Monday, August 22, 2011

GADWAL SAREES

பார்க்க ரிச் லுக் வேணும். பட்ஜட்டுக்குள்ள புடவை வாங்கணும்.
பட்டு கூடாது. இப்படி விரும்புறவங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் கத்வால் புடவைகள் தான்.

ஆந்திராவின் மெஹபூப் ஜில்லாவில் இருக்கும் கத்வால் கிராமத்தில்
தயாரிக்கப்படும் இந்தப் புடவைகள் இன்றளவும் கைத்தறியில் தான்
நெசவு செய்யப்படுகிறது. மிஷின்களின் பயன்பாடு சுத்தமாக கிடையாது.
பொதுவாக காட்டனில் புடவையும் பார்டரும், முந்தியும் மட்டும்
பட்டு நூல் கொண்டு செய்கிறார்கள். பட்டு நூலை தவிர்க்க விரும்பினால்
காட்டன் ஜரி கொண்டு நெய்யப்படும் புடவைகளும் கிடைக்கும்.பட்டு/பருத்தி நூலில் மிக அழகாக சாயம் சேர்ப்பதில் ஆரம்பிக்கிறது
இந்த புடவையின் ஆரம்பம். புடவை கலர் சரியாக சீராக அமைய
பலதடவை வெந்நீரில் நூலைப் போட்டு சாயம் தோய்த்து எடுக்கிறார்கள்.
அதன்பிறகு அதை சின்ன குச்சியில் தனித்தனியாக கட்டி நெசவு
ஆரம்பிகிறார்கள்.

புடவையில் செய்யவேண்டிய டிசைனை முதலில் ஒரு தாளில்
வரைந்து வைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக அந்த டிசைனை
புடவையில் வரவைக்கிறார்கள். பார்டரில் மட்டும் ஜரி கொண்டு
டிசைன் செய்வதால் புடவை ஜொலிக்கிறது. அதிக பாரமில்லாமல்
தயாரிக்கப்படும் கத்வால் புடவை கட்டிக்கொள்ள மெத்தென்று
இருக்கும். சில புடவைகளை தீப்பெட்டிக்குள் சுருட்டி வைத்துவிடலாம்
என்று சொல்வார்கள். பல்லு என்று சொல்லப்படும் முந்தானையில்
மட்டும் அதிக வேலைப்பாடு இருக்கும்.சிகோ என்று சொல்லப்படும் பட்டு,பருத்தி கலந்த புடவையும்
கிடைக்கும். கல்யாணம், விஷேஷம் போன்றவற்றிற்கு
மிக கிராண்டாக இருக்கும் இந்தப் புடவை என்பது விசேஷம்.
காட்டனில் ரிச்சாக ஜரி போட்டு இருக்கும் புடவை 2000-2500
வரை வாங்கலாம். கத்வால் காட்டன் ஜரி புடவைகள் 450க்கே
கிடைக்கும். கத்வால் புடவையில் போடப்பட்டிருக்கும்
எம்ப்ராய்டரி தங்க ஜரி அல்லது செம்பு ஜரியால் போடப்பட்டதாகும்.


ஹைதராபாத்தில் கத்வால் புடவை நெசவாளர்கள் சொசைட்டி
இரண்டு அடுக்கு மாளிகையில் இந்தப் புடவைவகளை விற்பனை
செய்கிறார்கள். பெரிய்ய பெரிய்ய புடவை கடைகள் முதல்
ஹோல்சேல் ஏரியாக்களிலும் கிடைக்கும். நம் சென்னையிலும்
இந்த வகை புடவைகள் பெரிய்ய கடைகளில் கிடைக்கிறது.

Address:

Sri Gadwal Weavers Society
# 6-3-803/1/13
SSS Chambers, 1st Floor
Opp: Hanuman Temple
Ameerpet 'X' Road
Hyderabad
Phone: 91-040-55756469
21 comments:

Amutha Krishna said...

ஒன்று வாங்கணுமே..தகவலுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

Gadwal Sarees என்றதும் உத்திராகண்ட் மாநிலத்தின் [Pauri Garhwal, Tehri Garhwal] புடவைகள் என நினைத்தேன்... Gadwal ஆந்திரத்திலும் இருக்கிறது என்பது தெரிந்தது...

