Friday, August 19, 2011
கலம்காரி புடவைகள்
புடவைவகைகளைப்பத்தி பாத்துக்கிட்டு இருந்தோம். அதுல ஒரு ப்ரேக்
விழுந்து போச்சு. இனி தொடர்வோம். இன்றைக்கு நாம பார்க்க இருப்பது
கலம்காரி வகை. கலம் என்றால் பேனா. இது பேனா கொண்டு வரையப்படும்
டிசைன்கள். ரொம்ப கிராண்டா ஜரி எல்லாம் இருக்காது. ஆனா ஒரு நல்ல
லுக் கிடைக்கும்.
இந்த கலம்காரி டிசைனில் இரண்டு வகை இருக்கு. ஒண்ணு ஸ்ரீகாலஹஸ்தி ஸ்டைல்.
மத்தது மச்சிலிபட்டிணம் டிசைன். இரண்டு ஊருமே ஆந்திராவில்தான் இருக்கு.
காலஹஸ்தி ஸ்டைலில் அங்கே இருக்கும் கோவில் பத்தினதா இருக்கும்.
அந்த கோவிலுக்கு தேவையான சித்திரங்கள் வரைந்தார்கள். இந்த ஸ்டைலில்
கிருஷ்ணர், ப்ரம்மா, கணேஷா,லட்சுமி, ராமா,பார்வதி கடவுள்களை மட்டும்
வரைவாங்க.
மச்சிலிபட்டிணம் ஸ்டைலில் இரானியர்கள், மொகலாயர்கள் சாயல் இருக்கும்.
கலம்காரி டிசைனில் இயற்கை வர்ணங்கள் உபயோகிக்கிறாங்க.இந்த வகை
டிசைனை பெட்ஸ்ப்ரெட்கள்,உடுப்புக்கள்,திரைச்சீலைக்களில் பயன்படுத்துவாங்க.
ரொம்ப புராதனமான இந்த கலை கோல்கொண்டா சுல்தான்களால் பெரிதும் வளர்க்கப்பட்டது. இந்த வகைப்புடவையை எப்படி தயாரிக்கறாங்கன்னு
தெரிஞ்சிக்க இங்க போய் பார்க்கலாம்.
ப்ளைன் புடவை வாங்கி அதில் கலம்காரி டிசைன் மோத்திஃப்களை பார்டர்
போல, முந்தியில் என ஒட்ட வைத்து (கிட்டத்தட்ட அப்ளிக் ஒர்க் என்பார்களே
அது போல) செய்து கட்டுவது ஒரு ஸ்டைல். சுடிதார்களிலும் வைத்து
தைக்கலாம். கலம்காரி புடவைகள் கொஞ்சம் காஸ்ட்லி என்பதால் இந்த மாதிரி
செய்யும் பொழுது டிசைனர் புடவை போல இருக்கும். நம் பட்ஜட்டிலும்
வரும். 600 ரூபாய்க்கு ஒரு முழு செட் கிடைக்கும். நல்ல ரிச் லுக்
கொடுக்கும். இந்தக் காட்டன் புடவைகள் மிக அழகாக எடுப்பாக இருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
புடவையெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது... :))
தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...
இன்று எனது தளத்தில் தான்சேன் வந்து இருக்கிறார்....
இந்த தீபாவளிக்கு நிறையப்பேர் புடவை பத்தின உங்க இடுகைகளை ப்ரிண்ட் எடுத்து வெச்சிக்கிட்டு செலக்ஷன்ல இறங்கப்போறாங்க :-))
புடவை அருமை
புடவை பத்தி ரொம்ப நாளாச்சே கேட்கலாம்னு நினைச்சேன்.நீங்களே போட்டுட்டீங்க.
கலம்காரி நல்லாயிருக்குங்க.
m...nalla info.....
வாங்க சகோ,
நானும் இணைக்க ட்ரை செஞ்சேன் முடியலை விட்டுட்டேன். மிக்க நன்றி
தான்சேனை வந்து பார்த்தேன்.
தங்கள் வருகைக்கு நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
எப்பவும் ஒரே மாதிரியா வாங்குவோம். வித்தியாசமா புடவை கட்டி அசத்தலாம்ல. நம்ம பதிவுகள் பலதும் தங்கஸுக்கு உதவி ரங்க்ஸுக்கு ..... வகைதானே :))))))))
வருகைக்கு நன்றி
நன்றி ஜலீலா
ஆமாம் கோவை2தில்லி,
சில பல வேலைகளில் இதை விட்டுட்டேன். இனி தொடர்ந்து வரும்
வருகைக்கு நன்றி
Post a Comment