தயாரிக்கும் இடத்தை பொறுத்து ஆரணி, தர்மாவரம், காஞ்சிபுரம்,
என அழைக்கப்படுவது மட்டுமில்லாமல் பட்டுக்களிலும் வகைகள்
இருக்கிறது. அதற்கு முன் எங்கெங்கெல்லாம் பட்டு தயாரிக்கப்
படுகிறது என்று பார்த்துவிடலாம்.
ஆந்திராவில்: போச்சம்பள்ளி,வெங்கடகிரி, நாராயண்பேட்
தமிழகம்: காஞ்சிபுரம்,ஆரணி,சேலம்,கும்பகோணம், தஞ்சாவூர்
அசாம்: சுலுகுசி
குஜராத்: சூரத், கேம்பே
ஜம்மு காஷ்மிர்: ஸ்ரீநகர்
மஹாராஷ்ட்ரா: பைதான்
உத்தர் பிரதேசம்: வாரனாசி
மேற்குவங்கம்: பிஷன்புர்,முர்ஷிதாபாத்,பிர்பும்
கர்நாடகா: பெங்களூர், அனேகல்,இகல், முலகம்லு,மெல்கோடே
இந்த ஊர்களில் தயாரிக்கப்படும் பட்டு பிரசித்தி பெற்றவை
இனி பட்டில் இருக்கும் வகைகளை பார்க்கலாம்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் சைனா,தாய்லாந்து, ஜப்பானில் பட்டாடை
பிரசித்தம். பொதுவாக நாம் பளபளவென கண்ணைப்பறிக்கும்
அழகு கொண்ட பட்டுப்புடவைகளை கடைகளில் பார்த்திருப்போம்.
இவை பொதுவாக மல்பேரி புழுக்களைக்கொண்டு தயார்
செய்ததாக இருக்கும்.
டஸ்ஸர் சில்க்: இது டஸ்ஸர் புழுக்களால் தயாரிக்கப்படுகிறது.
சில இடங்களில் பட்டில் பருத்தியை கலந்து டஸ்ஸர் சில்க் புடவைகள்,
சுடிதார் மெட்டீரியல்கள் தயாரிக்கிறார்கள்.
muga silk:
அசாம் மாநிலத்தின் பெருமயைச் சொல்லும் இந்தப் பட்டிற்கு முகா
சில்க் என்று பெயர். மஞ்சள் கலரில் ரிச்சாக இருக்கும் இந்தப்பட்டு.
மிக அரிதான வகைப்பட்டான இது உலகிலேயே மிக விலை அதிகமானதாகவும்
சொல்கிறார்கள். அசாமின் பாரம்பரிய உடையான மேகல-சதார்
இந்தத் துணியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறதாம்.
coarse silk/ silk waste:
பட்டில் கிடைக்கும் வேஸ்ட்களையும் கொண்டு
புடவை தயாரிக்கிறார்கள்.
இதைத் தவிர எரி என்ற ஒரு வகைப்பட்டும் அசாம், மேற்கு வங்கம்
பிஹார் மற்றும் ஒரிசா மாநிலங்களில் தயாரிக்கப்படுகிறது.
பனாராசில் தயாரிக்கப்படும் தங்க ஜரி பட்டுப்புடவை ரொம்ப அழகு.
மற்ற வெரைட்டிக்களுடன் இந்தப் பதிவு இனிதே தொடரும்.
3 comments:
intha postai nan pakkave illai
ஹா ஹா ஹா
வருகைக்கு நன்றி எல் கே
அசாமின் சில்க் பற்றிய புதிய தகவலை இன்று தெரிந்து கொண்டேன்.
Post a Comment