புடவைகள் பார்க்க அழகாய் இருக்கிறது...

வெங்கட் நாகராஜ் said...

தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்.. இப்போதெல்லாம் பதிவு போட்டவுடன் தமிழ்மணத்தில் இணைக்க முடிவதில்லை....

துளசி கோபால் said...

அட! இந்தப் புடவைத்தயாரிப்பை இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். தகவலுக்கு நன்றி.

உங்க ஊருக்கு வந்தப்ப இந்தப்புடவை ஒன்னு வாங்கினேன். நல்ல ரிச்சா பார்டரும் பல்லும் பட்டுப் புடவைபோலவே இருக்கு. இந்தப் புடவையை மடிச்சு விக்காமல் நீளமா பாம்பு போல் சுருட்டி வச்சு விற்கறாங்களே.... இதுக்கு ஏதாவது தனிக் காரணம் இருக்கா?

சாகம்பரி said...

Thank you very much for sharing. I am searching for non-silk type of sarees.

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா,

சென்னையில்னா சென்னை சில்க்ஸ், போத்தீஸ் போன்ற எல்லா கடைகளிலும் இருக்கு.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

கத்வால் இங்கே உள்ள ஒரு கிராமம்.

வருகைக்கு நன்றி

ஆமாம் ரொம்பவே கஷ்டமா இருக்கு. அதனாலதான் இணைக்காம விட்டுடறேன்

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,

அந்தமாதிரி மடக்கி வைப்பதுதான் சூப்பர் ஸ்டைல். அதாவது அம்புட்டு மெல்லிசான புடவை இதுன்னு சொல்றாங்களாம். கல்கத்தா காட்டணும் கிட்டத்தட்ட இந்த மாதிரி தான் மடிப்பாங்க.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சாகம்பரி,

என்னுடைய பதிவுகளில் புடவை வகைகள் அப்படிங்கற லேபிலில் பாருங்க. இனியும் சில புடவைகளின் அறிமுகங்கள் தொடரும்

ஸாதிகா said...

கத்வால்,கலம்காரி,பாந்தினி,தர்வார்,நாராயாண்பேட் ,வெங்கடகிரி இப்படி பற்பல புடவைகள் பற்றிய விளக்கமும் அறிமுகமும் அருமை.என்னைப்போல் காட்டன் பிரியர்களுக்கு உங்கள் பதிவு செம விருந்து.

Chitra said...

Thank you for the detailed information.

அமைதிச்சாரல் said...

புடவை அழகா இருக்குப்பா..

புதுகைத் தென்றல் said...

வாங்க ஸாதிகா,

அப்ப நீங்களும் சேம் ப்ளட்ன்னு சொல்லுங்க.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு ரொம்ப நன்றி சித்ரா

புதுகைத் தென்றல் said...

நன்றி அமைதிச்சாரல்,

நெட்டுல சுட்டதுதான் (என்னோட கலெக்‌ஷன அப்புறமா போட்டு வயிற்றெரிச்சலைக்கொட்டிக்கறேன்)

:))

ஸாதிகா said...

//நெட்டுல சுட்டதுதான் (என்னோட கலெக்‌ஷன அப்புறமா போட்டு வயிற்றெரிச்சலைக்கொட்டிக்கறேன்)
//சீக்கிரம் போடுங்க புதுகைத் தென்றல்.

ரசிகன் said...

அப்படியே ரெண்டு புடவை எடுத்து அனுப்புனிங்கன்னா,வீட்டுல கொடுத்து நல்ல பேரு வாங்கிப்பேன்ல்ல..:P

புதுகைத் தென்றல் said...

போடுறேன் ஸாதிகா,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆஹா அதுக்கென்ன ரசிகன்,

வாங்கி அனுப்பிடறேன். பில்லோட சேர்த்து :))

கோவை2தில்லி said...

புடவை வகைகளைப் பற்றி போட்டு ஆசையை தூண்டி விடறீங்களே :)))

கத்வால் புடவை ரொம்ப அழகா இருக்குங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

வருகைக்கு நன்றி