Tuesday, November 20, 2007

சமையற் குறிப்பு
திருமணம் நிச்சயம் ஆனதும் அம்மம்மாவிடம்தான் சமையல் கற்றுக்கொண்டேன். முதன் முதலில் அம்மா (நான் அப்படித்தான் அழைப்பேன்) தந்த சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.

1.அடுக்களையில் நுழையும் முன் உன் கோபதாபங்களை மூட்டை கட்டி வைத்து விடு.


2. மனது அமைதியாக இருந்தால் தான் சமையலில் மனம் லயிக்கும்.


3. ரசித்து சமை ! ருசியாக இருக்கும்.


4. தேநீர் கலந்தாலும் பால், சர்க்கரை, டீத்தூளுடன் 2 spoon அன்பையும் கலந்து பரிமாறு.


5. அன்பான, இனிமையான மனத்துடன் தயாரிக்கப்படும் எந்த உணவும் அமிர்தத்திற்கு சமானம். இல்லையேல் அது விஷமாகி விடும்.


இந்த சமையற்குறிப்பை நான் இன்று வரை கடை பிடிக்கிறேன்.என் அடுக்களையைய் அலங்கரிக்கும் அடுக்களை பிரார்த்தனை. இதோ.

MY KITCHEN PRAYER
MY KITCHEN IS A HEAVEN THAT'S MINE AND MINE ALONE
BUT ALL WILL GET A WELCOME HERE, THE WARMEST THEY HAVE KNOWN.
SO, GOD I ASK YOU KINDLY TO BLESS THIS HALLOWED SPOT
WHERE I PERFORM GREAT MIRACLES WITH OVEN, PAN AND POT.
PLEASE ALSO BLESS MY COOKING SO THAT EACH MEAL I MAKE
BRINGS DEEPEST SATISFACTION TO ALL WHO MIGHT PARTAKE.
AND NOW GOD LET ME OFFER MY WARMEST THANKS TO YOU
FOR GRANTING US, OUR DAILY BREAD AND OTHER BLESSINGS TOO...
யாரோ சொன்னது:
A RECIPIE IS ONLY A THEME, WHICH AN INTELLIGENT COOK CAN PLAY EACH TIME WITH VARIATION".
புத்திசாலித்தனம், சுவை, கற்பனனத்திறன் ஆகியவை சமையற்கலையில் முழுதும் பயன் படுத்தபடுகிறது.
11 comments:

ரசிகன் said...

ஆஹா..இப்பவே.. பசிக்குதே..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..
உண்மையாவே நீங்க செஞ்ச சமயலா?..
நல்வருகை பதிவுலகத்திற்க்கு..
(ஆமா நம்ம அனுராதாவை எப்பிடி தெரியும் உங்களுக்கு?..)

ரசிகன் said...

// தேநீர் கலந்தாலும் பால், சர்க்கரை, டீத்தூளுடன் 2 spoon அன்பையும் கலந்து பரிமாறு//
இந்த வரிகளை நான் ரொம்பவும் ரசிக்கிறேன்.அருமை..சமையலறை பிராத்தனையுங்கூட..

ரசிகன் said...

எனக்கு வென்னீர் வைக்கிறதை தவிர வேறெதுவும் சமைக்கத்தெரியாது..கல்யாணத்துக்கப்பறம் வர்ர ஹோம் மினிஸ்டர் கிட்ட எப்பிடி சமாளிக்கப்போறேனோன்னு தெரியலைங்கோ....ஹிஹி....

// A RECIPIE IS ONLY A THEME, WHICH AN INTELLIGENT COOK CAN PLAY EACH TIME WITH VARIATION".//
பல குடும்பங்களில் இதனை பெண்கள் உணர்வதே இல்லீங்க்கோ..திருமணமான நண்பர்கள் அடிக்கடி புலம்பராய்ங்கல்ல..

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாங்க வாங்க.. வந்து கலக்குங்க..


ஓ.. இது சமயல் குறீப்பா?

சாப்பிடுற மாதிரி இருக்குமா? ;-)

புதுகைதென்றல் said...

வணக்கம் ரசிகன்,

வாழ்த்துக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

கல்யாணத்திற்குள் சமையல் கற்றுக்கொள்ள உதவி செய்வோம்ல.

புதுகைதென்றல் said...

ஆமா ரசிகன்,
அனுராதா யாரு?

புதுகைதென்றல் said...

நன்றி மை ஃபிரண்ட்.

நான் கொடுத்திருக்கும் குறிப்பை சமைக்கும் போது உபயோகிக்க வேண்டும்.

சாமான்யன் Siva said...

<==
தேநீர் கலந்தாலும் பால், சர்க்கரை, டீத்தூளுடன் 2 spoon அன்பையும் கலந்து பரிமாறு ==>
இப்படி சொல்லி சொல்லித்தானே ஏமாத்திர்ரீஙக

புதுகைதென்றல் said...

வாங்க சிவா.

ஏமாற்றாதே! ஏமாறாதே பாட்டு தான்
ஞாபகத்துக்கு வருது.

மங்களூர் சிவா said...

//
சாமான்யன் Siva said...
இப்படி சொல்லி சொல்லித்தானே ஏமாத்திர்ரீஙக
//
அண்ணாத்தே இப்படித்தான் பன்றாங்களா ரொம்ப உஷாரா இருக்கனும் போல!!!!
அவ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

பயப்படாதிங்க சிவா,
இப்படித்தான் பயமுறுத்துவாங்க.