புடவைவகைகளின் அறிமுகம் தொடர முடியாமல் இருந்தது.
இனி கொஞ்சம் தொடர்ந்து எழுதுவேன். பட்டுப்புடவை
இதற்கு மயங்காதவர்களே கிடையாது. பட்டுப்புடவை
தனது ஸ்டேடஸின் அடையாளமாக கருதுபவர்கள் பலர்.
இந்தப் பதிவில் வீடியோக்கள் மட்டும் கொடுக்கிறேன்.
எழுத்துக்களாக சொல்ல வேண்டிய விஷ்யங்களை ஒரு
போட்டோ சொல்லிவிடுவது போல பட்டுப்புடவை எப்படி
தயாராகிறது என்பதை இந்த வீடியோக்கள் சொல்லிவிடும்.
இது பட்டுப்புழுவின் வாழ்க்கை:
மல்பேரி இலைகளை தின்று ஆரோக்கியமாக வளருகின்றன.
இது ஹிந்தியில் இருக்கும்
பட்டுப்பூச்சியிலிருந்து அந்த பட்டை எப்படி பிரித்து எடுக்கிறார்
என்பதை இந்த வீடியோவிலும் பார்க்கலாம்.
1gm பட்டு நூலிழை தயாரிக்க குறைந்த பட்சம் 15 பட்டுப்புழுக்கள்
உயிர்த்தியாகம் செய்கின்றன.ஒரு பட்டுப்புடவை தயாரிக்க
10,000 புழுக்கள் தேவை. பட்டுப்புழுக்களை வெந்நீரில் ஏன் போடுகிறார்கள்?
பட்டுப்புழுக்களை வளர்ப்பவர்கள் பட்டுப்புழுவின் வளர்ச்சியை
ஒவ்வொரு ஸ்டேஜாக கவனித்து வருவார்கள். பட்டுப்புழுக்களை
வெந்நீரில் போடாவிட்டால் அது பட்டுப்பூச்சியாக மாறி பறந்துவிடும்.
இப்படித்தாயாரிக்கப்படும் இழைகளில் வண்ணம் சேர்த்து அழகான
பட்டுப்புடவைகளாக தயாரிக்கிறார்கள். காஞ்சிபுரம், தர்மாவரம்,
ஆரணி ஆகிய இடங்களில் பட்டு புடவைதயாரிப்பு பிரசித்தம்.
இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு,ஜம்மு காஷ்மிர்
மற்றும் மேற்கு வங்கத்தில் மல்பேரி பட்டுப்புடவைகள்
தயாராகின்றன. பட்டுப்புழு வளர்ப்பை sericulture என
ஆங்கிலத்தில் சொல்வார்கள்
பட்டிலும் சில வெரைட்டிக்கள் இருக்கின்றன அவற்றுடன்
அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
11 comments:
"பட்டு தயாரிக்கப்படுவது
இப்படித்தான் என்று
பட்டான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ம்ம்ம்ம்... எவ்வளவு பூச்சி... பாவம்!
நல்ல தகவல்கள் கலா...புடவைப் தயாரிப்புப் பின்னணியில் எத்தனை
பேரின் உழைப்பு...
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி
வாங்க சகோ,
ஆமாம் சகோ. என்னதான் அதற்காகவேத்தான் பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படுதுன்னு சிலர் சொன்னாலும், அப்படி வெந்நீரில் போட்டு சாகாடிக்காவிட்டால் இரண்டு நாளில் அது பட்டுப்பூச்சியா சிறகடிச்சு பறக்குமாம். :((
வருகைக்கு நன்றி சகோ
வாங்க பாசமலர்,
நிறைய்ய பேரின் உழைப்பு இருக்கு இதுல.
வருகைக்கு நன்றி
'பட்டு.. பட்டு'ன்னு ஆலாப் பறக்கறவங்களுக்கு பட்டுன்னு உறைக்கிற மாதிரி இருக்கும் இந்த இடுகை.
எத்தனை உயிர்கள் கொல்லப்படுது இல்லையா.. பாவம்தான்.
நல்ல பகிர்வுங்க. நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன்.
வாங்க அமைதிச்சாரல்,
ஜீவ ஹிம்சை செய்து தயாரிக்கப்படும் புடவையை தவிருங்கள்னு காஞ்சி மகாப்பெரியவர் சொல்லியிருக்கார். அதனாலத்தான் எங்க குடும்பங்களில் கடந்த 25 வருஷமா நோ பட்டு.
வருகைக்கு நன்றி
வருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி
MM..THodarunga.
Post a Comment