்துல்லா:))

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சிவா

pudugaithendral said...

கூடவே வந்துக்கிட்டு இருக்கேன்.//

ஆஹா சந்தோஷம் கோபி

pudugaithendral said...

வாங்க டொக்டர்,

பக்கத்தில் எங்கே இருக்கீங்க டாக்டர்.
முன்னமே தெரிஞ்சிருந்தா விசிட் அடிச்சிருப்பேன்.

அடுத்த முறை சந்திக்கலாம். றெக்குவானை நிர்ஷான் கூட அங்கே இருக்கிறார்

Sadeesh said...

i like to visit once in life

Sri Lanka Tour Packages